Skip to main content

தொழில்.

காணக் கிடைக்காத தேசம் ஒன்று போய் , இங்கே காணக்கிடைக்காத பொருளையொன்றை வாங்கி , உள்ளூரில் விற்றுக்காசு பார்க்க உத்தேசித்திருந்தான் கவி.

காணக்கிடைக்காத தேசமெது.?  அங்கே உள்ளூரில் போனியாகும் உயர்தர பொருளெது? அப்பொருளை அங்கே சென்று வாங்கி வர ஆகும் செலவையும் , அதன் மீது வைத்துவிற்கும் குறைந்தபட்ச லாபத்தையும் மீறி அந்தப்பொருள் விலை போகுமா? போனால் லாபம் உண்டு.
விலைபோகாவிட்டால் வாங்கிய விலைக்கேனும் விற்று நஷ்டமில்லாமல் தப்பித்துக்கொள்ளலாம். அட அடக்கவிலைக்கேனும் யாரும் வாங்கிட மறுத்தால் என்ன செய்ய? நஷ்டம் தான்.  

அதில் குறைந்தபட்ச நஷ்டத்தை நாம் எப்படி சமாளிப்பது? இருக்கிற பணத்துக்கெல்லாம் பொருளை வாங்கி விட்டால் நஷ்டம் ஏற்படும்போது “புவ்வா”விற்கு என்ன செய்வது? குழம்பிப் போனான் கவி.

சரி , தெரிந்த நண்பர்களிடம் கேட்கலாமென்று முடிவு செய்தான்.
ஒருத்தன் சொன்னான்.

“ மாப்ளே , இன்னிக்கு லெவல்ல தனியா தொழில் தொடங்கி ஆறே மாசத்துல அம்பானி ஆனவன் ஆயிரக்கணக்கில…..தெம்பா செய்டா”

இன்னொருத்தன் சொன்னான்….

” டேய் ..இன்னிக்கெல்லாம் , வேலைக்கு போய் சோத்துக்கு ரெடி பண்ணிக்கிட்டு பார்ட்-டைமா ஏதாச்சும் கடை கிடை வெக்கலாம்..அத வுட்டுட்டு வேலையை விட்டு நின்னு புதுசா தொழில் பண்ணுறேன்றியே? இதெல்லாம் நடக்குற காரியமா? “

இரண்டையும் கேட்டு குழம்பிப் போய் இன்னொருவனிடமும் கேட்டான் கவி.

“ டேய் , கடை வெக்குறது அது இதுன்னு எறங்கலாமா? தேவையில்லாம டென்ஷன்… பேசாம வேலையப் பாரு…பி.எப் புடிக்குற விகிதத்தை அதிகம் பண்ணு….. மியுச்சுவல் பண்ட் லயோ , யூ லிப்லயோ போடு…சும்மா அள்ளிரலாம். வேணும்னா சொல்லு , என் ப்ரண்ட் தான் ஏஜெண்டா இருக்கான்.சூப்பரான பண்ட்ஸ் புடிச்சி தருவான். அஞ்சே வருசத்தில பல கோடீஸ்வரன்களை உருவாக்கிட்டான்னா பாரேன்”

அட அஞ்சு வருசமா , ஏஜெண்டா இருக்குற உம் ப்ரெண்ட் ஏன் கோடிஸ்வரன் ஆகாம இன்னும் பெயிண்டு போன டிவிஎஸ் லே வாறான்னு கேட்கத்துடிச்சாலும் அடக்கிகிட்டான் “கவி”.

இறுதியாக இன்னொரு ஆத்ம ஸ்நேகிதனிடம் விசாரிக்கலாம் என்று முடிவெடுத்தான். அவனும் அவன் நண்பனும் , தெருமுக்கு டீக்கடையில் நலம் விசாரித்துக்கொண்டார்கள்.

“ கவி…நல்ல யோசனைதான். ஆனா , அதுல நெறையா சிக்கல் இருக்கு…..கைல இருக்கற காசையெல்லாம் பொருளை வாங்க முடக்கிட்டா   நீ என்ன பண்ணுவே. அதனால உன் வருமானத்தை முதல்ல பெருக்கிக்க”

“அதுக்காகத்தான் தொழில் பண்ணனும் டா” என்றான் கவி.

