Skip to main content

வெறுமை நிறைந்த தனிமையும் , தனிமை நிறைந்த சனிக்கிழமையும்!

விட்டங்களும் , சுவர்களும் , ஜன்னல்களும் , திரைச்சிலைகளும் மட்டுமே சூழ அமைந்திருக்கும் , பார்க்கிறேனோ , பார்க்கவில்லையோ தற்போதைக்கு எனக்கு மிகவும் பிடித்த 'முரசு' சேனலில் 'நிலா காய்கிறது' என்ற 'இந்திரா படப்பாடல் ஒலிக்கின்ற வேளையில் இப்பதிவை எழுதத் தொடங்குகிறேன்...

கடந்த பதிவினை நான் இவ்வலைப்பூவில் ஏற்றியது கடந்த ஜனவரி மாதம்......ஏன் இந்த இடைவெளி....? ஏதேனும் எழுத வேண்டுமென்று சப்ஜெக்ட் இல்லாமல் எழுத ஆரம்பிக்கும் எல்லோருக்கும் வரும் பிரச்சினை எனக்கும் வந்திருக்கிறது....

அட்டா காலை உணவு ஆகவில்லையே என்று தோன்றிற்று.......தட்டில் வேலைக்கார அம்மா கிச்சடி என்ற பெயரில் மஞ்சள் கலரில் செய்து வைத்திருந்தாலும் சாப்பிட முடிந்தது.... இட்ட அன்னம் கொஞ்சம் முன்னப்பின்ன இருந்தாலும் யாருமற்ற சூழலில் அன்னமிடமாவது அவர் இருக்கிறார் , அதனால் பிழைத்தேன்.

முரசு தொலைக்காட்சியில் , என்னுயிர்த்தோழன் படப்பாட்டு ஓடிக்கொண்டிருக்கிறது....மாற்றினேன்....கலைஞர் தொல்லைக்காட்சியில் , அனேகமாக ஆயிரமாவது முறை 'ஆனந்த தாண்டவம்' என்ற மொக்கைத் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது....

வெட்டுக்கிளியோ என்னமோ , அதே ஷேப்பில் ஒரு பூச்சி எங்கிருந்தோ வந்து டைனிங் டேபிள் ஓரத்தில் அமர்ந்தது.....கரப்பான்பூச்சியைக்கண்டாலே எனக்கு அலர்ஜி.........அதனால் ஒதுங்கி உட்கார்ந்துகொண்டேன்......சிறிதுநேரம் வட்டமடித்தது....போர்க்காலங்களில் துப்பாக்கிக்குண்டுகளிலிருந்து தப்பிக்க தரையில் படுத்துக்கொள்வார்களே அது போல் அந்த வெட்டுக்கிளி தாககுதலிருந்து தப்பித்தேன்...நல்லவேளை வீட்டில் யாருமில்லை.....

சேனல் மாற்றினேன்....

சிரிப்பொலியில் சந்தானமும் , ஜீவாவும் ஒயின்ஷாப்பில் சரக்கடித்துக்கொண்டிருந்தார்கள்.....சிவா மனசுல சக்தி படம் என்றே நினைக்கிறேன்.... பின்னாளில் அதே டைரக்டர் .'பாஸ்' என்கிற பாஸ்கரன்' என்ற பெயரில் ரீமேக் பண்ணினாரே அதே படம்தான் பாஸ்...!

;
;
:
:
:
:
:
சாரி பாஸ்.....திடிரென எனது க்ரோம் தொங்கிவிட்டது.........எத்தனை நேரம் முயற்சி பண்ணியும் என்னால் மீண்டும் டைப்ப முடியவில்லை...நல்லவேளை ப்ளாக்கர் என்ற அற்புத சக்தி மீண்டும் என் க்ரோமை உயிர்த்தெழ வைத்தபோது முதலில் எழுதிய மேலிருக்கும் இலக்கிய வாக்கியங்களனைத்தையும் தன்னகத்தே சேமித்து வைத்திருந்தது....

இல்லாவிட்டால் , ஒருவேளை நான் எழுதிய ஆறு பத்திகளை ப்ளாக்கர் சேமிக்காமல் போயிருந்தால் திரும்ப எழுதக் கஷ்டப்பட்டுக்கொண்டு மீண்டும் பதிவு மூலம் உங்களை தொரந்தரவு படுத்தியிருக்க மாட்டேனோ என்னவோ.....யார் கண்டது...இனியாவது தொடர்ச்சியாக எழுதலாம் என்று நினைத்திருக்கும் என்ற எண்ணம் கூட முடிந்து போயிருக்கலாம்......க்ரோம் என்ற ஒரு சின்ன சாப்ட்வேரின் சதியால் 'மதிபாலா' என்ற இலக்கியவாதி , எழுத்தாளர் , கவிஞர் வலையுலகிலிருந்து காணாமல் போயிருப்பார்.

