Skip to main content

தமிழகத்தின் தலையில் இடிவிழ...!

இதை சாபமாகச் சொல்லவில்லை. தமிழகத்துக்கு நேரிட்ட சாபக்கேட்டைச் சுட்டவே சொல்கிறேன். 


உலகம் முழுமையும்  இன்றைக்குப் பேசப்படுகிற ஒருவிடயமாக விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்திய ரகசியங்கள் இருக்கின்றன. உலகளாவிய முறையில் ஊருக்கு ஒன்றெனவும் , உள்ளுக்கு வேறெனவும் அமெரிக்கா ஆடிய தகிடுதத்தங்களைப் போட்டுக்கொடுத்து புண்ணியம் தேடிக்கொண்டிருக்கிறார் அஸ்ஸாங்கே.


அத்தகைய விக்கிலீக்ஸ் கூட சிறிலங்காவில் நிகழ்ந்த பாரிய மனிதப்படுகொலை பற்றி விரிவான கட்டுரை ( அது எழுதிய இரு கட்டுரைகளில் ஒன்று சிறிலங்கா பற்றியது , பிரிதொன்று விஸா, மாஸ்டர்கார்டு பற்றியது. )


பிரித்தானியத் தொலைக்காட்சி நிறுவனமான சேனல் - 4 , இதுகாறும் வெளீவந்த போர்க்குற்ற காணொலிகளை ஆராய்ந்து சர்வ நிச்சயமாக போர்க்குற்ற விசாரணையொன்று இலங்கையில் தேவை என்று தொடர்ந்து வலியுறுத்துகிறது.......... 

அதன் ஆய்வுகள் கீழ்க்கண்ட இணைப்புக்களில்.....



அமெரிக்காவிலிருந்து வெளிவரும் வாஷிங்டன் டைம்ஸ் , நியுயார்க் போஸ்ட் என்ற பற்பல செய்தி இதழ்கள் , போர்க்குற்ற சந்தேக நபரொருவர் , டிப்ளமேட்டிக் இம்யூனிட்டி முலம் ஐக்கிய நாடுகள் சபையில் நுழைந்திருக்கிறார் என்று தொடர்ந்து குரலலெழுப்புகின்றன. இலங்கை இராணுவத்தின் தமிழனப்படுகொலையின் சூத்திரதாரியாக விளங்கிய சவேந்திர  சில்வா தான் அவர்.

அச்செய்திகளின் தமிழாக்கம் இங்கே.

உலகளாவிய போர்க்குற்ற நீதிமன்றம் இரட்டைக்குடியுரிமையுள்ள "பாலித கோகன்னா போன்றவர்களை தண்டிக்க அல்லது வழக்குத்தொடர முழு வாய்ப்புள்ளது என்ற செய்தி ஆய்வை தமிழர்க்கு நேரடித்தொடர்பில்லாத 'இன்னர் சிட்டி பிரஸ்' போன்ற இணைய செய்தித்தளங்கள் தொடர்ந்து வெளியிட்டும் , ஐக்கிய நாடுகள் சபையினை கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்கின்றன. 

அந்த ஆய்வின் 

அவசரகாலச் சட்ட அடக்குமுறையில் இருந்தாலும் , முடிந்த வரை இலைமறை காயாய் இலங்கை அரசை இடித்துரைக்க முயலும் வலம்புரி போன்ற யாழ்ப்பாண தமிழப்பத்திரிக்கைகளும் இருக்கத்தான் செய்கின்றன. 

அது போலவே , உலகளாவிய முறையில் பல்வேறு சர்வதேச ஊடகங்களும் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்தான சர்வதேச விசாரணை தேவை என்ற ஒருமித்த குரலெழுப்புகின்றன.

ஒரே இரவில் ஐம்பதனாயிரத்துக்கும் மேற்ற புலம்பெயர் தமிழ்மக்கள் லண்டனில் கூடி மகிந்தாவிற்கு வாழ்நாள் முழுதிலும் மறக்கமுடியாத அவமானத்தைத் தந்திருக்கிறார்கள்..

ஆனால் , தமிழகமும் , தமிழகத்துத் தமிழர்களும் என்ன செய்கிறார்கள்???

தமிழகத்து அரசுதான் என்ன செய்கிறது?  அதன் எதிர்க்கட்சிதான் என்ன செய்கிறது? இன்னபல உதிரிக்கட்சிகளூம் தான் என்ன செய்கின்றன? தான் சேர்ந்த இனத்தில் 40000 பேர்கள் அழிக்கப்பட்டபோது கூட பேசாத இவர்கள் என்ன எழவைத்தான் சாதிக்கப்போகிறார்கள்???

