புகழ்பெற்ற எழுத்தாளரும் , மனித உரிமை ஆர்வலருமான திருமதி.அருந்ததி ராய் அவர்கள் "காஷ்மீர்" எப்போதுமே இந்தியாவின் ஒரு பகுதியான இருந்ததில்லை என்று புதுதில்லி ஆய்வரங்கம் ஒன்றில் சொன்னதும் , ஹிலானி அவர்கள் "சுதந்திரமே தீர்வு" என்று சொன்னதும் பஜ்ரங்தள் கோஷ்டிகளாலும், வட இந்திய செய்திச்சேனல் மாபியாக்களாலும் பெரும் பிரச்சினை ஆக்கப்பட்டது தெரிந்தமையே.
பிரிவினையைத்தூண்டியதாக திருமதி.ராய் மீது வழக்குத்தொடரப்படும் , அவர் கைது செய்யப்படுவார் என்றும் பரபரப்பாக பேசப்பட்ட சூழலில் மாண்புமிகு ( நெசமாவா?) உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அது ஐ.பி.சி 124 ஏ பிரிவின் படி குற்றமல்ல என்கிறார்.
பிரிவினையைத்தூண்டியதாக திருமதி.ராய் மீது வழக்குத்தொடரப்படும் , அவர் கைது செய்யப்படுவார் என்றும் பரபரப்பாக பேசப்பட்ட சூழலில் மாண்புமிகு ( நெசமாவா?) உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அது ஐ.பி.சி 124 ஏ பிரிவின் படி குற்றமல்ல என்கிறார்.
அது குறித்தான செய்தி பின்வருமாறு.
அருந்ததி ராய் பேசியதில் தவறில்லை-நடவடிக்கையும் இல்லை-ப.சிதம்பரம்
டெல்லி: காஷ்மீர் தொடர்பாக எழுத்தாளர் அருந்ததி ராய் பேசியதில் சட்டப்படி எந்தத் தவறும் இல்லை என்பதால் அவர் மீது டெல்லிகாவல்துறை நடவடிக்கை
எதையும் எடுக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர்
ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களை அவர் சந்தித்தபோது அருந்ததி ராய் குறித்து கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ப.சிதம்பரம், நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் கூட ஒரு நடவடிக்கைதான்.
ஐபிசி 124ஏ பிரிவில் என்ன கூறப்பட்டுள்ளது என்றால், நேரடியாக ஒரு வன்முறையைத் தூண்டும் வகையில் பேசாத வரை, அவர்கள் மீது சகிப்புத் தன்மையைக் காட்டி நடவடிக்கை எடுக்காமல் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அருந்ததி ராய் பேச்சு இந்த நிபந்தனைக்கு உட்பட்டு இருப்பதால் சட்டத்தில் கூறியுள்ளபடி அவர் மீது டெல்லி போலீஸார் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்றார் ப.சிதம்பரம்.
அருந்ததி ராய் பேசியது சரியா,தவறா என்பதைப் பற்றி நாம் கொஞ்சம் தள்ளி வைத்துவிடுவோம். இப்போது மேட்டருக்கு வருகிறேன்.
இன்றைக்கும் நம் நாட்டில் இருக்கும் காஷ்மீர் பற்றி , அதன் பிரிவினை பற்றி பேசுவதும் , அங்கே ஆர்ப்பாட்டங்கள் மூலம் வன்முறையைத்தூண்டுவதும் தவறில்லாத போது , ஐபிசி 124 ஏ பொருந்தாத போது , சீமானுக்கு மட்டும் ஏன் பொருந்துகிறது? எந்தவித வன்முறையும் இங்கே ஏற்படாத போது சீமான் மேல் மட்டும் ஏன் பாதுகாப்புச் சட்டம் பாய்கிறது?
இன்றைக்கும் நம் நாட்டில் இருக்கும் காஷ்மீர் பற்றி , அதன் பிரிவினை பற்றி பேசுவதும் , அங்கே ஆர்ப்பாட்டங்கள் மூலம் வன்முறையைத்தூண்டுவதும் தவறில்லாத போது , ஐபிசி 124 ஏ பொருந்தாத போது , சீமானுக்கு மட்டும் ஏன் பொருந்துகிறது? எந்தவித வன்முறையும் இங்கே ஏற்படாத போது சீமான் மேல் மட்டும் ஏன் பாதுகாப்புச் சட்டம் பாய்கிறது?
