Skip to main content

Posts

Showing posts with the label அழகிய நிலாக்காலம்

மாரியாத்தா நோம்பி , பகுதி 1

முந்தாநேத்து , எங்கூருக்கு போன்ல பேசீட்டிருக்கும் போது வாற வைகாசி மாசம் , நோம்பி சாட்டுவாங்க போலிருக்குடான்னு எங்கம்மா சொல்லுச்சிங்களா? உடனே தான் காவகத்துக்கு வந்திச்சி , நாம எப்பவோ ஒருக்கா "மாரியாத்தா" நோம்பி பத்தி எழுத ஆரம்பிச்சி பாதீலேயே நிறுத்திப்போட்டது.. அதை இப்ப தொடரலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்...தா.....................................................மததிற்கு ( ஆமாம் , மொத பதுதிய எழுதுன நாள் அக்டோபர் 2008)  மன்னித்தருள்க. இப்பதிவு முன்பே எழுதிய பதிவின் மீளாக்கமே , தொடர்ச்சியினை வரும் நாட்களில் படித்து மகிழ்க / திட்டுக / வசவுக/ ரசிக்க இன்னபல..இன்னபல. நன்றி  ( மீள்பதிவிற்கான காரணம் , தற்பொழுது வலைப்பூ முகவரி மாற்றப்பட்டுள்ளது.)  மாரியாத்தா சாமி , அலங்காரத்தோட!- புகைப்படம் நன்றி : இளவஞ்சி! எங்கூரு மாரியாத்தா கோயிலு ஊருக்குத் தெக்கால எங்கூட்டுக்கு பொறகால  இருக்குதுங்க. நடுவால மாரியாத்தா கோயிலு , கெழவறம் ப்ளேக்கி மாரியாத்தா கோயிலு , மேவறம் மாகாளியாத்தா கோயிலு….மாரியாத்தா கோயுலுக்கும் மாகாளியாத்தா கோயுலுக்கும் நடுவால வீரமாச்சியாத்தா கோயுலு….. வருசமொருக்க...

அது ஒரு அழகிய நிலாக்காலம்..!!!!

இன்று கோட் சூட் அணிந்து , வியாபார நிமித்தமாக , சற்றே சிதருண்ட காபியையும் டிஷ்யூவால் துடைத்து , நுனி நாக்கு ஆங்கிலம் பேசி ஊரை ஏமாற்றுகின்ற சமயத்தில், விலகிய உடுப்புக்களை சரி செய்யும் போதெல்லாம் என்னையும் அறியாமல் அந்நாளைய நினைவில் மெல்லியதாக சிரித்துக் கொள்வேன். பழைய நினைவுகளை நினைத்து...!!! அத்தகைய நிகழ்வுகளில் ஒன்று......!!! அரசியல் , பதிவரசியல் , நுண்ணரசியல் இவைகளைத் தள்ளி வைத்துக் கொண்டு ஒரு பின் நோக்கிய பயணம் , என் வாழ்வில் - சற்றேறக்குறைய 15 முதல் 20 ஆண்டுகளுக்கு பின்னே பயணிக்கிறேன்...!! அது என் ஆறாம் வகுப்பு என்று நினைக்கிறேன்......எங்கள் கிராமம் கோவை யிலிருந்து ஒரு இருபது கிலோ மீட்டர் தள்ளி நகரத்துக்கும் சேராமல் , கிராமத்துக்கும் சேராமல் நகர்புரத்தின் சிற்சில வசதிகளோடு இருந்த கிராமம்...."கலங்கல்" - கேள்விப்பட்டிருக்கிறீர்களா ??? தெரியாதவர்களுக்கு நடிகர் சிவக்குமார் சிறுவயதில் வாழ்ந்த ஊர் , ஜி.டி நாயுடு பிறந்த ஊர் என்றால் தெரியும்...!! அப்படியும் தெரியவில்லையா ? ரொம்ப ரிஸ்க் எடுக்க வேணாம் , மதிபாலா பிறந்த ஊர்...!!!ஹிஹிஹி.. என் வீட்டிற்கு அருகே பெருமாள் கோயில் ஒன்று இரு...