“காசே இல்லாம தொழில் பண்ண ஆயிரம் வழி இருக்கு மாப்ளே. என்னப் பாரு. 2002 ல ஒரு ஸ்டார்ட்டர் கிட் ஐயாயிரத்துச் சொச்சம் ரூவாய்க்கு வாங்கினதோட செரி…இன்னிக்கு நம்ம நெட்வொர்க் எங்கியோ போய்டுச்சி. பாரு ,நான் கால் ஆட்டிக்கிட்டே உக்கார்ந்துருக்கேன். எனக்காக எவனோ வேலை பாக்குறான். மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் புரிஞ்சவனுக்கு வரம் டா , புரியாதவனுக்கு தான் தப்பா தெரியும்.”

கொஞ்சமாக கவிக்கும் ஆசை வர ஆரம்பித்தது. ஆர்வத்தை புரிந்து கொண்ட ஆத்ம ஸ்நேகிதன் “ஆழ”மாக உழ ஆரம்பித்தான்.

“ உன்னைப் போல ஆக்டிவ் ஆன மெம்பர் ஒருத்தன் கண்டிப்பா நம்ம நெட்வொர்க்குக்கு வேணும் டா. நீ என்ன சொல்ற…..வாரத்துல ஒரு அரை மணி நேரம் டைம் ஸ்பெண்ட் பண்ணினா போதும்.. பாரு , என் நெட்வொர்க்ல நாலாவதா இருக்க ஒருத்தன் மாசம் இருவத்தஞ்சாயிரம் லம்ப்பா சம்பாரிக்கிறான்.”

“சரிடா , யோசிக்கிறேன்…” என்றான் கவி.

கிளம்பும் போது “ டீக்காசு “ கொடுக்க முயன்ற கவியை  தடுத்த நண்பன் ,
“அண்ணே…அக்கவுண்ட்ல எழுதிக்கிங்க"…..என்றான்.

இவர்களின் அபார முதலீட்டு  ஆலோசனையை சற்றும் பொருட்படுத்தாத “கல்லாக்காரன் “சொன்னான்.

“ அண்ணே  , முதலாளி அக்கவுண்ட்ல ஏதும் கொடுக்க வேணாம்னுட்டார்ண்ணே. ஏற்கெனவே இருக்குற நூத்து முப்பது ரூவா” பாக்கியை செட்டில் செஞ்ச பிறகு பாத்துக்கலாம்னுட்டார். “
சத்தமில்லாமல் டீக்காசை கொடுத்துவிட்டு மனதுக்குள் “கல்லாக்” காரனை பாராட்டி விட்டு நூலிழையில் “எஸ்கேப்” ஆனான் கவி.

நண்பர்களிடம் விசாரித்து அவன் தெளிந்தது ஒரே ஒரு விடயம் மட்டுமே….அது “ பொத்தாம் பொதுவாக யாரிடமும் ஆலோசனை கேட்பது   குழப்பத்தையே” அதிகரிக்கும் என்பதுதான் அது.

தைரியமாக முடிவெடுத்து , சரி,தவறுகளை எடை போட்டு வைத்திருந்த காசில் ஒருபகுதியை மட்டுமே முதலிட்டு தொழிலை ஆரம்பித்தான். நாளடைவில் பல்கிப் பெருகியது வியாபாரம். தொழிலதிபர் ஆனான்.

என்ன , இன்னமும் கூட ஜெயித்த அவன் கதையை உதாரணித்துக்காட்ட நண்பர்கள் தான் தயாரில்லை. மியுச்சுவல் ப்ண்ட் யோசனைகளையும் , மல்ட்டிலெவல் யோசனைகளுமே இன்னமும் பெருகியிருந்தன.

Comments

Popular posts from this blog

பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது!

சீமான்களின் சபையினிலேயே , கடிதம் எழுதி எழுதிக் களைத்துப்போனதோர் கிழட்டுச் சிங்கம்.....முன்னாலுக்கும் முன்னால் அவர் கொண்ட தமிழ்ப்பற்று.....இன்னாளில் அது தமது மக்கட்பற்றாய் மாறிப்போனதொரு சோகம். ஏதோவொரு புண்ணியத்தில், எவரோ செய்த வரலாற்றுத் தவறால் , கொள்கை , தொலைநோக்கு , மக்கட்பற்று இவை பற்றிய சிந்தையேதுமின்றி அரசியலில் விபத்தாய் விளைந்த கொடநாட்டு ஈழத்தாய்....தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தமிழர் பற்றியும் , தமிழர் அரசியல் பற்றியும் எழுதி வைத்துப் பேசும் செல்வி யவர்.........இன்னமும் அவர் சேலை பிடித்துத்திரியும் வீணர் கூட்டம்.! கூட்டணிக்கேற்றப்படி கொள்கையை மாற்றிக்கொள்ளும் மருத்துவப் படையாச்சி.........வீரமிகு வன்னியகுலத்திலே வந்துதித்த சந்தர்ப்பவாதச் சாக்கடை....சமரசமற்ற கொள்கை அரசியலை சந்தர்ப்பவாதச் சாக்கடைக்குள் தள்ளிய பெருமைக்குரிய மருத்துவர் தமிழ்க்குடிதாங்காத தமிழ்க்குடிதாங்கி! யாரை எதற்காக எதிர்த்து அரசியல் செய்யவேண்டுமே அவர்களோடே தம் தேவைக்குதந்த படி கூட்டு வைத்துக்கொண்டு ஈழத்திற்க்காய் எந்நேரமும் பாடுபடும் திரு.வைகோ அவர்கள்....அவரும் சிறை சென்றார்.

