Skip to main content

இந்தியாவும் சீனாவும் - ஒரு ஒப்பீடு..!

நிறைய பத்திரிக்கைகளும் , பொருளாதார வல்லுநர்களும் அடிக்கடி இப்படிச் சொல்வதுண்டு. இந்த நூற்றாண்டு இந்தியா மற்றும் சீனாவின் நூற்றாண்டு என்று. வருங்காலத்தில் இந்தியாவும் , சீனாவுமே உலக வல்லரசுகளாகப் போகின்றன என்று.

நிலைமை என்ன?

இந்தியாவிற்கோ , சீனாவிற்கோ அதற்கான தகுதிகள் இருக்கின்றனவா என்று பார்ப்பதற்கான முதல் படி இந்தியாவும் சீனாவும் ஒப்பீட்டளவில் எப்படி இருக்கின்றன என்பதேயாகும். ஆய்வுகளை அரசியல், பொருளாதார , இராணுவ , இராஜதந்திர , அண்டை நாடுகளுடனேயான உறவுகளினூடாக அணுகலாம்.


பொருளாதார ஒப்பீட்டில் இந்தியாவும் , சீனாவும் எப்படி இருக்கின்றன என்பதை இப்பதிவில் பார்ப்போம். மற்றைய இராணுவ , இராஜதந்திர உறவுகளை பிரிதொரு சமயம் பார்க்கலாம்.
உலகின் பெரும்பான்மையான மக்களைக் கொண்ட இருநாடுகளும் உலகப்பொருளாதாரத்தில் பெருமளவு பங்கு வகிக்கின்றமை தவிர்க்க இயலாததே. 

இந்தியாவின் தோராய ஜி.டி.பி ( GROSS DOMESTIC PRODUCT) மதிப்பு ( ஜிடிபி என்பது ஒட்டுமொத்த நாட்டின் உற்பத்தி மதிப்பு) 3.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். ( எத்துணை சைபர் டிரில்லியனுக்கு என்ற ஆய்வை கொஞ்சம் அப்புறமா பாக்கலாம் சார். ) , அதே சமயம் சீனாவின் ஜிடிபி சற்றேறக்குறைய 10 டிரில்லியன். இந்தியாவை விட மூன்று மடங்கு அதிகம்.
இந்தியர்களின் சராசரி வருட வருமானம் சற்றேற்க்குறைய 2900 அமெரிக்க டாலர்கள் ,சீனர்களின் சராசரி வருட வருமானம் (per capita on GDP PPP) 7300 அமெரிக்க டாலர்களுக்கும் மேலே. ஆக , தற்போதைக்கு உற்பத்தியிலும்  , தனிநபர் வருமானத்திலும் இந்தியாவை விட பலமடங்கு உச்சத்திலிருக்கிறது சீனா.

சீனா உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுத்திருக்கிறது. அதே சமயம் , உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவோ உலகப் பொருளாதாரத்தில் 12 வது இடத்தையே வகிக்கிறது.

***

இந்தியர்களில் சற்றேறக்குறைய 30 சதவீததிற்கும் மேற்பட்டவர்கள் இன்னமும் வறுமைக் கோட்டுக்கு கீழேயே வாழ்கிறார்கள். 1980 களில் 50 சதவீதத்தீற்கும் மேற்பட்ட சீனமக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழிருந்தார்கள். தொழிற்துறைக்கு சலுகைகளையும் , மானியங்களையும் வாரி வழங்கியதன் மூலமாக அபார முன்னேற்றம் கண்ட சீனா இன்று 8க்கும் குறைவான மக்களையே வறுமைக்கோட்டிற்குக் கீழே கொண்டிருக்கிறது.


