Skip to main content

Posts

Showing posts with the label இந்தியா/சீனா

சிரியா : உலகப்போரின் நுழைவாயில்.

சிரியா. சமீபத்தில் செய்திகளைப் பார்க்கும் , படிக்கும் பலருக்கும் இப்பெயர் ஒன்றும் புதிதாய் இருக்காது... பெரும்பாலும் , மேற்கத்திய நாடுகளின் செய்திகளையே கக்கும் நமது ஊடகங்களின் செய்திகளுக்குப்பின்னால் மிகப் பயங்கரமான உண்மைகள் புதைந்து கிடக்கின்றன... பாஷர் அல் ஆஷாத் என்ற கொடுங்கோலன் மக்களைக் கொல்கிறான் என்றே உச்சரித்துப்பழகிய பல தொலைக்காட்சி நிருபர்களையும் தாண்டி , அமெரிக்கா சிரியாவில் நுழைந்து மக்களைக் காக்குமா என்ற பொழுதுபோகா விவாதங்களையும் தாண்டி பல நிஜங்கள் மறைக்கப்படுகின்றன. லிபியா போன்றே சிரியாவும் கடந்து போகும் என்றே உலக நாடுகள் நினைத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் , அப்படியல்ல , இந்த நிகழ்வுகள் பாரிய மாற்றங்களை பூமிப்பந்தில் ஏற்படுத்தப்போகின்றன  என பல உலக அறிஞர்கள் கருதுகிறார்கள். லிபிய புரட்சிக்கும் , இப்போது நடந்துகொண்டிருக்கும சிரிய புரட்சிக்குமான வேறுபாடு என்ன. ? முதல் வேறுபாடு , லிபியா போன்று நண்பர்களில்லாத நாடல்ல சிரியா. ரஷ்யாவின் கடற்படைத் தளத்தைக்கொண்டிருக்கும் நாடு. ரஷியாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கிக்குவிக்கும் நாடு சிரியா. சிரியா என்பது ஈரான் மீதான அமெரிக்க...

இந்தியாவும் சீனாவும் - ஒரு ஒப்பீடு..!

நிறைய பத்திரிக்கைகளும் , பொருளாதார வல்லுநர்களும் அடிக்கடி இப்படிச் சொல்வதுண்டு. இந்த நூற்றாண்டு இந்தியா மற்றும் சீனாவின் நூற்றாண்டு என்று. வருங்காலத்தில் இந்தியாவும் , சீனாவுமே உலக வல்லரசுகளாகப் போகின்றன என்று. நிலைமை என்ன? இந்தியாவிற்கோ , சீனாவிற்கோ அதற்கான தகுதிகள் இருக்கின்றனவா என்று பார்ப்பதற்கான முதல் படி இந்தியாவும் சீனாவும் ஒப்பீட்டளவில் எப்படி இருக்கின்றன என்பதேயாகும். ஆய்வுகளை அரசியல், பொருளாதார , இராணுவ , இராஜதந்திர , அண்டை நாடுகளுடனேயான உறவுகளினூடாக அணுகலாம். பொருளாதார ஒப்பீட்டில் இந்தியாவும் , சீனாவும் எப்படி இருக்கின்றன என்பதை இப்பதிவில் பார்ப்போம். மற்றைய இராணுவ , இராஜதந்திர உறவுகளை பிரிதொரு சமயம் பார்க்கலாம். உலகின் பெரும்பான்மையான மக்களைக் கொண்ட இருநாடுகளும் உலகப்பொருளாதாரத்தில் பெருமளவு பங்கு வகிக்கின்றமை தவிர்க்க இயலாததே.  இந்தியாவின் தோராய ஜி.டி.பி ( GROSS DOMESTIC PRODUCT) மதிப்பு ( ஜிடிபி என்பது ஒட்டுமொத்த நாட்டின் உற்பத்தி மதிப்பு) 3.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். ( எத்துணை சைபர் டிரில்லியனுக்கு என்ற ஆய்வை கொஞ்சம் அப்புறமா பாக்கலாம் சார். ) , அதே ச...