Skip to main content

Posts

Showing posts with the label புனைவுகள்

தமிழீழம் : அரசியலாக்குவது கருணாநிதியா இல்லை மற்றவர்களா?

இன்று டெசோ மாநாடு நடந்து முடிந்திருக்கிறது.....அவர்களும் ஒரு தீர்மானம் போட்டு விட்டு கலைந்து விட்டார்கள்.... ஆனால் , கருணாநிதியின் இந்த திடீர் ஈழப்பாசம் கண்டு எல்லாத் தரப்பினரும் அவர் நாடகம் போடுவதாக கூக்குரலிடுகிறார்கள்... கருணாநிதியின் ஈழப்பாசம் நாடகமென்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லைதான்... ஆனால் , இன்று கருணாநிதியைக் குற்றம் சொல்கிற வைகோ , நெடுமாறன் , சீமான் போன்றவர்களுக்கு கருணாநிதியைக் குற்றம் சொல்ல என்ன வக்கிருக்கிறது? என்ன உரிமையிருக்கிறது? போர் நடந்தால் அப்பாவி மக்கள் சாகத்தானே வேண்டும் என்றழைத்த ஜெயலலிதாவை ஈழத்தாயாக ஏற்றுக்கொள்வதில் இல்லாத சிரமம் கருணாநிதியை ஏற்றுக்கொள்வதில் இவர்களுக்கு என்ன இருக்கிறது? பிரபாகரனைப் பிடித்து வந்து தூக்கிலிட வேண்டும் என்று சொன்ன செயலலிதாவிற்கு பல்லக்குத் தூக்கிய வைகோவிற்கும் , சீமானுக்கும் அப்படி என்னதான் கருணாநிதியிடத்தில் பிரச்சினை? நாளெல்லாம் கருணாநிதி துரோகி என்று பேசும் பெருந்தகைகளே , ஜெயலலிதா என்ன செய்து கிழித்தார் உங்களுக்களித்த வாக்குறுதிப்படி?  ஈழத்துக்கு இராணுவம் அனுப்பினாரா? இல்லை இந்திய நடுவண் அரசைப் பிடித்து உலுக்கினாரா ஈழம்...

வளவு.

  அது தேர்தல் நேரம்.. சட்டசபைத்தேர்தலோ , நாடாளுமன்றத் தேர்தலோ அல்ல. உள்ளூராட்சித் தேர்தல். பொதுவாக , சட்டசபை,நாடாளுமன்றத் தேர்தலைவிட பரபரப்பானது உள்ளூராட்சித் தேர்தல்.  காரணம் , அச்சமயத்தில் தான் எப்போதுமே தேர்தலில் ஜெயிக்கும் நட்ராஜுக்கவுண்டரும் , தோத்துப்போகும் இன்னபலரும் உள்ளூர் அரசியல் தலைமைகளாக ஜொலிக்கும் சொற்ப காலம்.  டீக்கடைகள் கட்சிக்கலரற்ற வேட்டிகளுடன் திரியும் தொண்டர்களால் நிரம்பித்திளைக்கும்.... உருளைக்கிழங்கு போண்டாவொன்றையும் , ஒரு லைட் டீ ஒன்றையுமே அடித்துக்கொண்டு , இரவு நேர குவாட்டர் கோட்டாவுக்காக காத்திருக்கும் நட்ராஜுக் கவுண்டரின் தொண்டரடிப் பொடிகள் அடிக்கும் லோலாயும் , தப்புக்கொட்டலும் , மைக்கில் அதிரடியான பொங்கு தமிழ் வசனங்களைப் பொழிவதிலும் ஊருக்குள் திருவிழாவோ என்ற வண்ணம் ஜே.ஜே. என்று தான் காத்திருக்கும்.. எங்கள் "வளவு"ம் கூட அப்படித்தான்.......குடிசைகளாலும் , ஊரோரம் ஓடும் சாக்கடையை வீடாகக்கொண்ட ஈ , கொசு முதலான பறப்பனவைகளையும் , எங்களையும் ஒருங்கே கொண்ட எங்கள் "வளவு" என்று பெருமை கொள்ளலாம். என்ன ஒரே வித்தியாசம்..... கொசுக்களுக்கும் , ஈக்களு...

கலியாணமாம் கலியாணம்!

"கண்ணு.....நான் நேத்துதான் சித்தநாயக்கம்பாளையம் வள்ளுவன்கிட்ட போயுருந்தனா...அவுங்க கொசவந்தோட்டத்துல இருக்குற புத்துங்கண்ணுக்கு வாரமொருக்கா பாலூத்தச் சொன்னாங்கோ...! எண்ணி ஒரே மாசத்துல காரியம் முடியுமுங்குறான் அந்த வள்ளுவன்.." மகளிடம் சொன்னாள் சானகி. பாலும் ஊத்தியாயிற்று. "பொண்ணு லட்சணமாத்தான் இருக்குது. ஆனா படிப்பு பத்தாதுங்கறார் மாப்பிள்ளை.." தரகர் சொன்ன சேதி கேட்டு நொந்து போனாள் சானகி. மாதமும் கழிந்தது. "சத்திக்குட்டி.....அந்த வள்ளுவங்கிட்ட மறுக்கா ஒரு தாட்டி போயிருந்தேன். ஏதோ ராகு தோஷமிருக்குதாமா........திருநாகேஸ்வரம் போயி இராகு பகவானுக்கு "பாலாபிஷேகம் " பண்ணினா தோஷமெல்லாம் போயிருமாமாம். எப்ப போலாம்?" திருநாகேஸ்வரமும் போய் வந்தாயிற்று. "மாப்புளைக்கு பொண்ணைப் பிடிச்சுருக்காம். அவுங்கம்மா எத்தன பவுனு போடுவீங்கன்னு கேட்டாங்க. " மேற்காலவூட்டு ரங்கண்ணன் கேட்டார். "அவியள கேட்டுட்டு பொழுதுக்குள்ள சொல்றேனுங்கண்ணா " சொன்னாள் ஜானகி. "ஏனுங்க... , திருநாகேஸ்வரம் போய்ட்டு வந்தவுடனே வரன் அமையுமுன்னு சோசியன் சொன்னாருல்ல.....கடன ...