Skip to main content

உறவுகளற்ற பொழுது.

உறவுகளற்ற பொழுது.


புழுதி படிந்த தார்ச்சாலைகள்..
தெருவில் ஹாரனுடனே கடக்கும் பேருந்துகள்..
கை காட்டாமல் திரும்பும் வாகன ஓட்டிகள்
நீர்ப்பிடிப்புக்காக சாலையில் இருக்கும் குழிகள்..
பக்கத்துவீட்டுக்காரன் போட்டிருக்கும் குப்பங்குழி
அன்றாடம் கடக்கும் சாலையோர சாக்கடைக்கால்வாய்...
அதிகாலையில் சாலையில் கழிக்கும் பெரிசுகள் , சிறிசுகள்...
ஆயிரம் பேரின் வியர்வை வாசம் நுகரும் டவுன்ஹால்....
இவையனைத்தையும் ஊரிலிருக்கும் அவஸ்தைகளாய்
ஒவ்வொரு முறையும் நினைத்துப்புலம்பும் அவனுக்கு,
ஊர்விட்டுக்கிளம்பும் அந்தப்பொழுதில் அடிவயிற்றில்
அமிலம் போல் கிளம்பும் வேதனையுணர்வும்....
உறவுகளேதுமற்ற பொழுதின் ரணமும் பலமடங்கு....





காரணம்…


நீ இங்கிருந்தபோதெல்லாம் விலகியிருக்க
காரணங்கள் கிடைத்தன எனக்கு..
ஒருநாள் , வாடிக்கையாளருடன் இரவு விருந்து.
மறுநாள் , மற்றொரு காரணம்……
இன்று….நீ இங்கில்லாத போதோ…….
உன்னுடன் அடிக்கடி தொலைபேசவாவது
காரணங்களைத் தேடுகிறேன்…


ஒருநொடி நிகழ்வுகள்.


அருவி ‘ஜோ’ வென விழுந்து என் முதுகைத் தாக்கியது.
பேயெனப் பெய்தது மழை…ஒதுங்க இடமின்றி நான்…!
காற்று வேரையும் விழுதையும் ஒருங்கே அசைத்தது….
இருட்டின் பயத்தை இன்னமும் கூட்டியது இடியும் மின்னலும்…
அன்றேறிய ரோலர் கோஸ்டரோ கீழ்நோக்கியே பயணித்தது..
இத்தனையும் நிகழ்ந்தது ஒருநொடியில்..
நீ போய் வருகிறேன் என்று சொன்ன அந்த ஒரே நொடியில்!.
                                                                                    

Comments

இத்தனையும் நிகழ்ந்தது ஒருநொடியில்..
நீ போய் வருகிறேன் என்று சொன்ன அந்த ஒரே நொடியில்!. அருமை
thank you madam...thanks for your comment.

Popular posts from this blog

இதற்குத்தானா ஆசைப்பட்டீர்கள் திரு.சீமான்?

இன்று சீமான் அதிமுக கூட்டணியில் இருந்து பிரச்சாரம் பண்ணப்போவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது..ஏற்கெனவே ஒருமுறை செய்த பாரிய தவறொன்றை மற்றொருமுறை செய்யமாட்டார் என்றே நினைத்திருந்தேன்....இது உண்மையான செய்தியாய் இருந்தால் பேரிடிதான்..!!!! மாறாக உணர்வுள்ள இளைஞர்கள் தம் பின்னால் பேரெழுச்சியுடன் நாம் தமிழராய் எழும்போது.....அதைக்கொண்டுபோய் போய்ஸ்தோட்டத்திற்கு தாரைவார்த்துக்கொடுப்பதென்பது கனவிலும் சகிக்க முடியாத செயல்....!!  கருணாநிதிக்கு ஈழ அழிவிற்கு எவ்வளவுக்கெவ்வளவு பங்கிருக்கிறதோ அதே அளவிற்கு  சக பங்குள்ளவரே செயலலிதா... செயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்? என்ன செய்தார்? 1.எதிர்கட்சியாக மாபெரும் போராட்டங்களை நடாத்தியிருக்க வேண்டும்...அழிவது நம்சொந்தங்களே என்று தெரிந்திருந்தும் வாய்மூடி மெளனியாகவே இருந்தார். 2. கருணாநிதியின் எதிர்ப்பரசியலைக் கைவிட்டு விட்டு முத்துக்குமார் முதற்கொண்டு  தமிழக இளைஞர்களின் எழுச்சியை உபயோகித்து இந்திய அரசை ஸ்தம்பிக்க முயற்சித்திருக்க வேண்டும்....அதைவிடுத்து கொடநாட்டில் பள்ளி கொண்டிருந்தார்... 3.  சிறிதேனும் உண்மையான அக்கறை அவருக்கு தமிழர்பா...

