Skip to main content

Posts

Showing posts from 2012

சிரியா : உலகப்போரின் நுழைவாயில்.

சிரியா. சமீபத்தில் செய்திகளைப் பார்க்கும் , படிக்கும் பலருக்கும் இப்பெயர் ஒன்றும் புதிதாய் இருக்காது... பெரும்பாலும் , மேற்கத்திய நாடுகளின் செய்திகளையே கக்கும் நமது ஊடகங்களின் செய்திகளுக்குப்பின்னால் மிகப் பயங்கரமான உண்மைகள் புதைந்து கிடக்கின்றன... பாஷர் அல் ஆஷாத் என்ற கொடுங்கோலன் மக்களைக் கொல்கிறான் என்றே உச்சரித்துப்பழகிய பல தொலைக்காட்சி நிருபர்களையும் தாண்டி , அமெரிக்கா சிரியாவில் நுழைந்து மக்களைக் காக்குமா என்ற பொழுதுபோகா விவாதங்களையும் தாண்டி பல நிஜங்கள் மறைக்கப்படுகின்றன. லிபியா போன்றே சிரியாவும் கடந்து போகும் என்றே உலக நாடுகள் நினைத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் , அப்படியல்ல , இந்த நிகழ்வுகள் பாரிய மாற்றங்களை பூமிப்பந்தில் ஏற்படுத்தப்போகின்றன  என பல உலக அறிஞர்கள் கருதுகிறார்கள். லிபிய புரட்சிக்கும் , இப்போது நடந்துகொண்டிருக்கும சிரிய புரட்சிக்குமான வேறுபாடு என்ன. ? முதல் வேறுபாடு , லிபியா போன்று நண்பர்களில்லாத நாடல்ல சிரியா. ரஷ்யாவின் கடற்படைத் தளத்தைக்கொண்டிருக்கும் நாடு. ரஷியாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கிக்குவிக்கும் நாடு சிரியா. சிரியா என்பது ஈரான் மீதான அமெரிக்காவின

எஸ்.எஸ்.பொன்முடி - மனிதருள் மாணிக்கம்.

எஸ்.எஸ்.பொன்முடி , கொங்குச்சீமையிலே குறிப்பாக பல்லடம் , சூலூர் வட்டாரத்தில் தெரியாதவர்கள் சொற்பமே. எஸ்.எஸ். பொன்முடி அவர்கள் மட்டுமல்ல , அவர்களது குடும்பமே சூலூரில் பழம்பெருமை மிக்க குடும்பம். காலங்காலமாக அவர்களது குடும்பத்தினரே சூலூரின் அனைத்து தேர்தல்களிலும் வென்றதும் , வெல்வதும் வரலாறு. பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவராயினும் மாற்றுக்கட்சியினராலும் மதிக்கப்படும் சில மனிதர்களில் எஸ்.எஸ் பொன்முடியும் ஒருவர். அவருக்கும் , எனக்குமான பரிச்சயமொன்றும் அவ்வளவு அதிகமில்லைதான். அப்போது எனக்கு ஒரு பத்திலிருந்து , பதினைந்து வயதிருந்திருக்கலாம். கலங்கலில் கவுன்சிலர் தங்கவேலு சர்வ அதிகாரமும் பொருந்தியவராய் வலம் வந்துகொண்டிருந்தார். அவர் எஸ்.எஸ்.பொன்முடியின் வலக்கரம். ஊருக்கு மேற்கே ஜல்லிக்குழி என்ற மனிதர்கள் உபயோகப்படுத்த முடியாத , இயலாத பகுதி ஒன்றிருந்தது.....அப்போது கழகம் ஆட்சியிலிருந்தது + பொன்முடி எம்.எல்.ஏவாக இருந்தார். கட்சிக்காரர்கள் , குறிப்பாக ஒடுக்கப்பட்ட , மிக பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் கேட்டுக்கொண்டதற்காக , மிகுந்த பிரயாசைப்பட்டு தங்கவேல் மற்றும் எஸ்.எஸ்.பொன்முடி அவ

எக்ஸைல் - நடுசென்ட்டரில் நான்.

