Skip to main content

என்னைப் பாதித்த சென்னை.

"சென்னை" என்று சொன்னாலே என் மனதிற்குள் இனம் புரியாத ஒரு கலக்கம் எப்போதுமே இருப்பதுண்டு.ஏன்???

அதற்கான முதற்காரணம் , ரயில்வே ஸ்டேஷனில் இருந்து துவங்கி விடுகிறது. பொதுவாகவே , நான் கொஞ்சம் மென்மையானவன்...மென்மையானவன் என்று சொல்வதை விட கூச்ச  சுபாவத்துக்காரன் என்றும் வைத்துக்கொள்ளலாம். பொது இடத்தில் அதிர்ந்து கூட பேசுவதில் விருப்பமற்றவன். 

அப்படிப்பட்ட நான் , சென்னையின் கூலிகள் அதட்டும் அதட்டலுக்கு கொஞ்சம் அதிர்ந்துதான் போவேன்......எனது சென்னை அனுபவங்கள் சில உங்கள் பார்வைக்கு....

 ***

சில வருடங்களுக்கு முன் , சென்னைக்கு வந்திருந்தேன். எனது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு சற்றேறக்குறைய 8 மணி நேர இடைவெளி இருந்தது....என்ன செய்வதென யோசித்து பின்பு "க்ளோக்" ரூமில் ( பொருட்கள் பாதுகாக்கும் அறை) எனது சூட்கேஸினை வைத்துப்பூட்டினேன்.. எனக்கு நன்றாக நினைவிருந்தது அப்போது அதற்கான பணத்தைக் கொடுத்ததும் , அவர் சில்லறையை திருப்பிக்கொடுத்ததும்..... 

பின்பு வெளியே போய்விட்டு , விமானநிலையத்திற்கு டாக்ஸி எடுத்துக்கொண்டு பொருட்களை எடுக்க வந்தேன்....எடுத்துக்கொடுத்து விட்டு ( அதே ஆள்...)  பணம் கேட்டார்............காலையில் கொடுத்தேனே என்று சொன்னதுதான் தாமதம்..

"யோவ்...என்ன ப்ராடு பண்றியா நீ....என்று ஏகவசனத்தில் ஆரம்பித்து பத்து நிமிடம் பேசி முடித்தார் அவர்....என்ன செய்வது ,  எதுவும் பேசாமல் கூனிக்குருகி "காசை" எடுத்துக்கொடுத்து வந்து விட்டேன் நான்...it was so embrassing situation you know. 

தராதரம் ஏதுமின்றி அவர் செய்த அந்தச் செயல் வெகுவாக என்னைப் பாதித்திருந்தது ..

***

அதே சென்னை ரயில்வே ஸ்டேஷனுக்கு  நேரெதிரே , சென்ட்ரல் லாட்ஜ் என்று ஒன்று இருக்கிறது.....ஒருமுறை கோவை திரும்பும் வழியில் புகைவண்டிக்கு நேரமிருந்த காரணத்தால் அந்த விடுதியில் தங்கி விட்டு பயணிக்கலாம் என்று நானும் , என் நண்பன் ரஞ்சித்தும் தீர்மானித்தோம்.

எனது சூட்கேஸ்  விமான ஊழியர்களால் சரிவர கையாளப்படாததால் ஹேண்டில் பிய்ந்திருந்தது....அது நல்ல கனமும் கூட...சாலையை கிராஸ் பண்ணி கொண்டு போவதில் இருந்த சிரமம் கருதி ஒரு ஆட்டோ பிடித்து ஸ்டேஷன்  வரை கொண்டு சென்று அங்கே ஒரு கூலியைப் பிடிக்கலாம் என்று தீர்மானித்து , ஒரு ஆட்டோவையும் பிடித்தோம்....இறக்கி விட்டுவிட்டு அவன் கேட்ட தொகை எவ்வளவு தெரியுமா? 100 ரூபாய்......என்னப்பா இவ்ளோ கேக்குறே என்று சொன்னதுக்கு ஆரம்பித்தான் பாருங்கள்......

என்ன ஒரு மனசாட்சியே இல்லாத மிருகமாய் அவன் இருக்க முடியும்?

***

அடுத்த கதை....சென்னை விமான நிலையம் அருகில் ஒரு ஹோட்டல் இருக்கிறது...குறுகிய பயண நேர இடைவெளிக்கு அங்கே சிலசமயம் தங்குவதுண்டு........பதிவு செய்யும் போது  சொன்னால் அவர்களே விமான நிலையத்தில் வந்து  பிக்-அப் செய்து கொள்வார்கள்... எனக்கும் , என் நண்பருக்குமாக ( வெளிநாட்டு நண்பர்..)  இரண்டு அறைகள் பதிவு செய்திருந்தோம்......

