Skip to main content

ஹிட்லர் ரிட்டன்ஸ்!!!

நவீன ஹிட்லர்.



நக்கீரன் மீதான தாக்குதல் 1991 முதல் 1996 வரையான ஜெயலலிதாவின் கொடுங்கோலாட்சியை நியாபகப்படுத்துகிறது..இரண்டு நாட்கள் அப்பத்திரிக்கை அலுவலகத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் என்பதையும் , அக்கட்டிடத்துக்கான மின்சார மற்றும் குடிநீர் இணைப்பை துண்டித்தார்கள் என்பதையும் பார்க்கும் போது , ஜெயலலிதாவின் மமதை புரிகிறது...





ஜெயலலிதா என்னவோ யோக்கிய சீலர் எனவும் , சசிகலா தான் எல்லா தகிடுதத்தமும் செய்தார் என்றும் புழுகித் திரிந்த தினமலர் , தினமணி , விகடன் , குமுதம் போன்ற பத்திரிக்கைகளின் குட்டு வெளிப்பட்டது , "கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்ற பழமொழியை நினைவுபடுத்துகிறது.....

எங்கப்பா இங்க நெறையா பேரு  பத்திரிக்கை சுதந்திரம் பத்தி பக்கம் பக்கமா பேசுவீங்களே , கொஞ்சம் வந்து என்னான்னு கேளுங்களேன்...!!

Comments

Anonymous said…
poda lossu.
as usual you are coming and supporting corrupt DMK goonda
Anonymous said…
Nakeeran deserves this kind of treatment.
Anonymous said…
நக்கீரன் மீது தாக்குதல் நடத்தாமல் சட்டப்படியாக இந்த பிரச்சனையை அதிமுக அணுகியிருக்கலாம். ஆனால் நக்கீரனும் பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில் யாரை பற்றியும் அவதூறாக எழுதக்கூடாது.
Anonymous Anonymous said...

poda lossu.
as usual you are coming and supporting corrupt DMK goonda //

இன்னாபா இது......இதுல டி.எம்.கே சப்போர்ட் எங்க வந்துச்சி?
Anonymous Anonymous said...

Nakeeran deserves this kind of treatment.//

so do tamilnadu peoples...deserves this worst Governance.
Anonymous Anonymous said...

நக்கீரன் மீது தாக்குதல் நடத்தாமல் சட்டப்படியாக இந்த பிரச்சனையை அதிமுக அணுகியிருக்கலாம். ஆனால் நக்கீரனும் பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில் யாரை பற்றியும் அவதூறாக எழுதக்கூடாது.//

இது நக்கீரனுக்கு மட்டும் பொருந்துமா இல்லை ராசா மற்றும் கனிமொழியை இணைத்து பச்சைபச்சையாகப் பேசும் மற்ற ஊடகங்களுக்கும் பொருந்துமா? தவிர செயலலிதா பொதுக்குழுவில் சொன்னதாகத் தானே நக்கீரன் செய்தி வெளியிட்டிருக்கிறது? அப்படிச் சொல்லவில்லையென்றால் இன்றுவரை ஜெயலலிதா ஏன் மறுப்புத் தெரிவிக்கவில்லை.?

Popular posts from this blog

இதற்குத்தானா ஆசைப்பட்டீர்கள் திரு.சீமான்?

இன்று சீமான் அதிமுக கூட்டணியில் இருந்து பிரச்சாரம் பண்ணப்போவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது..ஏற்கெனவே ஒருமுறை செய்த பாரிய தவறொன்றை மற்றொருமுறை செய்யமாட்டார் என்றே நினைத்திருந்தேன்....இது உண்மையான செய்தியாய் இருந்தால் பேரிடிதான்..!!!! மாறாக உணர்வுள்ள இளைஞர்கள் தம் பின்னால் பேரெழுச்சியுடன் நாம் தமிழராய் எழும்போது.....அதைக்கொண்டுபோய் போய்ஸ்தோட்டத்திற்கு தாரைவார்த்துக்கொடுப்பதென்பது கனவிலும் சகிக்க முடியாத செயல்....!!  கருணாநிதிக்கு ஈழ அழிவிற்கு எவ்வளவுக்கெவ்வளவு பங்கிருக்கிறதோ அதே அளவிற்கு  சக பங்குள்ளவரே செயலலிதா... செயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்? என்ன செய்தார்? 1.எதிர்கட்சியாக மாபெரும் போராட்டங்களை நடாத்தியிருக்க வேண்டும்...அழிவது நம்சொந்தங்களே என்று தெரிந்திருந்தும் வாய்மூடி மெளனியாகவே இருந்தார். 2. கருணாநிதியின் எதிர்ப்பரசியலைக் கைவிட்டு விட்டு முத்துக்குமார் முதற்கொண்டு  தமிழக இளைஞர்களின் எழுச்சியை உபயோகித்து இந்திய அரசை ஸ்தம்பிக்க முயற்சித்திருக்க வேண்டும்....அதைவிடுத்து கொடநாட்டில் பள்ளி கொண்டிருந்தார்... 3.  சிறிதேனும் உண்மையான அக்கறை அவருக்கு தமிழர்பா...

