Skip to main content

Posts

Showing posts from April, 2012

தமிழீழம் : அரசியலாக்குவது கருணாநிதியா இல்லை மற்றவர்களா?

இன்று டெசோ மாநாடு நடந்து முடிந்திருக்கிறது.....அவர்களும் ஒரு தீர்மானம் போட்டு விட்டு கலைந்து விட்டார்கள்.... ஆனால் , கருணாநிதியின் இந்த திடீர் ஈழப்பாசம் கண்டு எல்லாத் தரப்பினரும் அவர் நாடகம் போடுவதாக கூக்குரலிடுகிறார்கள்... கருணாநிதியின் ஈழப்பாசம் நாடகமென்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லைதான்... ஆனால் , இன்று கருணாநிதியைக் குற்றம் சொல்கிற வைகோ , நெடுமாறன் , சீமான் போன்றவர்களுக்கு கருணாநிதியைக் குற்றம் சொல்ல என்ன வக்கிருக்கிறது? என்ன உரிமையிருக்கிறது? போர் நடந்தால் அப்பாவி மக்கள் சாகத்தானே வேண்டும் என்றழைத்த ஜெயலலிதாவை ஈழத்தாயாக ஏற்றுக்கொள்வதில் இல்லாத சிரமம் கருணாநிதியை ஏற்றுக்கொள்வதில் இவர்களுக்கு என்ன இருக்கிறது? பிரபாகரனைப் பிடித்து வந்து தூக்கிலிட வேண்டும் என்று சொன்ன செயலலிதாவிற்கு பல்லக்குத் தூக்கிய வைகோவிற்கும் , சீமானுக்கும் அப்படி என்னதான் கருணாநிதியிடத்தில் பிரச்சினை? நாளெல்லாம் கருணாநிதி துரோகி என்று பேசும் பெருந்தகைகளே , ஜெயலலிதா என்ன செய்து கிழித்தார் உங்களுக்களித்த வாக்குறுதிப்படி?  ஈழத்துக்கு இராணுவம் அனுப்பினாரா? இல்லை இந்திய நடுவண் அரசைப் பிடித்து உலுக்கினாரா ஈழம் வேண