Skip to main content

Posts

Showing posts with the label அனுபவம்

செயற்கரிய செய்வர் பெரியர்….திரு.பொள்ளாச்சி நசன்.!

இந்தப்பதிவினை 2009 ல் எழுதினேன். படித்த நண்பர்கள் அனைவரும் , இது எமக்கு புதிய செய்தியே என்றார்கள்....நல்லசெய்தியினை நாலு பேருக்கு தெரியும்படி மீண்டும் உரக்கச்சொல்வதில் தவறில்லையே. அதனால் இந்த மீள்பதிவு..... நவம்பர் 2009 க்கும் 2012க்கும் இடைப்பட்ட காலவெளியில் 'தமிழம்' இணையம் தான் எத்துணை வளர்ந்திருக்கிறது? வாழ்த்துக்களும் ! , வணக்கங்களும்! த ற்செய லாக நேற்றிரவு வலையில் உலாவிக்கொண்டிருந்தேன்….மேற்கண்ட தலைப்பிலிருக்கும் குறள்மொழிக்கேற்ப , அரியதொன்றை செய்து கொண்டிருக்கும் திரு. பொள்ளாச்சி நசன் அவர்களைப் பற்றியும் , அவரது தமிழம் இணையம் பற்றியும் அரிய நேரிட்டது. உங்களில் சிற்றிதழ் தொடர்புபட்ட பலரும் அவரை அறிந்திருக்கக் கூடும்…….இன்னும் பலர் அவரைப் பற்றி அறிந்திருக்காமலும் இருக்கக் கூடும்…..என்னைப் போல..! அதனால் ஒரு சின்ன அறிமுகம்… ( சூரியனுக்கே டார்ச்சா என்று திரு.நசன் அவர்கள் கோவித்துக்கொள்ளக் கூடாது…!!) பொள்ளாச்சி நசன் என்று தன் பெயரை வழங்கும் மணிப்பிள்ளை நடேசன் தமிழம் என்னும் வலையிதழின் ஆசிரியர். இவர் சிதம்பரத்தில், செப்டம்பர் 15, 1952 அன்று பிறந்தார். பொள்ளாச்ச...

உருவான டெசோ முதல் உருவாகாத ஈழம் வரை!

தோழர் ஆர். முத்துக்குமாரைப் பற்றி நாம் அறிமுகப்படுத்தவேண்டியதில்லை. அவரே நம்மை அறிமுகப்படுத்தும் நிலையில் இருக்கிறார். நாம் கொண்டுள்ள கருத்தையே அவரும் சுட்டுவதால் இக்கட்டுரை மீளப்பதிப்பிக்கிறோம்.! அவருடைய தளத்திற்குச் செல்ல இவ்விணைப்பை உபயோகிக்கவும். கருணாநிதி விரும்பினால் தமிழீழத்தைத் தமிழ்நாட்டுக்கு உள்ளேயே அமைத்துக்கொள்ளட்டும் என்று சீறியிருக்கிறார் இலங்கை அமைச்சர் கோத்தபய ராஜபட்சே. தமிழீழ ஆதரவாளர் அமைப்பைக் கழுத்தை நெரித்துக் கொன்றவரே கருணாநிதிதான் என்று கண்டிக்கிறார் வைகோ. அன்று காங்கிரஸோடு உறவுகொள்ள டெசோவைக் கலைத்த கருணாநிதி, தற்போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகிக்கொள்வதற்காக டெசோவைத் தொடங்கியிருக்கிறார் என்று குற்றம்சாட்டுகிறார் பழ. நெடுமாறன். ஆக, தமிழீழ எதிர்ப்பாளர்கள் தொடங்கி தமிழீழ ஆதரவாளர்கள் வரை பலரும் கலைஞரைக் கண்டிக்கிறார்கள். விமரிசிக்கிறார்கள். எதிர்க்கிறார்கள். அத்தனைக்கும் ஒரே காரணம், டெசோ.   ஈழத்தமிழர்களின் பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு தமிழீழம் மட்டுமே. அதுதான் என்னுடைய நிறைவேறாத கனவு. அந்தத் தமிழீழத்தை அடைவதற்காகவே தமிழீழ ஆதரவாளர்...