அவர்கள் தான் அப்படியென்றால், அவர்களின் நேர்மையின்மையைச் சுட்டிக்காட்ட வேண்டிய தமிழகத்தின் பெரும்பாலான ஊடகங்கள் கூட இது போன்ற செய்திகளை இருட்டடிப்பு செய்யும் கொடுமையைத்தான் என்னென்பது?

குறைந்தப்பட்ச செய்திகளையாவது காட்டும் தார்மீக நெறியினை தமிழகத்து ஊடகங்கள் மறந்தது தான் என்ன கொடுமை???

இப்போ சொல்லுங்கள் , ஈழத்து மூதாட்டியொருவர் ஒருவேளை நம்மைப் பார்த்து "தமிழகத்தின் தலையில் இடிவிழ" என்று சபித்தால் அது தவறா என்று???

Comments

Unknown said…
இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் சாத்தியமே இல்லாத ஈழம் என்ற மாயைக்கு நாம் (இந்தியா) ஒப்பாரி வைத்துக்கொண்டிருப்பது..

அல்லது வைகோ, விடுதலை பூனை குருமா, சீமான் போன்று விடுதலை புலிகளிடம் அடித்த காசுக்கும் தங்க கட்டிகளுக்கும் கூவிக்கொண்டிருக்க முடியுமா.
Anonymous said…
அட குடக்கு, அவுரு இந்தியாவச் சொல்லலீங்க , தமிழர்களை சொல்லுருறாரு!
Anonymous said…
அட குடக்கு , கொன்னவனே (இந்தியா) எதுக்கு ஒப்பாரி வைக்கணும்? ஆதாரம் வேணுமா...கேளுங்க சொல்றேன்
Bibiliobibuli said…
நல்லதோர் தொகுப்பு மதிபாலா. நான் நினைத்திருந்தேன் இதை தொகுத்துப் போடவேண்டுமென்று. நன்றி உங்களுக்கு.

போர்க்குற்றங்களுக்காக விசாரிக்கப்பட வேண்டுமென்ற ராணுவ தளபதிகள் ஒவ்வொருவராக மெல்ல, மெல்ல ஆதரங்களுடன் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். தற்சமயம் 53 வது டிவிசன் கட்டளைத்தளபதி தான் இசைப்பிரியாவின் விடயத்தில் சனல் 4 இடம் வசமாக மாட்டிக்கொண்டிருக்கிறார். பார்க்கலாம் இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும் இவர்களை ICC யில் நிறுத்துவதற்கு!!!

Channel 4 - Jonathan Miller, Inner City Press- Mathew Russel Lee இவர்களுக்கு இலங்கை விடயத்திலுள்ள உள்ள அக்கறை ஏனோ கொஞ்சம் அதிசயிக்க வைக்கிறது. அமெரிக்க பத்திரிகைகளிடம் முன்னைக்கு இப்போ ஈழத்தமிழர் விடயத்தில் நல்லதோர் மாற்றம் தெரிகிறது.

தமிழகம் பற்றி எந்த கருத்தும் சொல்லத்தோன்றவில்லை.
வாங்க தம்பி, நல்லா இருக்கீங்களா?
உங்கள் தளத்தை அறிமுகப்படுத்திய ரதிக்கும் உங்கள் அக்கறைக்கும் நனறி.

Popular posts from this blog

இதற்குத்தானா ஆசைப்பட்டீர்கள் திரு.சீமான்?

இன்று சீமான் அதிமுக கூட்டணியில் இருந்து பிரச்சாரம் பண்ணப்போவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது..ஏற்கெனவே ஒருமுறை செய்த பாரிய தவறொன்றை மற்றொருமுறை செய்யமாட்டார் என்றே நினைத்திருந்தேன்....இது உண்மையான செய்தியாய் இருந்தால் பேரிடிதான்..!!!! மாறாக உணர்வுள்ள இளைஞர்கள் தம் பின்னால் பேரெழுச்சியுடன் நாம் தமிழராய் எழும்போது.....அதைக்கொண்டுபோய் போய்ஸ்தோட்டத்திற்கு தாரைவார்த்துக்கொடுப்பதென்பது கனவிலும் சகிக்க முடியாத செயல்....!!  கருணாநிதிக்கு ஈழ அழிவிற்கு எவ்வளவுக்கெவ்வளவு பங்கிருக்கிறதோ அதே அளவிற்கு  சக பங்குள்ளவரே செயலலிதா... செயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்? என்ன செய்தார்? 1.எதிர்கட்சியாக மாபெரும் போராட்டங்களை நடாத்தியிருக்க வேண்டும்...அழிவது நம்சொந்தங்களே என்று தெரிந்திருந்தும் வாய்மூடி மெளனியாகவே இருந்தார். 2. கருணாநிதியின் எதிர்ப்பரசியலைக் கைவிட்டு விட்டு முத்துக்குமார் முதற்கொண்டு  தமிழக இளைஞர்களின் எழுச்சியை உபயோகித்து இந்திய அரசை ஸ்தம்பிக்க முயற்சித்திருக்க வேண்டும்....அதைவிடுத்து கொடநாட்டில் பள்ளி கொண்டிருந்தார்... 3.  சிறிதேனும் உண்மையான அக்கறை அவருக்கு தமிழர்பா...

பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது!

சீமான்களின் சபையினிலேயே , கடிதம் எழுதி எழுதிக் களைத்துப்போனதோர் கிழட்டுச் சிங்கம்.....முன்னாலுக்கும் முன்னால் அவர் கொண்ட தமிழ்ப்பற்று.....இன்னாளில் அது தமது மக்கட்பற்றாய் மாறிப்போனதொரு சோகம். ஏதோவொரு புண்ணியத்தில், எவரோ செய்த வரலாற்றுத் தவறால் , கொள்கை , தொலைநோக்கு , மக்கட்பற்று இவை பற்றிய சிந்தையேதுமின்றி அரசியலில் விபத்தாய் விளைந்த கொடநாட்டு ஈழத்தாய்....தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தமிழர் பற்றியும் , தமிழர் அரசியல் பற்றியும் எழுதி வைத்துப் பேசும் செல்வி யவர்.........இன்னமும் அவர் சேலை பிடித்துத்திரியும் வீணர் கூட்டம்.! கூட்டணிக்கேற்றப்படி கொள்கையை மாற்றிக்கொள்ளும் மருத்துவப் படையாச்சி.........வீரமிகு வன்னியகுலத்திலே வந்துதித்த சந்தர்ப்பவாதச் சாக்கடை....சமரசமற்ற கொள்கை அரசியலை சந்தர்ப்பவாதச் சாக்கடைக்குள் தள்ளிய பெருமைக்குரிய மருத்துவர் தமிழ்க்குடிதாங்காத தமிழ்க்குடிதாங்கி! யாரை எதற்காக எதிர்த்து அரசியல் செய்யவேண்டுமே அவர்களோடே தம் தேவைக்குதந்த படி கூட்டு வைத்துக்கொண்டு ஈழத்திற்க்காய் எந்நேரமும் பாடுபடும் திரு.வைகோ அவர்கள்....அவரும் சிறை சென்றார்....

ஒற்றையாட்சி முறையா, பிரிவினைக்கான அடித்தளமா?

இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு. வேற்றுமையில் ஒற்றுமையே நமது பலம்.. நீங்கள் விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ இந்தியாவில் பல்லினங்கள் உண்டு, பல மொழிகள் உண்டு , பல பழக்கவழக்கங்கள் உண்டு , இவற்றை ஏற்றுக்கொண்டு , சகிப்புத்தன்மையோடு எல்லோரும் ஓரினமாய் வாழ்வதே இந்தியா வாழ்வாங்கு வாழ்வதற்கான வழிமுறை. அதைவிடுத்து , ஒற்றையாட்சியை நிறுவுவோம் என்று சொல்லிக்கொண்டிருந்தால் இந்தியா எனும் நாடு இருக்குமா என்பதே கேள்விக்குறி!!! குறிப்பாக , வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் " நீட்" தேர்வு... எனக்கென்று என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசும் , என்னால், என் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களெல்லாரும் சேர்ந்து நீட் எமக்கு வேண்டாம் என்று தீர்மானம் செய்கிற போது அதை வலிந்து எம் மேல் திணிக்க இந்திய நடுவண் அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்ற கேள்வியெழுப்புவதில் தவறென்ன இருக்கிறது? பல பத்து சின்னஞ்சிறு நாடுகளாய் ஐரோப்பியாவில் பரவிக்கிடப்பதற்கு பாரிய காரணமென்ன? மொழி மற்றும் இனங்களால் அவர்கள் பிளவுபட்டிருக்கிறார்கள்... அதனால் தான் இந்தியாவின் பன்முகத் தன்மைக்கேற்ப மொழிவாரி மாநிலங்களை அமை...