Skip to main content

Posts

Showing posts from December, 2008

ச்சும்மா ட்டமாஷ் - 75: மதிபாலா - திமுகவின் அடுத்த தலைமை

நண்பர் மோகன் கந்தசாமியின் ச்சும்மா டமாஷில் எனது திராவிட முன்னேற்றக் கழகம் - இனி என்ற கட்டுரை மூன்று பதிவுகளாக வெளிவந்தது. அதன் மீள்பதிவே இது. காப்பிரைட் முழுதும் ச்சும்மா ட்ட்மாஷுக்கே ! ச் சும்மா ட்டமாஷ் - 75 -க்காக பதிவர் மதிபாலா முதல் இரண்டாம் பகுதிகள் சென்ற பதிவுகளில் வெளியானது. அவர்கள் எழுதியுள்ள இந்த சிறப்புப் பதிவின் இறுதிப் பகுதி இப்பதிவில் வெளியாகிறது. மற்றும் திமுகவின் அடுத்த தலைமை இ து கொஞ்சம் சுலபமான அலசல் என்றே தோன்றுகிறது. திமுகவின் அடுத்த தலைமைக்கான முன் மொழிதலில் முன்னணியில் நிற்பவர் மு.க.ஸ்டாலின், அடுத்த அளவில் சொல்லப்படும் மு.க.அழகிரியோ, கனிமொழியோ, தயாநிதி மாறனோ திமுகவின் அனைத்துத் தரப்பினருக்கும் பரிச்சயமானவர்களோ , நீண்ட காலமாக உழைத்தவர்களோ கிடையாது. ஆனால் மு.க.ஸ்டாலின் அப்படியானவர் கிடையாது ஏன் ஸ்டாலின் திமுகவின் தலைமையாக இருக்கக் கூடாது? 1. தி முகவிற்காக பாடுபட்ட ஒருவர், அடிமட்டத் தொண்டனாக இருந்து மேலே வந்த ஒருவர், தான் மேற்கொண்ட பொறுப்புக்களை எல்லாம் சிரமேற்கொண்டு அனைவரும் பாராட்டும் வண்ணம் முடித்த ஒருவர், எல்லாவற்றிற்கும் மேலாக பணிவு, தான் சொல்ல நினைத்

ச்சும்மா ட்டமாஷ் - 75: மதிபாலா - ப்னீக்ஸ் பறவையாய் மீண்டு வந்த திமுக. பகுதி - 2

நண்பர் மோகன் கந்தசாமியின் ச்சும்மா டமாஷில் எனது திராவிட முன்னேற்றக் கழகம் - இனி என்ற கட்டுரை மூன்று பதிவுகளாக வெளிவந்தது. அதன் மீள்பதிவே இது. காப்பிரைட் முழுதும் ச்சும்மா ட்ட்மாஷுக்கே ! செ ன்ற பதிவில் முதல் பகுதி யாக வெளியான மதிபாலா வின் கட்டுரை இப்பதிவில் தொடர்கிறது. இறுதிப் பகுதி அடுத்த பதிவில் வெளியாகும். இது ச்சும்மா ட்டமாஷ் - 75 -க்காக அவர் எழுதிய சிறப்புப்பதிவு. ப்னீக்ஸ் பறவையாய் மீண்டு வந்த திமுக தி முக தலைவராக கலைஞர் பொறுப்பேற்ற பிறகு நடாத்தப்பட்ட தேர்தலில் திமுகழகம் வெற்றிபெற்றது. கலைஞர் இரண்டாம் முறையாக பதவியேற்றார். பின்பு திமுகழகத்தின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் கருத்துவேறுபாடு காரணமாக தனிக்கட்சி தொடங்கினார் எம்.ஜி.ஆரின் பிரிவு சி னிமா கவர்ச்சி , கொள்கைப் பாடல்கள் என்ற ஜனரஞ்சகத்தின் மொத்த வடிவமான எம்.ஜி.ஆரும் அவரது கட்சியுமான அதிமுக , தமிழகத்தின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றது. அதன் பிறகு 13 ஆண்டுகள் , எம்.ஜி.ஆர் தமிழகத்தின் ஆட்சியிலிருந்தார். எம்.ஜி.ஆரின் கலருக்கும் , எம்.ஜி.ஆரின் கொள்கைப்பாடல்களுக்குமே ஓட்டுப் போட்ட மக்கள் அனேகம் பேர். இதில் கொள்கையென்ன ,கோட்பாடென

ச்சும்மா ட்டமாஷ் - 75: மதிபாலா - திராவிட முன்னேற்ற கழகம் -இனி!

