இந்த எல்லா எழவும் ஆடிமாசம் ஒரு சனிக்கெழமை சாய்ந்தரம் ஆரம்பித்தது. மாமியார் வீட்டில் என்டெர்டெயின்மென்ட்டுக்கு எதுவுமே இல்லாத காரணத்தாலும் , இயல்பாக இருக்கும் படிக்கும் காரணத்தாலும் வழக்கமாக குமுதம் , கல்கண்டு , ஆனந்த விகடன் , அதிகபட்சம் போனால் சமீபகாலமாக 'புதிய தலைமுறையும்' வாங்கிப்படிக்கும் நான் , தாராபுரம் பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்தில் இருக்கும் ஜே.பி.புத்தக நிலையம் போனேன் , எப்போ தெரியுமா , நான் முன்பு சொன்ன அதே ஒரு சனிக்கெழமை சாயந்தரம் தான். சுத்திச்சுத்திப் பார்த்தபோது கண்ணில் தட்டுப்பட்டது 'சாரு நிவேதிதா'வின் எக்ஸைல் நாவல். பின்னட்டையிலேயே பதிப்பாளர் (ஒருவேளை பத்ரி அல்லது பா.ரா?) கோடிட்டுக்காட்டியிருந்தார்...நாந்தான் கவனிக்காம விட்டுட்டேன். அதுமாதிரியும் இல்லாமல் , இதுமாதிரியும் இல்லாமல் புதுமாதிரி என்றது அச்செய்தி. அப்போதும் புத்தியில்லை. நானெல்லாம் , ஆங்கிலப்புத்தகங்களில் 'ஷிட்னி ஷெல்டன் ' , அல்லது ' டைம்' தாண்டி அறியாவதனாகையால் ' ஆட்டோ பிக்சன் ' என்ற அழியாத வரலாறு பற்றி அறியாமல் விட்டுவிட்டேன். அதனால் , பதிப்பாளரின் அடுத்த எச்சரிக...