Skip to main content

Posts

Showing posts with the label நகைச்சுவை

எக்ஸைல் - நடுசென்ட்டரில் நான்.

இந்த எல்லா எழவும் ஆடிமாசம் ஒரு சனிக்கெழமை சாய்ந்தரம் ஆரம்பித்தது. மாமியார் வீட்டில் என்டெர்டெயின்மென்ட்டுக்கு எதுவுமே இல்லாத காரணத்தாலும் , இயல்பாக இருக்கும் படிக்கும் காரணத்தாலும் வழக்கமாக குமுதம் , கல்கண்டு , ஆனந்த விகடன் , அதிகபட்சம் போனால் சமீபகாலமாக 'புதிய தலைமுறையும்' வாங்கிப்படிக்கும் நான் , தாராபுரம் பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்தில் இருக்கும் ஜே.பி.புத்தக நிலையம் போனேன் , எப்போ தெரியுமா , நான் முன்பு சொன்ன அதே ஒரு சனிக்கெழமை சாயந்தரம் தான். சுத்திச்சுத்திப் பார்த்தபோது கண்ணில் தட்டுப்பட்டது 'சாரு நிவேதிதா'வின் எக்ஸைல் நாவல். பின்னட்டையிலேயே பதிப்பாளர் (ஒருவேளை பத்ரி அல்லது பா.ரா?) கோடிட்டுக்காட்டியிருந்தார்...நாந்தான் கவனிக்காம விட்டுட்டேன். அதுமாதிரியும் இல்லாமல் , இதுமாதிரியும் இல்லாமல் புதுமாதிரி என்றது அச்செய்தி. அப்போதும் புத்தியில்லை. நானெல்லாம் , ஆங்கிலப்புத்தகங்களில் 'ஷிட்னி ஷெல்டன் ' , அல்லது ' டைம்' தாண்டி அறியாவதனாகையால்  ' ஆட்டோ பிக்சன் ' என்ற அழியாத வரலாறு பற்றி அறியாமல் விட்டுவிட்டேன். அதனால் , பதிப்பாளரின் அடுத்த எச்சரிக...

நாசரின் "நச்" பேட்டி , மனிதர்களுக்கு மட்டுமானது!

திரையுலகத்தில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்ற நட்சத்திர நடிகர் நாசர் அவர்களின் சமூக அக்கறை மெய்சிலிர்க்க வைக்கிறது.. இவர் போன்ற உண்மையான சமூக ஆர்வலர்களை விட்டுவிட்டு ,  சமூக உணர்வற்ற அக்கறையற்ற நடிகர்களே நாடாள வேண்டும் என்று கொடி பிடிக்கும் இளைஞர்கள் கொஞ்சம் சிந்திக்கட்டும்.... கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனும் , உணர்வுள்ள , உணர்வற்ற மனிதனும் பார்க்கவேண்டும்!!!

"ஜெ" பிரதமரானால்...!!

ஆனாலும் இந்த "சோ" மா(தி)ரி பேச யாருக்கும் வராது... ஒரு விழா அதில் மாங்காய்களை தனக்குத் தோதான முறையில் அடித்துக்கொள்ளப் பார்த்திருக்கிறார்.... முதலில் , பாரதிய ஜனதா கட்சியில் பிரதமர் வேட்பாளராக இருக்கும் இரு போட்டியாளர்களை கூப்பிட்டு வைத்தார். தனக்கு "மோடி" தான் பிரதமர் சாய்ஸ் என்று சொல்லுவதற்கு வாஜ்பாயையும் துணைக்கு அழைத்தார்.......வாஜ்பாயை முன்மொழிந்ததே அத்வானி தான் என்றும் , அதுபோலவே "மோடி" யையும் அத்வானி முன்மொழிய வேண்டுமென்கிறார்... தமிழகத்தில் தனக்கான ஓட்டுவங்கியைப் பெறுக்க சில பாராளுமனற் , சட்டமன்ற தொகுதிகள் பாஜகவுக்குத் தேவை... அதனால் , அதிமுகவுடனோ , திமுகவுடனோ ஆன கூட்டணி அக்கட்சிக்கு மிகமிக அவசியம் என்பதைவிட அவசரம்... அதனால் தான் , வாஜ்பாயை பதிமூன்று மாதங்கள் படுத்திய 'ஜெ'வுடன் கூட்டணிக்குத் தவிக்கிறார்கள் அத்வானியும் , மோடியும் , சோவும்.....எப்படி இழுப்பது? ஏற்கெனவே விஜயகாந்த்தை தேவையில்லாமல் தூக்கி விட்டுவிட்டோமோ என்ற கடுப்பில் இருக்கும் அம்மா "பாஜகவை தலையில் தூக்கி சுமக்க ஒத்துக்கொள்வாரா? அதுவும் " அம்மா" தான் எல்லாமே எ...