எப்.எக்ஸ் ரிசர்வ்ஸ் எனப்படும் அந்நியச் செலாவணி கையிருப்பில் இந்தியாவை விட குறைந்தது 8 முதல் 9 மடங்கு அதிகக் கையிருப்பினைச் சீனா தன்னிடத்தே கொண்டுள்ளது. இங்கே குறிப்பிடத்தக்க ஒரு விடயம், இந்தியாவிற்கான அந்நியச் செலாவணி கையிருப்பில் பெரும்பங்கு என்.ஆர்.ஐக்கள் எனப்படும் அயல்நாடு வாழ் இந்தியர்களால் கொண்டுவரப்படுகிறது. மாறாக , சீனாவோ தனது ஏற்றுமதி வர்த்தகத்தின் மூலமாக அதைப் பெற்றுக்கொள்கிறது.


எண்பதுகளில் இருந்து தனது மொத்த உற்பத்தியை சீனா 16 மடங்குகளாகப் பெருக்கிக்கொண்டமை மற்றுமின்றி அவற்றில் பெரும்பகுதியை ஏற்றுமதியும் செய்கிறது. மாறாக இந்தியாவோ 6 மடங்குகளாகவே இன்றுவரை பெறுக்க இயன்றிருக்கிறது. சேவை சார்ந்த ஏற்றுமதியே அதிகரித்திருக்கிறதே ஒழிய உற்பத்தி சார்ந்த ஏற்றுமதி ஒரளவே அதிகரித்திருக்கிறது.


உலக ஒட்டுமொத்த உற்பத்தியளவில் உலகின் அதிகபட்ச தொழிலாளர்களைத் தன்னகத்தே கொண்ட சீனா பதினைந்து சதத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் வேளையில் இந்தியாவோ வெறும் 6 சதத்தையே கொண்டிருக்கிறது. இந்தியா திறன்மிகு தொழிலாளர்களைக் கொண்டிருப்பதில் உலகளாவிய முறையில் சீனாவுக்கு அடுத்தபடியாக இருக்கிறது. சின்னஞ்சிறு நாடான ஜப்பான் 7 சதத்திற்கும் மேலான உற்பத்தித்திறனைக் கொண்டிருக்கிறது.


உலக ஏற்றுமதியில் 6 முதல் 7 சதவீதத்தைத் தன்னகத்தே சீனா கொண்டிருக்கும் வேளையில் ஒன்றுக்கும் குறைவான சதவீத ஏற்றுமதியையே இந்தியா செய்து கொண்டிருக்கிறது. உலக நாடுகளின் பெரும்பாலானவற்றை விட இந்தியா ஏற்றுமதியில் மிகவும் பின் தங்கி இருக்கிறது.
டிரேட் பேலன்ஸ் எனப்படும் உலக வர்த்தக ஏற்றுமதி , இறக்குமதி்யை கணக்கிடப் பயன்படும் குறியீடுகளில் இந்தியாவின் நிலை -30 ஆகவும் ( அதாவது ஏற்றுமதியை விட இறக்குமதி 30 சதம் அதிகம் ) , சீனாவின் நிலை +55 ஆகவும் ( அதாவது ஏற்றுமதியை விட இறக்குமதி 55 சதம் குறைவு ) இருக்கிறது.


சீனா சற்றேறக்குறைய 230 பில்லியன் டாலர்களை வெளிநாடுகளிலிருந்து கடனாக பெற்றிருக்கீறது. அதே சமயம் இந்தியா 125 பில்லியன் டாலர் கடன் சுமையில் இருக்கிறது. மேலோட்டமாக பார்த்தால் இந்தியாவின் கடன் சுமை குறைவாக இருப்பது  போலத்தோன்றினாலும் , சீனாவின் ஒட்டுமொத்த உற்பத்தி அளவில் அது 25 சதவீத கடன்களையே பெற்றிருந்தாலும் , இந்தியாவோ 35 சதவீத்திற்கும் மேற்பட கடன்களை வாங்கிக் குவித்திருக்கிறது.

