Skip to main content

Posts

Showing posts with the label ஈழம்

யார் நமக்கு எதிரி?

ஈழப்போராட்டம் பல படிநிலைகளைக்கொண்டது, தந்தை செல்வாவில் ஆரம்பித்து, பல்வேறு போராளிக்குழுக்களில் தொடங்கி புலிகளால் வலுப்பெற்றது. மற்ற போராளிக்குழுக்களிலிருந்து புலிகளின் கைகளுக்கு முழுதும் மாறியதெப்படி?  இந்தியப்பெருந்தலைவர் இந்திராகாந்தி அவர்கள் எல்லா போராளிக்குழுக்களையும் ஆராய்ந்து புலிகள் தான் எல்லோரிலும் வலுவானவர்களாகவும் , சரியான சிந்தனைப்போக்குடையவர்களாகவும் இருப்பதாக தீர்மானித்தார்கள். அதனால் விடுதலைப்புலிகளுக்கு கூடுதல் ஆயுத பலம் மட்டுமல்ல , தார்மீக ஆதரவுத்தளமும்  கிடைத்தது.  தமிழகத்தில் எம் ஜி ஆர் அவர்களுமே விடுதலைப்புலிகளை நம்பிய அளவிற்கு மற்ற குழுக்களை நம்பவில்லை. ஏன் கலைஞர் கூட சகோதர யுத்தம் வேண்டாம் வேண்டாமென தலையில் அடித்துக்கொண்டாரே தவிர ஒரு சந்தர்ப்பத்தில் கூட புலிகளை இடித்துரைத்தாரில்லை. தனது இறுதிக்காலம்  வரை சகோதர யுத்தத்தினால் தான் புலிகள் வீழ்ந்தார்களென்பதை உறுதியாக நம்பினார். அதற்காக புலிகளை வெறுத்தாரா என்றால் ஒருகணமும் வெளிப்படையாக அவர் சொன்னதில்லை.  புலிகளால் அவர்களது மிதமிந்திய ஹீரோயிசத்தால் அதிகம் இழந்த அரசியல் கட்சி ஒன்று உலகில் இருக்கும...

“திராவிடர் , தமிழர் , டெசோ”

மூலைக்கு முப்பதென இருக்கும் பலகட்சிகளின் பேரில் இன்னமும் திராவிடம் பட்டொளி வீசிப்பறக்கும் ஒரு சூழலில் , திராவிட இயக்கத்திற்கும் எழுச்சிக்கும் எவ்வகையிலும் சம்பந்தப்படாத விஜயகாந்த் போன்றவர்களும் திராவிடக் கட்சி நடாத்துகின்ற சூழலில் நாம் இருக்கிறோம். தமிழ் , தமிழர் என்று அனுதினமும் அள்ளியள்ளித் தெளித்த வசனங்களாலும் , வீராவேச கருத்துக்களினாலும் திராவிடம் தட்டி எழுப்பிய உணர்வோடே இங்கு அனேகர் ‘தமிழுணர்வு’ பெற்றிருக்கிறோம். தமிழகத்தில் எழுந்த திராவிட உணர்வே , புலிகளுக்கு உந்து சக்தியாக இருந்தது என்று அவ்வமைப்பின் முன்னாள் தலைவரும் , எஞ்சியிருக்கும் ஒரே மூத்த உறுப்பினருமான ‘ கே.பி ‘ அவர்கள் சொன்னதே தமிழர்தம் 20ம் நூற்றாண்டு வரலாற்றில் தமிழர்களின் வாழ்வில் திராவிட இயக்கத்தின் பங்கை வெளிக்காட்டும். தமிழர் திராவிடராயினரா ? இல்லை திராவிடர்கள் தமிழர்களாயினரா என்று பார்க்கப்போனால் இரண்டுமே வடிகட்டின பொய்யே…..வரலாற்றில் ஆங்காங்கே அள்ளித் தெளித்த ஓரிரு கருத்துக்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டதே ‘திராவிடம்’ என்ற கருத்தாக்கம். அது முழுமையானதல்ல. திராவிடக்குட்பட்டோர் எனச்சொல்லப்படும் கன்னட , தெலுங்கு , மலை...

உருவான டெசோ முதல் உருவாகாத ஈழம் வரை!