நண்பர் மோகன் கந்தசாமியின் ச்சும்மா டமாஷில் எனது திராவிட முன்னேற்றக் கழகம் - இனி என்ற கட்டுரை மூன்று பதிவுகளாக வெளிவந்தது. அதன் மீள்பதிவே இது. காப்பிரைட் முழுதும் ச்சும்மா ட்ட்மாஷுக்கே ! 'ச் சும்மா ட்டமாஷ் - 75': சிறப்பு பதிவுகள் வரிசையில் அடுத்து பதிவர் மதிபாலா அவர்கள் எழுதும் அரசியல் கட்டுரை வெளியாகிறது. திமுக -விற்கு வலுவான திராவிட மாற்று கட்சி தற்போதைய தமிழக அரசியலில் இல்லை என்னும் நிலை திமுக -வை முன்னெப்போதுமில்லாத வகையில் அக்கறை இன்மையுடன் கூடிய சோம்பல் கொள்ளச்செய்கிறது என்பது பரவலான எண்ணம். மேலும் ஒரு பெரிய அளவிலான தலைமை மாற்றத்திற்கு திமுக தயாராகி வரும் இச்சூழ்நிலையில் மாற்றத்திற்கு பிறகான திமுகவின் நிலை எவ்வாறு இருக்கும் என இக்கட்டுரை ஆராய்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் – இனி? 'தி் ராவிட முன்னேற்றக் கழகம் – இனி?' என்ற இந்தக் கேள்வி வெகு ஆழமானது. அந்தக் கேள்வியில் திமுகவின் அடுத்த அரசியல் தலைமை பற்றிய வினவல் மட்டும் அடங்கியிருக்கவில்லை…..திமுகவின் எதிர்காலம் என்ன என்னும் மாபெரும் கேள்வியும் அடங்கியிருக்கிறது திமுக ஒரு புறக்கணிக்கவியலாத சக்தி ச ற்றேறக்கு

அர்த்தமுள்ள மெளனம்!

அது ஒரு மார்கழி மாதம் ….! நடுங்கும் குளிரில் போட்டிருந்த ஸ்வெட்டரையும் மீறி தன் குழந்தைக்கு குளிருமோ என்ற கவலையிலேயே வாசலைப் பார்த்தவாறு இருந்தாள் அவள் , அவன் அப்போதுதான் இரண்டு ரவுண்ட் தாண்டியிருந்தான் . “ போதுண்டா , நேத்தே வீட்ல பிரச்சினைன்னு சொன்னியே , இன்னிக்காவது நேரத்துல போடா ” என்றான் நண்பன் …“ இன்னும் ஒரே ரவுண்டு ’’ என்றபடியே ஊற்ற ஆரம்பித்திருந்தான் அவன் . அதற்கு முந்தைய நாள் இரவு ... “ என்ன இப்படி கு டிச்சிட்டு அர்த்த ராத்திரியில வர்றீங்க ? இன்னிக்கு செக்கப் போகணும்னு சொல்லியிருந்தேனே ?” என்றபடியே விசும்ப ஆரம்பித்திருந்தாள் அவள் …. “ ஆபிஸ்ல டென்சன் , சும்மா தொண தொண ன்னு பேசாம கொஞ்சம் சோத்த போடறியா ?” சிடுசிடுத்தான் அவன் …… “ நான் டாக்டர்கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் பிக்ஸ் பண்ணியிருந்தேன் , நாளைக்கு போனா சத்தம் போடுவாங்க , என்ன இப்படி பொறுப்பில்லாம இருக்கீங்க ? “ அவள் . “ நாளைக்கு நான் உன்னை கூப்பிட்டு போறேன்னு யார் சொன்னா ? எனக்கு வேலை இருக்கு , நீ ஆட்டோல போய்ட்டு வா … உனக்கு சேவகம் பண்றதுக்கா ஆ