யார் பெறுவார் ஆர்கே நகரின் அரியாசனம்..?

Friday, March 17, 2017

சிலகாலம் முன்புவரை ஆர்.கே நகர் தமிழகத்தில் அவ்வளவாக உச்சரிக்கப்படாத பெயர்தான். முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் போட்டியிட்டது முதல் விஐபி தொகுதியானது​ ஆர்.கே.நகர்.

முன்னாள் முதல்வரின் மறைவுக்குப்பின்னர் பின்னர் நடக்கும் ஆர் கே நகர் தொகுதி இடைத்தேர்தலானது , சமீபத்தில் எந்தவொரு தொகுதியின் இடைத்தேர்தலுமே பெறாதவொரு முக்கியத்துவத்தைப்பெற்றிருக்கிறது.... ஏன்?? 

திமுக ஒருபுறமும், அதிமுகவின் இரண்டுபிரிவுகளும் , ஜெ. அண்ணன் மகள் தீபா அவர்கள் இன்னொரு புறமுமாக புழுதி பறக்கப்போகிறது இன்னுஞ் சிலவாரங்களுக்கு அத்தொகுதி....இத்தொகுதியில் வெல்வது யார் என்பது மக்களின் கையில் தான் இருக்கிறது. 

ஆனால், களத்தில் நிற்கப்போகும் ஒவ்வொரு கட்சிக்குமே / பிரிவுக்குமே இதன் முடிவு ஒரு முக்கிய பாடத்தை சொல்லிச்செல்ல காத்திருக்கிறது
​. 


​வென்றிருக்கவேண்டிய 2016 தேர்தலை சிலபல காரணங்களால் மயிரிழையில் கோட்டை விட்ட திமுகவுக்கு இது "வாழ்வா சாவா " தேர்தல் இல்லையென்றாலும் கூட, இதில் பெறும் வெற்றி வரப்போகும் பாராளுமன்றத் தேர்தலின் கூட்டணிக்கணக்கிற்கு உதவக்கூடும்..யாருமில்லா தனிவெளியில் உலாவிக்கொண்டிருக்கும் பல கட்சிகள் ஒரு தீர்க்கமான முடிவெடுக்க அவர்கள் பெறும் வெற்றி உதவக்கூடும்...சுருங்கச்சொல்லின் , அடுத்த ஆட்சியையே விரைவில் கைப்பற்ற உதவக்கூடும்.. 

சசிகலா தரப்பு அதிமுகவிற்கோ இதில் பெறும் வெற்றியானது முக்கியமென்பதை விட அவர்களது அரசியல் எதிர்காலத்தையே நிர்யணிக்கும் தேர்தலாகவே இது அமையப்ப்போகிறது.. ஏன்? ஓபிஎஸ்ஸுற்கே கட்சித்தொண்டர்களின் ஆதரவிருக்கிறது
​ ​
என்ற பிம்பம் அகற்றப்படும், கட்சியில் சசிகலா அவர்களது பிடி உறுதிப்படுத்தப்படும். தினகரனும் , சசிகலாவும் தமிழக அரசியலில் தவிர்க்கவியலா சக்தியாக மாறுவதற்கான அடித்தளம் ஆர் கே நகரில் தான் இருக்கிறது.

ஒருவேளை ,திமுக ஜெயித்து சசிகலா தரப்பு  தோற்றாலும் கூட இரண்டாமிடத்தைப்பிடிக்குமானாலும் கூட கட்சியில் சசிகலா அவர்களது தலைமை ஏற்றுக்கொள்ளப்படும்...அல்லது இப்போதைக்கு அதற்கான விவாதங்கள் மட்டுப்படும்! மூன்றாமிடத்திற்கு அவர்கள் வரும் பட்சத்தில் பலதலைகள் ஓபிஎஸ் தரப்பிற்கு போவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும்!

ஓ.பி.எஸ் தரப்பிற்கோ இந்தத் தேர்தல்தான் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலாக அமையும், இதில் வென்றாலோ இல்லை இரண்டாமிடம் பெற்றாலோ தான்  தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ளவியலும் என்பதில் சந்தேகம் தான் உண்டோ??

தீபா அவர்கள் கணிசமான வாக்குக்களைப்பெற்றாலே அவருக்கான இடம் அரசியலில் கிடைக்கப்பெறும்..

யார் வென்றால் நல்லது என்பது அவரவர் பார்வையைப் பொறுத்து மாறும்..ஆனால் ஒன்றுமட்டும் உறுதி... இந்த தேர்தல் முடிவுக்குப்பின்னரே அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தமிழக அரசியலின் திசை எவ்வாறு பயணிக்கும் என்பதை ஓரளவு கணித்துவிட இயலும்..

யார் பெறுவார் ஆர்.கே.நகரின் அரியாசனம்?

எல்லா கேள்விக்களுக்கும் சரியான விடை இருக்கிறதோ இல்லையோ , சவுகரியமான விடையொன்றிருக்கிறது... அதுதான்...... "காலம் தான் பதில் சொல்லும்". 

​- ​மதிபாலா 

Read more...

  © Blogger template Writer's Blog by Ourblogtemplates.com 2008

Back to TOP