Skip to main content

Posts

இதற்குத்தானா ஆசைப்பட்டீர்கள் திரு.சீமான்?

இன்று சீமான் அதிமுக கூட்டணியில் இருந்து பிரச்சாரம் பண்ணப்போவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது..ஏற்கெனவே ஒருமுறை செய்த பாரிய தவறொன்றை மற்றொருமுறை செய்யமாட்டார் என்றே நினைத்திருந்தேன்....இது உண்மையான செய்தியாய் இருந்தால் பேரிடிதான்..!!!! மாறாக உணர்வுள்ள இளைஞர்கள் தம் பின்னால் பேரெழுச்சியுடன் நாம் தமிழராய் எழும்போது.....அதைக்கொண்டுபோய் போய்ஸ்தோட்டத்திற்கு தாரைவார்த்துக்கொடுப்பதென்பது கனவிலும் சகிக்க முடியாத செயல்....!!  கருணாநிதிக்கு ஈழ அழிவிற்கு எவ்வளவுக்கெவ்வளவு பங்கிருக்கிறதோ அதே அளவிற்கு  சக பங்குள்ளவரே செயலலிதா... செயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்? என்ன செய்தார்? 1.எதிர்கட்சியாக மாபெரும் போராட்டங்களை நடாத்தியிருக்க வேண்டும்...அழிவது நம்சொந்தங்களே என்று தெரிந்திருந்தும் வாய்மூடி மெளனியாகவே இருந்தார். 2. கருணாநிதியின் எதிர்ப்பரசியலைக் கைவிட்டு விட்டு முத்துக்குமார் முதற்கொண்டு  தமிழக இளைஞர்களின் எழுச்சியை உபயோகித்து இந்திய அரசை ஸ்தம்பிக்க முயற்சித்திருக்க வேண்டும்....அதைவிடுத்து கொடநாட்டில் பள்ளி கொண்டிருந்தார்... 3.  சிறிதேனும் உண்மையான அக்கறை அவருக்கு தமிழர்பா...

அரசியல் கிச்சு கிச்சு....!!!

தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. வருங்காலத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு கடும் சவால்களை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும். நீங்கள் சரியாக பாடுபட்டால் உங்களில் ஒருவர் (இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள்) தமிழக முதலமைச்சராக வாய்ப்பு இருக்கிறது.  ராகுல் காந்தி சரியாத்தான் சொல்லி இருக்காரு...எப்படிக்கஷ்டப்பட்டாலும் இன்னும் இருவது முப்பது வருஷத்துக்கு காங்கிரஸ் ஆட்சி தமிழ்நாட்டுல அமைய வாய்ப்புக்கிடைக்காது...அதனால , முதியோர் காங்கிரஸ் காரங்க யாரும் முதல்வர் ஆக முடியாதே....இளைஞர் காங்கிரஸ் காரங்க தான் ஆக வாய்ப்புண்டு.......ராகுலின் தொலைநோக்குப் பார்வை புல்லரிக்க வைக்கிறது!! பொதுஜனம் சென்னை: இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அந்நாட்டு அரசு போதிய உதவிகளை செய்யாதது கவலையளிப்பதாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறினார். சபாஷ்...இதைவிடக் காமெடி இதுகாறும் நடந்ததொன்றும் கிடையாது...பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் கலை காங்கிரசுகாரர்களுக்குப் புதிதா என்ன? இறுதி யுத்தம் ...