போபால் , மணிபால், ஜோக்பால் , பசும்பால்!!

கெடக்கறதெல்லாம் கெடக்கட்டும் , கெழவியத் தூக்கி மனையில வை ன்னு ஊருப்பக்கம் ஒரு பழமொழி சொல்வாய்ங்க...அதுபோலத் தான் ஜோக்பாலும்...என்னவோ ஜோக்பால் வந்தா இந்தியா முழுக்க பாலாறும் , தேனாறும் ஓடும்னு ரீல் காட்டிகினு கீராரு அன்னா ஹசாரே. அவரு கொண்டு வார ஜோக்பால் நாட்டுக்கு நல்லது பண்ணுமோ என்னமோ தெரியாது....எந்த தனியொரு சட்டமுமே நாட்டுக்கு நல்லது பண்ணாது அப்படீங்கறது மட்டும் எல்லாருக்கும் நல்லா தெரியும்.. 'மம்மி' இருவது வருசமா சொத்துக்குவிப்பு வழக்கை எப்படி இழுத்தடிக்குதுன்னு எல்லாருக்கும் தெரியும்....என்ன பண்ண முடிஞ்சது சட்டத்தால்? ஒரு எழவும் பண்ண முடியலை..... எம் முப்பாட்டனாருக்கு துளு மொழி தான் தெரியும் , குத்தப்பத்திரிக்கையை அந்த மொழில தான் மொழிபெயர்க்கணும்னு ஒரு அப்பீலூ......அப்பாலிக்கா அதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக்குன்னு இன்னொரு அப்பீலு....அடப்பாவிகளா அது என்ன கலியாணப் பத்திரிக்கையா , முன்பக்கம் இங்கீலீசிலும் , பின்பக்கம் தமிழ்லயும் அச்சடிச்சிக்க? என்ன எழவு சார் இது?? மம்மி கேஸ் ஒரு சேம்பிள் தான்...இது மாதிரி லச்சம் கேஸு நாடு பூராவும் இருக்கு....'சுக்ராம்'ன்னு ஒருத்தர் , ...

உறவுகளற்ற பொழுது.

உறவுகளற்ற பொழுது. புழுதி படிந்த தார்ச்சாலைகள்.. தெருவில் ஹாரனுடனே கடக்கும் பேருந்துகள்.. கை காட்டாமல் திரும்பும் வாகன ஓட்டிகள் நீர்ப்பிடிப்புக்காக சாலையில் இருக்கும் குழிகள்.. பக்கத்துவீட்டுக்காரன் போட்டிருக்கும் குப்பங்குழி அன்றாடம் கடக்கும் சாலையோர சாக்கடைக்கால்வாய்... அதிகாலையில் சாலையில் கழிக்கும் பெரிசுகள் , சிறிசுகள்... ஆயிரம் பேரின் வியர்வை வாசம் நுகரும் டவுன்ஹால்.... இவையனைத்தையும் ஊரிலிருக்கும் அவஸ்தைகளாய் ஒவ்வொரு முறையும் நினைத்துப்புலம்பும் அவனுக்கு, ஊர்விட்டுக்கிளம்பும் அந்தப்பொழுதில் அடிவயிற்றில் அமிலம் போல் கிளம்பும் வேதனையுணர்வும்.... உறவுகளேதுமற்ற பொழுதின் ரணமும் பலமடங்கு.... காரணம்… நீ இங்கிருந்தபோதெல்லாம் விலகியிருக்க காரணங்கள் கிடைத்தன எனக்கு.. ஒருநாள் , வாடிக்கையாளருடன் இரவு விருந்து. மறுநாள் , மற்றொரு காரணம்…… இன்று….நீ இங்கில்லாத போதோ……. உன்னுடன் அடிக்கடி தொலைபேசவாவது காரணங்களைத் தேடுகிறேன்… ஒருநொடி நிகழ்வுகள். அருவி ‘ஜோ’ வென விழுந்து என் முதுகைத் தாக்கியது. பேயெனப் பெய்தது மழை…ஒதுங்க இடமின்றி நான்…! காற்று வேரையும் விழுதையும் ஒருங்கே அசைத்தது…. இருட...

