Skip to main content

சிரியா : உலகப்போரின் நுழைவாயில்.

சிரியா.

சமீபத்தில் செய்திகளைப் பார்க்கும் , படிக்கும் பலருக்கும் இப்பெயர் ஒன்றும் புதிதாய் இருக்காது... பெரும்பாலும் , மேற்கத்திய நாடுகளின் செய்திகளையே கக்கும் நமது ஊடகங்களின் செய்திகளுக்குப்பின்னால் மிகப் பயங்கரமான உண்மைகள் புதைந்து கிடக்கின்றன...

பாஷர் அல் ஆஷாத் என்ற கொடுங்கோலன் மக்களைக் கொல்கிறான் என்றே உச்சரித்துப்பழகிய பல தொலைக்காட்சி நிருபர்களையும் தாண்டி , அமெரிக்கா சிரியாவில் நுழைந்து மக்களைக் காக்குமா என்ற பொழுதுபோகா விவாதங்களையும் தாண்டி பல நிஜங்கள் மறைக்கப்படுகின்றன.

லிபியா போன்றே சிரியாவும் கடந்து போகும் என்றே உலக நாடுகள் நினைத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் , அப்படியல்ல , இந்த நிகழ்வுகள் பாரிய மாற்றங்களை பூமிப்பந்தில் ஏற்படுத்தப்போகின்றன  என பல உலக அறிஞர்கள் கருதுகிறார்கள்.

லிபிய புரட்சிக்கும் , இப்போது நடந்துகொண்டிருக்கும சிரிய புரட்சிக்குமான வேறுபாடு என்ன. ?

முதல் வேறுபாடு , லிபியா போன்று நண்பர்களில்லாத நாடல்ல சிரியா. ரஷ்யாவின் கடற்படைத் தளத்தைக்கொண்டிருக்கும் நாடு. ரஷியாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கிக்குவிக்கும் நாடு சிரியா.

சிரியா என்பது ஈரான் மீதான அமெரிக்காவின் , இசுரேலின் படையெடுப்புக்கான முதல் படி...

ஆகவே , சிரியாவை அதன் ஆட்சியாளர்களை ஈரானோ , ரஷியாவோ விட்டுக்கொடுக்கும் என்று எண்ணுபவர்கள் சி.என்.என்னையும் , பி.பி.சியையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்...

இன்று மத்திய கிழக்கில் இசுலாமியர்களிடையே ஒரு பாரிய பிளவு ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. ஷியா மற்றும் ஷுன்னி பிரிவுகளிடையேயான சண்டை மென்மேலும் வலுக்கிறது. அத்தனைக்கும் அடிகோலியதற்கான காரணம் எல்லோருக்கும் தெரிந்ததே. ஷியாக்களும் , ஷுன்னிக்களும் சண்டையிட்டுக்கொள்ளும்போதுதானே 'இசுரேல்' என்ற பொது எதிரி நிம்மதியாக காலம் கழிக்கமுடியும்?

சில பத்தாண்டுகளுக்கு முன் நிலைமை எப்படி?

ஷியா பிரிவு இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வசித்த ஈராக்கின் அதிபராக ஷுன்னி சதாம் உசேன் இருந்தார். தேன்கூட்டை கலைத்து புண்ணியம் தேடிக்கொண்ட அமெரிக்காதான் , இன்று , ஈராக்கில் ஷியாக்களும் , ஷுன்னிக்களும் சண்டையிட்டு மாண்டுபோகிறார்கள்.

அதே குள்ள நரித்தனம்தான் சிரியாவிலும் நடக்கிறது.... சிரியாவின் அதிபர் 'ஆஷாத்' ஒரு ஆலவைட்  , அதாவது ஷியா பிரிவு முஸ்லிம்களின் ஒரு பகுதி.....ஆனால் , சிரியாவின் பெரும்பான்மை மக்கள் ஷுன்னி பிரிவினர்.

இன்று ஆட்சியாளர்களுக்கு எதிரான தெருமுனை ஆர்ப்பாட்டமாக ஆரம்பித்த சிரியப்புரட்சி , இன்று வகுப்புமோதலாக காட்சியளிக்கிறது. காரணம் யார்  தெரியுமா?

சிரியாவில் சனநாயகத்தை ஏற்படுத்த துடிப்பது யார் தெரியுமா? ஆண்டாண்டுகாலமாக சவுதியை ஆண்டுகொண்டிருக்கும் சர்வாதிகார சவுதி மன்னரும் , கத்தார் மன்னரும் தான் , விளையாட்டாக இல்லை?

