Skip to main content

Posts

Showing posts with the label திமுக - இனி?

எனக்குப் பிறகு ஸ்டாலின் : கருணாநிதி

சமுதாய மேன்மைக்காக என் ஆயுள் இருக்கிற வரை பாடுபடுவேன். அதற்குப் பிறகு ஸ்டாலின் என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இன்று வேலூர் மேற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் சாமுவேல் செல்லப்பாண்டியன் தலைமையில் 2000க்கு மேற்பட்ட பா.ம.க. வினர் அந்தக் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்த போது கிருணாநிதி ஆற்றிய உரையில், " இன்றைக்கு ஒரு கட்சியின் அமைப்பிலே இருந்து விடுபட்டு இங்கே வந்திருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்கிற நேரத்தில் அந்த அமைப்பைப் பற்றி குறை கூறத் தேவையில்லை. அந்த அமைப்பைக் குற்றஞ்சாட்டத் தேவையில்லை. குற்றம் இருந்த காரணத்தால்தான், குறைகள் இருந்த காரணத்தால் தான் அங்கிருந்து பிரிந்து வந்து திராவிட முன்னேற்றக் கழகத்திலே இணைந்திருக்கிறோம் என்று முற்றுப்புள்ளி வைத்த பிறகு, அதைப் பற்றிப் பேச வேண்டிய அவசியமில்லை. உங்களையெல்லாம் பிரிந்திருக்கின்ற அந்தத் தலைமை, ஒரு காலத்தில் எனக்கு மிக மிக வேண்டிய, நட்பு கொண்ட, கொள்கையுடைய தலைமையாகத் தான் இருந்தது. ஆனால் நீங்கள் பத்திரிகைகளைப் பார்த்திருப்பீர்கள். கூட்டங்களிலே கேட்டிருப்பீர்கள்...

ச்சும்மா ட்டமாஷ் - 75: மதிபாலா - திமுகவின் அடுத்த தலைமை

நண்பர் மோகன் கந்தசாமியின் ச்சும்மா டமாஷில் எனது திராவிட முன்னேற்றக் கழகம் - இனி என்ற கட்டுரை மூன்று பதிவுகளாக வெளிவந்தது. அதன் மீள்பதிவே இது. காப்பிரைட் முழுதும் ச்சும்மா ட்ட்மாஷுக்கே ! ச் சும்மா ட்டமாஷ் - 75 -க்காக பதிவர் மதிபாலா முதல் இரண்டாம் பகுதிகள் சென்ற பதிவுகளில் வெளியானது. அவர்கள் எழுதியுள்ள இந்த சிறப்புப் பதிவின் இறுதிப் பகுதி இப்பதிவில் வெளியாகிறது. மற்றும் திமுகவின் அடுத்த தலைமை இ து கொஞ்சம் சுலபமான அலசல் என்றே தோன்றுகிறது. திமுகவின் அடுத்த தலைமைக்கான முன் மொழிதலில் முன்னணியில் நிற்பவர் மு.க.ஸ்டாலின், அடுத்த அளவில் சொல்லப்படும் மு.க.அழகிரியோ, கனிமொழியோ, தயாநிதி மாறனோ திமுகவின் அனைத்துத் தரப்பினருக்கும் பரிச்சயமானவர்களோ , நீண்ட காலமாக உழைத்தவர்களோ கிடையாது. ஆனால் மு.க.ஸ்டாலின் அப்படியானவர் கிடையாது ஏன் ஸ்டாலின் திமுகவின் தலைமையாக இருக்கக் கூடாது? 1. தி முகவிற்காக பாடுபட்ட ஒருவர், அடிமட்டத் தொண்டனாக இருந்து மேலே வந்த ஒருவர், தான் மேற்கொண்ட பொறுப்புக்களை எல்லாம் சிரமேற்கொண்டு அனைவரும் பாராட்டும் வண்ணம் முடித்த ஒருவர், எல்லாவற்றிற்கும் மேலாக பணிவு, தான் சொல்ல நினைத்...

