Skip to main content

உறவுகளற்ற பொழுது.

உறவுகளற்ற பொழுது.


புழுதி படிந்த தார்ச்சாலைகள்..
தெருவில் ஹாரனுடனே கடக்கும் பேருந்துகள்..
கை காட்டாமல் திரும்பும் வாகன ஓட்டிகள்
நீர்ப்பிடிப்புக்காக சாலையில் இருக்கும் குழிகள்..
பக்கத்துவீட்டுக்காரன் போட்டிருக்கும் குப்பங்குழி
அன்றாடம் கடக்கும் சாலையோர சாக்கடைக்கால்வாய்...
அதிகாலையில் சாலையில் கழிக்கும் பெரிசுகள் , சிறிசுகள்...
ஆயிரம் பேரின் வியர்வை வாசம் நுகரும் டவுன்ஹால்....
இவையனைத்தையும் ஊரிலிருக்கும் அவஸ்தைகளாய்
ஒவ்வொரு முறையும் நினைத்துப்புலம்பும் அவனுக்கு,
ஊர்விட்டுக்கிளம்பும் அந்தப்பொழுதில் அடிவயிற்றில்
அமிலம் போல் கிளம்பும் வேதனையுணர்வும்....
உறவுகளேதுமற்ற பொழுதின் ரணமும் பலமடங்கு....





காரணம்…


நீ இங்கிருந்தபோதெல்லாம் விலகியிருக்க
காரணங்கள் கிடைத்தன எனக்கு..
ஒருநாள் , வாடிக்கையாளருடன் இரவு விருந்து.
மறுநாள் , மற்றொரு காரணம்……
இன்று….நீ இங்கில்லாத போதோ…….
உன்னுடன் அடிக்கடி தொலைபேசவாவது
காரணங்களைத் தேடுகிறேன்…


ஒருநொடி நிகழ்வுகள்.


அருவி ‘ஜோ’ வென விழுந்து என் முதுகைத் தாக்கியது.
பேயெனப் பெய்தது மழை…ஒதுங்க இடமின்றி நான்…!
காற்று வேரையும் விழுதையும் ஒருங்கே அசைத்தது….
இருட்டின் பயத்தை இன்னமும் கூட்டியது இடியும் மின்னலும்…
அன்றேறிய ரோலர் கோஸ்டரோ கீழ்நோக்கியே பயணித்தது..
இத்தனையும் நிகழ்ந்தது ஒருநொடியில்..
நீ போய் வருகிறேன் என்று சொன்ன அந்த ஒரே நொடியில்!.
                                                                                    

Comments

இத்தனையும் நிகழ்ந்தது ஒருநொடியில்..
நீ போய் வருகிறேன் என்று சொன்ன அந்த ஒரே நொடியில்!. அருமை
thank you madam...thanks for your comment.

Popular posts from this blog

இதற்குத்தானா ஆசைப்பட்டீர்கள் திரு.சீமான்?

இன்று சீமான் அதிமுக கூட்டணியில் இருந்து பிரச்சாரம் பண்ணப்போவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது..ஏற்கெனவே ஒருமுறை செய்த பாரிய தவறொன்றை மற்றொருமுறை செய்யமாட்டார் என்றே நினைத்திருந்தேன்....இது உண்மையான செய்தியாய் இருந்தால் பேரிடிதான்..!!!! மாறாக உணர்வுள்ள இளைஞர்கள் தம் பின்னால் பேரெழுச்சியுடன் நாம் தமிழராய் எழும்போது.....அதைக்கொண்டுபோய் போய்ஸ்தோட்டத்திற்கு தாரைவார்த்துக்கொடுப்பதென்பது கனவிலும் சகிக்க முடியாத செயல்....!!  கருணாநிதிக்கு ஈழ அழிவிற்கு எவ்வளவுக்கெவ்வளவு பங்கிருக்கிறதோ அதே அளவிற்கு  சக பங்குள்ளவரே செயலலிதா... செயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்? என்ன செய்தார்? 1.எதிர்கட்சியாக மாபெரும் போராட்டங்களை நடாத்தியிருக்க வேண்டும்...அழிவது நம்சொந்தங்களே என்று தெரிந்திருந்தும் வாய்மூடி மெளனியாகவே இருந்தார். 2. கருணாநிதியின் எதிர்ப்பரசியலைக் கைவிட்டு விட்டு முத்துக்குமார் முதற்கொண்டு  தமிழக இளைஞர்களின் எழுச்சியை உபயோகித்து இந்திய அரசை ஸ்தம்பிக்க முயற்சித்திருக்க வேண்டும்....அதைவிடுத்து கொடநாட்டில் பள்ளி கொண்டிருந்தார்... 3.  சிறிதேனும் உண்மையான அக்கறை அவருக்கு தமிழர்பா...

பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது!

சீமான்களின் சபையினிலேயே , கடிதம் எழுதி எழுதிக் களைத்துப்போனதோர் கிழட்டுச் சிங்கம்.....முன்னாலுக்கும் முன்னால் அவர் கொண்ட தமிழ்ப்பற்று.....இன்னாளில் அது தமது மக்கட்பற்றாய் மாறிப்போனதொரு சோகம். ஏதோவொரு புண்ணியத்தில், எவரோ செய்த வரலாற்றுத் தவறால் , கொள்கை , தொலைநோக்கு , மக்கட்பற்று இவை பற்றிய சிந்தையேதுமின்றி அரசியலில் விபத்தாய் விளைந்த கொடநாட்டு ஈழத்தாய்....தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தமிழர் பற்றியும் , தமிழர் அரசியல் பற்றியும் எழுதி வைத்துப் பேசும் செல்வி யவர்.........இன்னமும் அவர் சேலை பிடித்துத்திரியும் வீணர் கூட்டம்.! கூட்டணிக்கேற்றப்படி கொள்கையை மாற்றிக்கொள்ளும் மருத்துவப் படையாச்சி.........வீரமிகு வன்னியகுலத்திலே வந்துதித்த சந்தர்ப்பவாதச் சாக்கடை....சமரசமற்ற கொள்கை அரசியலை சந்தர்ப்பவாதச் சாக்கடைக்குள் தள்ளிய பெருமைக்குரிய மருத்துவர் தமிழ்க்குடிதாங்காத தமிழ்க்குடிதாங்கி! யாரை எதற்காக எதிர்த்து அரசியல் செய்யவேண்டுமே அவர்களோடே தம் தேவைக்குதந்த படி கூட்டு வைத்துக்கொண்டு ஈழத்திற்க்காய் எந்நேரமும் பாடுபடும் திரு.வைகோ அவர்கள்....அவரும் சிறை சென்றார்....

நண்பர் 'டோண்டு' ராகவன்...

உயிரோடு இருக்கும்வரை அறிக்கைகளால் அர்சித்து எதிர்ப்பரசியல் நடாத்தி செத்துபோன பிறகு ஆருயிர் நண்பர் என்று அழைத்துக்கொள்ளும் எல்லா அரசியல்வாதிகளையும் போலவே நான். எனக்கும் மறைந்த உயர்திரு 'டோண்டு' ராகவன் அவர்களுக்குமான பரிச்சயம் அவ்வளவொன்றும் அதிகமில்லைதான். பதிவுலகையும் , பர்ஸனல் லைப்பையும் பிரித்து வைத்துக்கொள்ளும் எண்ணமுடைய நான் , டோண்டு மட்டுமல்ல மற்றபல பதிவுலக நண்பர்களுடனும் கூட தனிப்பட்ட தொடர்புகளை வைத்துக்கொண்டதில்லை... இருந்தாலும் , அவ்வப்போது பதிவுலக பின்னூட்டங்களின்பாலே தொடர்ந்துகொண்டிருந்த தொடர்பு , எனது 'போலி டோண்டு' பற்றிய கட்டுரையொன்றிலேயே  தீவிர விவாதமாக மாறியது.. ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீதோ இல்லை அவர்தம் பிற்போக்கான கருத்துக்கள் மீதோ இருந்திருக்கலாம். கடினமாக ஓரிரு முறை பேசியிருக்கலாம்.. அத்தனையும் தாண்டி அவர் மிக நல்ல மனிதர் , கடும் உழைப்பாளி என்பதை அவரது பதிவுலகம் மூலமாக அறிந்தவனெனினும் உறுதியாக கூறவியலும்.. அத்தகைய நல்ல மனிதரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் , நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்... வருத்தங்கள...