Skip to main content

பருவப் பலாச்சுளையும் பக்குவத்து கொய்யாவும்..!!

வெளிநாடுகளில் , டாடி , மம்மியைத் தவிர மற்ற எல்லோரையும் அங்கிள் , ஆன் ட்டி என்ற இரண்டே வார்த்தைகளில் முடித்து விடுகிறார்கள்...ஆனால் தமிழர்கள் மட்டும்தான் மாமன் , மச்சான் , சித்தப்பா , பெரியம்மா , மச்சினன் , கொழுந்தன் என்று உறவுகளைக் கொண்டாடுகிறார்கள்......கொஞ்சம் தலைமுறை விட்டுப்போயிருந்தாலும் பங்காளி என்றும் , மிக நாட்பட்ட உறவுகளுக்கு கூட்டம் , குலம் என்றும் தங்களின் மூதாதையர்களுக்கு மதிப்புக் கொடுப்பவர்களாய் இருக்கிறார்கள்....

இன்றைக்கும் கொங்கு நாட்டிலும் சரி , தெற்கத்தி மண்ணிலும் சரி , மற்ற எல்லா உறவுகளுக்கும் இல்லாத ஒரு உரிமை தாய் மாமன் என்கிற உறவுக்கு இருக்கிறது. தன் உடன்பிறப்பின் ( பெண்) குழந்தைக்கு பேர் வைப்பது முதற்கொண்டு , முதல் மொட்டை , காது குத்து , பூப்படைகையில் குச்சு கட்டுவது என்று ஒரு தமிழ்ப்பெண்ணின் வாழ்க்கையில் அழியாத இடம் பெறுகிறது தாய் மாமன் உறவு.

தமிழகத்தின் வாழ்வியலையும் , பெருமைகளையும் , போர் திறனையும் பாட்டால் பாடி வைத்துப்போயினர் சங்க காலத்து தமிழ்ப்புலவர்கள்.....பாட்டால் பாடாத உறவுகளையும் , பெருமைகளையும் வாய்வழியாகவே தாலாட்டாகவும் , நாட்டுப்புறப் பாட்டுக்களாகவும் காத்து தன் கருவில் வைத்திருக்கிறது தமிழ்ச் சமுதாயம்....!!!

அத்தகைய தாலாட்டில் தாய்மாமன் கொண்டு வரும் சீரைப் பற்றிய ஒரு அழகு பிள்ளைத் தமிழ்.....!!!!!



கற்பகத்தைத் தேடி கனிந்து வரும்போது
உன்னரிய அம்மான்மார் என்ன கொண்டு வந்தார்கள்
கொத்துவிடா நெத்தும், கோதுபடா மாங்கனியும்
பருவப் பலாச்சுளையும் பக்குவத்து கொய்யாவும்
அக்கரையில் சர்க்கரையும், அதிமதுர தென்னவட்டும்
காய்ச்சிய பாலும், கற்கண்டும், செந்தேனும்
ஏலங்கிராம்பும், இளங்கொடிக்கால் வெற்றிலையும்
சாதிக் களிப்பாக்கும், சங்கு வெள்ளைச் சுண்ணாம்பும்
அத்தனையும் கொண்டுன்னை அறிய வந்தார்அம்மான்மார்
கனிவருக்கம் கொண்டுன்னை காண வந்தார் அம்மான்மார்
பழவருக்கம் கொண்டுன்னை பார்க்க வந்தார் அம்மான்மார்
போட்டு விளையாடப் பொன்னாலே அம்மானை
வைத்து விளையாட வண்ணக்கிலுகிலுப்பை
கட்டி விளையாடக் காசிச் சிண்டுமணி
ஓட்டி விளையாட ஒயிலா ரெயில் வண்டி
நெத்திக்குச் சுட்டி, நிழல் பார்க்கக் கண்ணாடி
காலுக்குத் தண்டை, கைக்குக் கணையாழி
கொண்டு வந்தும் காண்பார்கள், கோதைக்கிளிக்கம்மான்மார்
சங்கினால் பால் கொடுத்தால் சந்தனவாய் நோகுமென்று
தங்கத்தால் சங்கு செய்து தருவாரே தாய்மாமன்

Comments

Popular posts from this blog

இதற்குத்தானா ஆசைப்பட்டீர்கள் திரு.சீமான்?