***
வெளிநாட்டு முதலீடுகளிலும் சீனாவே இந்தியாவை விட முந்தியிருக்கிறது. தற்போதைய நிலையில் இந்தியாவைவிட 8 முதல் 9 மடங்குவரை சீனா அதிக முதலீடுகளைப் பெறுகிறது.
தொண்ணூறுகளில் தனது வருமானத்தில் 5 முதல் 6 சதவிகிதத்தை தனது கடன்களுக்கான வட்டியாகக் கட்டிய சீனாவோ தற்போதைக்கு வெகுவாக முன்னேறி இருக்கிறது. ஆனால் இந்தியாவோ நேர்மாறாக தனது கடன்களை அதிகரித்துச் செல்வதன் மூலம் வருமானத்தின் குறிப்பிட்ட பகுதியை வட்டியாகக் கட்டியே வருகிறது.


பணவீக்க விகிதம் , அண்மைக்கால சடுதியான மாற்றங்களைத் தவிர்த்துப் பார்க்கும் போது இரண்டு நாடுகளும் ஒரே திசையில் பயணிப்பது போலவே தெரிகிறது.


இந்தியாவோ  உலக வர்த்தகத்தில் ஏற்ற இறக்கத்திற்கேற்ப தனது நாணயத்தின் மதிப்பை மாற்றுவதன் மூலம் ( floating currency) அவ்வப்போது ஏற்றுமதி/ இறக்குமதியாளர்களை சிக்கலில் தள்ளுகிறது.மாறாக சீனாவொ தனது நாணயத்தின் மதிப்பை அல்லது அதன் லகானை தன் கையில் வைத்துக்கொண்டிருக்கிறது.


எண்பது சதவீத சீனப்பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள் , மாறாக இந்தியாவில் 40 சதமான பெண்கள் மட்டுமே வேலைக்குச் செல்கிறார்கள். அதனால் மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகுவாகவே இந்தியாவில் குறைந்து போகிறது. அதே சமயம் , இந்தியாவில் ஸ்கில்டு லேபர்ஸ் எனப்படும் படித்த தொழிலாளர்களின் எண்ணிக்கை சீனாவை விட இருமடங்கு அதிகமாக இருக்கிறது. ஆகவே , சேவை சார்ந்த ஏற்றுமதிகள் இன்னமும் அதிகரிக்க வாய்ப்புண்டு. அதே சமயம் , இந்தியாவின் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களுக்கு இவ்வாய்ப்புக்களால் பலனேதுமில்லை.

***

இந்தியாவில் சராசரியாக ஒரு தொழிலை ஆரம்பிக்க மூன்று முதல் நான்கு மாதங்கள் ஆகும் அதே வேளை சீனாவில் வெறும் இரண்டு மாதங்களே  ஆகின்றன. ஆனாலும் கம்யூனிச நாடெனச் சித்தரிக்கப்படும் சீனாவை விட தொழிலாளார்களுக்கான பாதுகாப்பு இந்தியாவில் அதிகமாகவே இருக்கிறது என்பதை எண்ணி நாம் மகிழ்ச்சியடையலாம். ஆனால் ஊழலில் , மிகவும் பின் தங்கிய நாடாகவே இந்தியா இருக்கிறது.


இந்தியர்களின் சேமிப்பு மனப்பாங்கே இந்தியாவைக் காப்பாற்றுகிறது எனச்சொல்வார்கள். ஆனால் , ஒப்பீட்டளவில் சீனர்களைவிட , இந்தியர்கள் பின் தங்கியே இருக்கிறார்கள். ஆனால் , தற்போதைய சூழலில் சீனர்கள் கன்னாபின்னாவென செலவழிக்கிறார்கள் . அதனால் இந்தியாவைக் காட்டிலும் சீனா பின் தங்கும் நாள்  வெகுதொலைவில் இல்லையெனலாம்.

80 களில் சீனர்களின் தனிமனித வருமானமும் , இந்தியர்களின் தனிமனித வருமானமும் ஒரே அளவே இருந்துவந்தன. அதன்பிறகு சீனர்களின் முன்னேற்றம் அபரிமிதமானது. இந்தியாவை விட பலமடங்கு முன்னேற்றத்தைச் சந்தித்தது சீனா. ஆனாலும் , உயர்ந்துவரும் சீனர்களின் சம்பளமே இந்தியர்களுக்கு நம்பிக்கை தரக்கூடியது. இந்தியாவில் தொழில்களும் , அந்நிய முதலீடுகளும் பெருக அதுவே ஒரு வாய்ப்பாகும்.

