Skip to main content

Posts

Showing posts from 2009

கலியாணமாம் கலியாணம்!

"கண்ணு.....நான் நேத்துதான் சித்தநாயக்கம்பாளையம் வள்ளுவன்கிட்ட போயுருந்தனா...அவுங்க கொசவந்தோட்டத்துல இருக்குற புத்துங்கண்ணுக்கு வாரமொருக்கா பாலூத்தச் சொன்னாங்கோ...! எண்ணி ஒரே மாசத்துல காரியம் முடியுமுங்குறான் அந்த வள்ளுவன்.." மகளிடம் சொன்னாள் சானகி. பாலும் ஊத்தியாயிற்று. "பொண்ணு லட்சணமாத்தான் இருக்குது. ஆனா படிப்பு பத்தாதுங்கறார் மாப்பிள்ளை.." தரகர் சொன்ன சேதி கேட்டு நொந்து போனாள் சானகி. மாதமும் கழிந்தது. "சத்திக்குட்டி.....அந்த வள்ளுவங்கிட்ட மறுக்கா ஒரு தாட்டி போயிருந்தேன். ஏதோ ராகு தோஷமிருக்குதாமா........திருநாகேஸ்வரம் போயி இராகு பகவானுக்கு "பாலாபிஷேகம் " பண்ணினா தோஷமெல்லாம் போயிருமாமாம். எப்ப போலாம்?" திருநாகேஸ்வரமும் போய் வந்தாயிற்று. "மாப்புளைக்கு பொண்ணைப் பிடிச்சுருக்காம். அவுங்கம்மா எத்தன பவுனு போடுவீங்கன்னு கேட்டாங்க. " மேற்காலவூட்டு ரங்கண்ணன் கேட்டார். "அவியள கேட்டுட்டு பொழுதுக்குள்ள சொல்றேனுங்கண்ணா " சொன்னாள் ஜானகி. "ஏனுங்க... , திருநாகேஸ்வரம் போய்ட்டு வந்தவுடனே வரன் அமையுமுன்னு சோசியன் சொன்னாருல்ல.....கடன