Skip to main content

போபால் , மணிபால், ஜோக்பால் , பசும்பால்!!

கெடக்கறதெல்லாம் கெடக்கட்டும் , கெழவியத் தூக்கி மனையில வை ன்னு ஊருப்பக்கம் ஒரு பழமொழி சொல்வாய்ங்க...அதுபோலத் தான் ஜோக்பாலும்...என்னவோ ஜோக்பால் வந்தா இந்தியா முழுக்க பாலாறும் , தேனாறும் ஓடும்னு ரீல் காட்டிகினு கீராரு அன்னா ஹசாரே.

அவரு கொண்டு வார ஜோக்பால் நாட்டுக்கு நல்லது பண்ணுமோ என்னமோ தெரியாது....எந்த தனியொரு சட்டமுமே நாட்டுக்கு நல்லது பண்ணாது அப்படீங்கறது மட்டும் எல்லாருக்கும் நல்லா தெரியும்..

'மம்மி' இருவது வருசமா சொத்துக்குவிப்பு வழக்கை எப்படி இழுத்தடிக்குதுன்னு எல்லாருக்கும் தெரியும்....என்ன பண்ண முடிஞ்சது சட்டத்தால்? ஒரு எழவும் பண்ண முடியலை.....

எம் முப்பாட்டனாருக்கு துளு மொழி தான் தெரியும் , குத்தப்பத்திரிக்கையை அந்த மொழில தான் மொழிபெயர்க்கணும்னு ஒரு அப்பீலூ......அப்பாலிக்கா அதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக்குன்னு இன்னொரு அப்பீலு....அடப்பாவிகளா அது என்ன கலியாணப் பத்திரிக்கையா , முன்பக்கம் இங்கீலீசிலும் , பின்பக்கம் தமிழ்லயும் அச்சடிச்சிக்க? என்ன எழவு சார் இது??

மம்மி கேஸ் ஒரு சேம்பிள் தான்...இது மாதிரி லச்சம் கேஸு நாடு பூராவும் இருக்கு....'சுக்ராம்'ன்னு ஒருத்தர் , நடக்கவே முடியாத வயசான காலத்தில ஜெயிலுக்கு போயாகணும்ங்கறாங்க...

சட்டத்துக்கா பஞ்சம் நம்மூருல?

ஹெல்மெட்டு போட்டாகணும்கிறது சட்டம்...எவன் மதிக்கறான்?

சீட்டு பெல்ட்டு போட்டாகணும்கிறது சட்டம் ....எவன் போடறான்?

குடிச்சிட்டு வண்டி ஓட்டக்கூடாதுங்கறான்....அப்படி ஓட்டுறவன புடிக்கிறவன் கவர்ன்மெண்டு ஊழியன்..அதான் போலீசு.....விக்கிறவனும் கவர்ன்மெண்டு ஊழியன்...அதான் டாஸ்மாக்கு ஸேல்ஸ்மேன்...தப்பு யாருகிட்ட?

லைசென்ஸு இல்லாம கார் ஓட்டக்கூடாது...சரிதேன்....ரூல்ஸ் நல்லாதான் இருக்கு...

ஓட்டினா? ஒரு நூறு ரூவாய் லஞ்சமாக் குடு...அம்புட்டுதேன்....அப்ப பிரச்சினை எங்க ? ரூல்ஸ்லயா? சட்டத்துலயா ? இல்லப்பா இல்ல...எக்ஜிகியூசன்ல....அதாவது செயல்படுத்துவறவங்கள்ள...அங்கதான் பிரச்சினை..

தீவிரவாதத்தை எதுக்க பொடா சட்டம் கொண்டுவந்தான்....அதை தப்பா யூஸ் பண்ணி மம்மி வைகோவை உள்ள போட்டாங்க அப்படீன்றது கிளைக் கதை.....மெயின் கதை , அந்த சட்டத்துக்கப்பறம் தீவிரவாதம் நின்னுச்சா? இல்லையே? அதுக்கப்புறமும் மும்பையில குண்டு வச்சான்...என்ன பண்ணிட்டோம்?

