Skip to main content

சீமானுக்குப் பொருந்தாத ஐபிசி 124ஏ பிரிவு.

புகழ்பெற்ற எழுத்தாளரும் , மனித உரிமை ஆர்வலருமான திருமதி.அருந்ததி ராய் அவர்கள் "காஷ்மீர்" எப்போதுமே இந்தியாவின் ஒரு பகுதியான இருந்ததில்லை என்று புதுதில்லி ஆய்வரங்கம் ஒன்றில் சொன்னதும் , ஹிலானி அவர்கள் "சுதந்திரமே தீர்வு" என்று சொன்னதும் பஜ்ரங்தள் கோஷ்டிகளாலும், வட இந்திய செய்திச்சேனல் மாபியாக்களாலும் பெரும் பிரச்சினை ஆக்கப்பட்டது தெரிந்தமையே.

பிரிவினையைத்தூண்டியதாக திருமதி.ராய் மீது வழக்குத்தொடரப்படும் , அவர் கைது செய்யப்படுவார் என்றும் பரபரப்பாக பேசப்பட்ட சூழலில் மாண்புமிகு ( நெசமாவா?) உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அது ஐ.பி.சி 124 ஏ பிரிவின் படி குற்றமல்ல என்கிறார்.

அது குறித்தான செய்தி பின்வருமாறு.

அருந்ததி ராய் பேசியதில் தவறில்லை-நடவடிக்கையும் இல்லை-ப.சிதம்பரம்

டெல்லி: காஷ்மீர் தொடர்பாக எழுத்தாளர் அருந்ததி ராய் பேசியதில் சட்டப்படி எந்தத் தவறும் இல்லை என்பதால் அவர் மீது டெல்லி [^] காவல்துறை நடவடிக்கை [^] எதையும் எடுக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் [^] ப.சிதம்பரம் கூறியுள்ளார்.


டெல்லியில் இன்று செய்தியாளர்களை அவர் சந்தித்தபோது அருந்ததி ராய் குறித்து கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ப.சிதம்பரம், நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் கூட ஒரு நடவடிக்கைதான்.


ஐபிசி 124ஏ பிரிவில் என்ன கூறப்பட்டுள்ளது என்றால், நேரடியாக ஒரு வன்முறையைத் தூண்டும் வகையில் பேசாத வரை, அவர்கள் மீது சகிப்புத் தன்மையைக் காட்டி நடவடிக்கை எடுக்காமல் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.


அருந்ததி ராய் பேச்சு இந்த நிபந்தனைக்கு உட்பட்டு இருப்பதால் சட்டத்தில் கூறியுள்ளபடி அவர் மீது டெல்லி போலீஸார் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்றார் ப.சிதம்பரம்.
 அருந்ததி ராய் பேசியது சரியா,தவறா என்பதைப் பற்றி நாம் கொஞ்சம் தள்ளி வைத்துவிடுவோம். இப்போது மேட்டருக்கு வருகிறேன்.


இன்றைக்கும் நம் நாட்டில் இருக்கும் காஷ்மீர் பற்றி , அதன் பிரிவினை பற்றி பேசுவதும் , அங்கே ஆர்ப்பாட்டங்கள் மூலம் வன்முறையைத்தூண்டுவதும் தவறில்லாத போது , ஐபிசி 124 ஏ பொருந்தாத போது , சீமானுக்கு மட்டும் ஏன் பொருந்துகிறது? எந்தவித வன்முறையும் இங்கே ஏற்படாத போது சீமான் மேல் மட்டும் ஏன் பாதுகாப்புச் சட்டம் பாய்கிறது? 

எல்லாம் அறிந்த முதுபெரும் அரசியல்வாதி கருணாநிதி அவர்களோ , இந்திய அரசின் தூண் திரு.ப.சிதம்பரம் அவர்களோ பதில் சொல்வார்களா? என்றோ இறந்து போன ராஜிவ்காந்தியின் சிலையை அவமதித்ததற்காக துடிதுடிக்கும் காங்கிரஸ் காவிகளே..... இன்று சிறையில் நீங்கள் அடைத்த்தால் சீமானுக்கு அவமானம் ஒன்றுமில்லை. ஒவ்வொரு சிறையடைப்பும் அவரை மேலும் , மேலும் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிரச் செய்கிறது.


ஆனால் , அவர் இழந்து போன மணீத்துளிகளை உங்களால் திருப்பித்தர முடியுமா? அவர் இழந்து போன இயக்குநர் வாய்ப்புக்களை , அவர் தவறவிட்ட கணங்களுக்கு இழப்பீடாக என்ன தருவீர்கள்?
 
