Skip to main content

நாசரின் "நச்" பேட்டி , மனிதர்களுக்கு மட்டுமானது!

திரையுலகத்தில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்ற நட்சத்திர நடிகர் நாசர் அவர்களின் சமூக அக்கறை மெய்சிலிர்க்க வைக்கிறது..

இவர் போன்ற உண்மையான சமூக ஆர்வலர்களை விட்டுவிட்டு ,  சமூக உணர்வற்ற அக்கறையற்ற நடிகர்களே நாடாள வேண்டும் என்று கொடி பிடிக்கும் இளைஞர்கள் கொஞ்சம் சிந்திக்கட்டும்....




கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனும் , உணர்வுள்ள , உணர்வற்ற மனிதனும் பார்க்கவேண்டும்!!!

Comments

இருந்தாலும் ஆரம்பத்தில் அதிகமாகவே குழப்புகிறார். அவருடைய ஆதங்கத்தை புரிந்துகொள்ள முடிகிறது. பொங்கள் வாழ்த்து மறுப்பின் காரணத்தை நம் அனைவராலும் புரிந்துகொள்ளவும் முடிகிறது. இன்றைய காலங்களில் பொங்கள் என்பது உழவர்களுக்கு மரியாதை காட்டும் விழாவாகவும் அனைத்து தமிழர்களின் பண்பாட்டு ஒற்றுமையின் வெளிப்பாட்டை கொண்டாட ஒரு சந்தர்ப்பமாக அமைகிறது.
Anonymous said…
பொங்கல் வாழ்த்துக்கு மறுப்பு தெரிவிக்கிற மாதிரி தீபாவளி வாழ்த்துக்கு மறுப்பு தெரிவிக்க யாருக்கேனும் தெகரிய்ம் இருக்கிறதா என்பதனை எண்ணிப் பார்க்க வேண்டும்

Popular posts from this blog

இதற்குத்தானா ஆசைப்பட்டீர்கள் திரு.சீமான்?

இன்று சீமான் அதிமுக கூட்டணியில் இருந்து பிரச்சாரம் பண்ணப்போவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது..ஏற்கெனவே ஒருமுறை செய்த பாரிய தவறொன்றை மற்றொருமுறை செய்யமாட்டார் என்றே நினைத்திருந்தேன்....இது உண்மையான செய்தியாய் இருந்தால் பேரிடிதான்..!!!! மாறாக உணர்வுள்ள இளைஞர்கள் தம் பின்னால் பேரெழுச்சியுடன் நாம் தமிழராய் எழும்போது.....அதைக்கொண்டுபோய் போய்ஸ்தோட்டத்திற்கு தாரைவார்த்துக்கொடுப்பதென்பது கனவிலும் சகிக்க முடியாத செயல்....!!  கருணாநிதிக்கு ஈழ அழிவிற்கு எவ்வளவுக்கெவ்வளவு பங்கிருக்கிறதோ அதே அளவிற்கு  சக பங்குள்ளவரே செயலலிதா... செயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்? என்ன செய்தார்? 1.எதிர்கட்சியாக மாபெரும் போராட்டங்களை நடாத்தியிருக்க வேண்டும்...அழிவது நம்சொந்தங்களே என்று தெரிந்திருந்தும் வாய்மூடி மெளனியாகவே இருந்தார். 2. கருணாநிதியின் எதிர்ப்பரசியலைக் கைவிட்டு விட்டு முத்துக்குமார் முதற்கொண்டு  தமிழக இளைஞர்களின் எழுச்சியை உபயோகித்து இந்திய அரசை ஸ்தம்பிக்க முயற்சித்திருக்க வேண்டும்....அதைவிடுத்து கொடநாட்டில் பள்ளி கொண்டிருந்தார்... 3.  சிறிதேனும் உண்மையான அக்கறை அவருக்கு தமிழர்பா...

இந்தியாவும் சீனாவும் - ஒரு ஒப்பீடு..!