இன்னோரு உதாரணம்......

காவிரியில தண்ணி உடோணும் ,முல்லைப்பெரியாத்துல தண்ணி மட்டம் ஏத்தணும்ங்கிற உத்தரவை இருமாநிலங்களும் கால்ல தூக்கி போட்டு வெகுவருசமாச்சி....என்ன பண்ண முடிஞ்சது? ஒண்ணும் பண்ண முடியலை...இதுக்கு , இந்தப் ப்ரச்சினைக்கு லோக் பால்ல தீர்விருக்கா என்ன?

இங்க சட்டங்கள் நெறையா இருக்கு..பிரச்சனை செயல்படுத்துறதுல தான்.......

புண்ணு இருக்குன்றதுக்காக கட்டுமேல கட்டு போட்டா புண்ணு ஆறிடும்னு சொல்லறவன் முட்டாள்...அதைத்தான் அன்னா ஹசாரே சொல்றார்.........யாராச்சும் அதைப் பண்ணுவேன் , இதைப் பண்ணுவேன் ன்னு சொன்னவுடனே நம்பிடும் மக்களும் அவரை தெய்வமா பாக்குறாங்க...

என்ன பொருத்தவரை , அரசாங்கம் கொண்டு வந்த லோக்பாலும் ஜோக்பால் தான்....அன்னா ஹசாரே கொண்டு வர்றதா சொல்ற லோக்பாலும் ஜோக்பால் தான்... இந்த ரெண்டு பால்னாலயும் , பசும் பால் அளவுக்குக் கூட பிரயோசனமில்லை...

நமக்குத் தேவை ஒட்டுமொத்த ,அரசியல் மாற்றம்...

நமக்குத் தேவை சமூகத்தின் சகல அடுக்களிலும் செல்வாக்குச் செலுத்தும் ஒரு அதிபராட்சி முறை...


நாம் ஏற்படுத்தவேண்டியது பொதுத்துறை ஊழியர்களின் வேலையைப் பற்றிய பயம்...லஞ்சம் வாங்கினால் வேலை பூடும் என்கிற பயம்...


உடனே மலரவேண்டியது பொறுப்புள்ள அரசியல் தலைமைகளல்ல...

சரியான தலைமையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்புள்ள மக்கள்........

Comments

Popular posts from this blog

பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது!

சீமான்களின் சபையினிலேயே , கடிதம் எழுதி எழுதிக் களைத்துப்போனதோர் கிழட்டுச் சிங்கம்.....முன்னாலுக்கும் முன்னால் அவர் கொண்ட தமிழ்ப்பற்று.....இன்னாளில் அது தமது மக்கட்பற்றாய் மாறிப்போனதொரு சோகம். ஏதோவொரு புண்ணியத்தில், எவரோ செய்த வரலாற்றுத் தவறால் , கொள்கை , தொலைநோக்கு , மக்கட்பற்று இவை பற்றிய சிந்தையேதுமின்றி அரசியலில் விபத்தாய் விளைந்த கொடநாட்டு ஈழத்தாய்....தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தமிழர் பற்றியும் , தமிழர் அரசியல் பற்றியும் எழுதி வைத்துப் பேசும் செல்வி யவர்.........இன்னமும் அவர் சேலை பிடித்துத்திரியும் வீணர் கூட்டம்.! கூட்டணிக்கேற்றப்படி கொள்கையை மாற்றிக்கொள்ளும் மருத்துவப் படையாச்சி.........வீரமிகு வன்னியகுலத்திலே வந்துதித்த சந்தர்ப்பவாதச் சாக்கடை....சமரசமற்ற கொள்கை அரசியலை சந்தர்ப்பவாதச் சாக்கடைக்குள் தள்ளிய பெருமைக்குரிய மருத்துவர் தமிழ்க்குடிதாங்காத தமிழ்க்குடிதாங்கி! யாரை எதற்காக எதிர்த்து அரசியல் செய்யவேண்டுமே அவர்களோடே தம் தேவைக்குதந்த படி கூட்டு வைத்துக்கொண்டு ஈழத்திற்க்காய் எந்நேரமும் பாடுபடும் திரு.வைகோ அவர்கள்....அவரும் சிறை சென்றார்.