போரடித்தது..அனேகமாக மேற்கண்ட பத்திகளைப் படித்து உங்களுக்கு அடிக்கிறதே அதே போன்ற போர் தான் என்று நினைக்கிறேன்....

சேனலை மாற்றினேன்......சித்திரம் தொலைக்காட்சியில் ஒரு வெள்ளைக்கார சிறுவனும் , சீனச்சிறுமியும் கையில் ஏதோ எல்க்ட்ரானிக் சாதனத்தை வைத்து ஆராய்ந்து கொண்டிருந்தார்கள்..

குறிப்பிட வேண்டிய காட்சி அது...

சீனச்சிறுமி என் கையில் கொடு அதை என்கிறாள்....அமெரிக்கச் சிறுவன் , உனக்கென்ன தெரியும் ? நாம் அமெரிக்காரன் , அதனால் எலக்ட்ரானிக்ஸ் எல்லாம் எனக்கு அத்துப்படி' என்று பிடுங்கும் போது தவறி தண்ணீரில் விழுகிறது அந்த சாதனம்...' நீ ஒரு மக்கு சாம்பிராணி' என்கிறாள் அச்சிறுமி..

இக்காட்சியிலிருந்து எனக்கு மூன்று விடயங்கள் தெளிவானது...

1. ஆங்கிலப் படங்களை தமிழில் மொழிபெயர்க்கும் போதே சில டயலாக்குகளின் உண்மை அர்த்தம் தெரிகிறது.

2. அமெரிக்காக்காரனுக்கு தனக்கு எல்லாம் தெரியும் என்ற அதிகார தோரணை இருக்கிறது..அல்லது அப்படிப் படத்தில் காண்பிக்கப்படுகிறது...

3. அழகான செந்தமிழ் வசனங்கள் , ஆங்கில மொழிபெயர்ப்புப் படங்களில் மட்டுமே தற்போது கேட்க்கிடைக்கிறது....

சரி அது கிடக்கட்டும்...!


ஒரு மனிதன் குழந்தை குட்டிகளோடே இருந்து கொண்டு , திடிரென தனித்து விடப்பட்டால் என்ன செய்வான்???? என்னைப்போல பதிவு எழுத வாய்ப்பிருப்பவன் பதிவெழுத ஆரம்பிப்பான்....ஆக , பதிவொன்று இன்று போடவேண்டுமென்று முடிவெடுத்து டைப்ப ஆரம்பித்துவிட்டேன்..
ஆனா , எதைப் பத்தி எழுதுறது???


அட , மேற்கண்டவற்றை எழுதி திருப்பிப்படிக்கையில் இதையே கூட பதிவாகப்போடலாம் என்று தோணிற்று....போட்டுவிட்டேன்...!!!!

மீளச்சந்திப்பதில் மெத்த மகிழ்ச்சி!!!

இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.....

தமிழ்ப்புத்தாண்டான தைத் திருநாளுக்கு முன்னாடி இன்னொரு பதிவெழுதுவேனா என்பது சந்தேகம் என்பதால் தமிழ்ப்புத்தாண்டிற்கும் சேர்த்தே வாழ்த்துக்கள்..!!

யாரும் பின்னூட்டம் , கின்னூட்டம் போட்டு நிறைய ஊக்கப்படுத்தி மீண்டும் என்னை பதிவுலக அடிமையாக்க முயற்சிக்க வேண்டாம் என்று வேண்டி விரும்பி தாழ்மையுடன் கேட்டுக்கொல்கிறேன்...!!!

தோழமையுடன்
மதிபாலா.

Comments

Popular posts from this blog

பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது!

சீமான்களின் சபையினிலேயே , கடிதம் எழுதி எழுதிக் களைத்துப்போனதோர் கிழட்டுச் சிங்கம்.....முன்னாலுக்கும் முன்னால் அவர் கொண்ட தமிழ்ப்பற்று.....இன்னாளில் அது தமது மக்கட்பற்றாய் மாறிப்போனதொரு சோகம். ஏதோவொரு புண்ணியத்தில், எவரோ செய்த வரலாற்றுத் தவறால் , கொள்கை , தொலைநோக்கு , மக்கட்பற்று இவை பற்றிய சிந்தையேதுமின்றி அரசியலில் விபத்தாய் விளைந்த கொடநாட்டு ஈழத்தாய்....தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தமிழர் பற்றியும் , தமிழர் அரசியல் பற்றியும் எழுதி வைத்துப் பேசும் செல்வி யவர்.........இன்னமும் அவர் சேலை பிடித்துத்திரியும் வீணர் கூட்டம்.! கூட்டணிக்கேற்றப்படி கொள்கையை மாற்றிக்கொள்ளும் மருத்துவப் படையாச்சி.........வீரமிகு வன்னியகுலத்திலே வந்துதித்த சந்தர்ப்பவாதச் சாக்கடை....சமரசமற்ற கொள்கை அரசியலை சந்தர்ப்பவாதச் சாக்கடைக்குள் தள்ளிய பெருமைக்குரிய மருத்துவர் தமிழ்க்குடிதாங்காத தமிழ்க்குடிதாங்கி! யாரை எதற்காக எதிர்த்து அரசியல் செய்யவேண்டுமே அவர்களோடே தம் தேவைக்குதந்த படி கூட்டு வைத்துக்கொண்டு ஈழத்திற்க்காய் எந்நேரமும் பாடுபடும் திரு.வைகோ அவர்கள்....அவரும் சிறை சென்றார்.

