Skip to main content

அரசியல் கிச்சு கிச்சு....!!!

தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. வருங்காலத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு கடும் சவால்களை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும். நீங்கள் சரியாக பாடுபட்டால் உங்களில் ஒருவர் (இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள்) தமிழக முதலமைச்சராக வாய்ப்பு இருக்கிறது.

 ராகுல் காந்தி

சரியாத்தான் சொல்லி இருக்காரு...எப்படிக்கஷ்டப்பட்டாலும் இன்னும் இருவது முப்பது வருஷத்துக்கு காங்கிரஸ் ஆட்சி தமிழ்நாட்டுல அமைய வாய்ப்புக்கிடைக்காது...அதனால , முதியோர் காங்கிரஸ் காரங்க யாரும் முதல்வர் ஆக முடியாதே....இளைஞர் காங்கிரஸ் காரங்க தான் ஆக வாய்ப்புண்டு.......ராகுலின் தொலைநோக்குப் பார்வை புல்லரிக்க வைக்கிறது!!

பொதுஜனம்



சென்னை: இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அந்நாட்டு அரசு போதிய உதவிகளை செய்யாதது கவலையளிப்பதாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறினார்.
சபாஷ்...இதைவிடக் காமெடி இதுகாறும் நடந்ததொன்றும் கிடையாது...பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் கலை காங்கிரசுகாரர்களுக்குப் புதிதா என்ன? இறுதி யுத்தம் நடைபெறுகின்ற காலத்தில் இலங்கை அரசுக்கு எந்நேரமும் காவடி தூக்கிக்கொண்டு இன்று தேர்தல் நேரம் வந்தவுடன் எப்படிதான் மனுசன் சலிக்காம பொய் சொல்றாரோ???? நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமையானவர்கள் என்று தங்கபாலுவைப் பார்த்து கமெண்ட் அடிப்பாரோ ராகுல் ஒருவேளை?

பொதுஜனம்


சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் குறுகிய கண்ணோட்டத்தில் செயல்பட்டு இரு மாநில மக்களுக்கும் இடையே நிலவி வரும் ஒற்றுமையை சிதைத்து விடக் கூடாது என்று கேரள அரசுக்கும், கேரள மக்களுக்கும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவுரை கூறியுள்ளார்.

சபாஷ் , மிக நல்ல அறிவுரை தான்...இதே போலவே நீங்கள் அன்று குறுகிய மனப்பான்மையில்லாமல் செயல்பட்டிருந்தால் , கர்நாடகாக்காரன் மைசூர் , கொள்ளேகால் மற்றும் தமிழக எல்லைப்பகுதிகளிலிருந்து தமிழர்களை அவர்கள் விரட்டியடித்திருக்க மாட்டார்கள்.......அன்று எடுத்தேன் , கவிழ்த்தேன் என்று செயல்பட்டதால் நிகழ்ந்த அவலங்களை கோவை , ஈரோடு மாவட்டக்காரர்கள்  என்றுமே மறக்கவியலாது...என்ன செய்வது...அன்னிக்கு இப்படி நல்லவிதமான எழுதிக்கொடுக்கச் சிறந்த அடிமைகள் கிடைத்திருக்க வில்லை என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறதம்மா.....


பொதுஜனம்
சென்னை: ஸ்பெக்டரம் விவகாரத்தில் பதவியை ராஜினாமா செய்த முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவை ஆதரித்து தமிழகம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் கருத்தரங்குகள் நடத்த திமுக முடிவு செய்துள்ளது.

கொள்கைவிளக்கப்பொதுக்கூட்டம் போட்ட காலமெல்லாம் போய் , இப்ப ஊழல் விளக்க பொதுக்கூட்டம் போடற லெவலுக்கு கழகம் டெவலப் ஆயிடுச்சி போங்க.....பரிணாம வளர்ச்சி பிரமாதம்....அப்படியே இளைஞன் படம் பற்றி பொதுமக்களுக்கு ஒரு விளக்கக் கூட்டம் போட்டா தயாரிப்பாளர் மார்ட்டின் ஆவது தப்பிச்சிக்கிடுவாரில்ல??? என்ன நாஞ்சொல்றது?

பொதுஜனம்
ராகுல் காந்தியின் அரசியல் நிகழ்ச்சியை தனது மண்டபத்தில் நடத்த சென்னை பல்கலைக்கழகம் [^] அனுமதி மறுத்துவிட்டது. தமிழக அரசின் உத்தரவுப்படியே பல்கலைக்கழகம் இந்த அதிரடி முடிவை எடுத்ததாகக் கருதப்படுகிறது. இதன்மூலம் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஆரம்பமாகிவிட்டதாகத் தெரிகிறது.

