Skip to main content

நல்ல நண்பர்களைப் பெற நாற்பது வழிகள்.!

60 நாட்களில் ஆங்கிலம் கற்றுக்கொள்ளலாம் , பத்தே நாளில் மூல வியாதிக்கு டாட்டா காட்டலாம் என்பது போன்ற போலி விளம்பரங்களிலொன்றாக இதையும் நினைத்துக்கொண்டு வந்திருந்தால் நீங்கள் தவறான இடத்திற்கு வந்திருக்கிறீர்கள்..

அது மட்டுமின்றி , தமிழ் மணத்தில் நட்பு வட்டம் ஏற்படுத்துவத்ற்கும் இந்தப்பதிவிற்கும் சம்பந்தமேதுமில்லை..அதற்கு நிறைய வேறு வழிகள் இருக்கின்றன.....(தெரிந்தால் சொல்லவும் ....) , இனியாவது பதிவிற்கு வாடா என்கிறீர்களா ,???? ஓக்கே , வந்தாச்சு...!!!

நட்பு

பெற்றோர்களிடமும் , கட்டிய மனைவியிடமும் இருக்காத நமது ரகசியங்கள் பல நண்பர்களிடம் இருக்கக் கூடும்...அத்தகைய நண்பர்கள் உங்களுக்கு நம்பிக்கையான மற்றும் உண்மையானவர்களாகவும் இருப்பதென்பது மிக அவசியம்.


அதைத்தான் வள்ளுவரும் இவ்வாறு குறிப்பிடுகிறார்..

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

நட்பு என்பது யாரோ தெருவில் போகும் ஒரு சிலருடன் சிறிது நேரம் பேசி பின் ஒரு காபி ஷாப்பில் கலந்துரையாடுவது மட்டுமல்ல..நீங்கள் துக்கமாயிருக்கும்போது உங்கள் துக்கங்களை பகிர்ந்து கொள்வதும் , உங்களைத் தேற்றிவிடுவதுமே நட்பு. யாருடனும் இருக்கும் போது உங்கள் மனசு தெளிவாக இருக்கிறதோ அதுதான் உண்மையான நட்பு..இன்னும் நட்புக்கான இலக்கணங்களை தமிழ் சினிமாக்கள் பேசி விட்டதால் நாம் இத்துடன் நிறுத்திக் கொள்வோம் ..

அத்தகைய நல்ல நண்பர்கள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை..
கிடைப்பதில்லையென்றால் ??? கிடைப்பதற்கு நாம் முயற்சிக்கவில்லையென்றே பொருள்... அத்தகைய நட்பிற்குதந்த நடவடிக்கைகள் நம்மிடம் இல்லை என்பதே பொருள்...

அப்படி நினைக்கிறீர்களா??? நம்மிடம் ஏதோ குறை இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?? கையைக் கொடுங்கள் , நம்மிடம் உள்ள குறையை கண்டறிந்தாலே குறை தொண்ணூறு சதம் தீர்ந்துவிட்டது என்று மனவியல் வல்லுநர்கள் சொல்கிறார்கள்.....( எத்தன புக் படிச்சிருக்கேன்..???)

வாருங்கள் , நல்ல நட்பைத் தேடுவோம் ,

முதலில் அதற்கான வழிகளை ( நிறைய கட்டுரைகளிலிருந்தும் , உந்து சக்திக் கட்டுரைகளிலிருந்தும் சுட்டவை - நல்லதைச் சுடுவதில் தப்பில்லை என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க ) தேடுவோம் , பின்பு நல்ல ஆத்மார்த்தமான நண்பனை , நண்பியை.......

