Skip to main content

விதி

சமயங்களில் விதி பற்றிய நினைப்பு சிலவும் வந்து வந்து போவதுண்டு. எதற்கெடுத்தாலும் அவன் விதி அப்படி ஆயிட்டான் என்று சொல்லும் என் அம்மத்தாக் கிளவி கூட அதற்கான காரணமாய் இருக்கலாம். 

விதிமுறை , விதிகள் எனப்படும் சட்டதிட்டங்களுக்கு உட்படும் முறையான "விதி" யினைப் பற்றி நாம் பேசவில்லை. காலம் வகுத்த வழி , கடவுள் விடுத்த விதி என்று திண்ணையில் வெத்தலை பாக்கு இடித்துக்கொண்டே ( உடனே பாரதிராஜாவின் சினிமாத்திண்ணைக்கு உங்கள் கவனம் போனால் நாம் பொறுப்பில்லை..) என்று சொல்லும் பெரிசுகள் இருக்கிறார்களே அப்படிப்பட்ட "விதி" தான் நாம் பேசுவது.

சாலைகளில் , தெருக்களில் வாழைப்பழத்தைச் சாப்பிட்டு விட்டு தோலை தூக்கி எறிந்து போவதன் மூலம் வழுக்கி விழுந்த பலரது கதையும் விதி என்றால் , தோலைத் தூக்கி எறிந்து போவது எதில் சேர்த்தி?..

முழங்கால் உயரத்திற்கு  அல்லாது வேகத்தடைகளை ( தமிழில் சொல்லுவதானால்.ஸ்பீடு ப்ரேக்கர்களை) போட்டதன் மூலம் எங்களது தாத்தாவின் தம்பியினுடைய பேரனின் பிள்ளையொன்று டி.வி.எஸ். பிப்டி மோட்டார் சைக்கிளில் மரணித்ததே , அதற்குப் பெயர் "விதி" என்றால் , அந்த வேகத்தடையை அப்படி முட்டாள்தனமாக போட்டு வைத்த புத்திசாலிப் போக்குவரத்துக் காவலர்களின் மதியை என்ன வென்று சொல்ல?

எல்லாம் விதித்த படியே நடந்தது என்றால் , விதியை விதித்தது யார்?

கடவுளா? 

கடவுள்தான் விதியை விதைத்தானென்றால் அந்தக் கடவுள் தானா "அய்ஷா" வின் காதையும் மூக்கையும் அறுக்கச் சொன்னானா? 

யார் அந்த அய்ஷா?

ஆப்கானிஸ்தானின் ஏதோ ஒரு மூலையில் இன்றைக்கு இரத்தமும் , சதையுமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பெண்....

மனதைத் திடப்படுத்திக்கொண்டு இப்புகைப்படத்தைப் பாருங்கள்...அல்லது மனத்திடம் இல்லாதவர்கள் இதைப் பார்க்காதீர்கள்...



இந்தக் கொடூரமான நிகழ்வு "விதி" யால் நடந்ததா? விதியென்ற பேரில் மனிதத்தை சிதைக்கும் மனிதர்களால் வந்ததா? 

"தலிபான்"கள் இசுலாமிய விதிகளை இப்பெண் மதிக்கவில்லையென்பதால் காதையும் , மூக்கையும் அறுத்து வீசியிருக்கிறார்கள்..இதைத் தான் இசுலாம் போதிக்கிறதா? இதைத்தான் இறைத்தூதர் நபிகள் நாயகம் ( சல்) அவர்கள் போதித்தாரா? 

இதைப்பற்றி அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் " டைம்" பத்திரிக்கை விரிவானதொரு கட்டுரையைத் தந்திருக்கிறது.  அமெரிக்காவின் ஆப்கானிஸ்தானத்தை ஒட்டிய நிலைப்பாட்டை ஆதரிக்கும் வண்ணம் அப்பத்திரிக்கை இதை வெளியிட்டிருக்கலாம்.......அதைப் பற்றிய விமர்சனப் பார்வை எமக்குமுண்டு....