வெறுமை நிறைந்த தனிமையும் , தனிமை நிறைந்த சனிக்கிழமையும்!

விட்டங்களும் , சுவர்களும் , ஜன்னல்களும் , திரைச்சிலைகளும் மட்டுமே சூழ அமைந்திருக்கும் , பார்க்கிறேனோ , பார்க்கவில்லையோ தற்போதைக்கு எனக்கு மிகவும் பிடித்த 'முரசு' சேனலில் 'நிலா காய்கிறது' என்ற 'இந்திரா படப்பாடல் ஒலிக்கின்ற வேளையில் இப்பதிவை எழுதத் தொடங்குகிறேன்... கடந்த பதிவினை நான் இவ்வலைப்பூவில் ஏற்றியது கடந்த ஜனவரி மாதம்......ஏன் இந்த இடைவெளி....? ஏதேனும் எழுத வேண்டுமென்று சப்ஜெக்ட் இல்லாமல் எழுத ஆரம்பிக்கும் எல்லோருக்கும் வரும் பிரச்சினை எனக்கும் வந்திருக்கிறது.... அட்டா காலை உணவு ஆகவில்லையே என்று தோன்றிற்று.......தட்டில் வேலைக்கார அம்மா கிச்சடி என்ற பெயரில் மஞ்சள் கலரில் செய்து வைத்திருந்தாலும் சாப்பிட முடிந்தது.... இட்ட அன்னம் கொஞ்சம் முன்னப்பின்ன இருந்தாலும் யாருமற்ற சூழலில் அன்னமிடமாவது அவர் இருக்கிறார் , அதனால் பிழைத்தேன். முரசு தொலைக்காட்சியில் , என்னுயிர்த்தோழன் படப்பாட்டு ஓடிக்கொண்டிருக்கிறது....மாற்றினேன்....கலைஞர் தொல்லைக்காட்சியில் , அனேகமாக ஆயிரமாவது முறை 'ஆனந்த தாண்டவம்' என்ற மொக்கைத் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது.... வெட்டுக்கிளியோ எ...

இந்தியாவும் சீனாவும் - ஒரு ஒப்பீடு..!

நிறைய பத்திரிக்கைகளும் , பொருளாதார வல்லுநர்களும் அடிக்கடி இப்படிச் சொல்வதுண்டு. இந்த நூற்றாண்டு இந்தியா மற்றும் சீனாவின் நூற்றாண்டு என்று. வருங்காலத்தில் இந்தியாவும் , சீனாவுமே உலக வல்லரசுகளாகப் போகின்றன என்று. நிலைமை என்ன? இந்தியாவிற்கோ , சீனாவிற்கோ அதற்கான தகுதிகள் இருக்கின்றனவா என்று பார்ப்பதற்கான முதல் படி இந்தியாவும் சீனாவும் ஒப்பீட்டளவில் எப்படி இருக்கின்றன என்பதேயாகும். ஆய்வுகளை அரசியல், பொருளாதார , இராணுவ , இராஜதந்திர , அண்டை நாடுகளுடனேயான உறவுகளினூடாக அணுகலாம். பொருளாதார ஒப்பீட்டில் இந்தியாவும் , சீனாவும் எப்படி இருக்கின்றன என்பதை இப்பதிவில் பார்ப்போம். மற்றைய இராணுவ , இராஜதந்திர உறவுகளை பிரிதொரு சமயம் பார்க்கலாம். உலகின் பெரும்பான்மையான மக்களைக் கொண்ட இருநாடுகளும் உலகப்பொருளாதாரத்தில் பெருமளவு பங்கு வகிக்கின்றமை தவிர்க்க இயலாததே.  இந்தியாவின் தோராய ஜி.டி.பி ( GROSS DOMESTIC PRODUCT) மதிப்பு ( ஜிடிபி என்பது ஒட்டுமொத்த நாட்டின் உற்பத்தி மதிப்பு) 3.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். ( எத்துணை சைபர் டிரில்லியனுக்கு என்ற ஆய்வை கொஞ்சம் அப்புறமா பாக்கலாம் சார். ) , அதே ச...

