சீமான்களின் சபையினிலேயே , கடிதம் எழுதி எழுதிக் களைத்துப்போனதோர் கிழட்டுச் சிங்கம்.....முன்னாலுக்கும் முன்னால் அவர் கொண்ட தமிழ்ப்பற்று.....இன்னாளில் அது தமது மக்கட்பற்றாய் மாறிப்போனதொரு சோகம்.
ஏதோவொரு புண்ணியத்தில், எவரோ செய்த வரலாற்றுத் தவறால் , கொள்கை , தொலைநோக்கு , மக்கட்பற்று இவை பற்றிய சிந்தையேதுமின்றி அரசியலில் விபத்தாய் விளைந்த கொடநாட்டு ஈழத்தாய்....தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தமிழர் பற்றியும் , தமிழர் அரசியல் பற்றியும் எழுதி வைத்துப் பேசும் செல்வி யவர்.........இன்னமும் அவர் சேலை பிடித்துத்திரியும் வீணர் கூட்டம்.!
கூட்டணிக்கேற்றப்படி கொள்கையை மாற்றிக்கொள்ளும் மருத்துவப் படையாச்சி.........வீரமிகு வன்னியகுலத்திலே வந்துதித்த சந்தர்ப்பவாதச் சாக்கடை....சமரசமற்ற கொள்கை அரசியலை சந்தர்ப்பவாதச் சாக்கடைக்குள் தள்ளிய பெருமைக்குரிய மருத்துவர் தமிழ்க்குடிதாங்காத தமிழ்க்குடிதாங்கி!
யாரை எதற்காக எதிர்த்து அரசியல் செய்யவேண்டுமே அவர்களோடே தம் தேவைக்குதந்த படி கூட்டு வைத்துக்கொண்டு ஈழத்திற்க்காய் எந்நேரமும் பாடுபடும் திரு.வைகோ அவர்கள்....அவரும் சிறை சென்றார். ஈழத்திற்கே சிறை சென்றார்......ஆனால் , யார் ஈழம் என்ற கருத்துருவாக்கத்தையே எதிர்த்தார்களோ அவர்களூடே கூட்டு வைத்தார் , அத்தோடு அவரது உண்மையான தமிழினப்பற்று பற்றிய முடிவு எடுக்கப்பட்டது.!!! முடிவு கட்டப்பட்டது.!
ஒடுக்கப்பட்டவர்களின் உண்மைமுகமாய் தலைநிமிர்ந்த திருமா , ஓரிரு பாராளுமன்ற சீட்டுக்களுக்காய் தலை குனிந்ததென்ன பாவம்...உணர்ச்சி பொங்கப் பேசுவது மட்டுமே தமிழுணர்வா? பிறகு , தமிழின அழிப்பிற்கு முட்டுக்கொடுத்து வந்த கிழச்சிங்கத்திற்கு ஆதரவாய் மாறிப்போனால் எப்படி மன்னிப்பது????
இனி அரசியலில் மிஞ்சி நிற்பது யார்?????
புதிய தமிழகம் என்ற பெயரில் அம்மாவிடம் சீட்டுக்காகக் கையேந்தும் திரு.கிருஷ்ணசாமியா? இல்லை வெற்று வார்த்தைகளால் மாற்றம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் விருத்தகிரியையா?
இப்படி சுயநல அரசியலில் மூழ்கிய கூட்டத்திடை வந்துதித்த கொள்கைச் சிங்கமாய் வந்திருக்கும் வழிகாட்டி சீமான்!
சிறைக்கஞ்சா வீரமும் , சிதறாச் செந்தமிழும், அடங்காப் போர்க்குணமும் , விழிக்கசிவில் ஈழ நேசமும் கொண்ட உணர்வாளர் சீமான்!
ஆருயிர்த்தமிழர்பால் அடங்காப்பற்றும் , சமரசமில்லா சரித்திர நோக்கும் , பொங்குதமிழ்ப் போர்க்குணமும் கொண்டு வாராது வந்த மாமணியாய் வந்துதித்த பகலவன் சீமான்.
அவர் என்ன செய்தார் என்று சிலர் கேட்க்கூடும்....கேட்பவர் என்ன செய்தார் என்று கேட்டல் தகும்...! அவர் செய்யவேண்டியது இனிமேல் தான் நிறைய இருக்கிறது. அதற்கான இளைஞர் பலத்தை திரட்டுதல் அவரால் முடியும்...
சீமானின் சொல்லுக்கு மயங்கியோர் அவர் பின்னால் இல்லை...ஒருவேளை அப்படியிருந்தால் அது மற்றுமொரு தனிநபர் அரசியல்....
மாற்றாய் அவர் சொல்லுவதெல்லாம் உணர்வுள்ள தமிழர் சொல்ல விரும்பியவை...
மாற்றாய் அவர் சொல்லுவதெல்லாம் உணர்வுள்ள தமிழர் சொல்ல விரும்பியவை...
அதுவே , தனித்துவம்...அதுவே தனித்துவ அரசியல்.........
இனி பாரதிதாசனின் வரிகளுடன் முடிக்கிறோம்.!
பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது!
சிறுத்தையே வெளியே வா!
எலி என உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலி
எனச் செயல் செய்யப்புறப்படு வெளியில்!
நம்பினை பகலினை நள்ளிருள் என்றோ
சிம்புட் பறவையே சிறகை விரி,எழு!
சிங்க இளைஞனே திருப்பு முகம்! திறவிழி!
இங்குள்ள நாட்டுக்கிழி கழுதை ஆட்சியா?
கைவிரித்து வந்த கயவர், நம்மிடைப்பொய்விரித்து
நம்புலன்கள் மறைத்துத் தமிழுக்கு விலங்கிட்டுத்
தாயகம் பற்றி நமக்குள்ள உரிமை தமக்கென்பார் எனில்,
வழி வழி வந்த உன் மறத்தனம் எங்கே? மொழி பற்றெங்கே?
விழிப்புற்று எழுக! இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்றும்
புகழ்ச்சியே எம் பூணாம் என்றும் வையம் ஆண்ட வண்டமிழ் மரபே!
கையிருப்பைக்காட்ட எழுந்திடு!
குறிக்கும் உன் இளைஞர் கூட்டம் எங்கே?
மறிக்கொணாக் கடல் போல் மாப்பகை மேவிடு!
நன் மொழிக்கு நீ புதுமை ஏற்றுவாய்!
மக்களை ஒன்று சேர்! வாழ்வை உயர்த்துக!
உன் கைக்குள் உள்ள திறமையை காட்ட எழுந்திரு!
வாழ்க இளைஞனே, வாழ்க உன் கூட்டம்
- பாரதிதாசன்
Comments
டாக்டர் கயவரின் எதிப்புக் ஓட்டுகள் எக்காரணம் கொண்டும் புரட்டுக் கிழவிக்கு சாதகமாக அமையக் கூடாது.
என் ஆசை என்னவென்றால் சீமான், திருமா, வை.கோ இவர்கள் ஒரு அணியில் திரள வேண்டும். தேர்தல் முடிவைப் பற்றி கவலையின்றி கொள்கையை முன்னிறுத்தி போட்டியிட வேண்டும். நடக்குமா?
--------------------------
தறுதலை
(தெனாவெட்டு குறிப்புகள் -டிச - 2010 )
மொட்டை விட்டு ஈழ மலரை இலைக்குள்ளே தேடிய இதிகாச இந்திரஜித் ! யாறு? யாறு? யாறு?யாறு? யாறு? யாறு? யாறு? ச்ச்ச்ச்சீசீமான்