தோழர் ஆர். முத்துக்குமாரைப் பற்றி நாம் அறிமுகப்படுத்தவேண்டியதில்லை. அவரே நம்மை அறிமுகப்படுத்தும் நிலையில் இருக்கிறார். நாம் கொண்டுள்ள கருத்தையே அவரும் சுட்டுவதால் இக்கட்டுரை மீளப்பதிப்பிக்கிறோம்.! அவருடைய தளத்திற்குச் செல்ல இவ்விணைப்பை உபயோகிக்கவும். கருணாநிதி விரும்பினால் தமிழீழத்தைத் தமிழ்நாட்டுக்கு உள்ளேயே அமைத்துக்கொள்ளட்டும் என்று சீறியிருக்கிறார் இலங்கை அமைச்சர் கோத்தபய ராஜபட்சே. தமிழீழ ஆதரவாளர் அமைப்பைக் கழுத்தை நெரித்துக் கொன்றவரே கருணாநிதிதான் என்று கண்டிக்கிறார் வைகோ. அன்று காங்கிரஸோடு உறவுகொள்ள டெசோவைக் கலைத்த கருணாநிதி, தற்போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகிக்கொள்வதற்காக டெசோவைத் தொடங்கியிருக்கிறார் என்று குற்றம்சாட்டுகிறார் பழ. நெடுமாறன். ஆக, தமிழீழ எதிர்ப்பாளர்கள் தொடங்கி தமிழீழ ஆதரவாளர்கள் வரை பலரும் கலைஞரைக் கண்டிக்கிறார்கள். விமரிசிக்கிறார்கள். எதிர்க்கிறார்கள். அத்தனைக்கும் ஒரே காரணம், டெசோ.   ஈழத்தமிழர்களின் பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு தமிழீழம் மட்டுமே. அதுதான் என்னுடைய நிறைவேறாத கனவு. அந்தத் தமிழீழத்தை அடைவதற்காகவே தமிழீழ ஆதரவாளர்...

தமிழீழம் : அரசியலாக்குவது கருணாநிதியா இல்லை மற்றவர்களா?

இன்று டெசோ மாநாடு நடந்து முடிந்திருக்கிறது.....அவர்களும் ஒரு தீர்மானம் போட்டு விட்டு கலைந்து விட்டார்கள்.... ஆனால் , கருணாநிதியின் இந்த திடீர் ஈழப்பாசம் கண்டு எல்லாத் தரப்பினரும் அவர் நாடகம் போடுவதாக கூக்குரலிடுகிறார்கள்... கருணாநிதியின் ஈழப்பாசம் நாடகமென்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லைதான்... ஆனால் , இன்று கருணாநிதியைக் குற்றம் சொல்கிற வைகோ , நெடுமாறன் , சீமான் போன்றவர்களுக்கு கருணாநிதியைக் குற்றம் சொல்ல என்ன வக்கிருக்கிறது? என்ன உரிமையிருக்கிறது? போர் நடந்தால் அப்பாவி மக்கள் சாகத்தானே வேண்டும் என்றழைத்த ஜெயலலிதாவை ஈழத்தாயாக ஏற்றுக்கொள்வதில் இல்லாத சிரமம் கருணாநிதியை ஏற்றுக்கொள்வதில் இவர்களுக்கு என்ன இருக்கிறது? பிரபாகரனைப் பிடித்து வந்து தூக்கிலிட வேண்டும் என்று சொன்ன செயலலிதாவிற்கு பல்லக்குத் தூக்கிய வைகோவிற்கும் , சீமானுக்கும் அப்படி என்னதான் கருணாநிதியிடத்தில் பிரச்சினை? நாளெல்லாம் கருணாநிதி துரோகி என்று பேசும் பெருந்தகைகளே , ஜெயலலிதா என்ன செய்து கிழித்தார் உங்களுக்களித்த வாக்குறுதிப்படி?  ஈழத்துக்கு இராணுவம் அனுப்பினாரா? இல்லை இந்திய நடுவண் அரசைப் பிடித்து உலுக்கினாரா ஈழம்...

இதற்குத்தானா ஆசைப்பட்டீர்கள் திரு.சீமான்?