இந்த எல்லா எழவும் ஆடிமாசம் ஒரு சனிக்கெழமை சாய்ந்தரம் ஆரம்பித்தது. மாமியார் வீட்டில் என்டெர்டெயின்மென்ட்டுக்கு எதுவுமே இல்லாத காரணத்தாலும் , இயல்பாக இருக்கும் படிக்கும் காரணத்தாலும் வழக்கமாக குமுதம் , கல்கண்டு , ஆனந்த விகடன் , அதிகபட்சம் போனால் சமீபகாலமாக 'புதிய தலைமுறையும்' வாங்கிப்படிக்கும் நான் , தாராபுரம் பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்தில் இருக்கும் ஜே.பி.புத்தக நிலையம் போனேன் , எப்போ தெரியுமா , நான் முன்பு சொன்ன அதே ஒரு சனிக்கெழமை சாயந்தரம் தான். சுத்திச்சுத்திப் பார்த்தபோது கண்ணில் தட்டுப்பட்டது 'சாரு நிவேதிதா'வின் எக்ஸைல் நாவல். பின்னட்டையிலேயே பதிப்பாளர் (ஒருவேளை பத்ரி அல்லது பா.ரா?) கோடிட்டுக்காட்டியிருந்தார்...நாந்தான் கவனிக்காம விட்டுட்டேன். அதுமாதிரியும் இல்லாமல் , இதுமாதிரியும் இல்லாமல் புதுமாதிரி என்றது அச்செய்தி. அப்போதும் புத்தியில்லை. நானெல்லாம் , ஆங்கிலப்புத்தகங்களில் 'ஷிட்னி ஷெல்டன் ' , அல்லது ' டைம்' தாண்டி அறியாவதனாகையால்  ' ஆட்டோ பிக்சன் ' என்ற அழியாத வரலாறு பற்றி அறியாமல் விட்டுவிட்டேன். அதனால் , பதிப்பாளரின் அடுத்த எச்சரிக

“திராவிடர் , தமிழர் , டெசோ”

மூலைக்கு முப்பதென இருக்கும் பலகட்சிகளின் பேரில் இன்னமும் திராவிடம் பட்டொளி வீசிப்பறக்கும் ஒரு சூழலில் , திராவிட இயக்கத்திற்கும் எழுச்சிக்கும் எவ்வகையிலும் சம்பந்தப்படாத விஜயகாந்த் போன்றவர்களும் திராவிடக் கட்சி நடாத்துகின்ற சூழலில் நாம் இருக்கிறோம். தமிழ் , தமிழர் என்று அனுதினமும் அள்ளியள்ளித் தெளித்த வசனங்களாலும் , வீராவேச கருத்துக்களினாலும் திராவிடம் தட்டி எழுப்பிய உணர்வோடே இங்கு அனேகர் ‘தமிழுணர்வு’ பெற்றிருக்கிறோம். தமிழகத்தில் எழுந்த திராவிட உணர்வே , புலிகளுக்கு உந்து சக்தியாக இருந்தது என்று அவ்வமைப்பின் முன்னாள் தலைவரும் , எஞ்சியிருக்கும் ஒரே மூத்த உறுப்பினருமான ‘ கே.பி ‘ அவர்கள் சொன்னதே தமிழர்தம் 20ம் நூற்றாண்டு வரலாற்றில் தமிழர்களின் வாழ்வில் திராவிட இயக்கத்தின் பங்கை வெளிக்காட்டும். தமிழர் திராவிடராயினரா ? இல்லை திராவிடர்கள் தமிழர்களாயினரா என்று பார்க்கப்போனால் இரண்டுமே வடிகட்டின பொய்யே…..வரலாற்றில் ஆங்காங்கே அள்ளித் தெளித்த ஓரிரு கருத்துக்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டதே ‘திராவிடம்’ என்ற கருத்தாக்கம். அது முழுமையானதல்ல. திராவிடக்குட்பட்டோர் எனச்சொல்லப்படும் கன்னட , தெலுங்கு , மலை

செயற்கரிய செய்வர் பெரியர்….திரு.பொள்ளாச்சி நசன்.!

