Skip to main content

எக்ஸைல் - நடுசென்ட்டரில் நான்.

இந்த எல்லா எழவும் ஆடிமாசம் ஒரு சனிக்கெழமை சாய்ந்தரம் ஆரம்பித்தது.

மாமியார் வீட்டில் என்டெர்டெயின்மென்ட்டுக்கு எதுவுமே இல்லாத காரணத்தாலும் , இயல்பாக இருக்கும் படிக்கும் காரணத்தாலும் வழக்கமாக குமுதம் , கல்கண்டு , ஆனந்த விகடன் , அதிகபட்சம் போனால் சமீபகாலமாக 'புதிய தலைமுறையும்' வாங்கிப்படிக்கும் நான் , தாராபுரம் பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்தில் இருக்கும் ஜே.பி.புத்தக நிலையம் போனேன் , எப்போ தெரியுமா , நான் முன்பு சொன்ன அதே ஒரு சனிக்கெழமை சாயந்தரம் தான்.

சுத்திச்சுத்திப் பார்த்தபோது கண்ணில் தட்டுப்பட்டது 'சாரு நிவேதிதா'வின் எக்ஸைல் நாவல்.

பின்னட்டையிலேயே பதிப்பாளர் (ஒருவேளை பத்ரி அல்லது பா.ரா?) கோடிட்டுக்காட்டியிருந்தார்...நாந்தான் கவனிக்காம விட்டுட்டேன்.

அதுமாதிரியும் இல்லாமல் , இதுமாதிரியும் இல்லாமல் புதுமாதிரி என்றது அச்செய்தி. அப்போதும் புத்தியில்லை. நானெல்லாம் , ஆங்கிலப்புத்தகங்களில் 'ஷிட்னி ஷெல்டன் ' , அல்லது ' டைம்' தாண்டி அறியாவதனாகையால்  ' ஆட்டோ பிக்சன் ' என்ற அழியாத வரலாறு பற்றி அறியாமல் விட்டுவிட்டேன். அதனால் , பதிப்பாளரின் அடுத்த எச்சரிக்கையையும் அலட்சியப்படுத்திவிட்டேன். தவறு என்னதுதான்.

இனி நாவலைப்பற்றிய என் எண்ணங்கள்  ( கடந்த ஆடி , ஆவணி , நிகழும் புரட்டாசி மாதங்கள் வரை படித்து முடித்த அல்லது முடிக்கமுடிந்த 174 பக்கங்கள் வரை...)

****

அவள் தொலைபேசினாள். அவன் அவளை சீண்டிச்சீண்டி அதைத் தொல்லைபேசி ஆக்கிக்கொண்டிருந்தான். இந்த நிகழ்வு மட்டுமே இப்புத்தகத்தை என் அக்கா பையனிடம் இருந்து இதை 'சரோஜா தேவி' அளவுக்கு மறைக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியது.

***

நான் உன்னை உருக உருக உருக காதலிக்கிறேன்  கண்ணே. அது உனது மூணாவது புருஷனுக்கு தெரியாமல் பார்த்துக்கொள்....

இதுவரை என் வாழ்வில் வராமல் எங்கே போயிருந்தீர்கள் நாதா? ஒருவேளை முன்பே வந்திருந்தால் என் மூணாவது புருஷனுக்கான தேவையே இருந்திருக்காதோ என்னவோ?

இருவரும் சேர்ந்து தெய்வீக காதல் ச்சீ கலவி புரிவோமா?

***


Je t'aime chérie fusible de fusible. Ce n'est pas ton mari prendre soin de muna ....

Où étiez-vous déjà venu dans ma vie Naata? Peut-être vous avez déjà un besoin pour mon mari pour muna iruntirukkato quelque chose?

Cci sexuelle purivoma ensemble l'amour divin?



ஏண்ணா இப்பிடி பாக்கறீங்கோ ? மேல என்ன எழுதீருக்குண்ணா? ஒண்ணும் இல்லை. கூகுள் டிரான்ஸ்லேட் யூஸ் பண்ணி மேல எழுதிருக்கிறதை ப்ரெஞ்ச் மொழியில மொழி பெயர்த்தேன் , அவ்வளவுதான்.


***

கடுகு , மிளகு , திப்பிலி , இதைக் கலந்து தின்றால் வாதம் தீருமா? தீரும் என்பவனுக்கு தீரும். தீராது என்பவனுக்கு தீராது. உங்களுக்கு  எப்படி?

கடுகைத் தட்டி , மிளகை அரைத்து , திப்பிலி சேர்த்து கசாயம் செய்யும் முறை...


கடுகு - தேவையான அளவு

மிளகு - தேவையான அளவு

திப்பிலி - தேவையான அளவு

தேவையான அளவு கடுகை எடுத்து  , நன்றாக தட்டிக்கொள்ளவும் , தேவையான அளவு மிளகை எடுத்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்,
தேவையான அளவு திப்பிலியை எடுத்து நன்றாக மேற்கொண்வற்றவுடன் சேர்த்து தண்ணீர் கலக்கி கொதிக்கவிடவும்.... கசாயம் 'ரெடி'.


