விட்டங்களும் , சுவர்களும் , ஜன்னல்களும் , திரைச்சிலைகளும் மட்டுமே சூழ அமைந்திருக்கும் , பார்க்கிறேனோ , பார்க்கவில்லையோ தற்போதைக்கு எனக்கு மிகவும் பிடித்த 'முரசு' சேனலில் 'நிலா காய்கிறது' என்ற 'இந்திரா படப்பாடல் ஒலிக்கின்ற வேளையில் இப்பதிவை எழுதத் தொடங்குகிறேன்... கடந்த பதிவினை நான் இவ்வலைப்பூவில் ஏற்றியது கடந்த ஜனவரி மாதம்......ஏன் இந்த இடைவெளி....? ஏதேனும் எழுத வேண்டுமென்று சப்ஜெக்ட் இல்லாமல் எழுத ஆரம்பிக்கும் எல்லோருக்கும் வரும் பிரச்சினை எனக்கும் வந்திருக்கிறது.... அட்டா காலை உணவு ஆகவில்லையே என்று தோன்றிற்று.......தட்டில் வேலைக்கார அம்மா கிச்சடி என்ற பெயரில் மஞ்சள் கலரில் செய்து வைத்திருந்தாலும் சாப்பிட முடிந்தது.... இட்ட அன்னம் கொஞ்சம் முன்னப்பின்ன இருந்தாலும் யாருமற்ற சூழலில் அன்னமிடமாவது அவர் இருக்கிறார் , அதனால் பிழைத்தேன். முரசு தொலைக்காட்சியில் , என்னுயிர்த்தோழன் படப்பாட்டு ஓடிக்கொண்டிருக்கிறது....மாற்றினேன்....கலைஞர் தொல்லைக்காட்சியில் , அனேகமாக ஆயிரமாவது முறை 'ஆனந்த தாண்டவம்' என்ற மொக்கைத் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது.... வெட்டுக்கிளியோ எ...