இதை சாபமாகச் சொல்லவில்லை. தமிழகத்துக்கு நேரிட்ட சாபக்கேட்டைச் சுட்டவே சொல்கிறேன்.
உலகம் முழுமையும் இன்றைக்குப் பேசப்படுகிற ஒருவிடயமாக விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்திய ரகசியங்கள் இருக்கின்றன. உலகளாவிய முறையில் ஊருக்கு ஒன்றெனவும் , உள்ளுக்கு வேறெனவும் அமெரிக்கா ஆடிய தகிடுதத்தங்களைப் போட்டுக்கொடுத்து புண்ணியம் தேடிக்கொண்டிருக்கிறார் அஸ்ஸாங்கே.
பிரித்தானியத் தொலைக்காட்சி நிறுவனமான சேனல் - 4 , இதுகாறும் வெளீவந்த போர்க்குற்ற காணொலிகளை ஆராய்ந்து சர்வ நிச்சயமாக போர்க்குற்ற விசாரணையொன்று இலங்கையில் தேவை என்று தொடர்ந்து வலியுறுத்துகிறது..........
அதன் ஆய்வுகள் கீழ்க்கண்ட இணைப்புக்களில்.....
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் வாஷிங்டன் டைம்ஸ் , நியுயார்க் போஸ்ட் என்ற பற்பல செய்தி இதழ்கள் , போர்க்குற்ற சந்தேக நபரொருவர் , டிப்ளமேட்டிக் இம்யூனிட்டி முலம் ஐக்கிய நாடுகள் சபையில் நுழைந்திருக்கிறார் என்று தொடர்ந்து குரலலெழுப்புகின்றன. இலங்கை இராணுவத்தின் தமிழனப்படுகொலையின் சூத்திரதாரியாக விளங்கிய சவேந்திர சில்வா தான் அவர்.
அச்செய்திகளின் தமிழாக்கம் இங்கே.
உலகளாவிய போர்க்குற்ற நீதிமன்றம் இரட்டைக்குடியுரிமையுள்ள "பாலித கோகன்னா போன்றவர்களை தண்டிக்க அல்லது வழக்குத்தொடர முழு வாய்ப்புள்ளது என்ற செய்தி ஆய்வை தமிழர்க்கு நேரடித்தொடர்பில்லாத 'இன்னர் சிட்டி பிரஸ்' போன்ற இணைய செய்தித்தளங்கள் தொடர்ந்து வெளியிட்டும் , ஐக்கிய நாடுகள் சபையினை கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்கின்றன.
அந்த ஆய்வின்
அவசரகாலச் சட்ட அடக்குமுறையில் இருந்தாலும் , முடிந்த வரை இலைமறை காயாய் இலங்கை அரசை இடித்துரைக்க முயலும் வலம்புரி போன்ற யாழ்ப்பாண தமிழப்பத்திரிக்கைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
அது போலவே , உலகளாவிய முறையில் பல்வேறு சர்வதேச ஊடகங்களும் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்தான சர்வதேச விசாரணை தேவை என்ற ஒருமித்த குரலெழுப்புகின்றன.
ஒரே இரவில் ஐம்பதனாயிரத்துக்கும் மேற்ற புலம்பெயர் தமிழ்மக்கள் லண்டனில் கூடி மகிந்தாவிற்கு வாழ்நாள் முழுதிலும் மறக்கமுடியாத அவமானத்தைத் தந்திருக்கிறார்கள்..
ஆனால் , தமிழகமும் , தமிழகத்துத் தமிழர்களும் என்ன செய்கிறார்கள்???
தமிழகத்து அரசுதான் என்ன செய்கிறது? அதன் எதிர்க்கட்சிதான் என்ன செய்கிறது? இன்னபல உதிரிக்கட்சிகளூம் தான் என்ன செய்கின்றன? தான் சேர்ந்த இனத்தில் 40000 பேர்கள் அழிக்கப்பட்டபோது கூட பேசாத இவர்கள் என்ன எழவைத்தான் சாதிக்கப்போகிறார்கள்???
அவர்கள் தான் அப்படியென்றால், அவர்களின் நேர்மையின்மையைச் சுட்டிக்காட்ட வேண்டிய தமிழகத்தின் பெரும்பாலான ஊடகங்கள் கூட இது போன்ற செய்திகளை இருட்டடிப்பு செய்யும் கொடுமையைத்தான் என்னென்பது?
குறைந்தப்பட்ச செய்திகளையாவது காட்டும் தார்மீக நெறியினை தமிழகத்து ஊடகங்கள் மறந்தது தான் என்ன கொடுமை???
இப்போ சொல்லுங்கள் , ஈழத்து மூதாட்டியொருவர் ஒருவேளை நம்மைப் பார்த்து "தமிழகத்தின் தலையில் இடிவிழ" என்று சபித்தால் அது தவறா என்று???
இப்போ சொல்லுங்கள் , ஈழத்து மூதாட்டியொருவர் ஒருவேளை நம்மைப் பார்த்து "தமிழகத்தின் தலையில் இடிவிழ" என்று சபித்தால் அது தவறா என்று???
Comments
அல்லது வைகோ, விடுதலை பூனை குருமா, சீமான் போன்று விடுதலை புலிகளிடம் அடித்த காசுக்கும் தங்க கட்டிகளுக்கும் கூவிக்கொண்டிருக்க முடியுமா.
போர்க்குற்றங்களுக்காக விசாரிக்கப்பட வேண்டுமென்ற ராணுவ தளபதிகள் ஒவ்வொருவராக மெல்ல, மெல்ல ஆதரங்களுடன் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். தற்சமயம் 53 வது டிவிசன் கட்டளைத்தளபதி தான் இசைப்பிரியாவின் விடயத்தில் சனல் 4 இடம் வசமாக மாட்டிக்கொண்டிருக்கிறார். பார்க்கலாம் இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும் இவர்களை ICC யில் நிறுத்துவதற்கு!!!
Channel 4 - Jonathan Miller, Inner City Press- Mathew Russel Lee இவர்களுக்கு இலங்கை விடயத்திலுள்ள உள்ள அக்கறை ஏனோ கொஞ்சம் அதிசயிக்க வைக்கிறது. அமெரிக்க பத்திரிகைகளிடம் முன்னைக்கு இப்போ ஈழத்தமிழர் விடயத்தில் நல்லதோர் மாற்றம் தெரிகிறது.
தமிழகம் பற்றி எந்த கருத்தும் சொல்லத்தோன்றவில்லை.