அது ஆயிரத்தி தொள்ளாயிரத்து எண்பத்து மூன்று....
இன்று போலவே அதுவும் வசந்தகாலத்தின் ஆரம்பமான ஒரு ஜுலை மாதம்.....இந்தியாவும் , இந்தியர்களுக்கும் நிம்மதியாக தங்கள் இயல்பு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தனர்........
தமிழர்களும் அவ்வாறே....
எல்லாத்தமிழர்களுமா??
ஆமாம் தமிழகத்தில் இருந்த எல்லாத் தமிழர்களும்தான்...........தமிழ் சினிமாவின் மோகத்தில் அவர்கள் கட்டுண்டிருந்தார்கள்........
ஸ்டீரியோ வைத்த தியேட்டர்கள் அதிகமான காலம்.........ஹாரன் ஸ்பீக்கர்களின் சத்தமும் , அரசியல்வாதிகளின் வெட்டிக்கூச்சலும் மிகுந்ததொரு காலம்! அதனால் தானோ என்னவோ சற்றேறக்குறைய எட்டி விடும் தூரத்திலிருந்து எழுந்த அவலக்குரல் இவர்கள் காதில் விழவே இல்லை....
அந்த அவலக்குரல் தொடங்கிய நாள் ஜூலை 24 ,
ஆம்....நீங்கள் சூர்யாவின் பிறந்த நாளிற்கு தொலைக்காட்சிக்கு குறுஞ்செய்தி அனுப்பியும் , மின்னஞ்சல் அனுப்பியும் , ஓர்குட்டியும் களைத்துப்போய் பின் உறங்கிப்போய் விழித்து எழுந்தீர்களே அது போன்றதொரு ஜூலை 24 ம் தேதிதான்! நாம் பேசுகின்ற மொழியை பேசுபவர்களால் நம்மில் ஒருவராகிய , நம் கலாச்சாரத்தை கொண்டதால் நாம் ஒரு இனமாகிய ஈழத்தமிழர்களின் அவலக்குரல்தான் அது.....
ஜூலை 24ல் தொடங்கி தொடர்ந்த வாரங்களில் சற்றேறக்குறைய இரண்டாயிரம் தமிழர்களின் உயிர் பறிக்கப்பட்டது...
ஊளைச்சத்தத்தோடு வரும் சூறாவளிக்காற்றினாலா அவர்கள் தூக்கிச்செல்லப்பட்டார்கள்....???
விண்ணதிரும் இடிமின்னலுடன் பெய்யும் மழையினாலா அவர்கள் அடித்துச்செல்லப்பட்டார்கள்.....???
பூமித்தாய் அவர்களின் பாரம் தாங்காமல் அதிர்ந்தா அவர்கள் மண்ணோடு மண்ணானார்கள்....???
பேயெனப் பெருகி வரும் சுனாமி அலையிலா அவர்கள் உயிர் காவு கொள்ளப்பட்டது...????
இல்லை....இல்லவே இல்லை.......
தாங்கள் தங்களுக்கான காற்றை சுதந்திரமாக சுவாசிக்க வேண்டுமென்றதால்!! தாங்கள் தம் மண்ணில் தம் விருப்பப்படி வாழ வேண்டுமென்றதற்காக....
அந்த கறுப்பு ஜூலை இன்றளவிலும் ஈழத்தமிழர்களால் மறக்கவியலா நிகழ்வாய் இருக்கிறதென்றால் அந்த நிகழ்வுகள் ஏற்படுத்திய வடுக்கள் இன்றைக்கும் நெஞ்சில் வலி ஏற்படுத்துவதால் தான்...பெரும்பான்மை சிங்களர்கள் தமிழர்களை வேட்டையாடினார்கள்..........எல்லோரும் இந்நாட்டின் மன்னர்கள் என்று சொன்ன தமிழினத்தின் மன்னர்கள் எல்லோரும் மாண்டு போனார்கள்.....
நூறாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தாம் ஒதுங்க கூறையின்றி தவித்துப்போனார்கள்...!!!
சில நாட்களுக்கு முன் செய்தித்தாளில் ஒரு நிகழ்வை படித்தேன்......சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான வீட்டை அரசாங்கம் கட்டித்தரவில்லை என்று......இன்றைக்கும் நாம் பார்க்கிறோமே ஆயிரக்கணக்கில் ஆர்ப்பாட்டங்கள் , போராட்டங்கள் எல்லாம் எதற்காக ....??? அரசிடம் இருந்து உரிமைகளை பெற்றுக்கொள்ள.......அத்தகையதோர் அரசே அவ்வுரிமைகளை பறித்த கதைதான் அது.....
இளைஞர் சமுதாயம் உயிரோடு கொளுத்தப்பட்டது........அவ்விளைஞர்களின் கூக்குரலே பின்னாளில் வலியதோர் போர்க்குரல் எழும்ப அடிகோலிற்று!
நிர்வாணம் எப்போதுமே அசிங்கம்தான்....ஊர் திரண்டிருக்க ஒரு மனநிலை சரியில்லாதவன்
உடம்பில் மேலாடை இல்லாமல் செல்லும்போது இங்கே அதைப்படிக்கும் பலரும் முகத்தை சுளித்தே செல்வார்கள்.....மனநிலை சரியில்லாதவனுக்கு அது பற்றிய உணர்வே இருப்பதில்லை என்பதால் அவன் மனம் வலிப்பதே இல்லை...........
இதோ பாருங்கள்....
உயிருள்ள , உணர்வுள்ள ஒரு இளைஞன் சிங்கள வெறியனால் அம்மணப்படுத்தப்படடு கிடப்பதை...அவன் மனதின் வலி சாவை விட கொடியதாய் இருந்திருக்குமல்லவா........
சற்றேறக்குறைய ஒரு டஜன் தொலைக்காட்சிகள் தமிழில் இருந்தாலும் , தமிழ் நாட்டில் இருந்தாலும் அவையெல்லாம் சூர்யாவின் பிறந்தநாளைக்கொண்டாடுவதிலேயே குறியாய் இருந்துவிட்டன!
அரசாங்கம் பிழைக்குமா இல்லையா என்பதை ஆர்வத்துடன் பார்த்திருந்த எம் தமிழ் மக்களுக்கு நம் தமிழ்ச்சகோதர சகோதரிகள பிழைக்காமல் அழிந்த கதை தெரியாமல் போனதில் வியப்பேதுமில்லை...
எங்கோ கடல் கடந்த கனடா கூட கருப்பு ஜூலையை நினைவு கூர்ந்த வேளையில் நாம் நம் இனத்தை கொன்று குவித்த இலங்கையுடன் இந்தியா விளையாடும் கிரிக்கெட்டை நினைத்து கவலைப்பட்டுக்கொண்டிருந்தோம்!!
ஐமபத்தி மூன்று தமிழர்கள் சிங்கள அரசாங்கத்தினால் சிறைக்குள்ளேயே படுகொலை செய்யப்பட்டார்கள்.....இங்கே நாம் சிறையிலிருந்து நாடாளுமன்றத்திற்கு வந்து கூச்சலிட்ட பப்பு யாதவ் பற்றிய பேச்சில்
திளைத்திருந்தோம்...
தவறேதுமில்லை....நாம் நம் நாட்டை பற்றி பேசி சிரித்து மகிழ்வதற்கு.........
ஆனால் நம் உறவுகள் அங்கே தினம் தினம் தம் நாட்டுக்காக மடிந்து கொண்டிருப்பது பற்றிய சிறு கவலைக்கு பின்னாவது நமது நாடாளுமன்ற நாடகத்தை ரசித்திருந்தால் கால் நூற்றாண்டுக்கு முன்பு காணாமல் போன ஆயிரக்கணக்கான நம் தொப்புள்கொடி உறவுகளின் வேதனைக்கு சிறு வடிகாலாகவ
து இருந்திருக்கும்!