நண்பர் 'டோண்டு' ராகவன்...

உயிரோடு இருக்கும்வரை அறிக்கைகளால் அர்சித்து எதிர்ப்பரசியல் நடாத்தி செத்துபோன பிறகு ஆருயிர் நண்பர் என்று அழைத்துக்கொள்ளும் எல்லா அரசியல்வாதிகளையும் போலவே நான். எனக்கும் மறைந்த உயர்திரு 'டோண்டு' ராகவன் அவர்களுக்குமான பரிச்சயம் அவ்வளவொன்றும் அதிகமில்லைதான். பதிவுலகையும் , பர்ஸனல் லைப்பையும் பிரித்து வைத்துக்கொள்ளும் எண்ணமுடைய நான் , டோண்டு மட்டுமல்ல மற்றபல பதிவுலக நண்பர்களுடனும் கூட தனிப்பட்ட தொடர்புகளை வைத்துக்கொண்டதில்லை... இருந்தாலும் , அவ்வப்போது பதிவுலக பின்னூட்டங்களின்பாலே தொடர்ந்துகொண்டிருந்த தொடர்பு , எனது 'போலி டோண்டு' பற்றிய கட்டுரையொன்றிலேயே  தீவிர விவாதமாக மாறியது.. ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீதோ இல்லை அவர்தம் பிற்போக்கான கருத்துக்கள் மீதோ இருந்திருக்கலாம். கடினமாக ஓரிரு முறை பேசியிருக்கலாம்.. அத்தனையும் தாண்டி அவர் மிக நல்ல மனிதர் , கடும் உழைப்பாளி என்பதை அவரது பதிவுலகம் மூலமாக அறிந்தவனெனினும் உறுதியாக கூறவியலும்.. அத்தகைய நல்ல மனிதரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் , நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்... வருத்தங்கள

எஸ்.எஸ்.பொன்முடி - மனிதருள் மாணிக்கம்.

எஸ்.எஸ்.பொன்முடி , கொங்குச்சீமையிலே குறிப்பாக பல்லடம் , சூலூர் வட்டாரத்தில் தெரியாதவர்கள் சொற்பமே. எஸ்.எஸ். பொன்முடி அவர்கள் மட்டுமல்ல , அவர்களது குடும்பமே சூலூரில் பழம்பெருமை மிக்க குடும்பம். காலங்காலமாக அவர்களது குடும்பத்தினரே சூலூரின் அனைத்து தேர்தல்களிலும் வென்றதும் , வெல்வதும் வரலாறு. பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவராயினும் மாற்றுக்கட்சியினராலும் மதிக்கப்படும் சில மனிதர்களில் எஸ்.எஸ் பொன்முடியும் ஒருவர். அவருக்கும் , எனக்குமான பரிச்சயமொன்றும் அவ்வளவு அதிகமில்லைதான். அப்போது எனக்கு ஒரு பத்திலிருந்து , பதினைந்து வயதிருந்திருக்கலாம். கலங்கலில் கவுன்சிலர் தங்கவேலு சர்வ அதிகாரமும் பொருந்தியவராய் வலம் வந்துகொண்டிருந்தார். அவர் எஸ்.எஸ்.பொன்முடியின் வலக்கரம். ஊருக்கு மேற்கே ஜல்லிக்குழி என்ற மனிதர்கள் உபயோகப்படுத்த முடியாத , இயலாத பகுதி ஒன்றிருந்தது.....அப்போது கழகம் ஆட்சியிலிருந்தது + பொன்முடி எம்.எல்.ஏவாக இருந்தார். கட்சிக்காரர்கள் , குறிப்பாக ஒடுக்கப்பட்ட , மிக பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் கேட்டுக்கொண்டதற்காக , மிகுந்த பிரயாசைப்பட்டு தங்கவேல் மற்றும் எஸ்.எஸ்.பொன்முடி அவ