Skip to main content

Posts

Showing posts from August, 2010

வளவு.

  அது தேர்தல் நேரம்.. சட்டசபைத்தேர்தலோ , நாடாளுமன்றத் தேர்தலோ அல்ல. உள்ளூராட்சித் தேர்தல். பொதுவாக , சட்டசபை,நாடாளுமன்றத் தேர்தலைவிட பரபரப்பானது உள்ளூராட்சித் தேர்தல்.  காரணம் , அச்சமயத்தில் தான் எப்போதுமே தேர்தலில் ஜெயிக்கும் நட்ராஜுக்கவுண்டரும் , தோத்துப்போகும் இன்னபலரும் உள்ளூர் அரசியல் தலைமைகளாக ஜொலிக்கும் சொற்ப காலம்.  டீக்கடைகள் கட்சிக்கலரற்ற வேட்டிகளுடன் திரியும் தொண்டர்களால் நிரம்பித்திளைக்கும்.... உருளைக்கிழங்கு போண்டாவொன்றையும் , ஒரு லைட் டீ ஒன்றையுமே அடித்துக்கொண்டு , இரவு நேர குவாட்டர் கோட்டாவுக்காக காத்திருக்கும் நட்ராஜுக் கவுண்டரின் தொண்டரடிப் பொடிகள் அடிக்கும் லோலாயும் , தப்புக்கொட்டலும் , மைக்கில் அதிரடியான பொங்கு தமிழ் வசனங்களைப் பொழிவதிலும் ஊருக்குள் திருவிழாவோ என்ற வண்ணம் ஜே.ஜே. என்று தான் காத்திருக்கும்.. எங்கள் "வளவு"ம் கூட அப்படித்தான்.......குடிசைகளாலும் , ஊரோரம் ஓடும் சாக்கடையை வீடாகக்கொண்ட ஈ , கொசு முதலான பறப்பனவைகளையும் , எங்களையும் ஒருங்கே கொண்ட எங்கள் "வளவு" என்று பெருமை கொள்ளலாம். என்ன ஒரே வித்தியாசம்..... கொசுக்களுக்கும் , ஈக்களு

என்னைப் பாதித்த சென்னை.

"செ ன்னை" என்று சொன்னாலே என் மனதிற்குள் இனம் புரியாத ஒரு கலக்கம் எப்போதுமே இருப்பதுண்டு.ஏன்??? அதற்கான முதற்காரணம் , ரயில்வே ஸ்டேஷனில் இருந்து துவங்கி விடுகிறது. பொதுவாகவே , நான் கொஞ்சம் மென்மையானவன்...மென்மையானவன் என்று சொல்வதை விட கூச்ச  சுபாவத்துக்காரன் என்றும் வைத்துக்கொள்ளலாம். பொது இடத்தில் அதிர்ந்து கூட பேசுவதில் விருப்பமற்றவன்.  அப்படிப்பட்ட நான் , சென்னையின் கூலிகள் அதட்டும் அதட்டலுக்கு கொஞ்சம் அதிர்ந்துதான் போவேன்......எனது சென்னை அனுபவங்கள் சில உங்கள் பார்வைக்கு....  *** சி ல வருடங்களுக்கு முன் , சென்னைக்கு வந்திருந்தேன். எனது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு சற்றேறக்குறைய 8 மணி நேர இடைவெளி இருந்தது.... என்ன செய்வதென யோசித்து பின்பு "க்ளோக்" ரூமில் ( பொருட்கள் பாதுகாக்கும் அறை) எனது சூட்கேஸினை வைத்துப்பூட்டினேன்.. எனக்கு நன்றாக நினைவிருந்தது அப்போது அதற்கான பணத்தைக் கொடுத்ததும் , அவர் சில்லறையை திருப்பிக்கொடுத்ததும்.....  பின்பு வெளியே போய்விட்டு , விமானநிலையத்திற்கு டாக்ஸி எடுத்துக்கொண்டு பொருட்களை எடுக்க வந்தேன்....எடுத்துக்கொடுத்து விட்டு ( அதே