அவர்களின் வேதனைகளை நாம் சுமக்கவெல்லாம் வேண்டாம்.....அவர்களின் வேதனையை போக்க நாம் உதவவும் வேண்டாம்...நம் இறையாண்மைக்குட்பட்டு நாம் வாய்மூடி மெளனியாக இருந்தும் கொள்ளலாம்..........
இந்திய பேரரசின் வானாளவிய அதிகாரத்தைப்பெருக்க , அதன் வருமானத்தை பெருக்க நாம் விற்கும் ஆயுதத்தின் மூலமான வருமானத்தில் நாம் நமது மின் வெட்டைக்கூட தவிர்க்க முயற்சிக்கலாம்..............
மீன் பிடிக்க அலை தாண்டி கடலுக்குள் செல்லும் மீனவரை சுட்டு வீழ்த்தும் சிங்களத்தை கண்டிப்பதை விட்டுவிட்டு கச்சத்தீவு காணாமல் போனதற்காக அடுத்தவரை குற்றம் சாட்டிக்கொண்டு பொழுதைப்போக்கலாம்!!
கொடநாட்டில் அமர்ந்து கொண்டு ஏழையின் சோற்றுக்காக அறிக்கையில் உழைத்துக்கொண்டிருக்கலாம்........
டெல்லியில் போய் தமது பேரன் பேத்திகளுக்கான பதவிக்காக பேரம் பேசிக்கொண்டிருக்கலாம்.......அது இந்தியாவின் இறையாண்மைக்குட்பட்ட செயல்கள் என்பதால் தவறேதுமில்லை....
ஆனால் இச்செயல்களுக்கிடையே , ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்றி மாண்ட நம் இனத்தாருக்கு நம் அஞ்சலி செலுத்தியிருக்கலாமே?????
எத்துணை பேர் அதைச்செய்தோம்????
ஏன் இந்த புறக்கணிப்பு.....
ஊடகங்களாகட்டும் , செய்தித்தாள்களாகட்டும் அது பற்றியதோர் நினைவூட்டல் கூட செய்தத்தாய்க்காணோம்....!!
தமிழர்களே...........
நம்மையும் , நம் வீட்டையும் , நம் ஊரையும் , நம் மாநிலத்தையும் தாண்டி நமக்கு உறவுகள் இருக்கிறது என்று பெருமை கொள்வோம்...
அவர்தம் சுக துக்கங்களில் நாம் பங்கெடுப்போம்........நமது தார்மீக ஆதரவையாவது அவர்களுக்கு வழங்குவோம்.......
குண்டு துளைக்காத மேடையில் ஏறி மக்களிடம் உறவாடும் மாமனிதர்களுக்கு வேண்டுமானால் மக்களின் வலியை எடுத்துச்சொல்லவேண்டிய கட்டாயம் உண்டு........செவி நுகர் தூரத்தில் குண்டு வெடித்தும் வாழாவிருந்தால் நம்மை வரலாறு தூற்றும்.....
அவர்களின் மீதான நம் அக்கறை அவர்களை அடையட்டும்.....
அவர்களுக்கான ஆதரவை அளிக்க நாம் உண்டு என்ற சேதி அவர்களை எட்டட்டும்........
இந்திய வல்லரசு அள்ளித்தரும் ஆயுதங்களின் அழிப்பிலிருந்து தப்பி வரும் நம் இனத்தவர்களுக்கு அச்செய்திகள் சிறு தடுப்பரணாகவாவது இருக்கட்டும்...
வேறென்ன செய்ய???
(புகைப்படங்களும் , தகவல்களும் www.tamilnation.org லிருந்த எடுக்கப்பட்டவை...நன்றிகளோடு. ).

Comments