யார் நமக்கு எதிரி?

ஈழப்போராட்டம் பல படிநிலைகளைக்கொண்டது, தந்தை செல்வாவில் ஆரம்பித்து, பல்வேறு போராளிக்குழுக்களில் தொடங்கி புலிகளால் வலுப்பெற்றது. மற்ற போராளிக்குழுக்களிலிருந்து புலிகளின் கைகளுக்கு முழுதும் மாறியதெப்படி?  இந்தியப்பெருந்தலைவர் இந்திராகாந்தி அவர்கள் எல்லா போராளிக்குழுக்களையும் ஆராய்ந்து புலிகள் தான் எல்லோரிலும் வலுவானவர்களாகவும் , சரியான சிந்தனைப்போக்குடையவர்களாகவும் இருப்பதாக தீர்மானித்தார்கள். அதனால் விடுதலைப்புலிகளுக்கு கூடுதல் ஆயுத பலம் மட்டுமல்ல , தார்மீக ஆதரவுத்தளமும்  கிடைத்தது.  தமிழகத்தில் எம் ஜி ஆர் அவர்களுமே விடுதலைப்புலிகளை நம்பிய அளவிற்கு மற்ற குழுக்களை நம்பவில்லை. ஏன் கலைஞர் கூட சகோதர யுத்தம் வேண்டாம் வேண்டாமென தலையில் அடித்துக்கொண்டாரே தவிர ஒரு சந்தர்ப்பத்தில் கூட புலிகளை இடித்துரைத்தாரில்லை. தனது இறுதிக்காலம்  வரை சகோதர யுத்தத்தினால் தான் புலிகள் வீழ்ந்தார்களென்பதை உறுதியாக நம்பினார். அதற்காக புலிகளை வெறுத்தாரா என்றால் ஒருகணமும் வெளிப்படையாக அவர் சொன்னதில்லை.  புலிகளால் அவர்களது மிதமிந்திய ஹீரோயிசத்தால் அதிகம் இழந்த அரசியல் கட்சி ஒன்று உலகில் இருக்கும...

இந்தியாவும் சீனாவும் - ஒரு ஒப்பீடு..!

நிறைய பத்திரிக்கைகளும் , பொருளாதார வல்லுநர்களும் அடிக்கடி இப்படிச் சொல்வதுண்டு. இந்த நூற்றாண்டு இந்தியா மற்றும் சீனாவின் நூற்றாண்டு என்று. வருங்காலத்தில் இந்தியாவும் , சீனாவுமே உலக வல்லரசுகளாகப் போகின்றன என்று. நிலைமை என்ன? இந்தியாவிற்கோ , சீனாவிற்கோ அதற்கான தகுதிகள் இருக்கின்றனவா என்று பார்ப்பதற்கான முதல் படி இந்தியாவும் சீனாவும் ஒப்பீட்டளவில் எப்படி இருக்கின்றன என்பதேயாகும். ஆய்வுகளை அரசியல், பொருளாதார , இராணுவ , இராஜதந்திர , அண்டை நாடுகளுடனேயான உறவுகளினூடாக அணுகலாம். பொருளாதார ஒப்பீட்டில் இந்தியாவும் , சீனாவும் எப்படி இருக்கின்றன என்பதை இப்பதிவில் பார்ப்போம். மற்றைய இராணுவ , இராஜதந்திர உறவுகளை பிரிதொரு சமயம் பார்க்கலாம். உலகின் பெரும்பான்மையான மக்களைக் கொண்ட இருநாடுகளும் உலகப்பொருளாதாரத்தில் பெருமளவு பங்கு வகிக்கின்றமை தவிர்க்க இயலாததே.  இந்தியாவின் தோராய ஜி.டி.பி ( GROSS DOMESTIC PRODUCT) மதிப்பு ( ஜிடிபி என்பது ஒட்டுமொத்த நாட்டின் உற்பத்தி மதிப்பு) 3.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். ( எத்துணை சைபர் டிரில்லியனுக்கு என்ற ஆய்வை கொஞ்சம் அப்புறமா பாக்கலாம் சார். ) , அதே ச...