இன்று சீமான் அதிமுக கூட்டணியில் இருந்து பிரச்சாரம் பண்ணப்போவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது..ஏற்கெனவே ஒருமுறை செய்த பாரிய தவறொன்றை மற்றொருமுறை செய்யமாட்டார் என்றே நினைத்திருந்தேன்....இது உண்மையான செய்தியாய் இருந்தால் பேரிடிதான்..!!!! மாறாக உணர்வுள்ள இளைஞர்கள் தம் பின்னால் பேரெழுச்சியுடன் நாம் தமிழராய் எழும்போது.....அதைக்கொண்டுபோய் போய்ஸ்தோட்டத்திற்கு தாரைவார்த்துக்கொடுப்பதென்பது கனவிலும் சகிக்க முடியாத செயல்....!!  கருணாநிதிக்கு ஈழ அழிவிற்கு எவ்வளவுக்கெவ்வளவு பங்கிருக்கிறதோ அதே அளவிற்கு  சக பங்குள்ளவரே செயலலிதா... செயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்? என்ன செய்தார்? 1.எதிர்கட்சியாக மாபெரும் போராட்டங்களை நடாத்தியிருக்க வேண்டும்...அழிவது நம்சொந்தங்களே என்று தெரிந்திருந்தும் வாய்மூடி மெளனியாகவே இருந்தார். 2. கருணாநிதியின் எதிர்ப்பரசியலைக் கைவிட்டு விட்டு முத்துக்குமார் முதற்கொண்டு  தமிழக இளைஞர்களின் எழுச்சியை உபயோகித்து இந்திய அரசை ஸ்தம்பிக்க முயற்சித்திருக்க வேண்டும்....அதைவிடுத்து கொடநாட்டில் பள்ளி கொண்டிருந்தார்... 3.  சிறிதேனும் உண்மையான அக்கறை அவருக்கு தமிழர்பா...

இந்தியாவும் சீனாவும் - ஒரு ஒப்பீடு..!

நிறைய பத்திரிக்கைகளும் , பொருளாதார வல்லுநர்களும் அடிக்கடி இப்படிச் சொல்வதுண்டு. இந்த நூற்றாண்டு இந்தியா மற்றும் சீனாவின் நூற்றாண்டு என்று. வருங்காலத்தில் இந்தியாவும் , சீனாவுமே உலக வல்லரசுகளாகப் போகின்றன என்று. நிலைமை என்ன? இந்தியாவிற்கோ , சீனாவிற்கோ அதற்கான தகுதிகள் இருக்கின்றனவா என்று பார்ப்பதற்கான முதல் படி இந்தியாவும் சீனாவும் ஒப்பீட்டளவில் எப்படி இருக்கின்றன என்பதேயாகும். ஆய்வுகளை அரசியல், பொருளாதார , இராணுவ , இராஜதந்திர , அண்டை நாடுகளுடனேயான உறவுகளினூடாக அணுகலாம். பொருளாதார ஒப்பீட்டில் இந்தியாவும் , சீனாவும் எப்படி இருக்கின்றன என்பதை இப்பதிவில் பார்ப்போம். மற்றைய இராணுவ , இராஜதந்திர உறவுகளை பிரிதொரு சமயம் பார்க்கலாம். உலகின் பெரும்பான்மையான மக்களைக் கொண்ட இருநாடுகளும் உலகப்பொருளாதாரத்தில் பெருமளவு பங்கு வகிக்கின்றமை தவிர்க்க இயலாததே.  இந்தியாவின் தோராய ஜி.டி.பி ( GROSS DOMESTIC PRODUCT) மதிப்பு ( ஜிடிபி என்பது ஒட்டுமொத்த நாட்டின் உற்பத்தி மதிப்பு) 3.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். ( எத்துணை சைபர் டிரில்லியனுக்கு என்ற ஆய்வை கொஞ்சம் அப்புறமா பாக்கலாம் சார். ) , அதே ச...

"ஜெ" பிரதமரானால்...!!

ஆனாலும் இந்த "சோ" மா(தி)ரி பேச யாருக்கும் வராது... ஒரு விழா அதில் மாங்காய்களை தனக்குத் தோதான முறையில் அடித்துக்கொள்ளப் பார்த்திருக்கிறார்.... முதலில் , பாரதிய ஜனதா கட்சியில் பிரதமர் வேட்பாளராக இருக்கும் இரு போட்டியாளர்களை கூப்பிட்டு வைத்தார். தனக்கு "மோடி" தான் பிரதமர் சாய்ஸ் என்று சொல்லுவதற்கு வாஜ்பாயையும் துணைக்கு அழைத்தார்.......வாஜ்பாயை முன்மொழிந்ததே அத்வானி தான் என்றும் , அதுபோலவே "மோடி" யையும் அத்வானி முன்மொழிய வேண்டுமென்கிறார்... தமிழகத்தில் தனக்கான ஓட்டுவங்கியைப் பெறுக்க சில பாராளுமனற் , சட்டமன்ற தொகுதிகள் பாஜகவுக்குத் தேவை... அதனால் , அதிமுகவுடனோ , திமுகவுடனோ ஆன கூட்டணி அக்கட்சிக்கு மிகமிக அவசியம் என்பதைவிட அவசரம்... அதனால் தான் , வாஜ்பாயை பதிமூன்று மாதங்கள் படுத்திய 'ஜெ'வுடன் கூட்டணிக்குத் தவிக்கிறார்கள் அத்வானியும் , மோடியும் , சோவும்.....எப்படி இழுப்பது? ஏற்கெனவே விஜயகாந்த்தை தேவையில்லாமல் தூக்கி விட்டுவிட்டோமோ என்ற கடுப்பில் இருக்கும் அம்மா "பாஜகவை தலையில் தூக்கி சுமக்க ஒத்துக்கொள்வாரா? அதுவும் " அம்மா" தான் எல்லாமே எ...