நாங்கள் பொய் சொல்லவில்லை...வன்னி மருத்துவர்கள்..விக்கிலீக்ஸ் அம்பலம்

வன்னியில் நடந்த இழப்புக்களை புலிகளின்  அழுத்ததினாலேயே மிகைப்படுத்திச் சொன்னோம் என்று முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் பல்டி அடித்த வன்னி மருத்துவர்கள்  , தாங்கள் அப்படிச் சொன்னது  அரசாங்கத்தின் அழுத்தத்தினாலேயே என்று அமெரிக்க தூதகரத்திடம் சொன்னதாக அமெரிக்க தூதரக அதிகாரி திரு. ஜேம்ஸ் ஆர்.  மூரே அனுப்பிய கேபிளை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தி இருக்கிறது.....அதன் முழு வடிவம் வருமாறு....!! Monday, 24 August 2009, 13:34 S E C R E T COLOMBO 000830 SIPDIS DEPARTMENT FOR SCA/INSB EO 12958 DECL: 08/23/2019 TAGS PGOV, PREL, PREF, PHUM, EAID, MOPS, CE SUBJECT: DOCTORS FROM NO-FIRE ZONE RELEASED ON BAIL REF: COLOMBO 695 Classified By: CHARGE D’AFFAIRES JAMES R. MOORE. REASONS: 1.4 (B, D) ¶ 1. (S) Four government doctors, held by the police Criminal Investigation  Division (CID) since the end of the war in May for allegedly filing false  reports on civilian casualties in the No-Fire Zone during the last several  months of the war, were released on bail today. XXXXXXXXXX...

பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது!

சீமான்களின் சபையினிலேயே , கடிதம் எழுதி எழுதிக் களைத்துப்போனதோர் கிழட்டுச் சிங்கம்.....முன்னாலுக்கும் முன்னால் அவர் கொண்ட தமிழ்ப்பற்று.....இன்னாளில் அது தமது மக்கட்பற்றாய் மாறிப்போனதொரு சோகம். ஏதோவொரு புண்ணியத்தில், எவரோ செய்த வரலாற்றுத் தவறால் , கொள்கை , தொலைநோக்கு , மக்கட்பற்று இவை பற்றிய சிந்தையேதுமின்றி அரசியலில் விபத்தாய் விளைந்த கொடநாட்டு ஈழத்தாய்....தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தமிழர் பற்றியும் , தமிழர் அரசியல் பற்றியும் எழுதி வைத்துப் பேசும் செல்வி யவர்.........இன்னமும் அவர் சேலை பிடித்துத்திரியும் வீணர் கூட்டம்.! கூட்டணிக்கேற்றப்படி கொள்கையை மாற்றிக்கொள்ளும் மருத்துவப் படையாச்சி.........வீரமிகு வன்னியகுலத்திலே வந்துதித்த சந்தர்ப்பவாதச் சாக்கடை....சமரசமற்ற கொள்கை அரசியலை சந்தர்ப்பவாதச் சாக்கடைக்குள் தள்ளிய பெருமைக்குரிய மருத்துவர் தமிழ்க்குடிதாங்காத தமிழ்க்குடிதாங்கி! யாரை எதற்காக எதிர்த்து அரசியல் செய்யவேண்டுமே அவர்களோடே தம் தேவைக்குதந்த படி கூட்டு வைத்துக்கொண்டு ஈழத்திற்க்காய் எந்நேரமும் பாடுபடும் திரு.வைகோ அவர்கள்....அவரும் சிறை சென்றார்....

தமிழகத்தின் தலையில் இடிவிழ...!

இதை சாபமாகச் சொல்லவில்லை. தமிழகத்துக்கு நேரிட்ட சாபக்கேட்டைச் சுட்டவே சொல்கிறேன்.  உலகம் முழுமையும்  இன்றைக்குப் பேசப்படுகிற ஒருவிடயமாக விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்திய ரகசியங்கள் இருக்கின்றன. உலகளாவிய முறையில் ஊருக்கு ஒன்றெனவும் , உள்ளுக்கு வேறெனவும் அமெரிக்கா ஆடிய தகிடுதத்தங்களைப் போட்டுக்கொடுத்து புண்ணியம் தேடிக்கொண்டிருக்கிறார் அஸ்ஸாங்கே. அத்தகைய விக்கிலீக்ஸ் கூட சிறிலங்காவில் நிகழ்ந்த பாரிய மனிதப்படுகொலை பற்றி விரிவான கட்டுரை ( அது எழுதிய இரு கட்டுரைகளில் ஒன்று சிறிலங்கா பற்றியது , பிரிதொன்று விஸா, மாஸ்டர்கார்டு பற்றியது . ) பிரித்தானியத் தொலைக்காட்சி நிறுவனமான சேனல் - 4 , இதுகாறும் வெளீவந்த போர்க்குற்ற காணொலிகளை ஆராய்ந்து சர்வ நிச்சயமாக போர்க்குற்ற விசாரணையொன்று இலங்கையில் தேவை என்று தொடர்ந்து வலியுறுத்துகிறது..........  அதன் ஆய்வுகள் கீழ்க்கண்ட இணைப்புக்களில்..... இணைப்பு - 1 , இணைப்பு - 2 , இணைப்பு - 3   அமெரிக்காவிலிருந்து வெளிவரும் வாஷிங்டன் டைம்ஸ் , நியுயார்க் போஸ்ட் என்ற பற்பல செய்தி இதழ்கள் , போர்க்குற்ற சந்தேக நபரொருவர் , டிப்ளமேட்டிக் இம்யூனி...

