தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. வருங்காலத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு கடும் சவால்களை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும். நீங்கள் சரியாக பாடுபட்டால் உங்களில் ஒருவர் (இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள்) தமிழக முதலமைச்சராக வாய்ப்பு இருக்கிறது.
ராகுல் காந்தி
சரியாத்தான் சொல்லி இருக்காரு...எப்படிக்கஷ்டப்பட்டாலும் இன்னும் இருவது முப்பது வருஷத்துக்கு காங்கிரஸ் ஆட்சி தமிழ்நாட்டுல அமைய வாய்ப்புக்கிடைக்காது...அதனால , முதியோர் காங்கிரஸ் காரங்க யாரும் முதல்வர் ஆக முடியாதே....இளைஞர் காங்கிரஸ் காரங்க தான் ஆக வாய்ப்புண்டு.......ராகுலின் தொலைநோக்குப் பார்வை புல்லரிக்க வைக்கிறது!!
பொதுஜனம்
சென்னை: இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அந்நாட்டு அரசு போதிய உதவிகளை செய்யாதது கவலையளிப்பதாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறினார்.
சபாஷ்...இதைவிடக் காமெடி இதுகாறும் நடந்ததொன்றும் கிடையாது...பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் கலை காங்கிரசுகாரர்களுக்குப் புதிதா என்ன? இறுதி யுத்தம் நடைபெறுகின்ற காலத்தில் இலங்கை அரசுக்கு எந்நேரமும் காவடி தூக்கிக்கொண்டு இன்று தேர்தல் நேரம் வந்தவுடன் எப்படிதான் மனுசன் சலிக்காம பொய் சொல்றாரோ???? நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமையானவர்கள் என்று தங்கபாலுவைப் பார்த்து கமெண்ட் அடிப்பாரோ ராகுல் ஒருவேளை?
பொதுஜனம்
சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் குறுகிய கண்ணோட்டத்தில் செயல்பட்டு இரு மாநில மக்களுக்கும் இடையே நிலவி வரும் ஒற்றுமையை சிதைத்து விடக் கூடாது என்று கேரள அரசுக்கும், கேரள மக்களுக்கும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவுரை கூறியுள்ளார்.
சபாஷ் , மிக நல்ல அறிவுரை தான்...இதே போலவே நீங்கள் அன்று குறுகிய மனப்பான்மையில்லாமல் செயல்பட்டிருந்தால் , கர்நாடகாக்காரன் மைசூர் , கொள்ளேகால் மற்றும் தமிழக எல்லைப்பகுதிகளிலிருந்து தமிழர்களை அவர்கள் விரட்டியடித்திருக்க மாட்டார்கள்.......அன்று எடுத்தேன் , கவிழ்த்தேன் என்று செயல்பட்டதால் நிகழ்ந்த அவலங்களை கோவை , ஈரோடு மாவட்டக்காரர்கள் என்றுமே மறக்கவியலாது...என்ன செய்வது...அன்னிக்கு இப்படி நல்லவிதமான எழுதிக்கொடுக்கச் சிறந்த அடிமைகள் கிடைத்திருக்க வில்லை என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறதம்மா.....
பொதுஜனம்
சென்னை: ஸ்பெக்டரம் விவகாரத்தில் பதவியை ராஜினாமா செய்த முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவை ஆதரித்து தமிழகம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் கருத்தரங்குகள் நடத்த திமுக முடிவு செய்துள்ளது.
கொள்கைவிளக்கப்பொதுக்கூட்டம் போட்ட காலமெல்லாம் போய் , இப்ப ஊழல் விளக்க பொதுக்கூட்டம் போடற லெவலுக்கு கழகம் டெவலப் ஆயிடுச்சி போங்க.....பரிணாம வளர்ச்சி பிரமாதம்....அப்படியே இளைஞன் படம் பற்றி பொதுமக்களுக்கு ஒரு விளக்கக் கூட்டம் போட்டா தயாரிப்பாளர் மார்ட்டின் ஆவது தப்பிச்சிக்கிடுவாரில்ல??? என்ன நாஞ்சொல்றது?
