Skip to main content

நாங்கள் பொய் சொல்லவில்லை...வன்னி மருத்துவர்கள்..விக்கிலீக்ஸ் அம்பலம்

வன்னியில் நடந்த இழப்புக்களை புலிகளின்  அழுத்ததினாலேயே மிகைப்படுத்திச் சொன்னோம் என்று முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் பல்டி அடித்த வன்னி மருத்துவர்கள்  , தாங்கள் அப்படிச் சொன்னது  அரசாங்கத்தின் அழுத்தத்தினாலேயே என்று அமெரிக்க தூதகரத்திடம் சொன்னதாக அமெரிக்க தூதரக அதிகாரி திரு. ஜேம்ஸ் ஆர்.  மூரே அனுப்பிய கேபிளை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தி இருக்கிறது.....அதன் முழு வடிவம் வருமாறு....!!

Monday, 24 August 2009, 13:34
S E C R E T COLOMBO 000830
SIPDIS
DEPARTMENT FOR SCA/INSB
EO 12958 DECL: 08/23/2019
TAGS PGOV, PREL, PREF, PHUM, EAID, MOPS, CE
SUBJECT: DOCTORS FROM NO-FIRE ZONE RELEASED
ON BAIL REF: COLOMBO 695 Classified By: CHARGE D’AFFAIRES JAMES R. MOORE. REASONS: 1.4 (B, D) 1. (S) Four government doctors, held by the police Criminal Investigation 
Division (CID) since the end of the war in May for allegedly filing false 
reports on civilian casualties in the No-Fire Zone during the last several
 months of the war, were released on bail today. XXXXXXXXXXXX
2. (S) The doctors XXXXXXXXXXXX had been pressured to give the press 
conference held in early July (reftel), where they recanted all the 
statements they had made from the No-Fire Zone. 
They said they were heavily coached for the press conference, 
given specific lines to say, and even practiced with several members of 
the local media beforehand. They said they XXXXXXXXXXXX had not lied when 
giving their original statements during the war.
3. XXXXXXXXXXXX.
4. XXXXXXXXXXXX
5. (S) Comment: The release of the four doctors is a welcome step by the GSL,
 but clearly they remain under investigation by the CID and now also are 
potentially under threat of abduction or extrajudicial killing. 
Post will continue to monitor the situation very closely, but for now the 
doctors appear to want to maintain as low a profile as possible, without 
undue attention brought to them either in Sri Lanka or internationally. 
End Comment. MOORE



அதன்  தமிழாக்கம் வருமாறு

திகதி - 24 , ஆகஸ்டு , 2009

கடந்த மே மாதம் முடிவடைந்த இலங்கைக்கும் , புலிகளுக்களுக்குமிடையேயான போரின் இறுதிக்கட்டம் வரை "தாக்குதல் தவிர்ப்புப் பிரதேசத்தில் (no fire zone) தங்கியிருந்த நான்கு அரசு மருத்துவர்களும், இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்....

 கடந்த ஜூலை மாதத் தொடக்கத்தில் இந்த மருத்துவர்கள் பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கும்படியான அழுத்தத்திற்கு அரசாங்கத்தினால் தள்ளப்பட்டிருந்தார்கள்..அவ்வழுத்ததின்படியே , தாக்குதல் தவிர்ப்புப் பிரதேசத்தில் இருந்து தாங்கள் கூறிய அனைத்து அறிக்கைகளும் தவறானவை என்று மறுத்திருந்தார்கள்....

தமக்கு எழுதிக்கொடுக்கப்பட்ட வசனங்களை அப்பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியதாகவும் , அப்பேட்டியை அளிக்க பலமுறை ஒத்திகை பார்த்ததாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்..( யார் , யாரிடம் என்ற விளக்கமில்லை....)..தாங்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது சொன்ன அறிக்கைகள் அனைத்துமே உண்மை எனவும் தெரிவிக்கிறார்கள் அவர்கள்...

தூதரகத்தின் கருத்து...

நான்கு மருத்துவர்கள் விடுவிக்கப்பட்டது வரவேற்கப்பட வேண்டியதே என்றாலும் அவர்கள் தொடர்ந்தும் தீவிர கண்காணிப்பிலேயெ வைக்கப்பட்டிருக்கிறார்கள்...அவர்கள் கடத்தப்படவோ,  சட்டத்திற்குப்புறம்பான வழியில் கொல்லப்படவோ வாய்ப்பு இலங்கையில் இருக்கிறது....அதனால் தற்போதைக்கு அவர்கள்   மிகவும் இலங்கையளவிலும் ,  சர்வதேச அளவிலும் அடக்கிவாசிக்கவே எண்ணுகிறார்கள்...


இது  ஒரு அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்......துப்பாக்கி முனையில் மருத்துவர்களை மிரட்டி தவறான தகவலை பேட்டியாகத்தர வலியுறுத்தும் இலங்கை அரசாங்கமா , தமிழர்கள் மீதான போர்க்குற்ற விசாரணைகளை , உரிமை மீறல்கள் பற்றிய ஆய்வினை நல்லிணக்க ஆணைக்குழு மூலம் மேற்க்கொள்ளப் போகிறது???

காலம் தான் பதில் சொல்லவேணும்!!

Comments

Anonymous said…
thats good. maraimalai u s a,thank u
Anonymous said…
Great News.

Rajapakse vukku alivu kalam nerungiduchu...!

Popular posts from this blog

பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது!