அதுதான் , அமெரிக்காவின் தந்திரம்....ஆனால் அது அவர்களுக்கே வேட்டு வைப்பதாக முடிந்துவிடும் என்பதை தலிபான்களையோ , அல்குவைதாவையோ பார்த்து உணர்ந்துகொண்டார்களில்லை அமெரிக்கர்கள்...

இக்காலச்சூழலில், ரஷியாவுக்கும் , அமெரிக்காவுக்குமான உறவு படுவேகமான வீழ்ச்சியை சந்தித்துக்கொண்டிருக்கிறது என்பதை சமிப கால செய்திகள் உணர்த்துகின்றன...

அமெரிக்கா , ரஷிய மனித உரிமை மீறல் அதிகாரிகளை அமெரிக்காவில் விடமுடியாது என்று சட்டம் கொண்டு வர , ரஷியாவோ ரஷியக்குழந்தைகள் விற்பனைக்கல்ல , அதனால் அவர்களை அமெரிக்கர்கள் தத்தெடுக்கக்கூடாது என்று சட்டம் கொண்டு வருகிறார்கள். அது மட்டுமின்றி , முன்னால் சோவியத் குடியரசுகளில் ஒன்றான 'ஜார்ஜியா' நேட்டோ உறுப்பினராக துடிக்கிறது. அதை ரஷியா தனது பாதுகாப்புக்கு பாரதூரமென கருதுகிறது...

ரஷ்யாவுக்கு அண்மையில்  தனது ஏவுகணைகளையும் ,  மிஷைல் ஷீல்டு எனப்படும் ஏவுகணை எதிர்ப்புக்கருவிகளையும் வைக்க ஆசைப்படுகிறது 'ன நேட்டோ. அது தனது பாதுக்காப்பிற்கு பாதகம் என ரஷ்யா எதிர்க்கிறது...
சமீபத்தில் தனது கடற்பரப்பை அண்மித்த அமெரிக்க போர்க்கப்பல்களுக்கு எதிராக வார்னிங் ஷாட் எனப்படும் எச்சரிக்கை குண்டுகளை வீசியிருக்கிறது ரஷ்யா.

அமெரிக்கா புரிந்து கொள்ள மறுக்கும் ஒருவிடயம் , கார்ப்பசேவ் தலைமையிலான பலகீனமான சோவியத்தோ அல்லது யெல்சின் தலைமையிலான பிறநாடுகளின் உதவியை எதிர்ப்பார்க்கும் பலகீனமான ரஷியாவோ அல்ல இன்றைக்கு விளாடிமிர் புதின் தலைமையிலான 'ரஷ்யா'.

கொசாவோவில் , யுகோஸ்லாவியாவில் செய்ததை போல ஒருதலைப்பட்சமாக  அமெரிக்காவோ , நேட்டோ நாடுகளோ , சிரியாவில் கை வைத்தால் , அவர்கள் போராடப்போவது சிரிய அதிபர் ஆசாத் தோடு மட்டும் அல்ல , திரைமறைவில் ரஷியாவோடும் , ஈரானோடும் , அவர்களுடன் அதீத தொடர்பு வைத்துக்கொண்டிருக்கும் சீனாவோடும் தான்..... மீண்டுமொரு ப்ராக்சி யுத்த அத்தியாயம் தொடங்கும்....

எப்படி வியட்நாமில் வடக்கு தெற்கு என்று சண்டையிட்டார்களோ , எப்படி கிழக்கு , மேற்கு என்று ஜெர்மனியைத்துண்டாடி ப்ராக்சி யுத்தம் நடந்ததோ அதுபோலவே , பிரிதொரு பனிப்போர் துவங்கும்...

இதுகாறும் பனிப்போருக்கு பிந்தைய காலத்தில் , பொருளாதாரம் , சமூகம் ,தொழில் இவைகளில் கவனம் செலுத்திய உலகம் மீண்டுமொரு ஆயுதப்போட்டிக்குள் தள்ளப் படும்....