இன்று சீமான் அதிமுக கூட்டணியில் இருந்து பிரச்சாரம் பண்ணப்போவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது..ஏற்கெனவே ஒருமுறை செய்த பாரிய தவறொன்றை மற்றொருமுறை செய்யமாட்டார் என்றே நினைத்திருந்தேன்....இது உண்மையான செய்தியாய் இருந்தால் பேரிடிதான்..!!!! மாறாக உணர்வுள்ள இளைஞர்கள் தம் பின்னால் பேரெழுச்சியுடன் நாம் தமிழராய் எழும்போது.....அதைக்கொண்டுபோய் போய்ஸ்தோட்டத்திற்கு தாரைவார்த்துக்கொடுப்பதென்பது கனவிலும் சகிக்க முடியாத செயல்....!!  கருணாநிதிக்கு ஈழ அழிவிற்கு எவ்வளவுக்கெவ்வளவு பங்கிருக்கிறதோ அதே அளவிற்கு  சக பங்குள்ளவரே செயலலிதா... செயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்? என்ன செய்தார்? 1.எதிர்கட்சியாக மாபெரும் போராட்டங்களை நடாத்தியிருக்க வேண்டும்...அழிவது நம்சொந்தங்களே என்று தெரிந்திருந்தும் வாய்மூடி மெளனியாகவே இருந்தார். 2. கருணாநிதியின் எதிர்ப்பரசியலைக் கைவிட்டு விட்டு முத்துக்குமார் முதற்கொண்டு  தமிழக இளைஞர்களின் எழுச்சியை உபயோகித்து இந்திய அரசை ஸ்தம்பிக்க முயற்சித்திருக்க வேண்டும்....அதைவிடுத்து கொடநாட்டில் பள்ளி கொண்டிருந்தார்... 3.  சிறிதேனும் உண்மையான அக்கறை அவருக்கு தமிழர்பா...

நாங்கள் பொய் சொல்லவில்லை...வன்னி மருத்துவர்கள்..விக்கிலீக்ஸ் அம்பலம்

வன்னியில் நடந்த இழப்புக்களை புலிகளின்  அழுத்ததினாலேயே மிகைப்படுத்திச் சொன்னோம் என்று முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் பல்டி அடித்த வன்னி மருத்துவர்கள்  , தாங்கள் அப்படிச் சொன்னது  அரசாங்கத்தின் அழுத்தத்தினாலேயே என்று அமெரிக்க தூதகரத்திடம் சொன்னதாக அமெரிக்க தூதரக அதிகாரி திரு. ஜேம்ஸ் ஆர்.  மூரே அனுப்பிய கேபிளை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தி இருக்கிறது.....அதன் முழு வடிவம் வருமாறு....!! Monday, 24 August 2009, 13:34 S E C R E T COLOMBO 000830 SIPDIS DEPARTMENT FOR SCA/INSB EO 12958 DECL: 08/23/2019 TAGS PGOV, PREL, PREF, PHUM, EAID, MOPS, CE SUBJECT: DOCTORS FROM NO-FIRE ZONE RELEASED ON BAIL REF: COLOMBO 695 Classified By: CHARGE D’AFFAIRES JAMES R. MOORE. REASONS: 1.4 (B, D) ¶ 1. (S) Four government doctors, held by the police Criminal Investigation  Division (CID) since the end of the war in May for allegedly filing false  reports on civilian casualties in the No-Fire Zone during the last several  months of the war, were released on bail today. XXXXXXXXXX...

தமிழகத்தின் தலையில் இடிவிழ...!

இதை சாபமாகச் சொல்லவில்லை. தமிழகத்துக்கு நேரிட்ட சாபக்கேட்டைச் சுட்டவே சொல்கிறேன்.  உலகம் முழுமையும்  இன்றைக்குப் பேசப்படுகிற ஒருவிடயமாக விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்திய ரகசியங்கள் இருக்கின்றன. உலகளாவிய முறையில் ஊருக்கு ஒன்றெனவும் , உள்ளுக்கு வேறெனவும் அமெரிக்கா ஆடிய தகிடுதத்தங்களைப் போட்டுக்கொடுத்து புண்ணியம் தேடிக்கொண்டிருக்கிறார் அஸ்ஸாங்கே. அத்தகைய விக்கிலீக்ஸ் கூட சிறிலங்காவில் நிகழ்ந்த பாரிய மனிதப்படுகொலை பற்றி விரிவான கட்டுரை ( அது எழுதிய இரு கட்டுரைகளில் ஒன்று சிறிலங்கா பற்றியது , பிரிதொன்று விஸா, மாஸ்டர்கார்டு பற்றியது . ) பிரித்தானியத் தொலைக்காட்சி நிறுவனமான சேனல் - 4 , இதுகாறும் வெளீவந்த போர்க்குற்ற காணொலிகளை ஆராய்ந்து சர்வ நிச்சயமாக போர்க்குற்ற விசாரணையொன்று இலங்கையில் தேவை என்று தொடர்ந்து வலியுறுத்துகிறது..........  அதன் ஆய்வுகள் கீழ்க்கண்ட இணைப்புக்களில்..... இணைப்பு - 1 , இணைப்பு - 2 , இணைப்பு - 3   அமெரிக்காவிலிருந்து வெளிவரும் வாஷிங்டன் டைம்ஸ் , நியுயார்க் போஸ்ட் என்ற பற்பல செய்தி இதழ்கள் , போர்க்குற்ற சந்தேக நபரொருவர் , டிப்ளமேட்டிக் இம்யூனி...