தொழில்.

காணக் கிடைக்காத தேசம் ஒன்று போய் , இங்கே காணக்கிடைக்காத பொருளையொன்றை வாங்கி , உள்ளூரில் விற்றுக்காசு பார்க்க உத்தேசித்திருந்தான் கவி. காணக்கிடைக்காத தேசமெது.?  அங்கே உள்ளூரில் போனியாகும் உயர்தர பொருளெது? அப்பொருளை அங்கே சென்று வாங்கி வர ஆகும் செலவையும் , அதன் மீது வைத்துவிற்கும் குறைந்தபட்ச லாபத்தையும் மீறி அந்தப்பொருள் விலை போகுமா? போனால் லாபம் உண்டு. விலைபோகாவிட்டால் வாங்கிய விலைக்கேனும் விற்று நஷ்டமில்லாமல் தப்பித்துக்கொள்ளலாம். அட அடக்கவிலைக்கேனும் யாரும் வாங்கிட மறுத்தால் என்ன செய்ய? நஷ்டம் தான்.   அதில் குறைந்தபட்ச நஷ்டத்தை நாம் எப்படி சமாளிப்பது? இருக்கிற பணத்துக்கெல்லாம் பொருளை வாங்கி விட்டால் நஷ்டம் ஏற்படும்போது “புவ்வா”விற்கு என்ன செய்வது? குழம்பிப் போனான் கவி. சரி , தெரிந்த நண்பர்களிடம் கேட்கலாமென்று முடிவு செய்தான். ஒருத்தன் சொன்னான். “ மாப்ளே , இன்னிக்கு லெவல்ல தனியா தொழில் தொடங்கி ஆறே மாசத்துல அம்பானி ஆனவன் ஆயிரக்கணக்கில…..தெம்பா செய்டா” இன்னொருத்தன் சொன்னான்…. ” டேய் ..இன்னிக்கெல்லாம் , வேலைக்கு போய் சோத்துக்கு ரெடி பண்ணிக்கிட்டு பார்ட்-டைமா ஏதாச்ச...

என்னைப் பாதித்த சென்னை.

"செ ன்னை" என்று சொன்னாலே என் மனதிற்குள் இனம் புரியாத ஒரு கலக்கம் எப்போதுமே இருப்பதுண்டு.ஏன்??? அதற்கான முதற்காரணம் , ரயில்வே ஸ்டேஷனில் இருந்து துவங்கி விடுகிறது. பொதுவாகவே , நான் கொஞ்சம் மென்மையானவன்...மென்மையானவன் என்று சொல்வதை விட கூச்ச  சுபாவத்துக்காரன் என்றும் வைத்துக்கொள்ளலாம். பொது இடத்தில் அதிர்ந்து கூட பேசுவதில் விருப்பமற்றவன்.  அப்படிப்பட்ட நான் , சென்னையின் கூலிகள் அதட்டும் அதட்டலுக்கு கொஞ்சம் அதிர்ந்துதான் போவேன்......எனது சென்னை அனுபவங்கள் சில உங்கள் பார்வைக்கு....  *** சி ல வருடங்களுக்கு முன் , சென்னைக்கு வந்திருந்தேன். எனது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு சற்றேறக்குறைய 8 மணி நேர இடைவெளி இருந்தது.... என்ன செய்வதென யோசித்து பின்பு "க்ளோக்" ரூமில் ( பொருட்கள் பாதுகாக்கும் அறை) எனது சூட்கேஸினை வைத்துப்பூட்டினேன்.. எனக்கு நன்றாக நினைவிருந்தது அப்போது அதற்கான பணத்தைக் கொடுத்ததும் , அவர் சில்லறையை திருப்பிக்கொடுத்ததும்.....  பின்பு வெளியே போய்விட்டு , விமானநிலையத்திற்கு டாக்ஸி எடுத்துக்கொண்டு பொருட்களை எடுக்க வந்தேன்....எடுத்துக்கொடுத்து விட்டு ( அதே...