ஷியா மற்றும் ஷுன்னி முஸ்லீம்களுக்கிடையேயான போட்டியும் , சண்டையும் மத்திய கிழக்கில் உச்சமடையும்... ஈராக் , ஈரான் , போன்ற ஷியா நாடுகள் ஒரு பிரிவாகவும் , சவுதி , எகிப்து போன்ற ஷுன்னி நாடுகள் இருபிரிவாகவும் பிரிந்து ஆயுதங்களை வாங்கிக்குவிப்பார்கள்...

கிழக்காசியாவில் சீனாவும் , வடகொரியாவும் , இயற்கையான கம்யூனிசக்கூட்டணி நாடுகள்... அவர்கள் ரஷியாவின் பக்கத்தில் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை...

பொலிவாரியன் நாடுகளான , வெனிசுலா , பொலிவியா , மற்றும் சில மத்திய , தென் அமெரிக்க நாடுகள் மற்றும் க்யூபா போன்ற நாடுகள் அமெரிக்க எதிர்ப்புக்குப் பேர் போனவை , அவை இயற்கையாகவே ரஷிய , சீனக்கூட்டில் சங்கமமாகும்.  அர்ஜென்டினாவுக்கும் , இங்கிலாந்துக்கும் இருக்கும் முட்டல் மோதல் பெயர்போனது...

அப்போட்டியின் உச்சம் இன்னுமொரு உலகப்போர்தான் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

இரண்டாம் உலகப்போர் ஆசியாவையும் , ஐரோப்பாவையும் மட்டுமே மையம் கொண்டிருந்தது. ஆனால் இன்னுமொரு உலகப்போர்  ஒட்டுமொத்த உலகத்தையுமே மையம் கொள்ளும்..

ஆக, சிரியா என்பது உலகப்போரின் , உலகளாவிய ஆயுதப்போட்டியின் நுழைவு வாயில்தான்......

இன்னொரு உலகப்போரை தடுத்து நிறுத்தும் சக்தி ஒரு நாட்டுக்கு மட்டுமே உண்டு... அது எந்த நாடு தெரியுமா? சர்வ வல்லமை பொருந்திய அமெரிக்காதான் அது.... அது தன் வாலைச்சுருட்டிக்கொண்டு , எண்ணைக்கான சண்டைகளை நிறுத்திக்கொண்டு சும்மா இருந்தாலே உலகம் அமைதியடையும். அதன் தோழமை நாடான இசுரேலையும் கொஞ்சம் அடக்கி வைத்தால் மட்டுமே இன்னும் பத்தாண்டுகளிலாவது பதற்றம் தணியும்...

ஆனால், வல்லாதிக்க ஆசையில் உலவும் அமெரிக்கா  தனது தணியாத ஏகாதிபத்திய ஆசையை விட்டுக்கொடுக்கும் வாய்ப்பில்லையென்பதால் , இன்னொரு உலகப்போர் இன்வைட்டபில் அதாவது தவிர்க்க முடியாதது.

எப்போது என்பதே கேள்வி. அப்போருக்குப் பின் யார் மிஞ்சப்போகிறார்கள் என்பதே கேள்வி...

Comments

புலி வருது said…
புலி வருது , புலி வருது

Popular posts from this blog

பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது!

சீமான்களின் சபையினிலேயே , கடிதம் எழுதி எழுதிக் களைத்துப்போனதோர் கிழட்டுச் சிங்கம்.....முன்னாலுக்கும் முன்னால் அவர் கொண்ட தமிழ்ப்பற்று.....இன்னாளில் அது தமது மக்கட்பற்றாய் மாறிப்போனதொரு சோகம். ஏதோவொரு புண்ணியத்தில், எவரோ செய்த வரலாற்றுத் தவறால் , கொள்கை , தொலைநோக்கு , மக்கட்பற்று இவை பற்றிய சிந்தையேதுமின்றி அரசியலில் விபத்தாய் விளைந்த கொடநாட்டு ஈழத்தாய்....தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தமிழர் பற்றியும் , தமிழர் அரசியல் பற்றியும் எழுதி வைத்துப் பேசும் செல்வி யவர்.........இன்னமும் அவர் சேலை பிடித்துத்திரியும் வீணர் கூட்டம்.! கூட்டணிக்கேற்றப்படி கொள்கையை மாற்றிக்கொள்ளும் மருத்துவப் படையாச்சி.........வீரமிகு வன்னியகுலத்திலே வந்துதித்த சந்தர்ப்பவாதச் சாக்கடை....சமரசமற்ற கொள்கை அரசியலை சந்தர்ப்பவாதச் சாக்கடைக்குள் தள்ளிய பெருமைக்குரிய மருத்துவர் தமிழ்க்குடிதாங்காத தமிழ்க்குடிதாங்கி! யாரை எதற்காக எதிர்த்து அரசியல் செய்யவேண்டுமே அவர்களோடே தம் தேவைக்குதந்த படி கூட்டு வைத்துக்கொண்டு ஈழத்திற்க்காய் எந்நேரமும் பாடுபடும் திரு.வைகோ அவர்கள்....அவரும் சிறை சென்றார்.