***

அரிசி - 2 மூட்டை
பருப்பு - 50 கிலோ.
::
>
>
>
>
<
_
(
*
வெத்தலை - 10 கவுளி
வெட்டுப்பாக்கு - 3 கிலோ
ரோசா பாக்கு - 5 பாக்கெட்..

என்னதுன்னு பாக்கறீங்களா? என் கல்யாணதுக்கு வாங்கின ஜாமான் லிஸ்ட்டு....

***

கண்ணே. அது எப்படி உன்னைப் பாக்காமல் என்னால் இன்னமும் இருக்கமுடிகிறது? உன்னைப் பார்க்காத என் கண் அவிந்துபோய்விட்டால் தான் என்ன? அதெப்படி அனுதினமும் என் அருகில் இருக்கும் புருஷனிடம் இல்லாத பாசமும் , அன்பும் , நேசமும் , பரிவும் , காதலும் இன்னபிற இன்னபிற உன்னிடம் வந்தது? என்னை எப்படி நான் உன்னில் தொலைத்தேன்...


***

நாடி சோதிடம் கேள்விப்பட்டிருக்கீறீர்களா? கும்பகோணம் வைத்தீஸ்வரன் கோவில் பக்கம் ரொம்ப பிரபல்யம்...

சத்தியமங்கலம் அருகே பண்ணாரி அம்மன் கோவில் ரொம்ப சக்தி வாயந்தது...

பவளக்கொடி கதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
கதைபடிக்க இங்கே க்ளிக்கவும். இணையத்தில் இது ஒரு வசதி...

http://www.valaitamil.com/movie-tamil-cinema-history-pavalakodi-articles15-167-6632-0.html

***

இதுவரைக்கும் இந்தப்பதிவை படிச்சி முடிச்சிட்டீங்களா? நீங்க பெரிய ஆள்தான் சார்....

அதுமாதிரியும் இல்லாமல் , எதுமாதிரியும் இல்லாமல் , ஒரு இது மாதிரி , அதாங்க 'இது மாதிரியான' புதுமாதிரியான நாவல் ' எக்ஸைல்',

இதுவரைக்கும் புத்தகத்தைப் படித்ததோடு நிறுத்திக்கொண்டிருந்த என்னை முதன்முதலில் , படித்த ஒரு புத்தகம் பற்றி எழுத வைத்ததே 'சாரு நிவேதிதா' அவர்களின் வெற்றி..

பின் , முன் குறிப்பு:  இந்தப்பதிவு ' எக்ஸைல்' நாவலைப் படித்த ( குறைந்தபட்சம் 50 பக்கங்களாவது ) நண்பர்களானது.. படிக்காதவர்கள் ஓடிப்போய் பக்கத்து புத்தகக் கடையில் ரூ 250 கொடுத்து வாங்கி வந்து படிக்கவும்....ஒருவேளை இந்தப்பதிப்பு விற்றுத் தீர்ந்து விடலாம். அடுத்த பதிப்பு வர நாளாகலாம் அல்லது வராமலேயே இருந்துவிடலாம்..


பின்னுக்குப் பின் குறிப்பு : இந்தப் பதிவானது இதுவரை படித்து முடித்த 154 பக்களுக்கானது மட்டுமே.... கூடிய விரைவில் 2013க்கு முன்பாவது மீதியைப்படித்து முடித்துவிடுவேன். அதன்பிறகு இறுதி விமர்சனம்...

***

ஆங்...சொல்ல மறந்துவிட்டேன்..


அது டிசம்பர் மாசம்னு நெனக்கிறேன். ஒரு முழுக்கோழியை பாப்பிக்கியூ செய்து சாப்பிட ஆசைப்பட்டோம்...வாசக நெஞ்சங்கள் அதை பெரிய்ய பார்ட்டி ஆக்கிப்படணும்னு ஆசப்பட்டு....

சார்...சார்.

எங்க ஓடறீங்க...
காசு கொடுத்து புக் வாங்கி படிச்ச நானே ஓடலை....நீங்க ஏன்?

Comments

tea master said…
ha ha ha ha ha ha. mudiyala boss.

Popular posts from this blog

இதற்குத்தானா ஆசைப்பட்டீர்கள் திரு.சீமான்?