ச்சும்மா ட்டமாஷ் - 75: மதிபாலா - ப்னீக்ஸ் பறவையாய் மீண்டு வந்த திமுக. பகுதி - 2

நண்பர் மோகன் கந்தசாமியின் ச்சும்மா டமாஷில் எனது திராவிட முன்னேற்றக் கழகம் - இனி என்ற கட்டுரை மூன்று பதிவுகளாக வெளிவந்தது. அதன் மீள்பதிவே இது. காப்பிரைட் முழுதும் ச்சும்மா ட்ட்மாஷுக்கே ! செ ன்ற பதிவில் முதல் பகுதி யாக வெளியான மதிபாலா வின் கட்டுரை இப்பதிவில் தொடர்கிறது. இறுதிப் பகுதி அடுத்த பதிவில் வெளியாகும். இது ச்சும்மா ட்டமாஷ் - 75 -க்காக அவர் எழுதிய சிறப்புப்பதிவு. ப்னீக்ஸ் பறவையாய் மீண்டு வந்த திமுக தி முக தலைவராக கலைஞர் பொறுப்பேற்ற பிறகு நடாத்தப்பட்ட தேர்தலில் திமுகழகம் வெற்றிபெற்றது. கலைஞர் இரண்டாம் முறையாக பதவியேற்றார். பின்பு திமுகழகத்தின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் கருத்துவேறுபாடு காரணமாக தனிக்கட்சி தொடங்கினார் எம்.ஜி.ஆரின் பிரிவு சி னிமா கவர்ச்சி , கொள்கைப் பாடல்கள் என்ற ஜனரஞ்சகத்தின் மொத்த வடிவமான எம்.ஜி.ஆரும் அவரது கட்சியுமான அதிமுக , தமிழகத்தின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றது. அதன் பிறகு 13 ஆண்டுகள் , எம்.ஜி.ஆர் தமிழகத்தின் ஆட்சியிலிருந்தார். எம்.ஜி.ஆரின் கலருக்கும் , எம்.ஜி.ஆரின் கொள்கைப்பாடல்களுக்குமே ஓட்டுப் போட்ட மக்கள் அனேகம் பேர். இதில் கொள்கையென்ன ,கோட்பாடென...

ச்சும்மா ட்டமாஷ் - 75: மதிபாலா - திராவிட முன்னேற்ற கழகம் -இனி!

நண்பர் மோகன் கந்தசாமியின் ச்சும்மா டமாஷில் எனது திராவிட முன்னேற்றக் கழகம் - இனி என்ற கட்டுரை மூன்று பதிவுகளாக வெளிவந்தது. அதன் மீள்பதிவே இது. காப்பிரைட் முழுதும் ச்சும்மா ட்ட்மாஷுக்கே ! 'ச் சும்மா ட்டமாஷ் - 75': சிறப்பு பதிவுகள் வரிசையில் அடுத்து பதிவர் மதிபாலா அவர்கள் எழுதும் அரசியல் கட்டுரை வெளியாகிறது. திமுக -விற்கு வலுவான திராவிட மாற்று கட்சி தற்போதைய தமிழக அரசியலில் இல்லை என்னும் நிலை திமுக -வை முன்னெப்போதுமில்லாத வகையில் அக்கறை இன்மையுடன் கூடிய சோம்பல் கொள்ளச்செய்கிறது என்பது பரவலான எண்ணம். மேலும் ஒரு பெரிய அளவிலான தலைமை மாற்றத்திற்கு திமுக தயாராகி வரும் இச்சூழ்நிலையில் மாற்றத்திற்கு பிறகான திமுகவின் நிலை எவ்வாறு இருக்கும் என இக்கட்டுரை ஆராய்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் – இனி? 'தி் ராவிட முன்னேற்றக் கழகம் – இனி?' என்ற இந்தக் கேள்வி வெகு ஆழமானது. அந்தக் கேள்வியில் திமுகவின் அடுத்த அரசியல் தலைமை பற்றிய வினவல் மட்டும் அடங்கியிருக்கவில்லை…..திமுகவின் எதிர்காலம் என்ன என்னும் மாபெரும் கேள்வியும் அடங்கியிருக்கிறது திமுக ஒரு புறக்கணிக்கவியலாத சக்தி ச ற்றேறக்கு...