சீமானுக்குப் பொருந்தாத ஐபிசி 124ஏ பிரிவு.

புகழ்பெற்ற எழுத்தாளரும் , மனித உரிமை ஆர்வலருமான திருமதி.அருந்ததி ராய் அவர்கள் "காஷ்மீர்" எப்போதுமே இந்தியாவின் ஒரு பகுதியான இருந்ததில்லை என்று புதுதில்லி ஆய்வரங்கம் ஒன்றில் சொன்னதும் , ஹிலானி அவர்கள் "சுதந்திரமே தீர்வு" என்று சொன்னதும் பஜ்ரங்தள் கோஷ்டிகளாலும், வட இந்திய செய்திச்சேனல் மாபியாக்களாலும் பெரும் பிரச்சினை ஆக்கப்பட்டது தெரிந்தமையே. பிரிவினையைத்தூண்டியதாக திருமதி.ராய் மீது வழக்குத்தொடரப்படும் , அவர் கைது செய்யப்படுவார் என்றும் பரபரப்பாக பேசப்பட்ட சூழலில் மாண்புமிகு ( நெசமாவா?) உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அது ஐ.பி.சி 124 ஏ பிரிவின் படி குற்றமல்ல என்கிறார். அது குறித்தான செய்தி பின்வருமாறு. அருந்ததி ராய் பேசியதில் தவறில்லை-நடவடிக்கையும் இல்லை-ப.சிதம்பரம் டெல்லி: காஷ்மீர் தொடர்பாக எழுத்தாளர் அருந்ததி ராய் பேசியதில் சட்டப்படி எந்தத் தவறும் இல்லை என்பதால் அவர் மீது டெல்லி காவல்துறை நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களை அவர் சந்தித்தபோது அருந்ததி ராய் குறித்து கேட...

கறுப்பு ஜுலை - 1983 - 2008 - "25 ஆண்டுகள் "

அது ஆயிரத்தி தொள்ளாயிரத்து எண்பத்து மூன்று.... இன்று போலவே அதுவும் வசந்தகாலத்தின் ஆரம்பமான ஒரு ஜுலை மாதம்.....இந்தியாவும் , இந் தியர்களுக்கும் நிம்மதியாக தங்கள் இயல்பு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தனர்........ தமிழர்களும் அவ்வாறே... . எல்லாத்தமிழர்களுமா?? ஆமாம் தமிழகத்தில் இருந்த எல்லாத் தமிழர்களும்தான்...........தமிழ் சினிமாவின் மோகத்தில் அவர்கள் கட்டுண்டிருந்தார்கள்........ ஸ்டீரியோ வைத்த தியேட்டர்கள் அதிகமான காலம்.........ஹாரன் ஸ் பீக்கர்களின் சத்தமும் , அரசியல்வாதிகளின் வெட்டிக்கூச்சலும் மிகுந்ததொரு காலம்! அதனால் தானோ என்னவோ சற்றேறக்குறைய எட்டி விட ும் தூரத்திலிருந்து எழுந்த அவலக்குரல் இவர்கள் காதில் விழவே இல்லை.... அந்த அவலக்குரல் தொடங்கிய நாள் ஜூலை 24 , ஆம்....நீங்கள் சூர்யாவின் பிறந்த நாளிற்கு தொலைக்காட்சிக்கு குறுஞ்செய்தி அனுப்பியும் , மின்னஞ்சல் அனுப்பியும் , ஓர்குட்டியும் களைத்துப்போய் பின் உறங்கிப்போய் விழித்து எழுந்தீர்களே அது போ ன்றதொரு ஜூலை 24 ம் த ேதிதான்! நாம் பேசுகின்ற மொழியை பேசுபவர்களால் நம்மில் ஒருவராகிய , நம் கலாச்சாரத்தை கொண்டதால் ந ாம் ஒரு இனமாகிய ஈழத்தமிழர்களி...