முன்பு மதிபாலா பக்கங்கள் என்ற தலைப்பில் இன்னொரு வலைப்பூவில் பெரும்பாலும் அரசியலைப் பற்றி அலசிக்கொண்டிருந்தேன்......சலிப்புத் தட்டியதாலும் , நேரமின்மையாலும் வலைப்பூக்களிலிருந்து அனேகமாக ஒரு வருடம் விலகியே இருந்தேன்.... தற்போதைக்கு , உணர்வுகளுக்கு வடிகாலென எப்போதாவது எழுதலாம் என தீர்மானித்திருக்கிறேன்.... இவ்வலைப்பூவை "எழுதியதும் , டைப்பியதுமென பெயரிட்டு மீள்கிறேன்...! இனி அவ்வப்போது சந்திப்போம்…நன்றி.! *** வாழ்வில் நாம் பல பேரைச் சந்திக்கிறோம். சிலரை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்கிறோம் , பலரை எப்போதாவது…. வாழ்வின் சில நொடிகள் மட்டுமே வந்து போகும் பலரைக் கூட எப்போதாவது பார்த்த நினைப்புத் தோன்றும் எனக்கு….மற்றபடி இந்த அவசர உலகில் காலம் அனைத்தையும் கடந்து போகச் செய்கிறது….நாம் கடந்து போன முகங்களையும் தான்.. இது நம்மைத் தூக்கி வளர்த்த ஆத்தாவாக இருக்கட்டும் , இல்லை ஆயாவாக இருக்கட்டும்…சிறுவயதில் வீட்டுவேலை செய்யும் வேலைக்காரியிலிருந்து , காரிய நிமித்தமாக வெகு தொலைவானதொரு ஊரில் பார்த்தவர்களாக இருக்கட்டும்… பார்த்தவர்களென்றில்லை ,கேள்விப்பட்டவர்களும் , வாசித்தவர்களும் அதி...