அதுமட்டுமின்றி , சீனாவின் ஒரே குழந்தை என்னும் கோட்பாட்டினால் சீன உழைக்கும் வர்க்கம் நாளடைவில் குறைய வாய்ப்பிருக்கிறது. அதே சமயம் இந்தியாவில் நிலை வேறு. அதனால் இன்னும் பல பத்தாண்டுகளுக்குப் பிறகு சீனாவின் நிலையை எட்டிப் பிடிக்க முயற்சிக்கலாம்.

ஆனால் அதற்குப் பல தடைக்கற்கள் இருக்கின்றன. அதுபற்றி வரும் சில பதிவுகளில் பார்க்கலாம். ஆக, இப்போதைக்கு பொருளாதாரத்தில் இந்தியாவையும் , சீனாவையும் ஒப்பிடுவது மலையையும் , மடுவையையும் ஒப்பிடுவது போலத்தான்.


தகவல்களுக்கு நன்றி : ரிசர்வ் பேங்க ஆப் இந்தியா , எகனாமிஸ்ட் மற்றும் பல பொருளாதார இணையதளங்கள்.

Comments

நல்ல அலசல். தொடருங்கள். நன்றி.
அன்புச்செல்வன். said…
அருமையான ஆய்வுக்கட்டுரை.இந்தியா ஒளிர்கிறது என்று அரசியல்வாதிகள் எப்படி டபாய்க்கிறார்கள் என்பது இது படித்தால் உடனே புரியும்.

தொடருங்கள்.
நன்றி திரு.ஜியோவ்ராம் சுந்தர் ஜி. கண்டிப்பாக இந்தக் கட்டுரையையாவது தொடர்ந்து முடிக்கலாம் என்றுதான் எண்ணியிருக்கிறேன்.

வருகைக்கும் , கருத்துக்கும் நன்றிகள்.
அன்புச்செல்வன். said...

அருமையான ஆய்வுக்கட்டுரை.இந்தியா ஒளிர்கிறது என்று அரசியல்வாதிகள் எப்படி டபாய்க்கிறார்கள் என்பது இது படித்தால் உடனே புரியும்.
/

நன்றி திரு.அன்புச்செல்வன்...அரசியலே கலக்காமல் எழுதவே வலைப்பூவை மாற்றினேன். அதிலும் அரசியல் வருகிறது. இப்ப நான் என்ன செய்ய?

வருகைக்கும் , கருத்துக்கும் நன்றிகள்
Bibiliobibuli said…
Your statistical comparison is excellent.
மிக நல்ல கட்டுரை. நன்றி.
நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய பல தகவல்களை பகிர்ந்து கொண்டீர்கள். நிறைய தெரிந்து கொண்டோம்.
ஜோ/Joe said…
நல்ல பதிவு
//வெளிநாட்டு முதலீடுகளிலும் சீனாவே இந்தியாவை விட முந்தியிருக்கிறது. தற்போதைய நிலையில் இந்தியாவைவிட 8 முதல் 9 மடங்குவரை சீனா அதிக முதலீடுகளைப் பெறுகிறது. //

அப்படியா.. ஆச்சரியமான விசயங்கள். ஒரு வித்தியாசமான ஒப்பிடு, வாழ்த்துக்கள்
Mathibala said…
Blogger Rathi said...

Your statistical comparison is excellent. //

வருகைக்கும் , கருத்துக்கும் நன்றிகள் ரதி. நம்ம ஒண்ணும் ஸ்டேட்டிஸ்டிக்ஸ் எடுக்கலீங்க. இண்டர்நெட்டில் சுட்ட பழம் தான் அது. தமிழ்ப்படுத்தியதே எமது கடமை.
Mathibala said…
மாசிலா said...

