நண்பர் மோகன் கந்தசாமியின் ச்சும்மா டமாஷில் எனது திராவிட முன்னேற்றக் கழகம் - இனி என்ற கட்டுரை மூன்று பதிவுகளாக வெளிவந்தது. அதன் மீள்பதிவே இது. காப்பிரைட் முழுதும் ச்சும்மா ட்ட்மாஷுக்கே ! ச் சும்மா ட்டமாஷ் - 75 -க்காக பதிவர் மதிபாலா முதல் இரண்டாம் பகுதிகள் சென்ற பதிவுகளில் வெளியானது. அவர்கள் எழுதியுள்ள இந்த சிறப்புப் பதிவின் இறுதிப் பகுதி இப்பதிவில் வெளியாகிறது. மற்றும் திமுகவின் அடுத்த தலைமை இ து கொஞ்சம் சுலபமான அலசல் என்றே தோன்றுகிறது. திமுகவின் அடுத்த தலைமைக்கான முன் மொழிதலில் முன்னணியில் நிற்பவர் மு.க.ஸ்டாலின், அடுத்த அளவில் சொல்லப்படும் மு.க.அழகிரியோ, கனிமொழியோ, தயாநிதி மாறனோ திமுகவின் அனைத்துத் தரப்பினருக்கும் பரிச்சயமானவர்களோ , நீண்ட காலமாக உழைத்தவர்களோ கிடையாது. ஆனால் மு.க.ஸ்டாலின் அப்படியானவர் கிடையாது ஏன் ஸ்டாலின் திமுகவின் தலைமையாக இருக்கக் கூடாது? 1. தி முகவிற்காக பாடுபட்ட ஒருவர், அடிமட்டத் தொண்டனாக இருந்து மேலே வந்த ஒருவர், தான் மேற்கொண்ட பொறுப்புக்களை எல்லாம் சிரமேற்கொண்டு அனைவரும் பாராட்டும் வண்ணம் முடித்த ஒருவர், எல்லாவற்றிற்கும் மேலாக பணிவு, தான் சொல்ல நினைத்...