சீமான்களின் சபையினிலேயே , கடிதம் எழுதி எழுதிக் களைத்துப்போனதோர் கிழட்டுச் சிங்கம்.....முன்னாலுக்கும் முன்னால் அவர் கொண்ட தமிழ்ப்பற்று.....இன்னாளில் அது தமது மக்கட்பற்றாய் மாறிப்போனதொரு சோகம். ஏதோவொரு புண்ணியத்தில், எவரோ செய்த வரலாற்றுத் தவறால் , கொள்கை , தொலைநோக்கு , மக்கட்பற்று இவை பற்றிய சிந்தையேதுமின்றி அரசியலில் விபத்தாய் விளைந்த கொடநாட்டு ஈழத்தாய்....தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தமிழர் பற்றியும் , தமிழர் அரசியல் பற்றியும் எழுதி வைத்துப் பேசும் செல்வி யவர்.........இன்னமும் அவர் சேலை பிடித்துத்திரியும் வீணர் கூட்டம்.! கூட்டணிக்கேற்றப்படி கொள்கையை மாற்றிக்கொள்ளும் மருத்துவப் படையாச்சி.........வீரமிகு வன்னியகுலத்திலே வந்துதித்த சந்தர்ப்பவாதச் சாக்கடை....சமரசமற்ற கொள்கை அரசியலை சந்தர்ப்பவாதச் சாக்கடைக்குள் தள்ளிய பெருமைக்குரிய மருத்துவர் தமிழ்க்குடிதாங்காத தமிழ்க்குடிதாங்கி! யாரை எதற்காக எதிர்த்து அரசியல் செய்யவேண்டுமே அவர்களோடே தம் தேவைக்குதந்த படி கூட்டு வைத்துக்கொண்டு ஈழத்திற்க்காய் எந்நேரமும் பாடுபடும் திரு.வைகோ அவர்கள்....அவரும் சிறை சென்றார்.

இதற்குத்தானா ஆசைப்பட்டீர்கள் திரு.சீமான்?

இன்று சீமான் அதிமுக கூட்டணியில் இருந்து பிரச்சாரம் பண்ணப்போவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது..ஏற்கெனவே ஒருமுறை செய்த பாரிய தவறொன்றை மற்றொருமுறை செய்யமாட்டார் என்றே நினைத்திருந்தேன்....இது உண்மையான செய்தியாய் இருந்தால் பேரிடிதான்..!!!! மாறாக உணர்வுள்ள இளைஞர்கள் தம் பின்னால் பேரெழுச்சியுடன் நாம் தமிழராய் எழும்போது.....அதைக்கொண்டுபோய் போய்ஸ்தோட்டத்திற்கு தாரைவார்த்துக்கொடுப்பதென்பது கனவிலும் சகிக்க முடியாத செயல்....!!  கருணாநிதிக்கு ஈழ அழிவிற்கு எவ்வளவுக்கெவ்வளவு பங்கிருக்கிறதோ அதே அளவிற்கு  சக பங்குள்ளவரே செயலலிதா... செயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்? என்ன செய்தார்? 1.எதிர்கட்சியாக மாபெரும் போராட்டங்களை நடாத்தியிருக்க வேண்டும்...அழிவது நம்சொந்தங்களே என்று தெரிந்திருந்தும் வாய்மூடி மெளனியாகவே இருந்தார். 2. கருணாநிதியின் எதிர்ப்பரசியலைக் கைவிட்டு விட்டு முத்துக்குமார் முதற்கொண்டு  தமிழக இளைஞர்களின் எழுச்சியை உபயோகித்து இந்திய அரசை ஸ்தம்பிக்க முயற்சித்திருக்க வேண்டும்....அதைவிடுத்து கொடநாட்டில் பள்ளி கொண்டிருந்தார்... 3.  சிறிதேனும் உண்மையான அக்கறை அவருக்கு தமிழர்பால் இருக்குமானால் ,க

நண்பர் 'டோண்டு' ராகவன்...

உயிரோடு இருக்கும்வரை அறிக்கைகளால் அர்சித்து எதிர்ப்பரசியல் நடாத்தி செத்துபோன பிறகு ஆருயிர் நண்பர் என்று அழைத்துக்கொள்ளும் எல்லா அரசியல்வாதிகளையும் போலவே நான். எனக்கும் மறைந்த உயர்திரு 'டோண்டு' ராகவன் அவர்களுக்குமான பரிச்சயம் அவ்வளவொன்றும் அதிகமில்லைதான். பதிவுலகையும் , பர்ஸனல் லைப்பையும் பிரித்து வைத்துக்கொள்ளும் எண்ணமுடைய நான் , டோண்டு மட்டுமல்ல மற்றபல பதிவுலக நண்பர்களுடனும் கூட தனிப்பட்ட தொடர்புகளை வைத்துக்கொண்டதில்லை... இருந்தாலும் , அவ்வப்போது பதிவுலக பின்னூட்டங்களின்பாலே தொடர்ந்துகொண்டிருந்த தொடர்பு , எனது 'போலி டோண்டு' பற்றிய கட்டுரையொன்றிலேயே  தீவிர விவாதமாக மாறியது.. ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீதோ இல்லை அவர்தம் பிற்போக்கான கருத்துக்கள் மீதோ இருந்திருக்கலாம். கடினமாக ஓரிரு முறை பேசியிருக்கலாம்.. அத்தனையும் தாண்டி அவர் மிக நல்ல மனிதர் , கடும் உழைப்பாளி என்பதை அவரது பதிவுலகம் மூலமாக அறிந்தவனெனினும் உறுதியாக கூறவியலும்.. அத்தகைய நல்ல மனிதரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் , நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்... வருத்தங்கள