Skip to main content

Posts

Showing posts with the label நட்பு

நண்பர் 'டோண்டு' ராகவன்...

உயிரோடு இருக்கும்வரை அறிக்கைகளால் அர்சித்து எதிர்ப்பரசியல் நடாத்தி செத்துபோன பிறகு ஆருயிர் நண்பர் என்று அழைத்துக்கொள்ளும் எல்லா அரசியல்வாதிகளையும் போலவே நான். எனக்கும் மறைந்த உயர்திரு 'டோண்டு' ராகவன் அவர்களுக்குமான பரிச்சயம் அவ்வளவொன்றும் அதிகமில்லைதான். பதிவுலகையும் , பர்ஸனல் லைப்பையும் பிரித்து வைத்துக்கொள்ளும் எண்ணமுடைய நான் , டோண்டு மட்டுமல்ல மற்றபல பதிவுலக நண்பர்களுடனும் கூட தனிப்பட்ட தொடர்புகளை வைத்துக்கொண்டதில்லை... இருந்தாலும் , அவ்வப்போது பதிவுலக பின்னூட்டங்களின்பாலே தொடர்ந்துகொண்டிருந்த தொடர்பு , எனது 'போலி டோண்டு' பற்றிய கட்டுரையொன்றிலேயே  தீவிர விவாதமாக மாறியது.. ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீதோ இல்லை அவர்தம் பிற்போக்கான கருத்துக்கள் மீதோ இருந்திருக்கலாம். கடினமாக ஓரிரு முறை பேசியிருக்கலாம்.. அத்தனையும் தாண்டி அவர் மிக நல்ல மனிதர் , கடும் உழைப்பாளி என்பதை அவரது பதிவுலகம் மூலமாக அறிந்தவனெனினும் உறுதியாக கூறவியலும்.. அத்தகைய நல்ல மனிதரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் , நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்... வருத்தங்கள...

செயற்கரிய செய்வர் பெரியர்….திரு.பொள்ளாச்சி நசன்.!

இந்தப்பதிவினை 2009 ல் எழுதினேன். படித்த நண்பர்கள் அனைவரும் , இது எமக்கு புதிய செய்தியே என்றார்கள்....நல்லசெய்தியினை நாலு பேருக்கு தெரியும்படி மீண்டும் உரக்கச்சொல்வதில் தவறில்லையே. அதனால் இந்த மீள்பதிவு..... நவம்பர் 2009 க்கும் 2012க்கும் இடைப்பட்ட காலவெளியில் 'தமிழம்' இணையம் தான் எத்துணை வளர்ந்திருக்கிறது? வாழ்த்துக்களும் ! , வணக்கங்களும்! த ற்செய லாக நேற்றிரவு வலையில் உலாவிக்கொண்டிருந்தேன்….மேற்கண்ட தலைப்பிலிருக்கும் குறள்மொழிக்கேற்ப , அரியதொன்றை செய்து கொண்டிருக்கும் திரு. பொள்ளாச்சி நசன் அவர்களைப் பற்றியும் , அவரது தமிழம் இணையம் பற்றியும் அரிய நேரிட்டது. உங்களில் சிற்றிதழ் தொடர்புபட்ட பலரும் அவரை அறிந்திருக்கக் கூடும்…….இன்னும் பலர் அவரைப் பற்றி அறிந்திருக்காமலும் இருக்கக் கூடும்…..என்னைப் போல..! அதனால் ஒரு சின்ன அறிமுகம்… ( சூரியனுக்கே டார்ச்சா என்று திரு.நசன் அவர்கள் கோவித்துக்கொள்ளக் கூடாது…!!) பொள்ளாச்சி நசன் என்று தன் பெயரை வழங்கும் மணிப்பிள்ளை நடேசன் தமிழம் என்னும் வலையிதழின் ஆசிரியர். இவர் சிதம்பரத்தில், செப்டம்பர் 15, 1952 அன்று பிறந்தார். பொள்ளாச்ச...

நல்ல நண்பர்களைப் பெற நாற்பது வழிகள்.!

60 நாட்களில் ஆங்கிலம் கற்றுக்கொள்ளலாம் , பத்தே நாளில் மூல வியாதிக்கு டாட்டா காட்டலாம் என்பது போன்ற போலி விளம்பரங்களிலொன்றாக இதையும் நினைத்துக்கொண்டு வந்திருந்தால் நீங்கள் தவறான இடத்திற்கு வந்திருக்கிறீர்கள்.. அது மட்டுமின்றி , தமிழ் மணத்தில் நட்பு வட்டம் ஏற்படுத்துவத்ற்கும் இந்தப்பதிவிற்கும் சம்பந்தமேதுமில்லை..அதற்கு நிறைய வேறு வழிகள் இருக்கின்றன.....(தெரிந்தால் சொல்லவும் ....) , இனியாவது பதிவிற்கு வாடா என்கிறீர்களா ,???? ஓக்கே , வந்தாச்சு...!!! நட்பு பெற்றோர்களிடமும் , கட்டிய மனைவியிடமும் இருக்காத நமது ரகசியங்கள் பல நண்பர்களிடம் இருக்கக் கூடும்...அத்தகைய நண்பர்கள் உங்களுக்கு நம்பிக்கையான மற்றும் உண்மையானவர்களாகவும் இருப்பதென்பது மிக அவசியம். அதைத்தான் வள்ளுவரும் இவ்வாறு குறிப்பிடுகிறார்.. முகநக நட்பது ந ட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு. நட்பு என்பது யாரோ தெருவில் போகும் ஒரு சிலருடன் சிறிது நேரம் பேசி பின் ஒரு காபி ஷாப்பில் கலந்துரையாடுவது மட்டுமல்ல..நீங்கள் துக்கமாயிருக்கும்போது உங்கள் துக்கங்களை பகிர்ந்து கொள்வதும் , உங்களைத் தேற்றிவிடுவதுமே நட்பு. யாருடனும் இருக்கும் போது உங்கள்...