Skip to main content

Posts

யார் நமக்கு எதிரி?

ஈழப்போராட்டம் பல படிநிலைகளைக்கொண்டது, தந்தை செல்வாவில் ஆரம்பித்து, பல்வேறு போராளிக்குழுக்களில் தொடங்கி புலிகளால் வலுப்பெற்றது. மற்ற போராளிக்குழுக்களிலிருந்து புலிகளின் கைகளுக்கு முழுதும் மாறியதெப்படி?  இந்தியப்பெருந்தலைவர் இந்திராகாந்தி அவர்கள் எல்லா போராளிக்குழுக்களையும் ஆராய்ந்து புலிகள் தான் எல்லோரிலும் வலுவானவர்களாகவும் , சரியான சிந்தனைப்போக்குடையவர்களாகவும் இருப்பதாக தீர்மானித்தார்கள். அதனால் விடுதலைப்புலிகளுக்கு கூடுதல் ஆயுத பலம் மட்டுமல்ல , தார்மீக ஆதரவுத்தளமும்  கிடைத்தது.  தமிழகத்தில் எம் ஜி ஆர் அவர்களுமே விடுதலைப்புலிகளை நம்பிய அளவிற்கு மற்ற குழுக்களை நம்பவில்லை. ஏன் கலைஞர் கூட சகோதர யுத்தம் வேண்டாம் வேண்டாமென தலையில் அடித்துக்கொண்டாரே தவிர ஒரு சந்தர்ப்பத்தில் கூட புலிகளை இடித்துரைத்தாரில்லை. தனது இறுதிக்காலம்  வரை சகோதர யுத்தத்தினால் தான் புலிகள் வீழ்ந்தார்களென்பதை உறுதியாக நம்பினார். அதற்காக புலிகளை வெறுத்தாரா என்றால் ஒருகணமும் வெளிப்படையாக அவர் சொன்னதில்லை.  புலிகளால் அவர்களது மிதமிந்திய ஹீரோயிசத்தால் அதிகம் இழந்த அரசியல் கட்சி ஒன்று உலகில் இருக்குமானால் அது திமுக தான். இல
Recent posts

ஒற்றையாட்சி முறையா, பிரிவினைக்கான அடித்தளமா?

இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு. வேற்றுமையில் ஒற்றுமையே நமது பலம்.. நீங்கள் விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ இந்தியாவில் பல்லினங்கள் உண்டு, பல மொழிகள் உண்டு , பல பழக்கவழக்கங்கள் உண்டு , இவற்றை ஏற்றுக்கொண்டு , சகிப்புத்தன்மையோடு எல்லோரும் ஓரினமாய் வாழ்வதே இந்தியா வாழ்வாங்கு வாழ்வதற்கான வழிமுறை. அதைவிடுத்து , ஒற்றையாட்சியை நிறுவுவோம் என்று சொல்லிக்கொண்டிருந்தால் இந்தியா எனும் நாடு இருக்குமா என்பதே கேள்விக்குறி!!! குறிப்பாக , வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் " நீட்" தேர்வு... எனக்கென்று என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசும் , என்னால், என் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களெல்லாரும் சேர்ந்து நீட் எமக்கு வேண்டாம் என்று தீர்மானம் செய்கிற போது அதை வலிந்து எம் மேல் திணிக்க இந்திய நடுவண் அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்ற கேள்வியெழுப்புவதில் தவறென்ன இருக்கிறது? பல பத்து சின்னஞ்சிறு நாடுகளாய் ஐரோப்பியாவில் பரவிக்கிடப்பதற்கு பாரிய காரணமென்ன? மொழி மற்றும் இனங்களால் அவர்கள் பிளவுபட்டிருக்கிறார்கள்... அதனால் தான் இந்தியாவின் பன்முகத் தன்மைக்கேற்ப மொழிவாரி மாநிலங்களை அமை

யார் பெறுவார் ஆர்கே நகரின் அரியாசனம்..?