சீமானுக்குப் பொருந்தாத ஐபிசி 124ஏ பிரிவு.

புகழ்பெற்ற எழுத்தாளரும் , மனித உரிமை ஆர்வலருமான திருமதி.அருந்ததி ராய் அவர்கள் "காஷ்மீர்" எப்போதுமே இந்தியாவின் ஒரு பகுதியான இருந்ததில்லை என்று புதுதில்லி ஆய்வரங்கம் ஒன்றில் சொன்னதும் , ஹிலானி அவர்கள் "சுதந்திரமே தீர்வு" என்று சொன்னதும் பஜ்ரங்தள் கோஷ்டிகளாலும், வட இந்திய செய்திச்சேனல் மாபியாக்களாலும் பெரும் பிரச்சினை ஆக்கப்பட்டது தெரிந்தமையே. பிரிவினையைத்தூண்டியதாக திருமதி.ராய் மீது வழக்குத்தொடரப்படும் , அவர் கைது செய்யப்படுவார் என்றும் பரபரப்பாக பேசப்பட்ட சூழலில் மாண்புமிகு ( நெசமாவா?) உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அது ஐ.பி.சி 124 ஏ பிரிவின் படி குற்றமல்ல என்கிறார். அது குறித்தான செய்தி பின்வருமாறு. அருந்ததி ராய் பேசியதில் தவறில்லை-நடவடிக்கையும் இல்லை-ப.சிதம்பரம் டெல்லி: காஷ்மீர் தொடர்பாக எழுத்தாளர் அருந்ததி ராய் பேசியதில் சட்டப்படி எந்தத் தவறும் இல்லை என்பதால் அவர் மீது டெல்லி காவல்துறை நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களை அவர் சந்தித்தபோது அருந்ததி ராய் குறித்து கேட...

இந்தியாவும் சீனாவும் - ஒரு ஒப்பீடு..!

நிறைய பத்திரிக்கைகளும் , பொருளாதார வல்லுநர்களும் அடிக்கடி இப்படிச் சொல்வதுண்டு. இந்த நூற்றாண்டு இந்தியா மற்றும் சீனாவின் நூற்றாண்டு என்று. வருங்காலத்தில் இந்தியாவும் , சீனாவுமே உலக வல்லரசுகளாகப் போகின்றன என்று. நிலைமை என்ன? இந்தியாவிற்கோ , சீனாவிற்கோ அதற்கான தகுதிகள் இருக்கின்றனவா என்று பார்ப்பதற்கான முதல் படி இந்தியாவும் சீனாவும் ஒப்பீட்டளவில் எப்படி இருக்கின்றன என்பதேயாகும். ஆய்வுகளை அரசியல், பொருளாதார , இராணுவ , இராஜதந்திர , அண்டை நாடுகளுடனேயான உறவுகளினூடாக அணுகலாம். பொருளாதார ஒப்பீட்டில் இந்தியாவும் , சீனாவும் எப்படி இருக்கின்றன என்பதை இப்பதிவில் பார்ப்போம். மற்றைய இராணுவ , இராஜதந்திர உறவுகளை பிரிதொரு சமயம் பார்க்கலாம். உலகின் பெரும்பான்மையான மக்களைக் கொண்ட இருநாடுகளும் உலகப்பொருளாதாரத்தில் பெருமளவு பங்கு வகிக்கின்றமை தவிர்க்க இயலாததே.  இந்தியாவின் தோராய ஜி.டி.பி ( GROSS DOMESTIC PRODUCT) மதிப்பு ( ஜிடிபி என்பது ஒட்டுமொத்த நாட்டின் உற்பத்தி மதிப்பு) 3.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். ( எத்துணை சைபர் டிரில்லியனுக்கு என்ற ஆய்வை கொஞ்சம் அப்புறமா பாக்கலாம் சார். ) , அதே ச...