நிறைய பத்திரிக்கைகளும் , பொருளாதார வல்லுநர்களும் அடிக்கடி இப்படிச் சொல்வதுண்டு. இந்த நூற்றாண்டு இந்தியா மற்றும் சீனாவின் நூற்றாண்டு என்று. வருங்காலத்தில் இந்தியாவும் , சீனாவுமே உலக வல்லரசுகளாகப் போகின்றன என்று. நிலைமை என்ன? இந்தியாவிற்கோ , சீனாவிற்கோ அதற்கான தகுதிகள் இருக்கின்றனவா என்று பார்ப்பதற்கான முதல் படி இந்தியாவும் சீனாவும் ஒப்பீட்டளவில் எப்படி இருக்கின்றன என்பதேயாகும். ஆய்வுகளை அரசியல், பொருளாதார , இராணுவ , இராஜதந்திர , அண்டை நாடுகளுடனேயான உறவுகளினூடாக அணுகலாம். பொருளாதார ஒப்பீட்டில் இந்தியாவும் , சீனாவும் எப்படி இருக்கின்றன என்பதை இப்பதிவில் பார்ப்போம். மற்றைய இராணுவ , இராஜதந்திர உறவுகளை பிரிதொரு சமயம் பார்க்கலாம். உலகின் பெரும்பான்மையான மக்களைக் கொண்ட இருநாடுகளும் உலகப்பொருளாதாரத்தில் பெருமளவு பங்கு வகிக்கின்றமை தவிர்க்க இயலாததே.  இந்தியாவின் தோராய ஜி.டி.பி ( GROSS DOMESTIC PRODUCT) மதிப்பு ( ஜிடிபி என்பது ஒட்டுமொத்த நாட்டின் உற்பத்தி மதிப்பு) 3.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். ( எத்துணை சைபர் டிரில்லியனுக்கு என்ற ஆய்வை கொஞ்சம் அப்புறமா பாக்கலாம் சார். ) , அதே ச...

"ஜெ" பிரதமரானால்...!!

ஆனாலும் இந்த "சோ" மா(தி)ரி பேச யாருக்கும் வராது... ஒரு விழா அதில் மாங்காய்களை தனக்குத் தோதான முறையில் அடித்துக்கொள்ளப் பார்த்திருக்கிறார்.... முதலில் , பாரதிய ஜனதா கட்சியில் பிரதமர் வேட்பாளராக இருக்கும் இரு போட்டியாளர்களை கூப்பிட்டு வைத்தார். தனக்கு "மோடி" தான் பிரதமர் சாய்ஸ் என்று சொல்லுவதற்கு வாஜ்பாயையும் துணைக்கு அழைத்தார்.......வாஜ்பாயை முன்மொழிந்ததே அத்வானி தான் என்றும் , அதுபோலவே "மோடி" யையும் அத்வானி முன்மொழிய வேண்டுமென்கிறார்... தமிழகத்தில் தனக்கான ஓட்டுவங்கியைப் பெறுக்க சில பாராளுமனற் , சட்டமன்ற தொகுதிகள் பாஜகவுக்குத் தேவை... அதனால் , அதிமுகவுடனோ , திமுகவுடனோ ஆன கூட்டணி அக்கட்சிக்கு மிகமிக அவசியம் என்பதைவிட அவசரம்... அதனால் தான் , வாஜ்பாயை பதிமூன்று மாதங்கள் படுத்திய 'ஜெ'வுடன் கூட்டணிக்குத் தவிக்கிறார்கள் அத்வானியும் , மோடியும் , சோவும்.....எப்படி இழுப்பது? ஏற்கெனவே விஜயகாந்த்தை தேவையில்லாமல் தூக்கி விட்டுவிட்டோமோ என்ற கடுப்பில் இருக்கும் அம்மா "பாஜகவை தலையில் தூக்கி சுமக்க ஒத்துக்கொள்வாரா? அதுவும் " அம்மா" தான் எல்லாமே எ...