சிலகாலம் முன்புவரை ஆர்.கே நகர் தமிழகத்தில் அவ்வளவாக உச்சரிக்கப்படாத பெயர்தான். முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் போட்டியிட்டது முதல் விஐபி தொகுதி யானது​  ஆர்.கே.நகர். முன்னாள் முதல்வரின் மறைவுக்குப்பின்னர் பின்னர் நடக்கும் ஆர் கே நகர் தொகுதி இடைத்தேர்தலானது , சமீபத்தில் எந்தவொரு தொகுதியின் இடைத்தேர்தலுமே பெறாதவொரு முக்கியத்துவத்தைப்பெற்றிருக்கிறது.... ஏன்??  திமுக ஒருபுறமும், அதிமுகவின் இரண்டுபிரிவுகளும் , ஜெ. அண்ணன் மகள் தீபா அவர்கள் இன்னொரு புறமுமாக புழுதி பறக்கப்போகிறது இன்னுஞ் சிலவாரங்களுக்கு அத்தொகுதி....இத்தொகுதியில் வெல்வது யார் என்பது மக்களின் கையில் தான் இருக்கிறது.  ஆனால், களத்தில் நிற்கப்போகும் ஒவ்வொரு கட்சிக்குமே / பிரிவுக்குமே இதன் முடிவு ஒரு முக்கிய பாடத்தை சொல்லிச்செல்ல காத்திருக்கிறது ​.  ​வென்றிருக்கவேண்டிய 2016 தேர்தலை சிலபல காரணங்களால் மயிரிழையில் கோட்டை விட்ட திமுகவுக்கு இது "வாழ்வா சாவா " தேர்தல் இல்லையென்றாலும் கூட, இதில் பெறும் வெற்றி வரப்போகும் பாராளுமன்றத் தேர்தலின் கூட்டணிக்கணக்கிற்கு உதவக்கூடும்..யாருமில்லா தனிவெ

நண்பர் 'டோண்டு' ராகவன்...

உயிரோடு இருக்கும்வரை அறிக்கைகளால் அர்சித்து எதிர்ப்பரசியல் நடாத்தி செத்துபோன பிறகு ஆருயிர் நண்பர் என்று அழைத்துக்கொள்ளும் எல்லா அரசியல்வாதிகளையும் போலவே நான். எனக்கும் மறைந்த உயர்திரு 'டோண்டு' ராகவன் அவர்களுக்குமான பரிச்சயம் அவ்வளவொன்றும் அதிகமில்லைதான். பதிவுலகையும் , பர்ஸனல் லைப்பையும் பிரித்து வைத்துக்கொள்ளும் எண்ணமுடைய நான் , டோண்டு மட்டுமல்ல மற்றபல பதிவுலக நண்பர்களுடனும் கூட தனிப்பட்ட தொடர்புகளை வைத்துக்கொண்டதில்லை... இருந்தாலும் , அவ்வப்போது பதிவுலக பின்னூட்டங்களின்பாலே தொடர்ந்துகொண்டிருந்த தொடர்பு , எனது 'போலி டோண்டு' பற்றிய கட்டுரையொன்றிலேயே  தீவிர விவாதமாக மாறியது.. ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீதோ இல்லை அவர்தம் பிற்போக்கான கருத்துக்கள் மீதோ இருந்திருக்கலாம். கடினமாக ஓரிரு முறை பேசியிருக்கலாம்.. அத்தனையும் தாண்டி அவர் மிக நல்ல மனிதர் , கடும் உழைப்பாளி என்பதை அவரது பதிவுலகம் மூலமாக அறிந்தவனெனினும் உறுதியாக கூறவியலும்.. அத்தகைய நல்ல மனிதரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் , நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்... வருத்தங்கள

எனக்குப் பிறகு ஸ்டாலின் : கருணாநிதி

சமுதாய மேன்மைக்காக என் ஆயுள் இருக்கிற வரை பாடுபடுவேன். அதற்குப் பிறகு ஸ்டாலின் என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இன்று வேலூர் மேற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் சாமுவேல் செல்லப்பாண்டியன் தலைமையில் 2000க்கு மேற்பட்ட பா.ம.க. வினர் அந்தக் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்த போது கிருணாநிதி ஆற்றிய உரையில், " இன்றைக்கு ஒரு கட்சியின் அமைப்பிலே இருந்து விடுபட்டு இங்கே வந்திருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்கிற நேரத்தில் அந்த அமைப்பைப் பற்றி குறை கூறத் தேவையில்லை. அந்த அமைப்பைக் குற்றஞ்சாட்டத் தேவையில்லை. குற்றம் இருந்த காரணத்தால்தான், குறைகள் இருந்த காரணத்தால் தான் அங்கிருந்து பிரிந்து வந்து திராவிட முன்னேற்றக் கழகத்திலே இணைந்திருக்கிறோம் என்று முற்றுப்புள்ளி வைத்த பிறகு, அதைப் பற்றிப் பேச வேண்டிய அவசியமில்லை. உங்களையெல்லாம் பிரிந்திருக்கின்ற அந்தத் தலைமை, ஒரு காலத்தில் எனக்கு மிக மிக வேண்டிய, நட்பு கொண்ட, கொள்கையுடைய தலைமையாகத் தான் இருந்தது. ஆனால் நீங்கள் பத்திரிகைகளைப் பார்த்திருப்பீர்கள். கூட்டங்களிலே கேட்டிருப்பீர்கள்

சிரியா : உலகப்போரின் நுழைவாயில்.