ஒரு பெரிய டெம்போ டிராவலரை ( உலகத்திலேயே நான் கண்ட மிகப் பெரிய விமான நிலைய பிக்-அப் வண்டி அதுதான் என்பது கிளைக்கதை....) .. கொண்டு வந்து பிக் அப்பினார்கள்... வண்டியை விட்டு இறங்கும் போது டிரைவருக்கு "டிப்ஸ்" கொடுக்க ஆசைப்பட்டார் என் வெளிநாட்டு நண்பர்.... 

500 ரூபாய் தாளொன்றை ( கணக்கு தெரியாமல் ) எடுத்து என்னிடம் காட்டி இவ்வளவு கொடுக்கலாமா என்று கேட்டார் அவர்....இல்லை "டிப்ஸ்"க்கு அது ரொம்ப அதிகம் என்று நான் விளக்கிவிட்டு என் பையில் இருந்து ஐம்பது ரூபாய் தாள் ஒன்றை எடுத்து வண்டி ஓட்டுனருக்கு கொடுத்தேன்....

அதற்கு அந்த டிரைவர் சொன்ன    வார்த்தை இன்னமும் என் காதில் நிற்கிறது..." யோவ்...சாவுகிராக்கி..கொடுக்கற மனுசன் கொடுத்தாலும் நீ வுட மாட்டேன்றே...உம் பிச்சைக் காசு 50 ரூபாயை நீயே வச்சுக்க " என்று தூக்கி  என் மூஞ்சியில் வீசினார்...

இன்னமும் அம்பது ருபாய்க்கு இந்தியாவில் மதிப்பிருப்பதாகவே அறிகிறேன்...மதிப்பில்லாமல் போது மனிதனுக்குத்தான்....

அதே பயணத்தின் அடுத்த  நாள் சென்னை எனக்கு மிக வித்தியாசமான அனுபவத்தை   அளித்தது...."பாரமவுண்ட் ஏர்வேஸ்"  என்னும் அற்புத  நிறுவனம் தான் அந்த அழகிய அனுபவத்திற்கான மூலம்....அன்பான உபசரிப்பு , விருந்தோம்பல்... பெட்டியைக் கூட  அவர்களே கையாண்ட விதம்...எல்லாமும்  சேர்த்து அற்புத சேவையை வழ்ங்கினார்கள்..

இதெல்லாம் சில சேம்பிள்கள்தான்... என்னைப் பாதித்த "சென்னை" கதை  இன்னமும் இருக்கிறது.....

இப்போதெல்லாம் , கொஞ்சம் விமானக்கட்டணம் அதிகமாகவே இருந்தாலும் கோவையிலிருந்தோ , பெங்களூரிலிருந்தோ கிளம்பி விடுகிறேன்...முடிந்த அளவிற்கு சென்னையை "ஸ்கிப்" பண்ணி விடுகிறேன்....


உலகெங்கும் பணத்திற்கான மதிப்பு அனுதினமும் குறைந்து கொண்டுதான் வருகிறது...அதினினும் வேகமாக மனிதனுக்கான மதிப்பு சென்னையில் குறைகிறது..குறைந்து கொண்டே வருகிறது. மாறாக உலகின் மற்ற பாகங்கள் பணத்தைவிட மனிதனைக் கொண்டாடுகின்றன.

அதை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தை விட தனிமனிதர்களான நமக்கு மட்டுமே உண்டு....!!

Comments

Anonymous said…
gud..... xperience......
நன்றி அனானி..