  1. நண்பர்களான நீங்கள் கருதுபவர்களை சந்திக்கும் போது எந்நேரமும் தொண தொணவென்று நீங்களே பேசிக்கொண்டிருக்காதீர்கள்...அவர்களைப் பேச விடுங்கள்....அவர்களைக் கவனியுங்கள்.....அவர்கள் நிறைய பேசட்டும்....அதிகப்படியான பகிர்தலே ஆழமான நட்பிற்கு வழி வகுக்கும் என்பதை தெளிவுற உணருங்கள்......
    உதாரணத்திற்கு , நண்பன் தன் காதலியிடம் அவமானப் பட்டு திரும்பியிருக்கிறான் , அதை அவன் சொல்ல எத்தனிக்கிறான்......அந்தச் சமயத்தில் நேற்றிரவு பார்த்த திரைப்படம் பற்றி நீங்கள் பேசிக்கொண்டே இருந்தால் அங்கு ஒரு ஆழமான நட்பிற்கான வாய்ப்பு பட்டுப் போகிறது......மற்றவர்களின் உணர்விற்கு மதிப்புக் கொடுங்கள்.....
  2. நண்பர்களுக்கு பிடித்த விடயங்களைப் பற்றி அதிகம் பேசுங்கள்.............பிடிக்காத விடயங்களைப் பற்றி பேசவே கூடாதென்பதில்லை...பிடித்த விடயங்களைப் பற்றி மட்டுமே பேசுவதென்பதும் முறையில்லை......
    உதாரணத்திற்கு , நண்பனுக்கு உடலுறவு பற்றியும் , பெண்களுடனான உறவு பற்றியும் பேசுவதில் சங்கடம் இருக்குமென்று நீங்கள் உணர்ந்தால் அதைப் பற்றி பேசுவதை தவிருங்கள்......அதைவிடுத்து அத்தகைய நிகழ்வுகள் உங்களுக்கு பிடிக்குமென்பதாலே மற்றவர்கள் அத்தகைய பேச்சை சகித்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்.....அது ஆரோக்கியமான போக்கு அல்ல.
  3. நண்பனுடனோ , நண்பியுடனோ பேசும் போது நமக்கு அவர்கள் எவ்வளவு முக்கியம் என்பதை உணரச் செய்யுங்கள்..........அவர்கள் நமது வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதையும் பதிவு செய்யுங்கள்..அவர்கள் செய்யும் சிறுசிறு உதவிகளும் உங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கிய தேவையாக இருக்கிறதென்பதையும் உணர்த்துங்கள்...
  4. நட்பிற்கு முதல் நண்பன் - ஆரோக்கியமான விவாதம் , நட்பிற்கு முதல் எதிரி - விதண்டாவாதம்......விதண்டாவாதத்தை அறவே தவிருங்கள்.......நண்பர்கள் சொல்வது சரியென்றால் தொடர்ந்து உங்கள் நிலையை விட்டுக் கொடுக்காமல் பேசிக்கொண்டே இருக்காதீர்கள்...அத்தகையதோர் நிலை , கண்டிப்பாக நல்ல நண்பர்களைப் பெற்றுக் கொடுக்காது என்பதை உணருங்கள்.
  5. நண்பர்கள் யாரேனும் உங்களுக்கு உடன்படாத விடயங்களைச் செய்து விட்டால் "நீ செய்தது தவறென்று " உடனே கையைச் சுட்டாதீர்கள்... ஒவ்வொருவருடைய பார்வையும் வேறு வேறானது , ஒருவனுக்கு தவறெனத் தெரியும் விடயம் மற்றவனுக்கும் அவ்வாறே தெரியாது என்ற மாபெறும் உண்மையை உங்கள் மனதில் இருத்திக் கொள்ளுங்கள்......அத்தகைய "தவறு" என்ற சுட்டிக்காட்டல் நமது ஆராயும் திறனையும் , விவாதத்தின் போக்கையும் நீர்த்துப் போயிடச் செய்ய வல்லவை என்பதை உணருங்கள்........
இன்னும் 35 வழிகள் தொடர்ச்சியான பதிவுகளில்......உங்கள் விமர்சனங்கள் இன்னும் இந்தத் தொடர்ச்சியான பதிவிற்கு வலு சேர்க்க உதவும்...

Comments

Popular posts from this blog

பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது!

சீமான்களின் சபையினிலேயே , கடிதம் எழுதி எழுதிக் களைத்துப்போனதோர் கிழட்டுச் சிங்கம்.....முன்னாலுக்கும் முன்னால் அவர் கொண்ட தமிழ்ப்பற்று.....இன்னாளில் அது தமது மக்கட்பற்றாய் மாறிப்போனதொரு சோகம். ஏதோவொரு புண்ணியத்தில், எவரோ செய்த வரலாற்றுத் தவறால் , கொள்கை , தொலைநோக்கு , மக்கட்பற்று இவை பற்றிய சிந்தையேதுமின்றி அரசியலில் விபத்தாய் விளைந்த கொடநாட்டு ஈழத்தாய்....தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தமிழர் பற்றியும் , தமிழர் அரசியல் பற்றியும் எழுதி வைத்துப் பேசும் செல்வி யவர்.........இன்னமும் அவர் சேலை பிடித்துத்திரியும் வீணர் கூட்டம்.! கூட்டணிக்கேற்றப்படி கொள்கையை மாற்றிக்கொள்ளும் மருத்துவப் படையாச்சி.........வீரமிகு வன்னியகுலத்திலே வந்துதித்த சந்தர்ப்பவாதச் சாக்கடை....சமரசமற்ற கொள்கை அரசியலை சந்தர்ப்பவாதச் சாக்கடைக்குள் தள்ளிய பெருமைக்குரிய மருத்துவர் தமிழ்க்குடிதாங்காத தமிழ்க்குடிதாங்கி! யாரை எதற்காக எதிர்த்து அரசியல் செய்யவேண்டுமே அவர்களோடே தம் தேவைக்குதந்த படி கூட்டு வைத்துக்கொண்டு ஈழத்திற்க்காய் எந்நேரமும் பாடுபடும் திரு.வைகோ அவர்கள்....அவரும் சிறை சென்றார்.