மிக நல்ல கட்டுரை. நன்றி./

Thanks for Coming & Spl thanks for your comments Masila.
Mathibala said…
நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய பல தகவல்களை பகிர்ந்து கொண்டீர்கள். நிறைய தெரிந்து கொண்டோம்./

Thank you Tamil Udayam for your comments and visit.
மதிபாலா said…
ஜோ/Joe said...

நல்ல பதிவு/

நன்றி திரு.ஜோ,

நலமா? நீண்ட நாட்களாகி விட்டது. மன்னிக்கவும் , தங்கள் வலைப்பூ பக்கமும் கூட வந்து பல நாளாயிற்று.

இன்னமும் கொஞ்சம் அதிக நேரம் வலைப்பூவிற்கு செல்வழிக்க முயற்சிக்கிறேன் விரைவில்.

தோழமையுடன்
மதிபாலா
மதிபாலா said…
அப்படியா.. ஆச்சரியமான விசயங்கள். ஒரு வித்தியாசமான ஒப்பிடு, வாழ்த்துக்கள்//

இதைப்பற்றி எழுதலாம் என்பதற்காக இவ்விவரங்களை நான் சேகரிக்கவில்லை. எனது தொழிலுக்கும் , கேரியருக்கும் தேவைப்பட்டதால் விவரங்களைச் சேகரிக்கத்தொடங்கினேன். இது போன்ற பல ஆச்சரியங்கள் கிட்டத்தொடங்கியது. அதனால் தான் பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்தேன்.
நன்றி நண்பர் மதுரை சரவணன். விரைவில் இதன் அடுத்த பகுதியில் சந்திப்போம். உங்கள் ஆதரவிற்கு நன்றி.

தோழமையுடன்
மதிபாலா
Anonymous said…
Nice article. Your whole blog is interesting. Keep it up.
Anonymous said…
Sorry , forget a point. I think your calculation about foreign investments come to an surprise. Why don't you elaborate?
மதிபாலா said…
Anonymous said...

Nice article. Your whole blog is interesting. Keep it up.

நன்றி அனானி.

Popular posts from this blog

பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது!

சீமான்களின் சபையினிலேயே , கடிதம் எழுதி எழுதிக் களைத்துப்போனதோர் கிழட்டுச் சிங்கம்.....முன்னாலுக்கும் முன்னால் அவர் கொண்ட தமிழ்ப்பற்று.....இன்னாளில் அது தமது மக்கட்பற்றாய் மாறிப்போனதொரு சோகம். ஏதோவொரு புண்ணியத்தில், எவரோ செய்த வரலாற்றுத் தவறால் , கொள்கை , தொலைநோக்கு , மக்கட்பற்று இவை பற்றிய சிந்தையேதுமின்றி அரசியலில் விபத்தாய் விளைந்த கொடநாட்டு ஈழத்தாய்....தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தமிழர் பற்றியும் , தமிழர் அரசியல் பற்றியும் எழுதி வைத்துப் பேசும் செல்வி யவர்.........இன்னமும் அவர் சேலை பிடித்துத்திரியும் வீணர் கூட்டம்.! கூட்டணிக்கேற்றப்படி கொள்கையை மாற்றிக்கொள்ளும் மருத்துவப் படையாச்சி.........வீரமிகு வன்னியகுலத்திலே வந்துதித்த சந்தர்ப்பவாதச் சாக்கடை....சமரசமற்ற கொள்கை அரசியலை சந்தர்ப்பவாதச் சாக்கடைக்குள் தள்ளிய பெருமைக்குரிய மருத்துவர் தமிழ்க்குடிதாங்காத தமிழ்க்குடிதாங்கி! யாரை எதற்காக எதிர்த்து அரசியல் செய்யவேண்டுமே அவர்களோடே தம் தேவைக்குதந்த படி கூட்டு வைத்துக்கொண்டு ஈழத்திற்க்காய் எந்நேரமும் பாடுபடும் திரு.வைகோ அவர்கள்....அவரும் சிறை சென்றார்.

