Skip to main content

Posts

Showing posts from December, 2010

அரசியல் கிச்சு கிச்சு....!!!

தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. வருங்காலத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு கடும் சவால்களை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும். நீங்கள் சரியாக பாடுபட்டால் உங்களில் ஒருவர் (இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள்) தமிழக முதலமைச்சராக வாய்ப்பு இருக்கிறது.  ராகுல் காந்தி சரியாத்தான் சொல்லி இருக்காரு...எப்படிக்கஷ்டப்பட்டாலும் இன்னும் இருவது முப்பது வருஷத்துக்கு காங்கிரஸ் ஆட்சி தமிழ்நாட்டுல அமைய வாய்ப்புக்கிடைக்காது...அதனால , முதியோர் காங்கிரஸ் காரங்க யாரும் முதல்வர் ஆக முடியாதே....இளைஞர் காங்கிரஸ் காரங்க தான் ஆக வாய்ப்புண்டு.......ராகுலின் தொலைநோக்குப் பார்வை புல்லரிக்க வைக்கிறது!! பொதுஜனம் சென்னை: இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அந்நாட்டு அரசு போதிய உதவிகளை செய்யாதது கவலையளிப்பதாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறினார். சபாஷ்...இதைவிடக் காமெடி இதுகாறும் நடந்ததொன்றும் கிடையாது...பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் கலை காங்கிரசுகாரர்களுக்குப் புதிதா என்ன? இறுதி யுத்தம் நடைப

நாங்கள் பொய் சொல்லவில்லை...வன்னி மருத்துவர்கள்..விக்கிலீக்ஸ் அம்பலம்

வன்னியில் நடந்த இழப்புக்களை புலிகளின்  அழுத்ததினாலேயே மிகைப்படுத்திச் சொன்னோம் என்று முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் பல்டி அடித்த வன்னி மருத்துவர்கள்  , தாங்கள் அப்படிச் சொன்னது  அரசாங்கத்தின் அழுத்தத்தினாலேயே என்று அமெரிக்க தூதகரத்திடம் சொன்னதாக அமெரிக்க தூதரக அதிகாரி திரு. ஜேம்ஸ் ஆர்.  மூரே அனுப்பிய கேபிளை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தி இருக்கிறது.....அதன் முழு வடிவம் வருமாறு....!! Monday, 24 August 2009, 13:34 S E C R E T COLOMBO 000830 SIPDIS DEPARTMENT FOR SCA/INSB EO 12958 DECL: 08/23/2019 TAGS PGOV, PREL, PREF, PHUM, EAID, MOPS, CE SUBJECT: DOCTORS FROM NO-FIRE ZONE RELEASED ON BAIL REF: COLOMBO 695 Classified By: CHARGE D’AFFAIRES JAMES R. MOORE. REASONS: 1.4 (B, D) ¶ 1. (S) Four government doctors, held by the police Criminal Investigation  Division (CID) since the end of the war in May for allegedly filing false  reports on civilian casualties in the No-Fire Zone during the last several  months of the war, were released on bail today. XXXXXXXXXXXX ¶ 2. (S) The doctors XXXXXXXXXX

பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது!

சீமான்களின் சபையினிலேயே , கடிதம் எழுதி எழுதிக் களைத்துப்போனதோர் கிழட்டுச் சிங்கம்.....முன்னாலுக்கும் முன்னால் அவர் கொண்ட தமிழ்ப்பற்று.....இன்னாளில் அது தமது மக்கட்பற்றாய் மாறிப்போனதொரு சோகம். ஏதோவொரு புண்ணியத்தில், எவரோ செய்த வரலாற்றுத் தவறால் , கொள்கை , தொலைநோக்கு , மக்கட்பற்று இவை பற்றிய சிந்தையேதுமின்றி அரசியலில் விபத்தாய் விளைந்த கொடநாட்டு ஈழத்தாய்....தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தமிழர் பற்றியும் , தமிழர் அரசியல் பற்றியும் எழுதி வைத்துப் பேசும் செல்வி யவர்.........இன்னமும் அவர் சேலை பிடித்துத்திரியும் வீணர் கூட்டம்.! கூட்டணிக்கேற்றப்படி கொள்கையை மாற்றிக்கொள்ளும் மருத்துவப் படையாச்சி.........வீரமிகு வன்னியகுலத்திலே வந்துதித்த சந்தர்ப்பவாதச் சாக்கடை....சமரசமற்ற கொள்கை அரசியலை சந்தர்ப்பவாதச் சாக்கடைக்குள் தள்ளிய பெருமைக்குரிய மருத்துவர் தமிழ்க்குடிதாங்காத தமிழ்க்குடிதாங்கி! யாரை எதற்காக எதிர்த்து அரசியல் செய்யவேண்டுமே அவர்களோடே தம் தேவைக்குதந்த படி கூட்டு வைத்துக்கொண்டு ஈழத்திற்க்காய் எந்நேரமும் பாடுபடும் திரு.வைகோ அவர்கள்....அவரும் சிறை சென்றார்.

தமிழகத்தின் தலையில் இடிவிழ...!

இதை சாபமாகச் சொல்லவில்லை. தமிழகத்துக்கு நேரிட்ட சாபக்கேட்டைச் சுட்டவே சொல்கிறேன்.  உலகம் முழுமையும்  இன்றைக்குப் பேசப்படுகிற ஒருவிடயமாக விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்திய ரகசியங்கள் இருக்கின்றன. உலகளாவிய முறையில் ஊருக்கு ஒன்றெனவும் , உள்ளுக்கு வேறெனவும் அமெரிக்கா ஆடிய தகிடுதத்தங்களைப் போட்டுக்கொடுத்து புண்ணியம் தேடிக்கொண்டிருக்கிறார் அஸ்ஸாங்கே. அத்தகைய விக்கிலீக்ஸ் கூட சிறிலங்காவில் நிகழ்ந்த பாரிய மனிதப்படுகொலை பற்றி விரிவான கட்டுரை ( அது எழுதிய இரு கட்டுரைகளில் ஒன்று சிறிலங்கா பற்றியது , பிரிதொன்று விஸா, மாஸ்டர்கார்டு பற்றியது . ) பிரித்தானியத் தொலைக்காட்சி நிறுவனமான சேனல் - 4 , இதுகாறும் வெளீவந்த போர்க்குற்ற காணொலிகளை ஆராய்ந்து சர்வ நிச்சயமாக போர்க்குற்ற விசாரணையொன்று இலங்கையில் தேவை என்று தொடர்ந்து வலியுறுத்துகிறது..........  அதன் ஆய்வுகள் கீழ்க்கண்ட இணைப்புக்களில்..... இணைப்பு - 1 , இணைப்பு - 2 , இணைப்பு - 3   அமெரிக்காவிலிருந்து வெளிவரும் வாஷிங்டன் டைம்ஸ் , நியுயார்க் போஸ்ட் என்ற பற்பல செய்தி இதழ்கள் , போர்க்குற்ற சந்தேக நபரொருவர் , டிப்ளமேட்டிக் இம்யூனிட்டி முலம் ஐக்கிய ந