actually , it is a "bad" experience.
இந்த கேவலம் சென்னையின் வரலாற்றுடன் தொடர்புடையது.சென்னையில் வாழ்பவர்களில் ஆண்டாண்டு காலமாக அங்கேயே பரம்பரையாக இருந்து வாழ்பவர்கள் பெரும்பாலும் இந்த மனபோக்கு உள்ளவர்கள்தான்.இவர்களுக்கு கல்வி அறிவும்,பழக்க வழக்க குண நலன்களோ இருக்காது. கேவலமாக, பிறரை மதிக்காத, நம்பாத, நாகரீகம் அற்ற அடாவடித்தனமான போக்கு ,பிறரை எத்தி ஏமாற்றும் புத்தியும் ,மரியாதை குறைவான பேச்சு முறைகளும் சாதரணமாக காணப்படும்.ஒரு வேலை இது Xenophobia என்ற மன நோயின் பரம்பரை பழக்கம்.சீக்கிரம் மாறாது.
மீதம் உள்ள அணைவரும் தமிழ் நாட்டின் பிற ஏனைய பகுதிகளில் இருந்து வேலை நிமித்தம் 'பட்டண' வாசியாகிபோனவர்கள். இவர்கள் தங்கள் சொந்த மண்ணின் குண நலன்களோடு வாழ்பவர்கள். முதலில் சொல்லப்பட்ட வகைக்கு முடிலும் எதிமறையான பழக வழக்கங்களை உடையவர்கள். யாரிடமும் மரியாதையுடன் பழகுவார்கள்.
If you are in Rome,Do what Romes do - இந்த பாலிசியை புரிந்து கொண்டவர்கள் நாங்கள்.
ஆளை பார்த்தவுடன், 'இன்னாது' என்று ஆரம்பித்தாலே போதும். புரிந்துவிடும் அவர்களுக்கு 'நம் ஜம்பம் இவர்களிடம் செல்லாது ' என்று. வழிக்கு வருவார்கள். இது என் முப்பது வருட சென்னை அனுபவத்தில் ஒன்று. மற்றபடி சென்னை வெய்யில் தான் கொடுமையாக இருக்கும் தவிர இதுவும் ஒரு நல்ல ஊர்தான். நிறைய வட நாட்டவர்கள் சொல்லும் புகழ்ச்சி இது.
தேவன் said…
நல்ல பதிவு இது. உண்மையில் சென்னையில் மனிதம் குறைந்துதான் போனது. இதே ஹைதராபாத் போங்கள். அழகாக மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டுவார்கள்.மிச்சக்காசு ஐம்பது பைசா ஆகவே இருந்தாலும் திருப்பிக்கொடுப்பார்கள். சென்னையில் அதை எல்லாம் நீங்கள் எதிர்பார்க்கவே முடியாது. மரியாதை கெட்ட ஊர் இது. அங்கேயே வசித்தாலும் அவலங்கலை ஒத்துக்கொள்வதில் தப்பில்லை!

ஆனால் , கொஞ்சம் அதட்டலாக பேசிப்பாருங்கள்.சத்தமில்லாமல் கொடுத்ததை வாங்கிக்கொண்டு நடையைக் கட்டுவார்கள். ஆனால் எல்லோரும் அப்படியெண்று சொல்லமுடியாது.
அன்பின் நண்பரே...



வலைச்சரத்தில் இன்றைய எனது பகிர்வில் உங்களது சிறுகதை குறித்து பகிர்ந்துள்ளேன்.

வலைச்சரம் பார்க்க : http://blogintamil.blogspot.com/

நன்றி.

நட்புடன்,
சே.குமார்.

http://vayalaan.blogspot.com
நண்பர் கக்கு மாணிக்கம்

நன்றி தங்கள் கருத்துக்கும் , வருகைக்கும்.

நண்பர் தேவன்


இந்த ஆட்டோ மீட்டர் கேவலம் சென்னையில் மட்டுமல்ல , கோவையிலும் உண்டு.. நன்றி வருகைக்கும் , கருத்துக்கும்.

நண்பர் சே.குமார்..

அன்பு நண்பருக்கு,

எனது சிறுகதையை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

வாழ்த்துக்கள்... இங்கே நீங்கள் பின்னூட்டியிருக்கும் தோழர்களும் , நண்பர்களும் அனேகர் எமக்கு புதியவர்கள்.. அத்தகைய அறிமுகத்திற்கும் நன்றி.

நியாயமற்ற தாமதத்திற்கு பொருத்தருள்க.

தோழமையுடன்,
மதிபாலா
நல்ல பதிவு இது. உண்மையில் சென்னையில் மனிதம் குறைந்துதான் போனது.
Vee said…
Why blood? Saaaaaaaaame blood.

Popular posts from this blog

இதற்குத்தானா ஆசைப்பட்டீர்கள் திரு.சீமான்?

இன்று சீமான் அதிமுக கூட்டணியில் இருந்து பிரச்சாரம் பண்ணப்போவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது..ஏற்கெனவே ஒருமுறை செய்த பாரிய தவறொன்றை மற்றொருமுறை செய்யமாட்டார் என்றே நினைத்திருந்தேன்....இது உண்மையான செய்தியாய் இருந்தால் பேரிடிதான்..!!!! மாறாக உணர்வுள்ள இளைஞர்கள் தம் பின்னால் பேரெழுச்சியுடன் நாம் தமிழராய் எழும்போது.....அதைக்கொண்டுபோய் போய்ஸ்தோட்டத்திற்கு தாரைவார்த்துக்கொடுப்பதென்பது கனவிலும் சகிக்க முடியாத செயல்....!!  கருணாநிதிக்கு ஈழ அழிவிற்கு எவ்வளவுக்கெவ்வளவு பங்கிருக்கிறதோ அதே அளவிற்கு  சக பங்குள்ளவரே செயலலிதா... செயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்? என்ன செய்தார்? 1.எதிர்கட்சியாக மாபெரும் போராட்டங்களை நடாத்தியிருக்க வேண்டும்...அழிவது நம்சொந்தங்களே என்று தெரிந்திருந்தும் வாய்மூடி மெளனியாகவே இருந்தார். 2. கருணாநிதியின் எதிர்ப்பரசியலைக் கைவிட்டு விட்டு முத்துக்குமார் முதற்கொண்டு  தமிழக இளைஞர்களின் எழுச்சியை உபயோகித்து இந்திய அரசை ஸ்தம்பிக்க முயற்சித்திருக்க வேண்டும்....அதைவிடுத்து கொடநாட்டில் பள்ளி கொண்டிருந்தார்... 3.  சிறிதேனும் உண்மையான அக்கறை அவருக்கு தமிழர்பா...