இந்தப்பதிவினை 2009 ல் எழுதினேன். படித்த நண்பர்கள் அனைவரும் , இது எமக்கு புதிய செய்தியே என்றார்கள்....நல்லசெய்தியினை நாலு பேருக்கு தெரியும்படி மீண்டும் உரக்கச்சொல்வதில் தவறில்லையே. அதனால் இந்த மீள்பதிவு..... நவம்பர் 2009 க்கும் 2012க்கும் இடைப்பட்ட காலவெளியில் 'தமிழம்' இணையம் தான் எத்துணை வளர்ந்திருக்கிறது? வாழ்த்துக்களும் ! , வணக்கங்களும்! த ற்செய லாக நேற்றிரவு வலையில் உலாவிக்கொண்டிருந்தேன்….மேற்கண்ட தலைப்பிலிருக்கும் குறள்மொழிக்கேற்ப , அரியதொன்றை செய்து கொண்டிருக்கும் திரு. பொள்ளாச்சி நசன் அவர்களைப் பற்றியும் , அவரது தமிழம் இணையம் பற்றியும் அரிய நேரிட்டது. உங்களில் சிற்றிதழ் தொடர்புபட்ட பலரும் அவரை அறிந்திருக்கக் கூடும்…….இன்னும் பலர் அவரைப் பற்றி அறிந்திருக்காமலும் இருக்கக் கூடும்…..என்னைப் போல..! அதனால் ஒரு சின்ன அறிமுகம்… ( சூரியனுக்கே டார்ச்சா என்று திரு.நசன் அவர்கள் கோவித்துக்கொள்ளக் கூடாது…!!) பொள்ளாச்சி நசன் என்று தன் பெயரை வழங்கும் மணிப்பிள்ளை நடேசன் தமிழம் என்னும் வலையிதழின் ஆசிரியர். இவர் சிதம்பரத்தில், செப்டம்பர் 15, 1952 அன்று பிறந்தார். பொள்ளாச்ச

உருவான டெசோ முதல் உருவாகாத ஈழம் வரை!

தோழர் ஆர். முத்துக்குமாரைப் பற்றி நாம் அறிமுகப்படுத்தவேண்டியதில்லை. அவரே நம்மை அறிமுகப்படுத்தும் நிலையில் இருக்கிறார். நாம் கொண்டுள்ள கருத்தையே அவரும் சுட்டுவதால் இக்கட்டுரை மீளப்பதிப்பிக்கிறோம்.! அவருடைய தளத்திற்குச் செல்ல இவ்விணைப்பை உபயோகிக்கவும். கருணாநிதி விரும்பினால் தமிழீழத்தைத் தமிழ்நாட்டுக்கு உள்ளேயே அமைத்துக்கொள்ளட்டும் என்று சீறியிருக்கிறார் இலங்கை அமைச்சர் கோத்தபய ராஜபட்சே. தமிழீழ ஆதரவாளர் அமைப்பைக் கழுத்தை நெரித்துக் கொன்றவரே கருணாநிதிதான் என்று கண்டிக்கிறார் வைகோ. அன்று காங்கிரஸோடு உறவுகொள்ள டெசோவைக் கலைத்த கருணாநிதி, தற்போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகிக்கொள்வதற்காக டெசோவைத் தொடங்கியிருக்கிறார் என்று குற்றம்சாட்டுகிறார் பழ. நெடுமாறன். ஆக, தமிழீழ எதிர்ப்பாளர்கள் தொடங்கி தமிழீழ ஆதரவாளர்கள் வரை பலரும் கலைஞரைக் கண்டிக்கிறார்கள். விமரிசிக்கிறார்கள். எதிர்க்கிறார்கள். அத்தனைக்கும் ஒரே காரணம், டெசோ.   ஈழத்தமிழர்களின் பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு தமிழீழம் மட்டுமே. அதுதான் என்னுடைய நிறைவேறாத கனவு. அந்தத் தமிழீழத்தை அடைவதற்காகவே தமிழீழ ஆதரவாளர் அம

தமிழீழம் : அரசியலாக்குவது கருணாநிதியா இல்லை மற்றவர்களா?