காங்கிரஸ் - திமுக கூட்டணியில் விரிசல் எல்லாம் ஏற்படாது...இது சீமானின் அதிர்வேட்டால் நடந்த மாற்றம்....காங்கிரசுக்கு அனுமதி தந்தால் , எனக்கும் அனுமதி தரணும்...இல்லாட்டி கோர்ட்டுக்கு போவேன் நு போட்ட போடுல திமுக அரசு மெரண்டுடுச்சி...அதான் உண்மையான காரணம்...


பொதுஜனம்


லண்டன் : விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனரும் , அதன் தலைமை எடிட்டருமான ஜூலியான் அசேஞ் பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில் : இந்திய ஊடகங்கள் வியத்தகு ஆற்றல் கொண்டுள்ளதாக பாராட்டியுள்ளார். [...]




ஆமாம்...இருப்பதை இல்லையெனவும் , இல்லாததை இருப்பதாகவும் , அமைச்சர் பதவிகளுக்கு புரோக்கர் வேலை பார்ப்பதிலும் இந்திய ஊடகங்களை விஞ்ச உலகில் எதுவும் இல்லை என்பது உண்மைதான் திரு.ஜுலியன் அசாங்கே அவர்களே....உங்களைப் போன்ற புனிதப் பணியில் இருப்பவர்கள் இந்திய ஊடகங்களை பாராட்டுவதென்பது கிச்சுகிச்சுக்களிலேயே மிகவும் உயர்ந்த கிச்சுகிச்சு.!! தினமலர் போன்ற பத்திரிக்கைகள் எல்லாம் ஊடக இலக்கணத்துக்கே ஒரு எடுத்துக்காட்டு என்று சொன்னாலும் சொல்வார்கள் புத்திஜீவிகள்...!

பொதுஜனம்

டில்லி: ஆந்திராவில் தனித்தெலுங்கான குறித்த ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை இன்னும் ஒரு வாரத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதால் மத்திய ராணுவப்படையினை அழைப்பது என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது..


தனிநாடு கேட்டுப்போராடுகின்ற காஷ்மீரில் இராணுவம் இருக்கக்கூடாது என்ற போராட்டங்களைத் தாண்டி , இப்போ எல்லாம் தனிமாநிலக் கோரிக்கைக்கே இராணுவத்தைக் குவிக்க ஆரம்பிச்சாச்சி...இனி பேசாம ஊருக்கு ஊர் போலிஸ் ஸ்டேஷனை மாத்திட்டு , மிலிட்டரி ஸ்டேஷனை வைச்சுக்கிடலாம்....உலகத்துலயே இதுபோன்ற அநியாயங்கள் எல்லாம் இந்தியாவுல மட்டுமே தான் நடக்கும் போங்க...!

பொதுஜனம்...

Comments

நல்ல விமர்சனம்
Thank you Govi Kannan. For your visit and comment.!

:)

meeting you afterrrrrrrrrrrrrrrrrrrrrr long time.!

Popular posts from this blog

பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது!

சீமான்களின் சபையினிலேயே , கடிதம் எழுதி எழுதிக் களைத்துப்போனதோர் கிழட்டுச் சிங்கம்.....முன்னாலுக்கும் முன்னால் அவர் கொண்ட தமிழ்ப்பற்று.....இன்னாளில் அது தமது மக்கட்பற்றாய் மாறிப்போனதொரு சோகம். ஏதோவொரு புண்ணியத்தில், எவரோ செய்த வரலாற்றுத் தவறால் , கொள்கை , தொலைநோக்கு , மக்கட்பற்று இவை பற்றிய சிந்தையேதுமின்றி அரசியலில் விபத்தாய் விளைந்த கொடநாட்டு ஈழத்தாய்....தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தமிழர் பற்றியும் , தமிழர் அரசியல் பற்றியும் எழுதி வைத்துப் பேசும் செல்வி யவர்.........இன்னமும் அவர் சேலை பிடித்துத்திரியும் வீணர் கூட்டம்.! கூட்டணிக்கேற்றப்படி கொள்கையை மாற்றிக்கொள்ளும் மருத்துவப் படையாச்சி.........வீரமிகு வன்னியகுலத்திலே வந்துதித்த சந்தர்ப்பவாதச் சாக்கடை....சமரசமற்ற கொள்கை அரசியலை சந்தர்ப்பவாதச் சாக்கடைக்குள் தள்ளிய பெருமைக்குரிய மருத்துவர் தமிழ்க்குடிதாங்காத தமிழ்க்குடிதாங்கி! யாரை எதற்காக எதிர்த்து அரசியல் செய்யவேண்டுமே அவர்களோடே தம் தேவைக்குதந்த படி கூட்டு வைத்துக்கொண்டு ஈழத்திற்க்காய் எந்நேரமும் பாடுபடும் திரு.வைகோ அவர்கள்....அவரும் சிறை சென்றார்.