அதுபற்றிய இணைப்பிற்கு : 

ஆனால் , இந்நிகழ்வை சார்புப்பார்வையின்றி பார்ப்பதே நமது குறிக்கோள்...!

மனிதர்கள் மீது நம்பிக்கை குறையும் போது மதத்தின் மீது நம்பிக்கை வருகிறது...ஆனால் , மதத்தின் பெயரால் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனங்கள் நிகழ்கின்ற போது மதங்களைப் பற்றிய நமது பார்வையும் மாறிப்போகிறது...

காலணி போட்டு நடக்கக்கூடாது என்று சொல்லும் உயர்சாதிப் ஆதிக்கம் இந்துமதம் என்ற போர்வையில் "ஆதி திராவிடர்களுக்கு" விதிக்கப்பட்ட விதியாகிப்போனது.... 

ஆடுகளை , கோழிகளை ஆண்டவனுக்குப் படைக்கும் கலாச்சாரமும் கூட நாளடைவில் , சடங்காகவும் , விதியாகவும் மாறிப்போனது....அதே மதத்தின் பெயரால் "மாடுகளை" வெட்டுவது மட்டும் தவறானது....காரணம் அது சாமியாம்..

அதே மாட்டை கெழடு தட்டினால் வைத்துப் பராமரிப்பதில்லை நாம்.. அடிமாட்டுக்காக கேரளாவுக்கு விற்றுக்காசு பார்த்துவிடுகிறோம்...பால் தராத பசு மாடுகளை "அது சாமி" என்பதற்காக வெறுமனே சாப்பாடும் , புண்ணாக்கும் போட்டு வளர்ப்பதில்லை........எங்கியோ தீட்டுப்பட்டுப்போச்சு என்று துண்டுக்கடியில் விரல்களைப் பிடித்து விலை பேசி விட்டு விடுகிறோம்...

சுயநலங்களால் நிரம்பிய இச்சமூகம், நாளடைவில் தமக்குகந்தவற்றை விதியாக்கி விட்டுவிடுகிறது. சுயமாகச் சிந்திக்கத் தெரியாத மனிதர்களோ அவைகளை தமது விதிகளாக ஏற்றுக்கொண்டு விடுகிறார்கள்..

இப்போது சொல்லுங்கள்....நாம் சுயசிந்தனையை ஒட்டி வாழும் மனிதர்களா? இல்லை விதிக்கப்பட்ட விதிகளை ஒட்டி வாழும் மாக்களா? 

வழிகள் இரண்டும் திறந்தே இருக்கின்றன....வாழ்வது எப்போதும் நம் கையில்...

குதிரையின் லகான்கள் நம்மிடமே...நாம் தீர்மானிக்க வேண்டியது குதிரையை எத்திசையில் செலுத்துவது என்பது பற்றி மட்டுமே...

Comments

Robin said…
திரும்பவும் எழுத வந்ததில் மகிழ்ச்சி!
மோகன் said…
மீண்டு வந்ததில் மெத்த மகிழ்ச்சி.

கடந்த பதிவிலேயே பின்னூட்டம் போடணும்னு முயற்சித்தேன் முடியல.

பதிவு பத்தி என்ன சொல்ல ?

ம்ம்.சிந்திக்கவேண்டிய கருத்து.
KATHIR = RAY said…
விதி என்பது செயல் அல்ல
செயலின் முடிவு

விதி என்பது வாழ்க்கையின் நிகழ்ச்சி நிரல்

உங்களது வாழ்க்கையை ஆரம்பத்திலிருந்து கவனித்து பாருங்கள் உங்களுக்கு உங்கள் விதி புரியும்

நிகழ்ச்சி நிரலின்
ஆரம்பம் பிறப்பு
இடையில் வாழ்வின் நிலைகள்
முடிவு இறப்பு
திரும்பவும் எழுத வந்ததில் மகிழ்ச்சி!/

மிக்க நன்றி திரு.ராபின். நான் பதிவெழுத வந்த புதிதிலும் அனேகமாக நீங்கள் தான் ஒரு விவாதக் களம் மூலம் என்னை வரவேற்றீர்கள்.. அன்பிற்கு நன்றி.

