உறவுகளற்ற பொழுது. புழுதி படிந்த தார்ச்சாலைகள்.. தெருவில் ஹாரனுடனே கடக்கும் பேருந்துகள்.. கை காட்டாமல் திரும்பும் வாகன ஓட்டிகள் நீர்ப்பிடிப்புக்காக சாலையில் இருக்கும் குழிகள்.. பக்கத்துவீட்டுக்காரன் போட்டிருக்கும் குப்பங்குழி அன்றாடம் கடக்கும் சாலையோர சாக்கடைக்கால்வாய்... அதிகாலையில் சாலையில் கழிக்கும் பெரிசுகள் , சிறிசுகள்... ஆயிரம் பேரின் வியர்வை வாசம் நுகரும் டவுன்ஹால்.... இவையனைத்தையும் ஊரிலிருக்கும் அவஸ்தைகளாய் ஒவ்வொரு முறையும் நினைத்துப்புலம்பும் அவனுக்கு, ஊர்விட்டுக்கிளம்பும் அந்தப்பொழுதில் அடிவயிற்றில் அமிலம் போல் கிளம்பும் வேதனையுணர்வும்.... உறவுகளேதுமற்ற பொழுதின் ரணமும் பலமடங்கு.... காரணம்… நீ இங்கிருந்தபோதெல்லாம் விலகியிருக்க காரணங்கள் கிடைத்தன எனக்கு.. ஒருநாள் , வாடிக்கையாளருடன் இரவு விருந்து. மறுநாள் , மற்றொரு காரணம்…… இன்று….நீ இங்கில்லாத போதோ……. உன்னுடன் அடிக்கடி தொலைபேசவாவது காரணங்களைத் தேடுகிறேன்… ஒருநொடி நிகழ்வுகள். அருவி ‘ஜோ’ வென விழுந்து என் முதுகைத் தாக்கியது. பேயெனப் பெய்தது மழை…ஒதுங்க இடமின்றி நான்…! காற்று வேரையும் விழுதையும் ஒருங்கே அசைத்தது…. இருட...