நண்பர் 'டோண்டு' ராகவன்...

உயிரோடு இருக்கும்வரை அறிக்கைகளால் அர்சித்து எதிர்ப்பரசியல் நடாத்தி செத்துபோன பிறகு ஆருயிர் நண்பர் என்று அழைத்துக்கொள்ளும் எல்லா அரசியல்வாதிகளையும் போலவே நான். எனக்கும் மறைந்த உயர்திரு 'டோண்டு' ராகவன் அவர்களுக்குமான பரிச்சயம் அவ்வளவொன்றும் அதிகமில்லைதான். பதிவுலகையும் , பர்ஸனல் லைப்பையும் பிரித்து வைத்துக்கொள்ளும் எண்ணமுடைய நான் , டோண்டு மட்டுமல்ல மற்றபல பதிவுலக நண்பர்களுடனும் கூட தனிப்பட்ட தொடர்புகளை வைத்துக்கொண்டதில்லை... இருந்தாலும் , அவ்வப்போது பதிவுலக பின்னூட்டங்களின்பாலே தொடர்ந்துகொண்டிருந்த தொடர்பு , எனது 'போலி டோண்டு' பற்றிய கட்டுரையொன்றிலேயே  தீவிர விவாதமாக மாறியது.. ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீதோ இல்லை அவர்தம் பிற்போக்கான கருத்துக்கள் மீதோ இருந்திருக்கலாம். கடினமாக ஓரிரு முறை பேசியிருக்கலாம்.. அத்தனையும் தாண்டி அவர் மிக நல்ல மனிதர் , கடும் உழைப்பாளி என்பதை அவரது பதிவுலகம் மூலமாக அறிந்தவனெனினும் உறுதியாக கூறவியலும்.. அத்தகைய நல்ல மனிதரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் , நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்... வருத்தங்கள

எஸ்.எஸ்.பொன்முடி - மனிதருள் மாணிக்கம்.

எஸ்.எஸ்.பொன்முடி , கொங்குச்சீமையிலே குறிப்பாக பல்லடம் , சூலூர் வட்டாரத்தில் தெரியாதவர்கள் சொற்பமே. எஸ்.எஸ். பொன்முடி அவர்கள் மட்டுமல்ல , அவர்களது குடும்பமே சூலூரில் பழம்பெருமை மிக்க குடும்பம். காலங்காலமாக அவர்களது குடும்பத்தினரே சூலூரின் அனைத்து தேர்தல்களிலும் வென்றதும் , வெல்வதும் வரலாறு. பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவராயினும் மாற்றுக்கட்சியினராலும் மதிக்கப்படும் சில மனிதர்களில் எஸ்.எஸ் பொன்முடியும் ஒருவர். அவருக்கும் , எனக்குமான பரிச்சயமொன்றும் அவ்வளவு அதிகமில்லைதான். அப்போது எனக்கு ஒரு பத்திலிருந்து , பதினைந்து வயதிருந்திருக்கலாம். கலங்கலில் கவுன்சிலர் தங்கவேலு சர்வ அதிகாரமும் பொருந்தியவராய் வலம் வந்துகொண்டிருந்தார். அவர் எஸ்.எஸ்.பொன்முடியின் வலக்கரம். ஊருக்கு மேற்கே ஜல்லிக்குழி என்ற மனிதர்கள் உபயோகப்படுத்த முடியாத , இயலாத பகுதி ஒன்றிருந்தது.....அப்போது கழகம் ஆட்சியிலிருந்தது + பொன்முடி எம்.எல்.ஏவாக இருந்தார். கட்சிக்காரர்கள் , குறிப்பாக ஒடுக்கப்பட்ட , மிக பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் கேட்டுக்கொண்டதற்காக , மிகுந்த பிரயாசைப்பட்டு தங்கவேல் மற்றும் எஸ்.எஸ்.பொன்முடி அவ