காவ்யா

ரயிலில் காற்று வருவதும் போவதுமாய் இருந்தது…கண்ணாடியை மேலும் , கீழுமாய் தூக்கிவிட்டுக்கொண்டிருந்த என்னை ஒரு தினுசாய்ப் பார்த்தார் அந்தப் பெரிசு…என்ன நினைத்தாரோ எதிர் சீட்டில் போய் உட்கார்ந்து கொண்டார். வாழ்க்கைத் துணை சரியில்லாத போது , இது போன்று அவ்வப்போது கிடைக்கும் வெளியூர் பயணங்களும் , இரயில் பயணங்களுமே நம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்ள உதவும்.    எந்நேரமும் , அந்தக் காலத்து “வால்வு” ரேடியோ போலக் கதறிக்கொண்டிருக்கும் மனைவி அமைவதெல்லாம் , இறைவன் கொடுத்த சாபம் என்பதை உணர்ந்தவன் நான்…நீங்கள் எப்படி? நினைவுகள் எங்கேயோ இருந்தன……..  மனசைக் கொஞ்சம் இறுக்கப்பிடித்துக் கொள்ளவில்லை யென்றால் அது பாட்டுக்கு எங்கெங்கோ நம்மைக் கொண்டு சென்றுவிடும்.. அப்படித்தான் அந்த இரயில் பயணமும் என் நினைவுகளை மீட்டுக்கொண்டிருந்தது. எல்லாம் கடந்த கிலோ மீட்டரில் சுவரில் தென்பட்ட “காவ்யா” ஜூவல்லரி விளம்பரத்தில் ஆரம்பித்தது. *** காவ்யா. அந்த நாளில் என்னைச் சொக்க வைத்த பெயர். பச்சையாக சொல்லப்போனால் , என்னைச் சொக்க வைத்த பிகர். 41 A கொஞ்சம் ஆபிஸுக்கு லேட்டாகப் போனாலும் , லேட்டஸ்டா போவதாக நண்பர்களி...

விதி

சமயங்களில் விதி பற்றிய நினைப்பு சிலவும் வந்து வந்து போவதுண்டு. எதற்கெடுத்தாலும் அவன் விதி அப்படி ஆயிட்டான் என்று சொல்லும் என் அம்மத்தாக் கிளவி கூட அதற்கான காரணமாய் இருக்கலாம்.  விதிமுறை , விதிகள் எனப்படும் சட்டதிட்டங்களுக்கு உட்படும் முறையான "விதி" யினைப் பற்றி நாம் பேசவில்லை. காலம் வகுத்த வழி , கடவுள் விடுத்த விதி என்று திண்ணையில் வெத்தலை பாக்கு இடித்துக்கொண்டே ( உடனே பாரதிராஜாவின் சினிமாத்திண்ணைக்கு உங்கள் கவனம் போனால் நாம் பொறுப்பில்லை..) என்று சொல்லும் பெரிசுகள் இருக்கிறார்களே அப்படிப்பட்ட "விதி" தான் நாம் பேசுவது. சாலைகளில் , தெருக்களில் வாழைப்பழத்தைச் சாப்பிட்டு விட்டு தோலை தூக்கி எறிந்து போவதன் மூலம் வழுக்கி விழுந்த பலரது கதையும் விதி என்றால் , தோலைத் தூக்கி எறிந்து போவது எதில் சேர்த்தி?.. முழங்கால் உயரத்திற்கு  அல்லாது வேகத்தடைகளை ( தமிழில் சொல்லுவதானால். ஸ்பீடு ப்ரேக்கர்களை) போட்டதன் மூலம் எங்களது தாத்தாவின் தம்பியினுடைய பேரனின் பிள்ளையொன்று டி.வி.எஸ். பிப்டி மோட்டார் சைக்கிளில் மரணித்ததே , அதற்குப் பெயர் "விதி" என்றால் , அந்த வேகத்தடையை அப்பட...