இன்று டெசோ மாநாடு நடந்து முடிந்திருக்கிறது.....அவர்களும் ஒரு தீர்மானம் போட்டு விட்டு கலைந்து விட்டார்கள்.... ஆனால் , கருணாநிதியின் இந்த திடீர் ஈழப்பாசம் கண்டு எல்லாத் தரப்பினரும் அவர் நாடகம் போடுவதாக கூக்குரலிடுகிறார்கள்... கருணாநிதியின் ஈழப்பாசம் நாடகமென்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லைதான்... ஆனால் , இன்று கருணாநிதியைக் குற்றம் சொல்கிற வைகோ , நெடுமாறன் , சீமான் போன்றவர்களுக்கு கருணாநிதியைக் குற்றம் சொல்ல என்ன வக்கிருக்கிறது? என்ன உரிமையிருக்கிறது? போர் நடந்தால் அப்பாவி மக்கள் சாகத்தானே வேண்டும் என்றழைத்த ஜெயலலிதாவை ஈழத்தாயாக ஏற்றுக்கொள்வதில் இல்லாத சிரமம் கருணாநிதியை ஏற்றுக்கொள்வதில் இவர்களுக்கு என்ன இருக்கிறது? பிரபாகரனைப் பிடித்து வந்து தூக்கிலிட வேண்டும் என்று சொன்ன செயலலிதாவிற்கு பல்லக்குத் தூக்கிய வைகோவிற்கும் , சீமானுக்கும் அப்படி என்னதான் கருணாநிதியிடத்தில் பிரச்சினை? நாளெல்லாம் கருணாநிதி துரோகி என்று பேசும் பெருந்தகைகளே , ஜெயலலிதா என்ன செய்து கிழித்தார் உங்களுக்களித்த வாக்குறுதிப்படி?  ஈழத்துக்கு இராணுவம் அனுப்பினாரா? இல்லை இந்திய நடுவண் அரசைப் பிடித்து உலுக்கினாரா ஈழம் வேண

நாசரின் "நச்" பேட்டி , மனிதர்களுக்கு மட்டுமானது!

திரையுலகத்தில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்ற நட்சத்திர நடிகர் நாசர் அவர்களின் சமூக அக்கறை மெய்சிலிர்க்க வைக்கிறது.. இவர் போன்ற உண்மையான சமூக ஆர்வலர்களை விட்டுவிட்டு ,  சமூக உணர்வற்ற அக்கறையற்ற நடிகர்களே நாடாள வேண்டும் என்று கொடி பிடிக்கும் இளைஞர்கள் கொஞ்சம் சிந்திக்கட்டும்.... கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனும் , உணர்வுள்ள , உணர்வற்ற மனிதனும் பார்க்கவேண்டும்!!!

"ஜெ" பிரதமரானால்...!!