பொதுஜனம்
ராகுல் காந்தியின் அரசியல் நிகழ்ச்சியை தனது மண்டபத்தில் நடத்த சென்னை பல்கலைக்கழகம் அனுமதி மறுத்துவிட்டது. தமிழக அரசின் உத்தரவுப்படியே பல்கலைக்கழகம் இந்த அதிரடி முடிவை எடுத்ததாகக் கருதப்படுகிறது. இதன்மூலம் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஆரம்பமாகிவிட்டதாகத் தெரிகிறது.
காங்கிரஸ் - திமுக கூட்டணியில் விரிசல் எல்லாம் ஏற்படாது...இது சீமானின் அதிர்வேட்டால் நடந்த மாற்றம்....காங்கிரசுக்கு அனுமதி தந்தால் , எனக்கும் அனுமதி தரணும்...இல்லாட்டி கோர்ட்டுக்கு போவேன் நு போட்ட போடுல திமுக அரசு மெரண்டுடுச்சி...அதான் உண்மையான காரணம்...
பொதுஜனம்
இந்திய ஊடகங்கள் வலியது : அசேஞ் புகழாரம் டிசம்பர் 23,2010 , 09:54 IST
லண்டன் : விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனரும் , அதன் தலைமை எடிட்டருமான ஜூலியான் அசேஞ் பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில் : இந்திய ஊடகங்கள் வியத்தகு ஆற்றல் கொண்டுள்ளதாக பாராட்டியுள்ளார். [...]
ஆமாம்...இருப்பதை இல்லையெனவும் , இல்லாததை இருப்பதாகவும் , அமைச்சர் பதவிகளுக்கு புரோக்கர் வேலை பார்ப்பதிலும் இந்திய ஊடகங்களை விஞ்ச உலகில் எதுவும் இல்லை என்பது உண்மைதான் திரு.ஜுலியன் அசாங்கே அவர்களே....உங்களைப் போன்ற புனிதப் பணியில் இருப்பவர்கள் இந்திய ஊடகங்களை பாராட்டுவதென்பது கிச்சுகிச்சுக்களிலேயே மிகவும் உயர்ந்த கிச்சுகிச்சு.!! தினமலர் போன்ற பத்திரிக்கைகள் எல்லாம் ஊடக இலக்கணத்துக்கே ஒரு எடுத்துக்காட்டு என்று சொன்னாலும் சொல்வார்கள் புத்திஜீவிகள்...!
பொதுஜனம்
தெலுங்கான அறிக்கை: ராணுவம் குவிக்க திட்டம் டிசம்பர் 23,2010 , 07:27 IST
டில்லி: ஆந்திராவில் தனித்தெலுங்கான குறித்த ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை இன்னும் ஒரு வாரத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதால் மத்திய ராணுவப்படையினை அழைப்பது என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது..
தனிநாடு கேட்டுப்போராடுகின்ற காஷ்மீரில் இராணுவம் இருக்கக்கூடாது என்ற போராட்டங்களைத் தாண்டி , இப்போ எல்லாம் தனிமாநிலக் கோரிக்கைக்கே இராணுவத்தைக் குவிக்க ஆரம்பிச்சாச்சி...இனி பேசாம ஊருக்கு ஊர் போலிஸ் ஸ்டேஷனை மாத்திட்டு , மிலிட்டரி ஸ்டேஷனை வைச்சுக்கிடலாம்....உலகத்துலயே இதுபோன்ற அநியாயங்கள் எல்லாம் இந்தியாவுல மட்டுமே தான் நடக்கும் போங்க...!
பொதுஜனம்...
Comments
:)
meeting you afterrrrrrrrrrrrrrrrrrrrrr long time.!