காஷ்மீரிகளுக்கு ஒரு நியாயம் , தமிழனுக்கு ஒரு நியாயம் என்பதில் ஆச்சரியமேதுமில்லை. அழுத பிள்ளைக்குத்தான் அன்னையாகவே இருந்தாலும் பாலூட்டுகிறாள் . சினிமாவின் மோகத்திலும் , கட்சி என்கிற பேதைமையிலும் முட்டாள் தமிழன் மூழ்கிக் கிடக்கிறவரை இவர்கள் நம் மீது குதிரையேறவே செய்வார்கள்...

மீனவர்களுக்காக பேசியே சீமான் உள்ளே சென்றார் , ஆனால் மீனவ சமுதாயம் அவருக்காக குரல் கொடுக்காதது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். நேற்றைக்கும் கூட இலங்கை கடற்படை மீனவர்களைத் தாக்கியிருக்கிறது.  

மீனவனே , 

இலங்கை மீனவனுடன் பேசியாயிற்று, இந்திய , இலங்கை அரசுடன் பேசியாயிற்று. இனி யாருடன் பேசுவதாக உத்தேசம்? மயிலே மயிலே என்றால் இறகு போடுமா ? இங்கே போராடாமல் பிச்சை கூட கிடைப்பதில்லை. புரிந்து கொண்டால் உனக்கு வாழ்வு!

 ஆக , அருந்ததி ராய்க்குப் பொருந்தும் ஐபிசி 124 ஏ , சீமானுக்குப் பொருந்தவில்லை என்றால் தமிழ்நாட்டுக்கென தனிச் சட்டத்தையா இந்தியா கொண்டிருக்கிறது. இல்லை , இவர்களின் அரசியலுக்காகவே சீமான் கைது செய்யப்பட்டிருக்கிறார். சீமானைக் கண்டு காங்கிரஸ் கட்சியும் , திமுகவும் பயப்படுகின்றன. அந்தப் பயமே அவரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் உள்ளே தள்ளும் அளவிற்கு ஆத்திரமூட்டி இருக்கிறது.  பாதி மாவட்டச்செயலாளர்கள் வைகோ பின்னே போன போதும் , அசராத திமுக , சீமானின் "நாம் தமிழருக்குப்" பயந்திருக்கிறது. 

அந்தப் பயமே சீமானின் வெற்றி.


Comments

இந்தியாவுக்கு வேட்டு வைக்கும் பாகிஸ்தான் என்ற உள்கூறு காஷ்மீரில் இருப்பதால் அருந்ததிராயின் கருத்துக்கு செல்லாமல் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் கைது செய்யாததற்கான காரணத்தை ஆராய்வோம்.

அருந்ததிராய் உலகமறிந்த முகம்.அவரது கைது இந்தியாவின் முகத்தை அப்பட்டமாக்குவதோடு காஷ்மீர் பிரச்சினைக்கு இன்னும் நெருப்பு வைப்பது மாதிரியாகிவிடுமென்பது சிதம்பரமோ மத்திய அரசோ அறியாததல்ல.

சீமானின் கைது வல்லான் வகுத்தது சட்டமென்பதால் அது ஐபிசி 124ஏ பிரிவுக்குள் அடக்கம்.

சீமான் கைது குறித்த மீனவர்கள் குரல் பிரதிபலிக்காமல் போனது வருத்தத்தை அளிக்கிறது.

விரும்புவர்களுக்கும் விரும்பாதவர்களுக்கும் சீமான் தமிழகத்தில் இனி உச்சரிக்கும் சொல்லாகட்டும்.

Popular posts from this blog

பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது!

சீமான்களின் சபையினிலேயே , கடிதம் எழுதி எழுதிக் களைத்துப்போனதோர் கிழட்டுச் சிங்கம்.....முன்னாலுக்கும் முன்னால் அவர் கொண்ட தமிழ்ப்பற்று.....இன்னாளில் அது தமது மக்கட்பற்றாய் மாறிப்போனதொரு சோகம். ஏதோவொரு புண்ணியத்தில், எவரோ செய்த வரலாற்றுத் தவறால் , கொள்கை , தொலைநோக்கு , மக்கட்பற்று இவை பற்றிய சிந்தையேதுமின்றி அரசியலில் விபத்தாய் விளைந்த கொடநாட்டு ஈழத்தாய்....தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தமிழர் பற்றியும் , தமிழர் அரசியல் பற்றியும் எழுதி வைத்துப் பேசும் செல்வி யவர்.........இன்னமும் அவர் சேலை பிடித்துத்திரியும் வீணர் கூட்டம்.! கூட்டணிக்கேற்றப்படி கொள்கையை மாற்றிக்கொள்ளும் மருத்துவப் படையாச்சி.........வீரமிகு வன்னியகுலத்திலே வந்துதித்த சந்தர்ப்பவாதச் சாக்கடை....சமரசமற்ற கொள்கை அரசியலை சந்தர்ப்பவாதச் சாக்கடைக்குள் தள்ளிய பெருமைக்குரிய மருத்துவர் தமிழ்க்குடிதாங்காத தமிழ்க்குடிதாங்கி! யாரை எதற்காக எதிர்த்து அரசியல் செய்யவேண்டுமே அவர்களோடே தம் தேவைக்குதந்த படி கூட்டு வைத்துக்கொண்டு ஈழத்திற்க்காய் எந்நேரமும் பாடுபடும் திரு.வைகோ அவர்கள்....அவரும் சிறை சென்றார்.