நண்பர் 'டோண்டு' ராகவன்...

உயிரோடு இருக்கும்வரை அறிக்கைகளால் அர்சித்து எதிர்ப்பரசியல் நடாத்தி செத்துபோன பிறகு ஆருயிர் நண்பர் என்று அழைத்துக்கொள்ளும் எல்லா அரசியல்வாதிகளையும் போலவே நான். எனக்கும் மறைந்த உயர்திரு 'டோண்டு' ராகவன் அவர்களுக்குமான பரிச்சயம் அவ்வளவொன்றும் அதிகமில்லைதான். பதிவுலகையும் , பர்ஸனல் லைப்பையும் பிரித்து வைத்துக்கொள்ளும் எண்ணமுடைய நான் , டோண்டு மட்டுமல்ல மற்றபல பதிவுலக நண்பர்களுடனும் கூட தனிப்பட்ட தொடர்புகளை வைத்துக்கொண்டதில்லை... இருந்தாலும் , அவ்வப்போது பதிவுலக பின்னூட்டங்களின்பாலே தொடர்ந்துகொண்டிருந்த தொடர்பு , எனது 'போலி டோண்டு' பற்றிய கட்டுரையொன்றிலேயே  தீவிர விவாதமாக மாறியது.. ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீதோ இல்லை அவர்தம் பிற்போக்கான கருத்துக்கள் மீதோ இருந்திருக்கலாம். கடினமாக ஓரிரு முறை பேசியிருக்கலாம்.. அத்தனையும் தாண்டி அவர் மிக நல்ல மனிதர் , கடும் உழைப்பாளி என்பதை அவரது பதிவுலகம் மூலமாக அறிந்தவனெனினும் உறுதியாக கூறவியலும்.. அத்தகைய நல்ல மனிதரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் , நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்... வருத்தங்கள

எஸ்.எஸ்.பொன்முடி - மனிதருள் மாணிக்கம்.

எஸ்.எஸ்.பொன்முடி , கொங்குச்சீமையிலே குறிப்பாக பல்லடம் , சூலூர் வட்டாரத்தில் தெரியாதவர்கள் சொற்பமே. எஸ்.எஸ். பொன்முடி அவர்கள் மட்டுமல்ல , அவர்களது குடும்பமே சூலூரில் பழம்பெருமை மிக்க குடும்பம். காலங்காலமாக அவர்களது குடும்பத்தினரே சூலூரின் அனைத்து தேர்தல்களிலும் வென்றதும் , வெல்வதும் வரலாறு. பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவராயினும் மாற்றுக்கட்சியினராலும் மதிக்கப்படும் சில மனிதர்களில் எஸ்.எஸ் பொன்முடியும் ஒருவர். அவருக்கும் , எனக்குமான பரிச்சயமொன்றும் அவ்வளவு அதிகமில்லைதான். அப்போது எனக்கு ஒரு பத்திலிருந்து , பதினைந்து வயதிருந்திருக்கலாம். கலங்கலில் கவுன்சிலர் தங்கவேலு சர்வ அதிகாரமும் பொருந்தியவராய் வலம் வந்துகொண்டிருந்தார். அவர் எஸ்.எஸ்.பொன்முடியின் வலக்கரம். ஊருக்கு மேற்கே ஜல்லிக்குழி என்ற மனிதர்கள் உபயோகப்படுத்த முடியாத , இயலாத பகுதி ஒன்றிருந்தது.....அப்போது கழகம் ஆட்சியிலிருந்தது + பொன்முடி எம்.எல்.ஏவாக இருந்தார். கட்சிக்காரர்கள் , குறிப்பாக ஒடுக்கப்பட்ட , மிக பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் கேட்டுக்கொண்டதற்காக , மிகுந்த பிரயாசைப்பட்டு தங்கவேல் மற்றும் எஸ்.எஸ்.பொன்முடி அவ