ஆனாலும் இந்த "சோ" மா(தி)ரி பேச யாருக்கும் வராது... ஒரு விழா அதில் மாங்காய்களை தனக்குத் தோதான முறையில் அடித்துக்கொள்ளப் பார்த்திருக்கிறார்.... முதலில் , பாரதிய ஜனதா கட்சியில் பிரதமர் வேட்பாளராக இருக்கும் இரு போட்டியாளர்களை கூப்பிட்டு வைத்தார். தனக்கு "மோடி" தான் பிரதமர் சாய்ஸ் என்று சொல்லுவதற்கு வாஜ்பாயையும் துணைக்கு அழைத்தார்.......வாஜ்பாயை முன்மொழிந்ததே அத்வானி தான் என்றும் , அதுபோலவே "மோடி" யையும் அத்வானி முன்மொழிய வேண்டுமென்கிறார்... தமிழகத்தில் தனக்கான ஓட்டுவங்கியைப் பெறுக்க சில பாராளுமனற் , சட்டமன்ற தொகுதிகள் பாஜகவுக்குத் தேவை... அதனால் , அதிமுகவுடனோ , திமுகவுடனோ ஆன கூட்டணி அக்கட்சிக்கு மிகமிக அவசியம் என்பதைவிட அவசரம்... அதனால் தான் , வாஜ்பாயை பதிமூன்று மாதங்கள் படுத்திய 'ஜெ'வுடன் கூட்டணிக்குத் தவிக்கிறார்கள் அத்வானியும் , மோடியும் , சோவும்.....எப்படி இழுப்பது? ஏற்கெனவே விஜயகாந்த்தை தேவையில்லாமல் தூக்கி விட்டுவிட்டோமோ என்ற கடுப்பில் இருக்கும் அம்மா "பாஜகவை தலையில் தூக்கி சுமக்க ஒத்துக்கொள்வாரா? அதுவும் " அம்மா" தான் எல்லாமே எ

ஹிட்லர் ரிட்டன்ஸ்!!!

நவீன ஹிட்லர். நக்கீரன் மீதான தாக்குதல் 1991 முதல் 1996 வரையான ஜெயலலிதாவின் கொடுங்கோலாட்சியை நியாபகப்படுத்துகிறது..இரண்டு நாட்கள் அப்பத்திரிக்கை அலுவலகத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் என்பதையும் , அக்கட்டிடத்துக்கான மின்சார மற்றும் குடிநீர் இணைப்பை துண்டித்தார்கள் என்பதையும் பார்க்கும் போது , ஜெயலலிதாவின் மமதை புரிகிறது... ஜெயலலிதா என்னவோ யோக்கிய சீலர் எனவும் , சசிகலா தான் எல்லா தகிடுதத்தமும் செய்தார் என்றும் புழுகித் திரிந்த தினமலர் , தினமணி , விகடன் , குமுதம் போன்ற பத்திரிக்கைகளின் குட்டு வெளிப்பட்டது , "கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்ற பழமொழியை நினைவுபடுத்துகிறது..... எங்கப்பா இங்க நெறையா பேரு  பத்திரிக்கை சுதந்திரம் பத்தி பக்கம் பக்கமா பேசுவீங்களே , கொஞ்சம் வந்து என்னான்னு கேளுங்களேன்...!!

போபால் , மணிபால், ஜோக்பால் , பசும்பால்!!

கெடக்கறதெல்லாம் கெடக்கட்டும் , கெழவியத் தூக்கி மனையில வை ன்னு ஊருப்பக்கம் ஒரு பழமொழி சொல்வாய்ங்க...அதுபோலத் தான் ஜோக்பாலும்...என்னவோ ஜோக்பால் வந்தா இந்தியா முழுக்க பாலாறும் , தேனாறும் ஓடும்னு ரீல் காட்டிகினு கீராரு அன்னா ஹசாரே. அவரு கொண்டு வார ஜோக்பால் நாட்டுக்கு நல்லது பண்ணுமோ என்னமோ தெரியாது....எந்த தனியொரு சட்டமுமே நாட்டுக்கு நல்லது பண்ணாது அப்படீங்கறது மட்டும் எல்லாருக்கும் நல்லா தெரியும்.. 'மம்மி' இருவது வருசமா சொத்துக்குவிப்பு வழக்கை எப்படி இழுத்தடிக்குதுன்னு எல்லாருக்கும் தெரியும்....என்ன பண்ண முடிஞ்சது சட்டத்தால்? ஒரு எழவும் பண்ண முடியலை..... எம் முப்பாட்டனாருக்கு துளு மொழி தான் தெரியும் , குத்தப்பத்திரிக்கையை அந்த மொழில தான் மொழிபெயர்க்கணும்னு ஒரு அப்பீலூ......அப்பாலிக்கா அதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக்குன்னு இன்னொரு அப்பீலு....அடப்பாவிகளா அது என்ன கலியாணப் பத்திரிக்கையா , முன்பக்கம் இங்கீலீசிலும் , பின்பக்கம் தமிழ்லயும் அச்சடிச்சிக்க? என்ன எழவு சார் இது?? மம்மி கேஸ் ஒரு சேம்பிள் தான்...இது மாதிரி லச்சம் கேஸு நாடு பூராவும் இருக்கு....'சுக்ராம்'ன்னு ஒருத்தர் ,