வாழ்த்துக்கள் , நீங்கள் ஏதும் வலைப்பூவில் எழுதுகிறீர்களா?

அறிந்து கொள்ள ஆவல்.

தோழமையுடன்
மதிபாலா
மீண்டு வந்ததில் மெத்த மகிழ்ச்சி. //

நன்றி திரு.மோகன் , கடந்த பதிவில் பபளிஷ் பண்ணும் போது பின்னூட்டம் தேவையற்றது என்ற தெரிவை என்னையறியாமலேயே தேர்ந்தெடுத்திருந்தேன். அதனால் பின்னூட்டங்களைப் பெற இயலாமல் போனது , அதற்கான வருத்தங்கள்.

பின்னூட்டத்திற்கும் , கருத்திற்கும் நன்றிகள்.

தோழமையுடன்
மதிபாலா
விதி என்பது செயல் அல்ல
செயலின் முடிவு

விதி என்பது வாழ்க்கையின் நிகழ்ச்சி நிரல் //

விதி என்பது வாழ்க்கையின் நிகழ்ச்சிகளை எழுதி வைக்கும் , பதிவுப்புத்தகம் தானா என்ன?

**

உங்களது வாழ்க்கையை ஆரம்பத்திலிருந்து கவனித்து பாருங்கள் உங்களுக்கு உங்கள் விதி புரியும்

நிகழ்ச்சி நிரலின்
ஆரம்பம் பிறப்பு
இடையில் வாழ்வின் நிலைகள்
முடிவு இறப்பு //

சத்தியமாகச் சொல்கிறேன் , மேற்கண்ட வாதத்தினைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு மண்டையில் சரக்கில்லை. எனக்குப் பெரியவர்கள் சொன்னதெல்லாம் ஒன்றுதான்...

எது நடந்ததோ அது விதிப்படியே நடந்தது...எது நடக்கிறதோ அதும் விதிப்படியே நடக்கும் ...நீ , நான் , அவன் , இவன் , எவனும் இவ்வுலகில் மாற்றக் கூடியது எதுவுமில்லை..

நன்றி ,

வருகைக்கும் , கருத்துக்கும்

தோழமையுடன்
மதிபாலா
Anonymous said…
( தமிழில் சொல்லுவதானால்.ஸ்பீடு ப்ரேக்கர்களை) ...

கோயமுத்தூரு குசும்பு

Popular posts from this blog

பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது!

சீமான்களின் சபையினிலேயே , கடிதம் எழுதி எழுதிக் களைத்துப்போனதோர் கிழட்டுச் சிங்கம்.....முன்னாலுக்கும் முன்னால் அவர் கொண்ட தமிழ்ப்பற்று.....இன்னாளில் அது தமது மக்கட்பற்றாய் மாறிப்போனதொரு சோகம். ஏதோவொரு புண்ணியத்தில், எவரோ செய்த வரலாற்றுத் தவறால் , கொள்கை , தொலைநோக்கு , மக்கட்பற்று இவை பற்றிய சிந்தையேதுமின்றி அரசியலில் விபத்தாய் விளைந்த கொடநாட்டு ஈழத்தாய்....தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தமிழர் பற்றியும் , தமிழர் அரசியல் பற்றியும் எழுதி வைத்துப் பேசும் செல்வி யவர்.........இன்னமும் அவர் சேலை பிடித்துத்திரியும் வீணர் கூட்டம்.! கூட்டணிக்கேற்றப்படி கொள்கையை மாற்றிக்கொள்ளும் மருத்துவப் படையாச்சி.........வீரமிகு வன்னியகுலத்திலே வந்துதித்த சந்தர்ப்பவாதச் சாக்கடை....சமரசமற்ற கொள்கை அரசியலை சந்தர்ப்பவாதச் சாக்கடைக்குள் தள்ளிய பெருமைக்குரிய மருத்துவர் தமிழ்க்குடிதாங்காத தமிழ்க்குடிதாங்கி! யாரை எதற்காக எதிர்த்து அரசியல் செய்யவேண்டுமே அவர்களோடே தம் தேவைக்குதந்த படி கூட்டு வைத்துக்கொண்டு ஈழத்திற்க்காய் எந்நேரமும் பாடுபடும் திரு.வைகோ அவர்கள்....அவரும் சிறை சென்றார்.