நண்பர் 'டோண்டு' ராகவன்...

உயிரோடு இருக்கும்வரை அறிக்கைகளால் அர்சித்து எதிர்ப்பரசியல் நடாத்தி செத்துபோன பிறகு ஆருயிர் நண்பர் என்று அழைத்துக்கொள்ளும் எல்லா அரசியல்வாதிகளையும் போலவே நான். எனக்கும் மறைந்த உயர்திரு 'டோண்டு' ராகவன் அவர்களுக்குமான பரிச்சயம் அவ்வளவொன்றும் அதிகமில்லைதான். பதிவுலகையும் , பர்ஸனல் லைப்பையும் பிரித்து வைத்துக்கொள்ளும் எண்ணமுடைய நான் , டோண்டு மட்டுமல்ல மற்றபல பதிவுலக நண்பர்களுடனும் கூட தனிப்பட்ட தொடர்புகளை வைத்துக்கொண்டதில்லை... இருந்தாலும் , அவ்வப்போது பதிவுலக பின்னூட்டங்களின்பாலே தொடர்ந்துகொண்டிருந்த தொடர்பு , எனது 'போலி டோண்டு' பற்றிய கட்டுரையொன்றிலேயே  தீவிர விவாதமாக மாறியது.. ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீதோ இல்லை அவர்தம் பிற்போக்கான கருத்துக்கள் மீதோ இருந்திருக்கலாம். கடினமாக ஓரிரு முறை பேசியிருக்கலாம்.. அத்தனையும் தாண்டி அவர் மிக நல்ல மனிதர் , கடும் உழைப்பாளி என்பதை அவரது பதிவுலகம் மூலமாக அறிந்தவனெனினும் உறுதியாக கூறவியலும்.. அத்தகைய நல்ல மனிதரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் , நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்... வருத்தங்கள

எஸ்.எஸ்.பொன்முடி - மனிதருள் மாணிக்கம்.

எஸ்.எஸ்.பொன்முடி , கொங்குச்சீமையிலே குறிப்பாக பல்லடம் , சூலூர் வட்டாரத்தில் தெரியாதவர்கள் சொற்பமே. எஸ்.எஸ். பொன்முடி அவர்கள் மட்டுமல்ல , அவர்களது குடும்பமே சூலூரில் பழம்பெருமை மிக்க குடும்பம். காலங்காலமாக அவர்களது குடும்பத்தினரே சூலூரின் அனைத்து தேர்தல்களிலும் வென்றதும் , வெல்வதும் வரலாறு. பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவராயினும் மாற்றுக்கட்சியினராலும் மதிக்கப்படும் சில மனிதர்களில் எஸ்.எஸ் பொன்முடியும் ஒருவர். அவருக்கும் , எனக்குமான பரிச்சயமொன்றும் அவ்வளவு அதிகமில்லைதான். அப்போது எனக்கு ஒரு பத்திலிருந்து , பதினைந்து வயதிருந்திருக்கலாம். கலங்கலில் கவுன்சிலர் தங்கவேலு சர்வ அதிகாரமும் பொருந்தியவராய் வலம் வந்துகொண்டிருந்தார். அவர் எஸ்.எஸ்.பொன்முடியின் வலக்கரம். ஊருக்கு மேற்கே ஜல்லிக்குழி என்ற மனிதர்கள் உபயோகப்படுத்த முடியாத , இயலாத பகுதி ஒன்றிருந்தது.....அப்போது கழகம் ஆட்சியிலிருந்தது + பொன்முடி எம்.எல்.ஏவாக இருந்தார். கட்சிக்காரர்கள் , குறிப்பாக ஒடுக்கப்பட்ட , மிக பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் கேட்டுக்கொண்டதற்காக , மிகுந்த பிரயாசைப்பட்டு தங்கவேல் மற்றும் எஸ்.எஸ்.பொன்முடி அவ