உறவுகளற்ற பொழுது.

உறவுகளற்ற பொழுது. புழுதி படிந்த தார்ச்சாலைகள்.. தெருவில் ஹாரனுடனே கடக்கும் பேருந்துகள்.. கை காட்டாமல் திரும்பும் வாகன ஓட்டிகள் நீர்ப்பிடிப்புக்காக சாலையில் இருக்கும் குழிகள்.. பக்கத்துவீட்டுக்காரன் போட்டிருக்கும் குப்பங்குழி அன்றாடம் கடக்கும் சாலையோர சாக்கடைக்கால்வாய்... அதிகாலையில் சாலையில் கழிக்கும் பெரிசுகள் , சிறிசுகள்... ஆயிரம் பேரின் வியர்வை வாசம் நுகரும் டவுன்ஹால்.... இவையனைத்தையும் ஊரிலிருக்கும் அவஸ்தைகளாய் ஒவ்வொரு முறையும் நினைத்துப்புலம்பும் அவனுக்கு, ஊர்விட்டுக்கிளம்பும் அந்தப்பொழுதில் அடிவயிற்றில் அமிலம் போல் கிளம்பும் வேதனையுணர்வும்.... உறவுகளேதுமற்ற பொழுதின் ரணமும் பலமடங்கு.... காரணம்… நீ இங்கிருந்தபோதெல்லாம் விலகியிருக்க காரணங்கள் கிடைத்தன எனக்கு.. ஒருநாள் , வாடிக்கையாளருடன் இரவு விருந்து. மறுநாள் , மற்றொரு காரணம்…… இன்று….நீ இங்கில்லாத போதோ……. உன்னுடன் அடிக்கடி தொலைபேசவாவது காரணங்களைத் தேடுகிறேன்… ஒருநொடி நிகழ்வுகள். அருவி ‘ஜோ’ வென விழுந்து என் முதுகைத் தாக்கியது. பேயெனப் பெய்தது மழை…ஒதுங்க இடமின்றி நான்…! காற்று வேரையும் விழுதையும் ஒருங்கே அசைத்தது…. இருட...

வெறுமை நிறைந்த தனிமையும் , தனிமை நிறைந்த சனிக்கிழமையும்!

விட்டங்களும் , சுவர்களும் , ஜன்னல்களும் , திரைச்சிலைகளும் மட்டுமே சூழ அமைந்திருக்கும் , பார்க்கிறேனோ , பார்க்கவில்லையோ தற்போதைக்கு எனக்கு மிகவும் பிடித்த 'முரசு' சேனலில் 'நிலா காய்கிறது' என்ற 'இந்திரா படப்பாடல் ஒலிக்கின்ற வேளையில் இப்பதிவை எழுதத் தொடங்குகிறேன்... கடந்த பதிவினை நான் இவ்வலைப்பூவில் ஏற்றியது கடந்த ஜனவரி மாதம்......ஏன் இந்த இடைவெளி....? ஏதேனும் எழுத வேண்டுமென்று சப்ஜெக்ட் இல்லாமல் எழுத ஆரம்பிக்கும் எல்லோருக்கும் வரும் பிரச்சினை எனக்கும் வந்திருக்கிறது.... அட்டா காலை உணவு ஆகவில்லையே என்று தோன்றிற்று.......தட்டில் வேலைக்கார அம்மா கிச்சடி என்ற பெயரில் மஞ்சள் கலரில் செய்து வைத்திருந்தாலும் சாப்பிட முடிந்தது.... இட்ட அன்னம் கொஞ்சம் முன்னப்பின்ன இருந்தாலும் யாருமற்ற சூழலில் அன்னமிடமாவது அவர் இருக்கிறார் , அதனால் பிழைத்தேன். முரசு தொலைக்காட்சியில் , என்னுயிர்த்தோழன் படப்பாட்டு ஓடிக்கொண்டிருக்கிறது....மாற்றினேன்....கலைஞர் தொல்லைக்காட்சியில் , அனேகமாக ஆயிரமாவது முறை 'ஆனந்த தாண்டவம்' என்ற மொக்கைத் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது.... வெட்டுக்கிளியோ எ...