மீள்தல்…

முன்பு மதிபாலா பக்கங்கள் என்ற தலைப்பில் இன்னொரு வலைப்பூவில் பெரும்பாலும் அரசியலைப் பற்றி அலசிக்கொண்டிருந்தேன்......சலிப்புத் தட்டியதாலும் , நேரமின்மையாலும் வலைப்பூக்களிலிருந்து அனேகமாக ஒரு வருடம் விலகியே இருந்தேன்.... தற்போதைக்கு , உணர்வுகளுக்கு வடிகாலென எப்போதாவது எழுதலாம் என தீர்மானித்திருக்கிறேன்.... இவ்வலைப்பூவை "எழுதியதும் , டைப்பியதுமென பெயரிட்டு மீள்கிறேன்...! இனி அவ்வப்போது சந்திப்போம்…நன்றி.! *** வாழ்வில் நாம் பல பேரைச் சந்திக்கிறோம். சிலரை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்கிறோம் , பலரை எப்போதாவது…. வாழ்வின் சில நொடிகள் மட்டுமே வந்து போகும் பலரைக் கூட எப்போதாவது பார்த்த நினைப்புத் தோன்றும் எனக்கு….மற்றபடி இந்த அவசர உலகில் காலம் அனைத்தையும் கடந்து போகச் செய்கிறது….நாம் கடந்து போன முகங்களையும் தான்.. இது நம்மைத் தூக்கி வளர்த்த ஆத்தாவாக இருக்கட்டும் , இல்லை ஆயாவாக இருக்கட்டும்…சிறுவயதில் வீட்டுவேலை செய்யும் வேலைக்காரியிலிருந்து , காரிய நிமித்தமாக வெகு தொலைவானதொரு ஊரில் பார்த்தவர்களாக இருக்கட்டும்… பார்த்தவர்களென்றில்லை ,கேள்விப்பட்டவர்களும் , வாசித்தவர்களும் அதி...

அது ஒரு அழகிய நிலாக்காலம்..!!!!

இன்று கோட் சூட் அணிந்து , வியாபார நிமித்தமாக , சற்றே சிதருண்ட காபியையும் டிஷ்யூவால் துடைத்து , நுனி நாக்கு ஆங்கிலம் பேசி ஊரை ஏமாற்றுகின்ற சமயத்தில், விலகிய உடுப்புக்களை சரி செய்யும் போதெல்லாம் என்னையும் அறியாமல் அந்நாளைய நினைவில் மெல்லியதாக சிரித்துக் கொள்வேன். பழைய நினைவுகளை நினைத்து...!!! அத்தகைய நிகழ்வுகளில் ஒன்று......!!! அரசியல் , பதிவரசியல் , நுண்ணரசியல் இவைகளைத் தள்ளி வைத்துக் கொண்டு ஒரு பின் நோக்கிய பயணம் , என் வாழ்வில் - சற்றேறக்குறைய 15 முதல் 20 ஆண்டுகளுக்கு பின்னே பயணிக்கிறேன்...!! அது என் ஆறாம் வகுப்பு என்று நினைக்கிறேன்......எங்கள் கிராமம் கோவை யிலிருந்து ஒரு இருபது கிலோ மீட்டர் தள்ளி நகரத்துக்கும் சேராமல் , கிராமத்துக்கும் சேராமல் நகர்புரத்தின் சிற்சில வசதிகளோடு இருந்த கிராமம்...."கலங்கல்" - கேள்விப்பட்டிருக்கிறீர்களா ??? தெரியாதவர்களுக்கு நடிகர் சிவக்குமார் சிறுவயதில் வாழ்ந்த ஊர் , ஜி.டி நாயுடு பிறந்த ஊர் என்றால் தெரியும்...!! அப்படியும் தெரியவில்லையா ? ரொம்ப ரிஸ்க் எடுக்க வேணாம் , மதிபாலா பிறந்த ஊர்...!!!ஹிஹிஹி.. என் வீட்டிற்கு அருகே பெருமாள் கோயில் ஒன்று இரு...