L(J)OKPAL , 'HINDI'ANS & INDIANS

These are all some bundle of tweets i tweeted recently. to follow my tweets click https://twitter.com/#!/mathibalaa  , for better understanding i also included some of the replies received. # annahazare  May 2015,Press:where is this year's annual fasting? Kejiriwal:due to Mumbai is humid and Delhi too hot fasting will be at Ooty. punbali   Puneet Bali   @   @ mathibalaa   # teamanna  n  @ thekiranbedi  take up membership at mahindra holidays so that de can chnge fast venue evryear! Sasikala out , From Now onwards Milk River ( athampa Paalaru) and Honey River( Athmappa Thenaru) will flood in Tamilnadu.! # lokpal  is another bill similar to reservation for ladies bill ! it always prevail but will never actually executed.  # teamanna @ say_satheesh  BY THE WAY...I REALLY WANT TO KNOW WHO IS OUR பொதுபணித்துறை அமைச்சர்??? say_satheesh   Satheesh Kumar   @   @ mathibalaa  who knows? Web site having previous data:) @ say_satheesh  really pity to learn about tamil

உறவுகளற்ற பொழுது.

உறவுகளற்ற பொழுது. புழுதி படிந்த தார்ச்சாலைகள்.. தெருவில் ஹாரனுடனே கடக்கும் பேருந்துகள்.. கை காட்டாமல் திரும்பும் வாகன ஓட்டிகள் நீர்ப்பிடிப்புக்காக சாலையில் இருக்கும் குழிகள்.. பக்கத்துவீட்டுக்காரன் போட்டிருக்கும் குப்பங்குழி அன்றாடம் கடக்கும் சாலையோர சாக்கடைக்கால்வாய்... அதிகாலையில் சாலையில் கழிக்கும் பெரிசுகள் , சிறிசுகள்... ஆயிரம் பேரின் வியர்வை வாசம் நுகரும் டவுன்ஹால்.... இவையனைத்தையும் ஊரிலிருக்கும் அவஸ்தைகளாய் ஒவ்வொரு முறையும் நினைத்துப்புலம்பும் அவனுக்கு, ஊர்விட்டுக்கிளம்பும் அந்தப்பொழுதில் அடிவயிற்றில் அமிலம் போல் கிளம்பும் வேதனையுணர்வும்.... உறவுகளேதுமற்ற பொழுதின் ரணமும் பலமடங்கு.... காரணம்… நீ இங்கிருந்தபோதெல்லாம் விலகியிருக்க காரணங்கள் கிடைத்தன எனக்கு.. ஒருநாள் , வாடிக்கையாளருடன் இரவு விருந்து. மறுநாள் , மற்றொரு காரணம்…… இன்று….நீ இங்கில்லாத போதோ……. உன்னுடன் அடிக்கடி தொலைபேசவாவது காரணங்களைத் தேடுகிறேன்… ஒருநொடி நிகழ்வுகள். அருவி ‘ஜோ’ வென விழுந்து என் முதுகைத் தாக்கியது. பேயெனப் பெய்தது மழை…ஒதுங்க இடமின்றி நான்…! காற்று வேரையும் விழுதையும் ஒருங்கே அசைத்தது…. இருட