Skip to main content

Posts

Showing posts from 2017

ஒற்றையாட்சி முறையா, பிரிவினைக்கான அடித்தளமா?

இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு. வேற்றுமையில் ஒற்றுமையே நமது பலம்.. நீங்கள் விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ இந்தியாவில் பல்லினங்கள் உண்டு, பல மொழிகள் உண்டு , பல பழக்கவழக்கங்கள் உண்டு , இவற்றை ஏற்றுக்கொண்டு , சகிப்புத்தன்மையோடு எல்லோரும் ஓரினமாய் வாழ்வதே இந்தியா வாழ்வாங்கு வாழ்வதற்கான வழிமுறை. அதைவிடுத்து , ஒற்றையாட்சியை நிறுவுவோம் என்று சொல்லிக்கொண்டிருந்தால் இந்தியா எனும் நாடு இருக்குமா என்பதே கேள்விக்குறி!!! குறிப்பாக , வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் " நீட்" தேர்வு... எனக்கென்று என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசும் , என்னால், என் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களெல்லாரும் சேர்ந்து நீட் எமக்கு வேண்டாம் என்று தீர்மானம் செய்கிற போது அதை வலிந்து எம் மேல் திணிக்க இந்திய நடுவண் அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்ற கேள்வியெழுப்புவதில் தவறென்ன இருக்கிறது? பல பத்து சின்னஞ்சிறு நாடுகளாய் ஐரோப்பியாவில் பரவிக்கிடப்பதற்கு பாரிய காரணமென்ன? மொழி மற்றும் இனங்களால் அவர்கள் பிளவுபட்டிருக்கிறார்கள்... அதனால் தான் இந்தியாவின் பன்முகத் தன்மைக்கேற்ப மொழிவாரி மாநிலங்களை அமை

யார் பெறுவார் ஆர்கே நகரின் அரியாசனம்..?

சிலகாலம் முன்புவரை ஆர்.கே நகர் தமிழகத்தில் அவ்வளவாக உச்சரிக்கப்படாத பெயர்தான். முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் போட்டியிட்டது முதல் விஐபி தொகுதி யானது​  ஆர்.கே.நகர். முன்னாள் முதல்வரின் மறைவுக்குப்பின்னர் பின்னர் நடக்கும் ஆர் கே நகர் தொகுதி இடைத்தேர்தலானது , சமீபத்தில் எந்தவொரு தொகுதியின் இடைத்தேர்தலுமே பெறாதவொரு முக்கியத்துவத்தைப்பெற்றிருக்கிறது.... ஏன்??  திமுக ஒருபுறமும், அதிமுகவின் இரண்டுபிரிவுகளும் , ஜெ. அண்ணன் மகள் தீபா அவர்கள் இன்னொரு புறமுமாக புழுதி பறக்கப்போகிறது இன்னுஞ் சிலவாரங்களுக்கு அத்தொகுதி....இத்தொகுதியில் வெல்வது யார் என்பது மக்களின் கையில் தான் இருக்கிறது.  ஆனால், களத்தில் நிற்கப்போகும் ஒவ்வொரு கட்சிக்குமே / பிரிவுக்குமே இதன் முடிவு ஒரு முக்கிய பாடத்தை சொல்லிச்செல்ல காத்திருக்கிறது ​.  ​வென்றிருக்கவேண்டிய 2016 தேர்தலை சிலபல காரணங்களால் மயிரிழையில் கோட்டை விட்ட திமுகவுக்கு இது "வாழ்வா சாவா " தேர்தல் இல்லையென்றாலும் கூட, இதில் பெறும் வெற்றி வரப்போகும் பாராளுமன்றத் தேர்தலின் கூட்டணிக்கணக்கிற்கு உதவக்கூடும்..யாருமில்லா தனிவெ