இன்று சீமான் அதிமுக கூட்டணியில் இருந்து பிரச்சாரம் பண்ணப்போவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது..ஏற்கெனவே ஒருமுறை செய்த பாரிய தவறொன்றை மற்றொருமுறை செய்யமாட்டார் என்றே நினைத்திருந்தேன்....இது உண்மையான செய்தியாய் இருந்தால் பேரிடிதான்..!!!! மாறாக உணர்வுள்ள இளைஞர்கள் தம் பின்னால் பேரெழுச்சியுடன் நாம் தமிழராய் எழும்போது.....அதைக்கொண்டுபோய் போய்ஸ்தோட்டத்திற்கு தாரைவார்த்துக்கொடுப்பதென்பது கனவிலும் சகிக்க முடியாத செயல்....!!  கருணாநிதிக்கு ஈழ அழிவிற்கு எவ்வளவுக்கெவ்வளவு பங்கிருக்கிறதோ அதே அளவிற்கு  சக பங்குள்ளவரே செயலலிதா... செயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்? என்ன செய்தார்? 1.எதிர்கட்சியாக மாபெரும் போராட்டங்களை நடாத்தியிருக்க வேண்டும்...அழிவது நம்சொந்தங்களே என்று தெரிந்திருந்தும் வாய்மூடி மெளனியாகவே இருந்தார். 2. கருணாநிதியின் எதிர்ப்பரசியலைக் கைவிட்டு விட்டு முத்துக்குமார் முதற்கொண்டு  தமிழக இளைஞர்களின் எழுச்சியை உபயோகித்து இந்திய அரசை ஸ்தம்பிக்க முயற்சித்திருக்க வேண்டும்....அதைவிடுத்து கொடநாட்டில் பள்ளி கொண்டிருந்தார்... 3.  சிறிதேனும் உண்மையான அக்கறை அவருக்கு தமிழர்பா...

பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது!

சீமான்களின் சபையினிலேயே , கடிதம் எழுதி எழுதிக் களைத்துப்போனதோர் கிழட்டுச் சிங்கம்.....முன்னாலுக்கும் முன்னால் அவர் கொண்ட தமிழ்ப்பற்று.....இன்னாளில் அது தமது மக்கட்பற்றாய் மாறிப்போனதொரு சோகம். ஏதோவொரு புண்ணியத்தில், எவரோ செய்த வரலாற்றுத் தவறால் , கொள்கை , தொலைநோக்கு , மக்கட்பற்று இவை பற்றிய சிந்தையேதுமின்றி அரசியலில் விபத்தாய் விளைந்த கொடநாட்டு ஈழத்தாய்....தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தமிழர் பற்றியும் , தமிழர் அரசியல் பற்றியும் எழுதி வைத்துப் பேசும் செல்வி யவர்.........இன்னமும் அவர் சேலை பிடித்துத்திரியும் வீணர் கூட்டம்.! கூட்டணிக்கேற்றப்படி கொள்கையை மாற்றிக்கொள்ளும் மருத்துவப் படையாச்சி.........வீரமிகு வன்னியகுலத்திலே வந்துதித்த சந்தர்ப்பவாதச் சாக்கடை....சமரசமற்ற கொள்கை அரசியலை சந்தர்ப்பவாதச் சாக்கடைக்குள் தள்ளிய பெருமைக்குரிய மருத்துவர் தமிழ்க்குடிதாங்காத தமிழ்க்குடிதாங்கி! யாரை எதற்காக எதிர்த்து அரசியல் செய்யவேண்டுமே அவர்களோடே தம் தேவைக்குதந்த படி கூட்டு வைத்துக்கொண்டு ஈழத்திற்க்காய் எந்நேரமும் பாடுபடும் திரு.வைகோ அவர்கள்....அவரும் சிறை சென்றார்....

ஒற்றையாட்சி முறையா, பிரிவினைக்கான அடித்தளமா?

இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு. வேற்றுமையில் ஒற்றுமையே நமது பலம்.. நீங்கள் விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ இந்தியாவில் பல்லினங்கள் உண்டு, பல மொழிகள் உண்டு , பல பழக்கவழக்கங்கள் உண்டு , இவற்றை ஏற்றுக்கொண்டு , சகிப்புத்தன்மையோடு எல்லோரும் ஓரினமாய் வாழ்வதே இந்தியா வாழ்வாங்கு வாழ்வதற்கான வழிமுறை. அதைவிடுத்து , ஒற்றையாட்சியை நிறுவுவோம் என்று சொல்லிக்கொண்டிருந்தால் இந்தியா எனும் நாடு இருக்குமா என்பதே கேள்விக்குறி!!! குறிப்பாக , வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் " நீட்" தேர்வு... எனக்கென்று என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசும் , என்னால், என் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களெல்லாரும் சேர்ந்து நீட் எமக்கு வேண்டாம் என்று தீர்மானம் செய்கிற போது அதை வலிந்து எம் மேல் திணிக்க இந்திய நடுவண் அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்ற கேள்வியெழுப்புவதில் தவறென்ன இருக்கிறது? பல பத்து சின்னஞ்சிறு நாடுகளாய் ஐரோப்பியாவில் பரவிக்கிடப்பதற்கு பாரிய காரணமென்ன? மொழி மற்றும் இனங்களால் அவர்கள் பிளவுபட்டிருக்கிறார்கள்... அதனால் தான் இந்தியாவின் பன்முகத் தன்மைக்கேற்ப மொழிவாரி மாநிலங்களை அமை...