நண்பர் 'டோண்டு' ராகவன்...

உயிரோடு இருக்கும்வரை அறிக்கைகளால் அர்சித்து எதிர்ப்பரசியல் நடாத்தி செத்துபோன பிறகு ஆருயிர் நண்பர் என்று அழைத்துக்கொள்ளும் எல்லா அரசியல்வாதிகளையும் போலவே நான். எனக்கும் மறைந்த உயர்திரு 'டோண்டு' ராகவன் அவர்களுக்குமான பரிச்சயம் அவ்வளவொன்றும் அதிகமில்லைதான். பதிவுலகையும் , பர்ஸனல் லைப்பையும் பிரித்து வைத்துக்கொள்ளும் எண்ணமுடைய நான் , டோண்டு மட்டுமல்ல மற்றபல பதிவுலக நண்பர்களுடனும் கூட தனிப்பட்ட தொடர்புகளை வைத்துக்கொண்டதில்லை... இருந்தாலும் , அவ்வப்போது பதிவுலக பின்னூட்டங்களின்பாலே தொடர்ந்துகொண்டிருந்த தொடர்பு , எனது 'போலி டோண்டு' பற்றிய கட்டுரையொன்றிலேயே  தீவிர விவாதமாக மாறியது.. ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீதோ இல்லை அவர்தம் பிற்போக்கான கருத்துக்கள் மீதோ இருந்திருக்கலாம். கடினமாக ஓரிரு முறை பேசியிருக்கலாம்.. அத்தனையும் தாண்டி அவர் மிக நல்ல மனிதர் , கடும் உழைப்பாளி என்பதை அவரது பதிவுலகம் மூலமாக அறிந்தவனெனினும் உறுதியாக கூறவியலும்.. அத்தகைய நல்ல மனிதரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் , நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்... வருத்தங்கள

எஸ்.எஸ்.பொன்முடி - மனிதருள் மாணிக்கம்.

எஸ்.எஸ்.பொன்முடி , கொங்குச்சீமையிலே குறிப்பாக பல்லடம் , சூலூர் வட்டாரத்தில் தெரியாதவர்கள் சொற்பமே. எஸ்.எஸ். பொன்முடி அவர்கள் மட்டுமல்ல , அவர்களது குடும்பமே சூலூரில் பழம்பெருமை மிக்க குடும்பம். காலங்காலமாக அவர்களது குடும்பத்தினரே சூலூரின் அனைத்து தேர்தல்களிலும் வென்றதும் , வெல்வதும் வரலாறு. பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவராயினும் மாற்றுக்கட்சியினராலும் மதிக்கப்படும் சில மனிதர்களில் எஸ்.எஸ் பொன்முடியும் ஒருவர். அவருக்கும் , எனக்குமான பரிச்சயமொன்றும் அவ்வளவு அதிகமில்லைதான். அப்போது எனக்கு ஒரு பத்திலிருந்து , பதினைந்து வயதிருந்திருக்கலாம். கலங்கலில் கவுன்சிலர் தங்கவேலு சர்வ அதிகாரமும் பொருந்தியவராய் வலம் வந்துகொண்டிருந்தார். அவர் எஸ்.எஸ்.பொன்முடியின் வலக்கரம். ஊருக்கு மேற்கே ஜல்லிக்குழி என்ற மனிதர்கள் உபயோகப்படுத்த முடியாத , இயலாத பகுதி ஒன்றிருந்தது.....அப்போது கழகம் ஆட்சியிலிருந்தது + பொன்முடி எம்.எல்.ஏவாக இருந்தார். கட்சிக்காரர்கள் , குறிப்பாக ஒடுக்கப்பட்ட , மிக பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் கேட்டுக்கொண்டதற்காக , மிகுந்த பிரயாசைப்பட்டு தங்கவேல் மற்றும் எஸ்.எஸ்.பொன்முடி அவ