நண்பர் 'டோண்டு' ராகவன்...

உயிரோடு இருக்கும்வரை அறிக்கைகளால் அர்சித்து எதிர்ப்பரசியல் நடாத்தி செத்துபோன பிறகு ஆருயிர் நண்பர் என்று அழைத்துக்கொள்ளும் எல்லா அரசியல்வாதிகளையும் போலவே நான். எனக்கும் மறைந்த உயர்திரு 'டோண்டு' ராகவன் அவர்களுக்குமான பரிச்சயம் அவ்வளவொன்றும் அதிகமில்லைதான். பதிவுலகையும் , பர்ஸனல் லைப்பையும் பிரித்து வைத்துக்கொள்ளும் எண்ணமுடைய நான் , டோண்டு மட்டுமல்ல மற்றபல பதிவுலக நண்பர்களுடனும் கூட தனிப்பட்ட தொடர்புகளை வைத்துக்கொண்டதில்லை... இருந்தாலும் , அவ்வப்போது பதிவுலக பின்னூட்டங்களின்பாலே தொடர்ந்துகொண்டிருந்த தொடர்பு , எனது 'போலி டோண்டு' பற்றிய கட்டுரையொன்றிலேயே  தீவிர விவாதமாக மாறியது.. ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீதோ இல்லை அவர்தம் பிற்போக்கான கருத்துக்கள் மீதோ இருந்திருக்கலாம். கடினமாக ஓரிரு முறை பேசியிருக்கலாம்.. அத்தனையும் தாண்டி அவர் மிக நல்ல மனிதர் , கடும் உழைப்பாளி என்பதை அவரது பதிவுலகம் மூலமாக அறிந்தவனெனினும் உறுதியாக கூறவியலும்.. அத்தகைய நல்ல மனிதரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் , நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்... வருத்தங்கள

எஸ்.எஸ்.பொன்முடி - மனிதருள் மாணிக்கம்.

எஸ்.எஸ்.பொன்முடி , கொங்குச்சீமையிலே குறிப்பாக பல்லடம் , சூலூர் வட்டாரத்தில் தெரியாதவர்கள் சொற்பமே. எஸ்.எஸ். பொன்முடி அவர்கள் மட்டுமல்ல , அவர்களது குடும்பமே சூலூரில் பழம்பெருமை மிக்க குடும்பம். காலங்காலமாக அவர்களது குடும்பத்தினரே சூலூரின் அனைத்து தேர்தல்களிலும் வென்றதும் , வெல்வதும் வரலாறு. பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவராயினும் மாற்றுக்கட்சியினராலும் மதிக்கப்படும் சில மனிதர்களில் எஸ்.எஸ் பொன்முடியும் ஒருவர். அவருக்கும் , எனக்குமான பரிச்சயமொன்றும் அவ்வளவு அதிகமில்லைதான். அப்போது எனக்கு ஒரு பத்திலிருந்து , பதினைந்து வயதிருந்திருக்கலாம். கலங்கலில் கவுன்சிலர் தங்கவேலு சர்வ அதிகாரமும் பொருந்தியவராய் வலம் வந்துகொண்டிருந்தார். அவர் எஸ்.எஸ்.பொன்முடியின் வலக்கரம். ஊருக்கு மேற்கே ஜல்லிக்குழி என்ற மனிதர்கள் உபயோகப்படுத்த முடியாத , இயலாத பகுதி ஒன்றிருந்தது.....அப்போது கழகம் ஆட்சியிலிருந்தது + பொன்முடி எம்.எல்.ஏவாக இருந்தார். கட்சிக்காரர்கள் , குறிப்பாக ஒடுக்கப்பட்ட , மிக பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் கேட்டுக்கொண்டதற்காக , மிகுந்த பிரயாசைப்பட்டு தங்கவேல் மற்றும் எஸ்.எஸ்.பொன்முடி அவ