மூலைக்கு முப்பதென இருக்கும் பலகட்சிகளின் பேரில் இன்னமும் திராவிடம் பட்டொளி வீசிப்பறக்கும் ஒரு சூழலில் , திராவிட இயக்கத்திற்கும் எழுச்சிக்கும் எவ்வகையிலும் சம்பந்தப்படாத விஜயகாந்த் போன்றவர்களும் திராவிடக் கட்சி நடாத்துகின்ற சூழலில் நாம் இருக்கிறோம். தமிழ் , தமிழர் என்று அனுதினமும் அள்ளியள்ளித் தெளித்த வசனங்களாலும் , வீராவேச கருத்துக்களினாலும் திராவிடம் தட்டி எழுப்பிய உணர்வோடே இங்கு அனேகர் ‘தமிழுணர்வு’ பெற்றிருக்கிறோம். தமிழகத்தில் எழுந்த திராவிட உணர்வே , புலிகளுக்கு உந்து சக்தியாக இருந்தது என்று அவ்வமைப்பின் முன்னாள் தலைவரும் , எஞ்சியிருக்கும் ஒரே மூத்த உறுப்பினருமான ‘ கே.பி ‘ அவர்கள் சொன்னதே தமிழர்தம் 20ம் நூற்றாண்டு வரலாற்றில் தமிழர்களின் வாழ்வில் திராவிட இயக்கத்தின் பங்கை வெளிக்காட்டும். தமிழர் திராவிடராயினரா ? இல்லை திராவிடர்கள் தமிழர்களாயினரா என்று பார்க்கப்போனால் இரண்டுமே வடிகட்டின பொய்யே…..வரலாற்றில் ஆங்காங்கே அள்ளித் தெளித்த ஓரிரு கருத்துக்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டதே ‘திராவிடம்’ என்ற கருத்தாக்கம். அது முழுமையானதல்ல. திராவிடக்குட்பட்டோர் எனச்சொல்லப்படும் கன்னட , தெலுங்கு , மலை...