சிரியா. சமீபத்தில் செய்திகளைப் பார்க்கும் , படிக்கும் பலருக்கும் இப்பெயர் ஒன்றும் புதிதாய் இருக்காது... பெரும்பாலும் , மேற்கத்திய நாடுகளின் செய்திகளையே கக்கும் நமது ஊடகங்களின் செய்திகளுக்குப்பின்னால் மிகப் பயங்கரமான உண்மைகள் புதைந்து கிடக்கின்றன... பாஷர் அல் ஆஷாத் என்ற கொடுங்கோலன் மக்களைக் கொல்கிறான் என்றே உச்சரித்துப்பழகிய பல தொலைக்காட்சி நிருபர்களையும் தாண்டி , அமெரிக்கா சிரியாவில் நுழைந்து மக்களைக் காக்குமா என்ற பொழுதுபோகா விவாதங்களையும் தாண்டி பல நிஜங்கள் மறைக்கப்படுகின்றன. லிபியா போன்றே சிரியாவும் கடந்து போகும் என்றே உலக நாடுகள் நினைத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் , அப்படியல்ல , இந்த நிகழ்வுகள் பாரிய மாற்றங்களை பூமிப்பந்தில் ஏற்படுத்தப்போகின்றன  என பல உலக அறிஞர்கள் கருதுகிறார்கள். லிபிய புரட்சிக்கும் , இப்போது நடந்துகொண்டிருக்கும சிரிய புரட்சிக்குமான வேறுபாடு என்ன. ? முதல் வேறுபாடு , லிபியா போன்று நண்பர்களில்லாத நாடல்ல சிரியா. ரஷ்யாவின் கடற்படைத் தளத்தைக்கொண்டிருக்கும் நாடு. ரஷியாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கிக்குவிக்கும் நாடு சிரியா. சிரியா என்பது ஈரான் மீதான அமெரிக்காவின

எஸ்.எஸ்.பொன்முடி - மனிதருள் மாணிக்கம்.

எஸ்.எஸ்.பொன்முடி , கொங்குச்சீமையிலே குறிப்பாக பல்லடம் , சூலூர் வட்டாரத்தில் தெரியாதவர்கள் சொற்பமே. எஸ்.எஸ். பொன்முடி அவர்கள் மட்டுமல்ல , அவர்களது குடும்பமே சூலூரில் பழம்பெருமை மிக்க குடும்பம். காலங்காலமாக அவர்களது குடும்பத்தினரே சூலூரின் அனைத்து தேர்தல்களிலும் வென்றதும் , வெல்வதும் வரலாறு. பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவராயினும் மாற்றுக்கட்சியினராலும் மதிக்கப்படும் சில மனிதர்களில் எஸ்.எஸ் பொன்முடியும் ஒருவர். அவருக்கும் , எனக்குமான பரிச்சயமொன்றும் அவ்வளவு அதிகமில்லைதான். அப்போது எனக்கு ஒரு பத்திலிருந்து , பதினைந்து வயதிருந்திருக்கலாம். கலங்கலில் கவுன்சிலர் தங்கவேலு சர்வ அதிகாரமும் பொருந்தியவராய் வலம் வந்துகொண்டிருந்தார். அவர் எஸ்.எஸ்.பொன்முடியின் வலக்கரம். ஊருக்கு மேற்கே ஜல்லிக்குழி என்ற மனிதர்கள் உபயோகப்படுத்த முடியாத , இயலாத பகுதி ஒன்றிருந்தது.....அப்போது கழகம் ஆட்சியிலிருந்தது + பொன்முடி எம்.எல்.ஏவாக இருந்தார். கட்சிக்காரர்கள் , குறிப்பாக ஒடுக்கப்பட்ட , மிக பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் கேட்டுக்கொண்டதற்காக , மிகுந்த பிரயாசைப்பட்டு தங்கவேல் மற்றும் எஸ்.எஸ்.பொன்முடி அவ