யார் நமக்கு எதிரி?

ஈழப்போராட்டம் பல படிநிலைகளைக்கொண்டது, தந்தை செல்வாவில் ஆரம்பித்து, பல்வேறு போராளிக்குழுக்களில் தொடங்கி புலிகளால் வலுப்பெற்றது. மற்ற போராளிக்குழுக்களிலிருந்து புலிகளின் கைகளுக்கு முழுதும் மாறியதெப்படி?  இந்தியப்பெருந்தலைவர் இந்திராகாந்தி அவர்கள் எல்லா போராளிக்குழுக்களையும் ஆராய்ந்து புலிகள் தான் எல்லோரிலும் வலுவானவர்களாகவும் , சரியான சிந்தனைப்போக்குடையவர்களாகவும் இருப்பதாக தீர்மானித்தார்கள். அதனால் விடுதலைப்புலிகளுக்கு கூடுதல் ஆயுத பலம் மட்டுமல்ல , தார்மீக ஆதரவுத்தளமும்  கிடைத்தது.  தமிழகத்தில் எம் ஜி ஆர் அவர்களுமே விடுதலைப்புலிகளை நம்பிய அளவிற்கு மற்ற குழுக்களை நம்பவில்லை. ஏன் கலைஞர் கூட சகோதர யுத்தம் வேண்டாம் வேண்டாமென தலையில் அடித்துக்கொண்டாரே தவிர ஒரு சந்தர்ப்பத்தில் கூட புலிகளை இடித்துரைத்தாரில்லை. தனது இறுதிக்காலம்  வரை சகோதர யுத்தத்தினால் தான் புலிகள் வீழ்ந்தார்களென்பதை உறுதியாக நம்பினார். அதற்காக புலிகளை வெறுத்தாரா என்றால் ஒருகணமும் வெளிப்படையாக அவர் சொன்னதில்லை.  புலிகளால் அவர்களது மிதமிந்திய ஹீரோயிசத்தால் அதிகம் இழந்த அரசியல் கட்சி ஒன்று உலகில் இருக்கும...

செயற்கரிய செய்வர் பெரியர்….திரு.பொள்ளாச்சி நசன்.!

இந்தப்பதிவினை 2009 ல் எழுதினேன். படித்த நண்பர்கள் அனைவரும் , இது எமக்கு புதிய செய்தியே என்றார்கள்....நல்லசெய்தியினை நாலு பேருக்கு தெரியும்படி மீண்டும் உரக்கச்சொல்வதில் தவறில்லையே. அதனால் இந்த மீள்பதிவு..... நவம்பர் 2009 க்கும் 2012க்கும் இடைப்பட்ட காலவெளியில் 'தமிழம்' இணையம் தான் எத்துணை வளர்ந்திருக்கிறது? வாழ்த்துக்களும் ! , வணக்கங்களும்! த ற்செய லாக நேற்றிரவு வலையில் உலாவிக்கொண்டிருந்தேன்….மேற்கண்ட தலைப்பிலிருக்கும் குறள்மொழிக்கேற்ப , அரியதொன்றை செய்து கொண்டிருக்கும் திரு. பொள்ளாச்சி நசன் அவர்களைப் பற்றியும் , அவரது தமிழம் இணையம் பற்றியும் அரிய நேரிட்டது. உங்களில் சிற்றிதழ் தொடர்புபட்ட பலரும் அவரை அறிந்திருக்கக் கூடும்…….இன்னும் பலர் அவரைப் பற்றி அறிந்திருக்காமலும் இருக்கக் கூடும்…..என்னைப் போல..! அதனால் ஒரு சின்ன அறிமுகம்… ( சூரியனுக்கே டார்ச்சா என்று திரு.நசன் அவர்கள் கோவித்துக்கொள்ளக் கூடாது…!!) பொள்ளாச்சி நசன் என்று தன் பெயரை வழங்கும் மணிப்பிள்ளை நடேசன் தமிழம் என்னும் வலையிதழின் ஆசிரியர். இவர் சிதம்பரத்தில், செப்டம்பர் 15, 1952 அன்று பிறந்தார். பொள்ளாச்ச...