நண்பர் 'டோண்டு' ராகவன்...

உயிரோடு இருக்கும்வரை அறிக்கைகளால் அர்சித்து எதிர்ப்பரசியல் நடாத்தி செத்துபோன பிறகு ஆருயிர் நண்பர் என்று அழைத்துக்கொள்ளும் எல்லா அரசியல்வாதிகளையும் போலவே நான். எனக்கும் மறைந்த உயர்திரு 'டோண்டு' ராகவன் அவர்களுக்குமான பரிச்சயம் அவ்வளவொன்றும் அதிகமில்லைதான். பதிவுலகையும் , பர்ஸனல் லைப்பையும் பிரித்து வைத்துக்கொள்ளும் எண்ணமுடைய நான் , டோண்டு மட்டுமல்ல மற்றபல பதிவுலக நண்பர்களுடனும் கூட தனிப்பட்ட தொடர்புகளை வைத்துக்கொண்டதில்லை... இருந்தாலும் , அவ்வப்போது பதிவுலக பின்னூட்டங்களின்பாலே தொடர்ந்துகொண்டிருந்த தொடர்பு , எனது 'போலி டோண்டு' பற்றிய கட்டுரையொன்றிலேயே  தீவிர விவாதமாக மாறியது.. ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீதோ இல்லை அவர்தம் பிற்போக்கான கருத்துக்கள் மீதோ இருந்திருக்கலாம். கடினமாக ஓரிரு முறை பேசியிருக்கலாம்.. அத்தனையும் தாண்டி அவர் மிக நல்ல மனிதர் , கடும் உழைப்பாளி என்பதை அவரது பதிவுலகம் மூலமாக அறிந்தவனெனினும் உறுதியாக கூறவியலும்.. அத்தகைய நல்ல மனிதரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் , நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்... வருத்தங்கள

எஸ்.எஸ்.பொன்முடி - மனிதருள் மாணிக்கம்.

எஸ்.எஸ்.பொன்முடி , கொங்குச்சீமையிலே குறிப்பாக பல்லடம் , சூலூர் வட்டாரத்தில் தெரியாதவர்கள் சொற்பமே. எஸ்.எஸ். பொன்முடி அவர்கள் மட்டுமல்ல , அவர்களது குடும்பமே சூலூரில் பழம்பெருமை மிக்க குடும்பம். காலங்காலமாக அவர்களது குடும்பத்தினரே சூலூரின் அனைத்து தேர்தல்களிலும் வென்றதும் , வெல்வதும் வரலாறு. பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவராயினும் மாற்றுக்கட்சியினராலும் மதிக்கப்படும் சில மனிதர்களில் எஸ்.எஸ் பொன்முடியும் ஒருவர். அவருக்கும் , எனக்குமான பரிச்சயமொன்றும் அவ்வளவு அதிகமில்லைதான். அப்போது எனக்கு ஒரு பத்திலிருந்து , பதினைந்து வயதிருந்திருக்கலாம். கலங்கலில் கவுன்சிலர் தங்கவேலு சர்வ அதிகாரமும் பொருந்தியவராய் வலம் வந்துகொண்டிருந்தார். அவர் எஸ்.எஸ்.பொன்முடியின் வலக்கரம். ஊருக்கு மேற்கே ஜல்லிக்குழி என்ற மனிதர்கள் உபயோகப்படுத்த முடியாத , இயலாத பகுதி ஒன்றிருந்தது.....அப்போது கழகம் ஆட்சியிலிருந்தது + பொன்முடி எம்.எல்.ஏவாக இருந்தார். கட்சிக்காரர்கள் , குறிப்பாக ஒடுக்கப்பட்ட , மிக பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் கேட்டுக்கொண்டதற்காக , மிகுந்த பிரயாசைப்பட்டு தங்கவேல் மற்றும் எஸ்.எஸ்.பொன்முடி அவ