நண்பர் 'டோண்டு' ராகவன்...

உயிரோடு இருக்கும்வரை அறிக்கைகளால் அர்சித்து எதிர்ப்பரசியல் நடாத்தி செத்துபோன பிறகு ஆருயிர் நண்பர் என்று அழைத்துக்கொள்ளும் எல்லா அரசியல்வாதிகளையும் போலவே நான். எனக்கும் மறைந்த உயர்திரு 'டோண்டு' ராகவன் அவர்களுக்குமான பரிச்சயம் அவ்வளவொன்றும் அதிகமில்லைதான். பதிவுலகையும் , பர்ஸனல் லைப்பையும் பிரித்து வைத்துக்கொள்ளும் எண்ணமுடைய நான் , டோண்டு மட்டுமல்ல மற்றபல பதிவுலக நண்பர்களுடனும் கூட தனிப்பட்ட தொடர்புகளை வைத்துக்கொண்டதில்லை... இருந்தாலும் , அவ்வப்போது பதிவுலக பின்னூட்டங்களின்பாலே தொடர்ந்துகொண்டிருந்த தொடர்பு , எனது 'போலி டோண்டு' பற்றிய கட்டுரையொன்றிலேயே  தீவிர விவாதமாக மாறியது.. ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீதோ இல்லை அவர்தம் பிற்போக்கான கருத்துக்கள் மீதோ இருந்திருக்கலாம். கடினமாக ஓரிரு முறை பேசியிருக்கலாம்.. அத்தனையும் தாண்டி அவர் மிக நல்ல மனிதர் , கடும் உழைப்பாளி என்பதை அவரது பதிவுலகம் மூலமாக அறிந்தவனெனினும் உறுதியாக கூறவியலும்.. அத்தகைய நல்ல மனிதரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் , நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்... வருத்தங்கள

எஸ்.எஸ்.பொன்முடி - மனிதருள் மாணிக்கம்.

எஸ்.எஸ்.பொன்முடி , கொங்குச்சீமையிலே குறிப்பாக பல்லடம் , சூலூர் வட்டாரத்தில் தெரியாதவர்கள் சொற்பமே. எஸ்.எஸ். பொன்முடி அவர்கள் மட்டுமல்ல , அவர்களது குடும்பமே சூலூரில் பழம்பெருமை மிக்க குடும்பம். காலங்காலமாக அவர்களது குடும்பத்தினரே சூலூரின் அனைத்து தேர்தல்களிலும் வென்றதும் , வெல்வதும் வரலாறு. பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவராயினும் மாற்றுக்கட்சியினராலும் மதிக்கப்படும் சில மனிதர்களில் எஸ்.எஸ் பொன்முடியும் ஒருவர். அவருக்கும் , எனக்குமான பரிச்சயமொன்றும் அவ்வளவு அதிகமில்லைதான். அப்போது எனக்கு ஒரு பத்திலிருந்து , பதினைந்து வயதிருந்திருக்கலாம். கலங்கலில் கவுன்சிலர் தங்கவேலு சர்வ அதிகாரமும் பொருந்தியவராய் வலம் வந்துகொண்டிருந்தார். அவர் எஸ்.எஸ்.பொன்முடியின் வலக்கரம். ஊருக்கு மேற்கே ஜல்லிக்குழி என்ற மனிதர்கள் உபயோகப்படுத்த முடியாத , இயலாத பகுதி ஒன்றிருந்தது.....அப்போது கழகம் ஆட்சியிலிருந்தது + பொன்முடி எம்.எல்.ஏவாக இருந்தார். கட்சிக்காரர்கள் , குறிப்பாக ஒடுக்கப்பட்ட , மிக பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் கேட்டுக்கொண்டதற்காக , மிகுந்த பிரயாசைப்பட்டு தங்கவேல் மற்றும் எஸ்.எஸ்.பொன்முடி அவ