எல்லாம் அறிந்த முதுபெரும் அரசியல்வாதி கருணாநிதி அவர்களோ , இந்திய அரசின் தூண் திரு.ப.சிதம்பரம் அவர்களோ பதில் சொல்வார்களா? என்றோ இறந்து போன ராஜிவ்காந்தியின் சிலையை அவமதித்ததற்காக துடிதுடிக்கும் காங்கிரஸ் காவிகளே..... இன்று சிறையில் நீங்கள் அடைத்த்தால் சீமானுக்கு அவமானம் ஒன்றுமில்லை. ஒவ்வொரு சிறையடைப்பும் அவரை மேலும் , மேலும் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிரச் செய்கிறது.
ஆனால் , அவர் இழந்து போன மணீத்துளிகளை உங்களால் திருப்பித்தர முடியுமா? அவர் இழந்து போன இயக்குநர் வாய்ப்புக்களை , அவர் தவறவிட்ட கணங்களுக்கு இழப்பீடாக என்ன தருவீர்கள்?
ஆனால் , அவர் இழந்து போன மணீத்துளிகளை உங்களால் திருப்பித்தர முடியுமா? அவர் இழந்து போன இயக்குநர் வாய்ப்புக்களை , அவர் தவறவிட்ட கணங்களுக்கு இழப்பீடாக என்ன தருவீர்கள்?
காஷ்மீரிகளுக்கு ஒரு நியாயம் , தமிழனுக்கு ஒரு நியாயம் என்பதில் ஆச்சரியமேதுமில்லை. அழுத பிள்ளைக்குத்தான் அன்னையாகவே இருந்தாலும் பாலூட்டுகிறாள் . சினிமாவின் மோகத்திலும் , கட்சி என்கிற பேதைமையிலும் முட்டாள் தமிழன் மூழ்கிக் கிடக்கிறவரை இவர்கள் நம் மீது குதிரையேறவே செய்வார்கள்...
மீனவர்களுக்காக பேசியே சீமான் உள்ளே சென்றார் , ஆனால் மீனவ சமுதாயம் அவருக்காக குரல் கொடுக்காதது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். நேற்றைக்கும் கூட இலங்கை கடற்படை மீனவர்களைத் தாக்கியிருக்கிறது.
மீனவனே ,
இலங்கை மீனவனுடன் பேசியாயிற்று, இந்திய , இலங்கை அரசுடன் பேசியாயிற்று. இனி யாருடன் பேசுவதாக உத்தேசம்? மயிலே மயிலே என்றால் இறகு போடுமா ? இங்கே போராடாமல் பிச்சை கூட கிடைப்பதில்லை. புரிந்து கொண்டால் உனக்கு வாழ்வு!
ஆக , அருந்ததி ராய்க்குப் பொருந்தும் ஐபிசி 124 ஏ , சீமானுக்குப் பொருந்தவில்லை என்றால் தமிழ்நாட்டுக்கென தனிச் சட்டத்தையா இந்தியா கொண்டிருக்கிறது. இல்லை , இவர்களின் அரசியலுக்காகவே சீமான் கைது செய்யப்பட்டிருக்கிறார். சீமானைக் கண்டு காங்கிரஸ் கட்சியும் , திமுகவும் பயப்படுகின்றன. அந்தப் பயமே அவரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் உள்ளே தள்ளும் அளவிற்கு ஆத்திரமூட்டி இருக்கிறது. பாதி மாவட்டச்செயலாளர்கள் வைகோ பின்னே போன போதும் , அசராத திமுக , சீமானின் "நாம் தமிழருக்குப்" பயந்திருக்கிறது.
அந்தப் பயமே சீமானின் வெற்றி.
Comments
அருந்ததிராய் உலகமறிந்த முகம்.அவரது கைது இந்தியாவின் முகத்தை அப்பட்டமாக்குவதோடு காஷ்மீர் பிரச்சினைக்கு இன்னும் நெருப்பு வைப்பது மாதிரியாகிவிடுமென்பது சிதம்பரமோ மத்திய அரசோ அறியாததல்ல.
சீமானின் கைது வல்லான் வகுத்தது சட்டமென்பதால் அது ஐபிசி 124ஏ பிரிவுக்குள் அடக்கம்.
சீமான் கைது குறித்த மீனவர்கள் குரல் பிரதிபலிக்காமல் போனது வருத்தத்தை அளிக்கிறது.
விரும்புவர்களுக்கும் விரும்பாதவர்களுக்கும் சீமான் தமிழகத்தில் இனி உச்சரிக்கும் சொல்லாகட்டும்.