உலகத்தின் அனைத்துப் பகுதிகளையும் பாதித்திருக்கும் இந்தப் பொருளாதாரத் தேக்கம் யாரையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் ஜவுளித் தொழிலில் பல்லாயிரக் கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. உலக போலிஸான அமெரிக்காவிலோ நிலைமை படுமோசம். லேஹ்மான் பிரதர்ஸில் ஆரம்பித்த திவால் புயல் , இப்போது அமெரிக்க பத்திரிகையுலகையே ஆட்டம் காண வைத்திருக்கிறது. தொடர்ச்சியான நிறுவனங்களின் திவால் நோட்டீஸ் , பத்திரிகைகளின் விளம்பர வருவாயை வெகுவாக குறைத்துவிட்டது. அனேக அமெரிக்க ஊடகங்கள் பொருளாதாரச்சூறாவளியி ல் சிக்கித் தவிக்கின்றன.......அதனால் நிறைய பத்திரிகையாளர்கள் மற்றும் அது சார்ந்த பணியாளர்கள் வேலை இழப்பது தொடர்கதையாகி வருகிறது. அதனால் பொருளாதாரச் சிக்கலின் புதிய சேதாரமாக டிரிப்யூன் கம்பெனி - அமெரிக்காவின் புகழ் பெற்ற லாஸ் ஏன்சல்ஸ் டைம் மற்றும் சிகாகோ ட்ரிப்யூன் பத்திரிகைகளையும் , 23 தொலைக்காட்சி சேனல்களையும் மற்றும் 12 பத்திரிகைகளையும் கொண்ட இந்த மாபெரும் மீடியா கம்பெனி ஏற்கெனவே மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துவிட்டது. ட்ரிப்யூன் கம்பெனியின் தலைமை நிர்வாகி திரு.சாம் ஜெல் குறிப்பிட்டதாவது , நிறுவனத்தின் ம...