சிலகாலம் முன்புவரை ஆர்.கே நகர் தமிழகத்தில் அவ்வளவாக உச்சரிக்கப்படாத பெயர்தான். முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் போட்டியிட்டது முதல் விஐபி தொகுதி யானது ஆர்.கே.நகர். முன்னாள் முதல்வரின் மறைவுக்குப்பின்னர் பின்னர் நடக்கும் ஆர் கே நகர் தொகுதி இடைத்தேர்தலானது , சமீபத்தில் எந்தவொரு தொகுதியின் இடைத்தேர்தலுமே பெறாதவொரு முக்கியத்துவத்தைப்பெற்றிருக்கிறது.... ஏன்?? திமுக ஒருபுறமும், அதிமுகவின் இரண்டுபிரிவுகளும் , ஜெ. அண்ணன் மகள் தீபா அவர்கள் இன்னொரு புறமுமாக புழுதி பறக்கப்போகிறது இன்னுஞ் சிலவாரங்களுக்கு அத்தொகுதி....இத்தொகுதியில் வெல்வது யார் என்பது மக்களின் கையில் தான் இருக்கிறது. ஆனால், களத்தில் நிற்கப்போகும் ஒவ்வொரு கட்சிக்குமே / பிரிவுக்குமே இதன் முடிவு ஒரு முக்கிய பாடத்தை சொல்லிச்செல்ல காத்திருக்கிறது . வென்றிருக்கவேண்டிய 2016 தேர்தலை சிலபல காரணங்களால் மயிரிழையில் கோட்டை விட்ட திமுகவுக்கு இது "வாழ்வா சாவா " தேர்தல் இல்லையென்றாலும் கூட, இதில் பெறும் வெற்றி வரப்போகும் பாராளுமன்றத் தேர்தலின் கூட்டணிக்கணக்கிற்கு உதவக்கூடும்..யாருமில...