முந்தாநேத்து , எங்கூருக்கு போன்ல பேசீட்டிருக்கும் போது வாற வைகாசி மாசம் , நோம்பி சாட்டுவாங்க போலிருக்குடான்னு எங்கம்மா சொல்லுச்சிங்களா? உடனே தான் காவகத்துக்கு வந்திச்சி , நாம எப்பவோ ஒருக்கா "மாரியாத்தா" நோம்பி பத்தி எழுத ஆரம்பிச்சி பாதீலேயே நிறுத்திப்போட்டது.. அதை இப்ப தொடரலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்...தா.....................................................மததிற்கு ( ஆமாம் , மொத பதுதிய எழுதுன நாள் அக்டோபர் 2008) மன்னித்தருள்க. இப்பதிவு முன்பே எழுதிய பதிவின் மீளாக்கமே , தொடர்ச்சியினை வரும் நாட்களில் படித்து மகிழ்க / திட்டுக / வசவுக/ ரசிக்க இன்னபல..இன்னபல. நன்றி ( மீள்பதிவிற்கான காரணம் , தற்பொழுது வலைப்பூ முகவரி மாற்றப்பட்டுள்ளது.) மாரியாத்தா சாமி , அலங்காரத்தோட!- புகைப்படம் நன்றி : இளவஞ்சி! எங்கூரு மாரியாத்தா கோயிலு ஊருக்குத் தெக்கால எங்கூட்டுக்கு பொறகால இருக்குதுங்க. நடுவால மாரியாத்தா கோயிலு , கெழவறம் ப்ளேக்கி மாரியாத்தா கோயிலு , மேவறம் மாகாளியாத்தா கோயிலு….மாரியாத்தா கோயுலுக்கும் மாகாளியாத்தா கோயுலுக்கும் நடுவால வீரமாச்சியாத்தா கோயுலு….. வருசமொருக்க...