காவ்யா

ரயிலில் காற்று வருவதும் போவதுமாய் இருந்தது…கண்ணாடியை மேலும் , கீழுமாய் தூக்கிவிட்டுக்கொண்டிருந்த என்னை ஒரு தினுசாய்ப் பார்த்தார் அந்தப் பெரிசு…என்ன நினைத்தாரோ எதிர் சீட்டில் போய் உட்கார்ந்து கொண்டார். வாழ்க்கைத் துணை சரியில்லாத போது , இது போன்று அவ்வப்போது கிடைக்கும் வெளியூர் பயணங்களும் , இரயில் பயணங்களுமே நம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்ள உதவும்.    எந்நேரமும் , அந்தக் காலத்து “வால்வு” ரேடியோ போலக் கதறிக்கொண்டிருக்கும் மனைவி அமைவதெல்லாம் , இறைவன் கொடுத்த சாபம் என்பதை உணர்ந்தவன் நான்…நீங்கள் எப்படி? நினைவுகள் எங்கேயோ இருந்தன……..  மனசைக் கொஞ்சம் இறுக்கப்பிடித்துக் கொள்ளவில்லை யென்றால் அது பாட்டுக்கு எங்கெங்கோ நம்மைக் கொண்டு சென்றுவிடும்.. அப்படித்தான் அந்த இரயில் பயணமும் என் நினைவுகளை மீட்டுக்கொண்டிருந்தது. எல்லாம் கடந்த கிலோ மீட்டரில் சுவரில் தென்பட்ட “காவ்யா” ஜூவல்லரி விளம்பரத்தில் ஆரம்பித்தது. *** காவ்யா. அந்த நாளில் என்னைச் சொக்க வைத்த பெயர். பச்சையாக சொல்லப்போனால் , என்னைச் சொக்க வைத்த பிகர். 41 A கொஞ்சம் ஆபிஸுக்கு லேட்டாகப் போனாலும் , லேட்டஸ்டா போவதாக நண்பர்களிடம் சொல்லிக்கொ

விதி

சமயங்களில் விதி பற்றிய நினைப்பு சிலவும் வந்து வந்து போவதுண்டு. எதற்கெடுத்தாலும் அவன் விதி அப்படி ஆயிட்டான் என்று சொல்லும் என் அம்மத்தாக் கிளவி கூட அதற்கான காரணமாய் இருக்கலாம்.  விதிமுறை , விதிகள் எனப்படும் சட்டதிட்டங்களுக்கு உட்படும் முறையான "விதி" யினைப் பற்றி நாம் பேசவில்லை. காலம் வகுத்த வழி , கடவுள் விடுத்த விதி என்று திண்ணையில் வெத்தலை பாக்கு இடித்துக்கொண்டே ( உடனே பாரதிராஜாவின் சினிமாத்திண்ணைக்கு உங்கள் கவனம் போனால் நாம் பொறுப்பில்லை..) என்று சொல்லும் பெரிசுகள் இருக்கிறார்களே அப்படிப்பட்ட "விதி" தான் நாம் பேசுவது. சாலைகளில் , தெருக்களில் வாழைப்பழத்தைச் சாப்பிட்டு விட்டு தோலை தூக்கி எறிந்து போவதன் மூலம் வழுக்கி விழுந்த பலரது கதையும் விதி என்றால் , தோலைத் தூக்கி எறிந்து போவது எதில் சேர்த்தி?.. முழங்கால் உயரத்திற்கு  அல்லாது வேகத்தடைகளை ( தமிழில் சொல்லுவதானால். ஸ்பீடு ப்ரேக்கர்களை) போட்டதன் மூலம் எங்களது தாத்தாவின் தம்பியினுடைய பேரனின் பிள்ளையொன்று டி.வி.எஸ். பிப்டி மோட்டார் சைக்கிளில் மரணித்ததே , அதற்குப் பெயர் "விதி" என்றால் , அந்த வேகத்தடையை அப்பட