நண்பர் 'டோண்டு' ராகவன்...

உயிரோடு இருக்கும்வரை அறிக்கைகளால் அர்சித்து எதிர்ப்பரசியல் நடாத்தி செத்துபோன பிறகு ஆருயிர் நண்பர் என்று அழைத்துக்கொள்ளும் எல்லா அரசியல்வாதிகளையும் போலவே நான். எனக்கும் மறைந்த உயர்திரு 'டோண்டு' ராகவன் அவர்களுக்குமான பரிச்சயம் அவ்வளவொன்றும் அதிகமில்லைதான். பதிவுலகையும் , பர்ஸனல் லைப்பையும் பிரித்து வைத்துக்கொள்ளும் எண்ணமுடைய நான் , டோண்டு மட்டுமல்ல மற்றபல பதிவுலக நண்பர்களுடனும் கூட தனிப்பட்ட தொடர்புகளை வைத்துக்கொண்டதில்லை... இருந்தாலும் , அவ்வப்போது பதிவுலக பின்னூட்டங்களின்பாலே தொடர்ந்துகொண்டிருந்த தொடர்பு , எனது 'போலி டோண்டு' பற்றிய கட்டுரையொன்றிலேயே  தீவிர விவாதமாக மாறியது.. ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீதோ இல்லை அவர்தம் பிற்போக்கான கருத்துக்கள் மீதோ இருந்திருக்கலாம். கடினமாக ஓரிரு முறை பேசியிருக்கலாம்.. அத்தனையும் தாண்டி அவர் மிக நல்ல மனிதர் , கடும் உழைப்பாளி என்பதை அவரது பதிவுலகம் மூலமாக அறிந்தவனெனினும் உறுதியாக கூறவியலும்.. அத்தகைய நல்ல மனிதரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் , நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்... வருத்தங்கள

எஸ்.எஸ்.பொன்முடி - மனிதருள் மாணிக்கம்.

எஸ்.எஸ்.பொன்முடி , கொங்குச்சீமையிலே குறிப்பாக பல்லடம் , சூலூர் வட்டாரத்தில் தெரியாதவர்கள் சொற்பமே. எஸ்.எஸ். பொன்முடி அவர்கள் மட்டுமல்ல , அவர்களது குடும்பமே சூலூரில் பழம்பெருமை மிக்க குடும்பம். காலங்காலமாக அவர்களது குடும்பத்தினரே சூலூரின் அனைத்து தேர்தல்களிலும் வென்றதும் , வெல்வதும் வரலாறு. பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவராயினும் மாற்றுக்கட்சியினராலும் மதிக்கப்படும் சில மனிதர்களில் எஸ்.எஸ் பொன்முடியும் ஒருவர். அவருக்கும் , எனக்குமான பரிச்சயமொன்றும் அவ்வளவு அதிகமில்லைதான். அப்போது எனக்கு ஒரு பத்திலிருந்து , பதினைந்து வயதிருந்திருக்கலாம். கலங்கலில் கவுன்சிலர் தங்கவேலு சர்வ அதிகாரமும் பொருந்தியவராய் வலம் வந்துகொண்டிருந்தார். அவர் எஸ்.எஸ்.பொன்முடியின் வலக்கரம். ஊருக்கு மேற்கே ஜல்லிக்குழி என்ற மனிதர்கள் உபயோகப்படுத்த முடியாத , இயலாத பகுதி ஒன்றிருந்தது.....அப்போது கழகம் ஆட்சியிலிருந்தது + பொன்முடி எம்.எல்.ஏவாக இருந்தார். கட்சிக்காரர்கள் , குறிப்பாக ஒடுக்கப்பட்ட , மிக பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் கேட்டுக்கொண்டதற்காக , மிகுந்த பிரயாசைப்பட்டு தங்கவேல் மற்றும் எஸ்.எஸ்.பொன்முடி அவ