யார் நமக்கு எதிரி?

ஈழப்போராட்டம் பல படிநிலைகளைக்கொண்டது, தந்தை செல்வாவில் ஆரம்பித்து, பல்வேறு போராளிக்குழுக்களில் தொடங்கி புலிகளால் வலுப்பெற்றது. மற்ற போராளிக்குழுக்களிலிருந்து புலிகளின் கைகளுக்கு முழுதும் மாறியதெப்படி?  இந்தியப்பெருந்தலைவர் இந்திராகாந்தி அவர்கள் எல்லா போராளிக்குழுக்களையும் ஆராய்ந்து புலிகள் தான் எல்லோரிலும் வலுவானவர்களாகவும் , சரியான சிந்தனைப்போக்குடையவர்களாகவும் இருப்பதாக தீர்மானித்தார்கள். அதனால் விடுதலைப்புலிகளுக்கு கூடுதல் ஆயுத பலம் மட்டுமல்ல , தார்மீக ஆதரவுத்தளமும்  கிடைத்தது.  தமிழகத்தில் எம் ஜி ஆர் அவர்களுமே விடுதலைப்புலிகளை நம்பிய அளவிற்கு மற்ற குழுக்களை நம்பவில்லை. ஏன் கலைஞர் கூட சகோதர யுத்தம் வேண்டாம் வேண்டாமென தலையில் அடித்துக்கொண்டாரே தவிர ஒரு சந்தர்ப்பத்தில் கூட புலிகளை இடித்துரைத்தாரில்லை. தனது இறுதிக்காலம்  வரை சகோதர யுத்தத்தினால் தான் புலிகள் வீழ்ந்தார்களென்பதை உறுதியாக நம்பினார். அதற்காக புலிகளை வெறுத்தாரா என்றால் ஒருகணமும் வெளிப்படையாக அவர் சொன்னதில்லை.  புலிகளால் அவர்களது மிதமிந்திய ஹீரோயிசத்தால் அதிகம் இழந்த அரசியல் கட்சி ஒன்று உலகில் இருக்கும...

ஒற்றையாட்சி முறையா, பிரிவினைக்கான அடித்தளமா?

இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு. வேற்றுமையில் ஒற்றுமையே நமது பலம்.. நீங்கள் விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ இந்தியாவில் பல்லினங்கள் உண்டு, பல மொழிகள் உண்டு , பல பழக்கவழக்கங்கள் உண்டு , இவற்றை ஏற்றுக்கொண்டு , சகிப்புத்தன்மையோடு எல்லோரும் ஓரினமாய் வாழ்வதே இந்தியா வாழ்வாங்கு வாழ்வதற்கான வழிமுறை. அதைவிடுத்து , ஒற்றையாட்சியை நிறுவுவோம் என்று சொல்லிக்கொண்டிருந்தால் இந்தியா எனும் நாடு இருக்குமா என்பதே கேள்விக்குறி!!! குறிப்பாக , வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் " நீட்" தேர்வு... எனக்கென்று என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசும் , என்னால், என் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களெல்லாரும் சேர்ந்து நீட் எமக்கு வேண்டாம் என்று தீர்மானம் செய்கிற போது அதை வலிந்து எம் மேல் திணிக்க இந்திய நடுவண் அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்ற கேள்வியெழுப்புவதில் தவறென்ன இருக்கிறது? பல பத்து சின்னஞ்சிறு நாடுகளாய் ஐரோப்பியாவில் பரவிக்கிடப்பதற்கு பாரிய காரணமென்ன? மொழி மற்றும் இனங்களால் அவர்கள் பிளவுபட்டிருக்கிறார்கள்... அதனால் தான் இந்தியாவின் பன்முகத் தன்மைக்கேற்ப மொழிவாரி மாநிலங்களை அமை...